Friday, May 14, 2010

என் உள்ளம் கவர் கள்வனுக்கு...

கல்லூரிப் படிப்பு முடிந்து வேலை கிடைத்து விட்டது. என் முதல் வேலை, அதுவும் கல்லூரியிலேயே வந்து செலக்ட் செய்து கொண்டு போன வேலை. நிறைய உற்சாகத்துடனும் கொஞ்சம் பதற்றத்துடனும் ஆரம்பித்தேன். கோவை எனும் அழகிய சொர்க்க நகரத்தில் வேலை பார்க்க யாருக்குத் தான் பிடிக்காது, அதுவும் தேவையை விட அதிகமாய் சம்பளமும் கொடுத்து. வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்தில் என் பாஸ் என்னிடம் சொன்னார் “விக்னேஷ்வரி, ஹெட் ஆஃபிஸ்ல இருந்து இங்கே ஒருத்தர் ப்ராஜெக்ட்டுக்காக வர்றார். அவருக்குத் தமிழ் தெரியது. நீதான் அஸிஸ்ட் பண்ணனும். ஆஃபிஸ் வேலை முடிஞ்சதும் சாயங்கால நேரங்களில் உனக்கு ட்ரெய்னிங் இருக்கும். குட் லக் ஃபார் த ஆன் ஜாப் ட்ரெய்னிங்”
“சரி சார் அவர் பேர்”
“யோகேஷ்”
“லோகேஷ்?”
“இல்ல, யோகேஷ். யோகேஷ் கண்ணா”
பெயர் மறந்து விடாமலிருக்க கையிலிருந்த நோட்டின் ஒரு மூலையில் எழுதிக் கொண்டேன்

ஹெட் ஆஃபிஸிலிருந்து வந்திருக்கும் ட்ரெய்னரைப் பார்க்கப் போகிறேன். எப்படிப் பேசுவார். அவர் எம்.டெக்காம். கொஞ்சம் ஹை ப்ரோஃபைல். பழகுவது கடினம் தான். எப்படிப் பேசப் போகிறேன். என் ஆங்கிலம் அவ்வளவு தேறியதா.. எப்படி என் கம்பெனியில் என்னை அவருக்கு அசிஸ்டெண்ட்டாகவும், ட்ரான்ஸ்லேட்டராகவும் நியமித்தார்கள். வந்தவர் ஏன் என் ட்ரெய்னிங் விட்டு விட்டு அவர் வேலைக்கு உதவிக்கழைக்கிறார். இப்படியே யோசித்துக் கொண்டிருந்த போது பெருந்துறை வந்து விட்டது.

ஆஃபீஸுக்குள் நுழைந்து “லோகேஷ்.. ஸாரி யோகேஷ் ஃப்ரம் நியூடெல்லி?” என்றேன்.
“ஓ, யூ ஆர் ஃப்ரம் ஹிஸ் கம்பெனி... வெல்கம்” என மரியாதையுடன் அழைத்துப் பெட்டியை கெஸ்ட் ஹவுஸில் வைக்கும் படி அங்கிருந்தவரை சொல்லிவிட்டு என்னைக் கம்பெனிக்குள் அழைத்து சென்றார் மேனேஜர்.
“ஹீ இஸ் யோகேஷ்” சொல்லிவிட்டு மேனேஜர் சென்று விட்டார்.
“ஹாய் யோகேஷ். திஸ் இஸ் விக்னேஷ்வரி” கையை நீட்டினேன். “ஹாய்” என ஒரு அசட்டைப் பார்வையுடன் கை குலுக்கி விட்டு வேலையைப் பார்க்கப் போய் விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஐ.டி. டீம் முழுக்க உட்கார்ந்து கொண்டு சர்வர், இன்ஸ்டலேஷன், டேடாபேஸ், ப்ரொக்ராமிங் என என்னென்னவோ பேசிக் கொண்டிருக்க, நான் “ஙே” என மிரட்சியுடன் முழித்துக் கொண்டிருந்தேன்.

மாலை இருவரும் ஒன்றாக கெஸ்ட் ஹவுஸ் திரும்பினோம். இருவருக்கும் எதிரெதிர் ஃப்ளாட்டுகள். ஒவ்வொரு ஃப்ளாட்டும் 2BHK. மணி 8. நன்றாகவே இருட்டியிருந்தது. என் ஃப்ளாட்டைத் திறக்காமல் அவருடன் போய் நின்று கொண்டு, “வில் யூ ப்ளீஸ் கம் வித் மீ” என்றேன்.
ஒரு வித்தியாசப் பார்வையோடு “வாட்” என்றார்.
“ஐ ஆம் ஸ்கேர்ட் ஆஃப் டார்க்னெஸ். வில் யூ ப்ளீஸ்....”
“வொய்?”
“ப்ளீஸ்”
“வாட் இஸ் யுவர் ப்ராப்ளம். ஃபார் வாட் டு யூ கால் மீ?” என்றார் இன்னும் கடுமையாக.
கொஞ்சம் எரிச்சலுடனும் நிறைய பயத்துடனும் வழக்கம் போல் அதே அசட்டு சிரிப்புடனும் “ச்சும்மா” என்றேன்.
நொடியில் மாறிய அவர் முகம் கேவலமாய் “வாட்....?”டை உதிர்த்தன இதழ்கள்.
மிகுந்த கோபத்தில் “நத்திங்” என் என் ஃப்ளாட்டிற்குள் நடுங்கிக் கொண்டே நுழைந்து லைட்டைத் தேடிப் போட்டு சமாளித்து விட்டேன்.

“என்ன ஆளு இவர். ஹாய் சொல்லிக் கை குடுத்தா தலையெழுத்தேன்னு கை குடுக்குறார். ஆஃபிஸ்ல முழு நேரமும் ஏதோ வேலை செய்து கொண்டே இருந்தார். நம்மை ஒரு முறை கூட மதிச்சுப் பார்த்ததா தெரியல. வந்து கதவைத் திறக்கத் துணைக்கழைத்தால் கத்துகிறார். சே, சரி ஆள் கிட்ட மாட்டிக்கிட்டோம். 15 நாள் எப்படி போகப் போகுது” எனத் தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்த போது மொபைலில் அழைத்தார்.
“ஃபினிஷ் யுவர் டின்னர் அண்ட் கம் டு த காமன் ட்ராயிங் ஹால் ஃபார் ட்ரெய்னிங் அட் 9” என சொல்லி என் பதிலை எதிர்பார்க்காது ஃபோனை வைத்து விட்டார். கிர்ரென்றது.

அன்றிலிருந்து தினமும் இரவு 9 மணி முதல் 11 மணி வரை. அதே ட்ராயிங் ஹால். அதே ட்ரெய்னிங். தூக்கம் சொக்கும் எனக்கு. அவரோ ரொம்ப சீரியஸான ப்ரசெண்டேஷன்களை விளக்கிக் கொண்டிருப்பார். வெளியில் எங்கள் ஹாலைக் கடந்து வாக்கிங் போபவர்கள் ஒரு பாவப் பார்வையுடன் என்னைப் பார்த்து செல்வார்கள். மறுநாள் காலை ஆஃபிஸிலும் ஒரு நிமிட இடைவெளியில்லாது வேலை செய்வார். எனக்கும் டன்னளவு வேலை கொடுப்பார். அவருடன் ஃபாக்டரி முழுக்க சுற்றினேன். இவருக்கும், லேபர்மென்னுக்கும் ட்ரான்ஸ்லேட்டராய் இருந்தேன். இரண்டு நாட்களில் அவர் உழைப்பு பார்த்த பின் ஒரு மரியாதை வந்தது. அடுத்த வாரத்திலிருந்து நானும் சீரியஸாய் வேலை செய்ய ஆரம்பித்தேன். அவருக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. பல இரவுகள் 2,3 மணி வரை ஃபாக்டரியில் அவர், ஃபாக்டரி மேனேஜர், யூஸர்ஸ், நான் என வேலை செய்திருக்கிறோம். இதனால் எங்களை மனசுக்குள்ளேயே திட்டிக் கொண்ட யூஸர்ஸ் அதிகம். இருவரும் சேர்ந்து பகலிரவு பாராமல் வேலையை முடித்தோம்.

அவர் கிளம்பினார். டெல்லி சென்று சேர்ந்தவரை அழைத்தேன். “ரீச்ட் சேஃப்லி?” என்றேன். “ம்....” என்றார். அவருக்கு விமானப் பயணம் வாரத்திற்கொரு முறை. எனக்கோ இவ்வளவு தூரம் சென்றாரே, பத்திரமாக சென்றாரா என்ற விசாரிப்பு. அவ்வளவு தான். மறுபடியும் ப்ராஜெக்ட், வேலை, என் டெல்லி பயணம், மறுபடியும் ஹெட் ஆஃபிஸில் இவரிடமிருந்து ட்ரெய்னிங் எனத் தொடர்ந்தது. யாரையும் தெரியாத டெல்லியில் எங்கோ ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். அலுவலகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் ஹோட்டல். ஹிந்தியில் “மே ஹிந்தி நஹின் மாலும் ஹை” என்ற தப்பான ஒரு வாக்கியம் தவிர வேறெதுவும் தெரியாது. அவர் தான் தினமும் பிக்கப், ட்ராப். வாரயிறுதிகளில் டெல்லியைக் காண்பித்தார்.

ஒரு வருடத்தில் டெல்லிக்கே ட்ரான்ஸ்ஃபரும் ஆனது. இப்போது டெல்லி போக பயமில்லை. அவரிருக்கும் தைரியம். நல்ல நண்பராகிப் போனார். அதன் பின் ஒரு நாள் சொன்னார் அவர் புரிந்து கொண்ட முதல் நாள் மாலையின் “ச்சும்மா”வை. ஹிந்தியில் “ச்சும்மா” என்றால் என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள். எங்கும் சொல்லி அடி வாங்கி வைக்காதீர்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் அவர் கெட்ட நேரம் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. சரியா தவறா, ஒத்து வருமா வராதா, வீட்டை எப்படி சமாளிக்க, சம்மதிக்க வைக்க என்றெண்ணியே காதல் நாட்கள் கழிந்தன. எல்லாப் பிரச்சனைகளையும் ஒரே ஆளாய் எதிர்த்து நின்று எல்லாரின் சம்மதத்தையும் பெற்று கோலாகலமாக என்னைக் கைப்பிடித்தார்.

அவரின் உழைப்பு, உண்மை, அன்பு, காதல், பொறுப்பு, அக்கறை எல்லாவற்றிலும் சுகமாகவே கழிகின்றன நாட்கள். இதே சுகம் வாழ்நாள் முழுக்க வேண்டும். Happy Birthday Yogi. I love you.

69 comments:

க ரா said...

யோகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

happy b'th day mr.yogi! :-)

//அவரின் உழைப்பு, உண்மை, அன்பு, காதல், பொறுப்பு, அக்கறை எல்லாவற்றிலும் சுகமாகவே கழிகின்றன நாட்கள். இதே சுகம் வாழ்நாள் முழுக்க வேண்டும்.//

கண்டிப்பா கிடைக்கும் ம.மகள்ஸ்!

சந்தோசமாய், நிறைவாய் இருங்கள்!

நசரேயன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யோகி

Unknown said...

"மெல்ல தூரலாய்
பெருமழையாய்
பதிவுலகை நனைக்கும் இக்காதல்
பல்லாண்டு வாழட்டும்"

என்னுடைய வாழ்த்துக்களும்..,

நேசமித்ரன் said...

பெய்யும் மழையென பேதமறியா தெல்லாப் பொழுதும் உன்னதமும் இன்னலும் உயிர்வதையுறும் பொழுது தோறும் இன்முகம் காட்டும் உந்தன் ஆயுள் ரேகையின் ஆயுள் நீள ப்ரியம்வதா உன் வாழ்த்து மெய்ப்படட்டும்

நன்மையே விழையும் சீவன் உன் செய்தவத்தின் பயன்கள் யாவும் தீதற சிறக்க செய்யும் சீரெல்லாம் பெற்று
செம்மையே விளைக ... வாழி !

M.S.R. கோபிநாத் said...

வாவ்..கிரேட் விக்னேஷ்வரி.. நல்லா இருந்துச்சு உங்க அனுபவம் மற்றும் பதிவு.. தொடருங்கள்..

தீபா said...

உங்க கள்வனுக்கு Happy birth day Yogi.

(அவருக்கு தமிழ் படிக்க தெரியாது இல்ல, அதான் இங்கிலிபீஸ்ல)

கபீஷ்(தீபா ஐடிலருந்து)

Anonymous said...

இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
திரு யோகேஷ் கண்ணா

எல்லா நலன்களும் பெற்று
வாழ்க வளமுடன்

சூர்யா

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் உள்ளம் கவர்ந்த கணவனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Anonymous said...

என்னுடைய வாழ்த்துக்களும்..

அன்புடன் நான் said...

வாழ்க வளமுடனும்... நலமுடனும்.

Anonymous said...

HAPPY BIRTHDAY TO YOGI...

Anonymous said...

அடிப்பாவி சொல்லவே இல்லை, ஒரு கிலோ மனோகரம் பார்சல் அனுப்பிருப்பேன் என் தம்பிக்கு :)) என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லிடு :))

அன்பேசிவம் said...

ஓ அப்டியா? கட்டாயம் என்னுடிய வாழ்த்துக்களை யோகிக்கு தெரிவிக்கவும். :-)

மனசுக்குள் காதல் இருக்கும்வரை, இனியெல்லா............, சுகமே....

சந்தோஷமா இருங்க, ரெண்உ பேருமே..... வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

திரு யோகிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்

அமுதா கிருஷ்ணா said...

happy birthday to your hubby...

ஸ்ரீவி சிவா said...

கடைசி வரியில் மிளிர்கிறது காதல்.யோகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஜமாய்ங்க!!!

அப்புறம், உங்களுக்கும் வாழ்த்துக்கள்... நீங்க பண்ற அலப்பறையை பொறுத்துகிட்டு இருக்குற ஒரு பொறுப்பான ஜீவன் கிடைச்சதுக்காக. ;-)
(சும்மா.. உல்லுலாயி )

Unknown said...

வாழ்த்துக்கள் யோகி...

இப்படி ஒரு நல்ல மனைவியை பெற்றதற்கும்...

முத்துகுமரன் said...

கொஞ்சம் காதல் கதையும் சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன்! அம்போனு விட்டுட்டீங்க :-)


யோகக்காரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

Vidhoosh said...

on recalling your post, ஏதோ உணர்வில் கைய கட்டிக்கிட்டு கண் மூடி ரசிக்கிறேன்.

Happy B'day Yogi. Now, who's the luckiest?

:) Lots of love to you both.

☼ வெயிலான் said...

Convey my wishes to Mr. Yogi

தாரணி பிரியா said...

HAPPY BIRTHDAY YOGI SIR :)

Anonymous said...

யோகிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் - சுவாரஸ்யமாக எழுதிய உங்களுக்கும்!

உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். ரசனையோடு எழுதுகிறீர்கள். ஒரே ஒரு சின்னக் குறை - வசனங்களுக்கு வெளியில் வரும் ஆங்கில வார்த்தைகளைக் கொஞ்சம் முனைப்பு எடுத்துத் தமிழில் எழுதலாமே - எல்லாவற்றையும் அல்ல, குறைந்தபட்சம் வழக்கத்தில் உள்ள தமிழ் வார்த்தைகளையாவது பயன்படுத்த முயற்சி செய்யுங்கள், உதாரணமாக, ’கல்லூரியிலேயே வந்து செலக்ட் செய்து’ என்பதைக் ‘கல்லூரியிலேயே வந்து தேர்ந்தெடுத்து’ என எழுதுவது அப்படி ஒன்றும் கஷ்டம் அல்ல - இந்த விமர்சனத்தை சரியானமுறையில் எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

- என். சொக்கன்,
பெங்களூரு.

கணேஷ் said...

வாழ்த்துகள் Yogi Sir....

CS. Mohan Kumar said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் யோகி.

Radhakrishnan said...

வேலை... காதல்... திருமணம்... அழகிய நினைவுகள். பிறந்த நாள் வாழ்த்துகள் யோகி.

Priya said...

Happy Birthday YOGI sir!

Anonymous said...

Many more happy returns of the day Yogi!!!!!!!!

ஹேமா said...

உங்கள் "யோகேஸ்" க்கு
அன்பு வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

என்னுடைய வாழ்த்துக்களும்..

மாதேவி said...

பிறந்தநாள் வாழ்த்துகள் யோகி.

இருவரும் சகல நலமும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துகள்.

janaki said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யோகி

Raghu said...

//“யோகேஷ்”
“லோகேஷ்?”//
அப்ப‌ ஹிய‌ரிங் எய்ட் இல்லையா?...;)

யோக‌ம் நிறைந்த‌ க‌ண்ண‌னுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள். உங்க‌ள் காத‌லும், அன்பும் இன்று போல் என்றும் நிலைத்திருக்க‌, உங்க‌ளுக்கும் வாழ்த்துக‌ள் :)

எம்.எம்.அப்துல்லா said...

//அவர் தான் தினமும் பிக்கப், ட்ராப்.

//

கடைசியில நீங்க ரெண்டுபேரும் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆயிட்டீங்க :)


அப்புறம் வாழ்த்துகள் விக்கி

(அவருக்கு சொல்லாம உங்களுக்கு ஏன் சொல்றேன்னு கேக்குறீங்களா?? நான் அவரையும் உங்களையும் பிரிச்சுப் பாக்குறதே இல்லை ஹி..ஹி..)

ஷர்புதீன் said...

"எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் அவர் கெட்ட நேரம் "

ஒன்னும் புரியலையே...

இப்படிக்கு - மண்டையில் மசாலா இல்லாதோர் சங்கம்.

iniyavan said...

விக்கி,

யோகிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.

இதே போல சந்தோசத்துடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் நீங்கள் இருவரும் வாழ எல்லாம் வல்ல என் ஏழுமலையானை பிரார்த்திக்கிறேன்.

ஏனோ உங்கள் இருவரையும் டெல்லி வந்து பார்க்க ஆசை.

உங்கள் எழுத்து நடை வர வர அருமையாய் இருக்கிறது.


என்றும் அன்புடன்
என். உலகநாதன்.

Jackiesekar said...

இதைவிட சிறப்பாக உங்கள் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முடியாது.. சலைக்காமல் இஷ்டப்ட்டு கஷ்டபடும் உங்கள் கணவருக்கு என் அன்பும்
கனிவும்

ஜாக்கிசேகர்

வால்பையன் said...

அந்த ப்பாவிக்கு இன்னைக்கு தான் பொறந்த நாளா!?

இன்னைக்கு ஒருநாளாவது அடிக்காம விடுங்க அவரை!


வாழ்த்துக்கள் தோழருக்கு!

Thamira said...

உண்மையும், காதலும் மிளிர்கிறது. இருவருக்கும் வாழ்த்துகள்.! யாரு முதலில் ப்ரொபோஸ் பண்ணியதுங்கிற உலக ரகசியத்தை மறைச்சுட்டீங்களே.!

கனிமொழி said...

யோகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
:-)

yasaru said...

ஹலோ விக்னேஸ்வரி மேடம்..birthday wish சொல்லனும்னா ஒரு வரில சொல்லுங்க..ஏன் இப்படி romantic mix பண்ணி சொல்றீங்க‌..எங்களுக்கு stomach fire அதிகமாகுது ம்ம்...அவனவன் ஊருக்குள்ள லவ் பண்ண ஆள் கிடைக்காம வறண்டு போய் இருக்கான்.. நீங்க வேற.....wish u happy birthday sir..

Rajasurian said...

wish u a very happy birthday Mr.Yogi

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்களின் ‘உள்ளம் கவர் கள்வருக்கு’ பிறந்த நாள் வாழ்த்துக்கள்

முத்துகுமரன் said...

//கையிலிருந்த நோட்டின் ஒரு மூலையில் எழுதிக் கொண்டேன்//
இதயத்தில்னு இருக்கணும்

சுசி said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்!!

ஜெய்லானி said...

யோகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சாமக்கோடங்கி said...

//நேசமித்ரன் said...

பெய்யும் மழையென பேதமறியா தெல்லாப் பொழுதும் உன்னதமும் இன்னலும் உயிர்வதையுறும் பொழுது தோறும் இன்முகம் காட்டும் உந்தன் ஆயுள் ரேகையின் ஆயுள் நீள ப்ரியம்வதா உன் வாழ்த்து மெய்ப்படட்டும்

நன்மையே விழையும் சீவன் உன் செய்தவத்தின் பயன்கள் யாவும் தீதற சிறக்க செய்யும் சீரெல்லாம் பெற்று
செம்மையே விளைக ... வாழி ! //

அப்பா.... என்ன ஒரு மொழி...என்ன ஒரு வாழ்த்து.. அருமை நேசமித்ரன் அவர்களே....

இது போன்று வாழ்த்து கிடைக்க யோகேஷ் குடுத்து வைத்திருக்க வேண்டும்.. இதற்கு மேல் என்ன வாழ்த்த....

Anonymous said...

Happy Birthday To Yogi Sir. By the way, what is the meaning for 'Summa' in hindi?

S Maharajan said...

பிறந்தநாள் வாழ்த்துகள் யோகி.

வினோத் கெளதம் said...

Wow..Really Intersting.
Convey my wishes to him..

ரிஷபன் said...

எங்கள் குடும்பத்தினரின் வாழ்த்துகளும்..

எல் கே said...

அருமை

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கு,. ஆமா அவருக்கு இப்ப தமிழ் படிக்க தெரியுமா ???

அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள் யோகிக்கு!!!மிக அழகா எழுதுறீங்க. எழுதி இருக்கீங்க. யோகிக்கும் தமிழ் கத்து குடுத்து இதை படிக்க சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவார்!

butterfly Surya said...

பிறந்தநாள் வாழ்த்துகள் யோகி.

Anonymous said...

என்னுடைய வாழ்த்துக்களும்..

நாளும் நலமே விளையட்டும் said...

dancing pose was good in your profile

Venkat M said...

Hi Vicky, Convey my belated wishes to Yogi.

Unknown said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

Unknown said...

//அவர் கெட்ட நேரம் ///


என்னா பண்றது எலாம் தலைவிதி

CS. Mohan Kumar said...

Me the 250th Follower!!

Sateesh said...

ek gaon me ek latki love pandaango.... another 2 states story??!!

விக்னேஷ்வரி said...

நன்றி இராமசாமி கண்ணன்.

நன்றி பா.ரா. மாம்ஸ்.

நன்றி நசரேயன்.

நன்றி செந்தில்.

நன்றி கவிஞரே.

நன்றி கோபிநாத்.

நன்றி தீப்ஸ்.

நன்றி சூர்யா.

நன்றி சங்கவி.

நன்றி புனிதா.

நன்றி கருணாகரசு.

நன்றி தமிழரசி.

விக்னேஷ்வரி said...

நன்றி விஜி.

நன்றி முரளி.

நன்றி கார்க்கி.

நன்றி வெங்கட்.

நன்றி அமுதா.

நன்றி சிவா. ரைட்டு, மீதியை வீட்ல அம்மாகிட்ட பேசிக்கிறேன்.

நன்றி Hanif Rifay.

நன்றி முத்துகுமரன் ;)

நன்றி விதூஷ். ரெண்டு பேருமே தான்.

நன்றி வெயிலான்.

விக்னேஷ்வரி said...

நன்றி தாரணி.

நன்றி சொக்கன் சார்.
உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி. நிச்சயம் மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன்.

நன்றி கணேஷ்.

நன்றி மோகன்.

நன்றி ராதாகிருஷ்ணன்.

நன்றி ப்ரியா.

நன்றி அம்மிணி.

நன்றி ஹேமா.

நன்றி குமார்.

நன்றி மாதேவி.

விக்னேஷ்வரி said...

நன்றி ஜானகி.

ரகு, அடி விழும். நன்றி ரகு.

அப்படி ஆகணும்னு தான் நினைச்சோம் அப்துல்லா. ஆனா வீட்லேயே கூப்பிட்டுக் கட்டி வெச்சுட்டாங்க. நன்றி அப்துல்லா. ஹிஹிஹி...

ஷர்ஃபுதீன், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுல்ல. அதான்.

நன்றி உலகநாதன். டெல்லி வரும் போது சொல்லுங்கள்.

நன்றி ஜாக்கி சேகர்.

நன்றி வால்.

நன்றி ஆதி. ஹிஹிஹி...

விக்னேஷ்வரி said...

நன்றி கனிமொழி.

நன்றி யாசர். ஸாரிங்க. :)

நன்றி ராஜசூரியன்.

நன்றி ராமமூர்த்தி.

பேரைக் கேட்டவுடனேயே பத்திக்க இது சினிமாக் காதல் இல்லையே முத்துகுமரன். :)

நன்றி சுசி.

நன்றி ஜெய்லானி.

நன்றி பிரகாஷ்.

நன்றி அனாமிகா. உங்களவர்கிட்ட கேளுங்க, அர்த்தம் சொல்வார்.

நன்றி மஹராஜன்.

விக்னேஷ்வரி said...

நன்றி வினோத் கௌதம்.

நன்றி ரிஷபன்.

நன்றி LK. இல்லைங்க, நான் தான் மொழிபெயர்த்து சொல்வேன்.

நன்றி அபிஅப்பா. அவருக்கு மொழிபெயர்த்து சொல்லிட்டேங்க.

நன்றி சூர்யா.

நன்றி மஹா.

நன்றி நாளும் நலமே.

விக்னேஷ்வரி said...

நன்றி வெங்கட்.

நன்றி மின்மினி.

ஆமா பார்கவ். இனி ஒண்ணும் பண்ண முடியாது.

நன்றி மோகன்.

வாங்க சதீசன். நன்றி.

சுரேகா.. said...

தாமதமாகத்தான் படிக்கிறேன்.

இருந்தாலும்...வாழ்த்த மனமிருந்தால் போதுமல்லவா?

யோகிக்கு வாழ்த்துக்கள்ங்க!