Showing posts with label அரசியல் சாக்கடை. Show all posts
Showing posts with label அரசியல் சாக்கடை. Show all posts

Monday, May 18, 2009

தேர்தல் கலாச்சாரம்

இரு வாரங்களுக்கு முன்பு மதுரை சென்று வந்த அம்மா பயங்கர புலம்பல். காரணம், மதுரையில் ஒரு ஓட்டிற்கு ஐநூறு ரூபாய் கொடுத்திருக்கிறார்களாம். தவிர, குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் பணமும், தாய்மார்களுக்கு ஒரு பட்டு சேலையும் வழங்கியிருக்கிறார்கள். பணம் பத்தும் செய்யும் என்பதற்கேற்ப மதுரையில் அழகிரி ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து விட்டார். தேர்தல் முடிவுகள் வந்த அன்று அம்மாவின் வயிற்றெரிச்சல் இன்னும் அதிகமாகி விட்டது. " இப்படி குடியுரிமையை வியாபரமாக்கிட்டானே, போகும் போது என்னத்த கொண்டு போகப் போறானோ" என்ற அம்மாவின் வசைகள் நாட்டின் தலை எழுத்தையா மாற்றப் போகிறது. (நம்ம ஓட்டு வியாபாரமாக ஆகாத வரையில் மகிழ்ச்சி)  
**************************************************

கொளுத்தும் வெயிலைத் தணிக்கும் வகையில் பத்து நாட்களுக்கு முன்னர் டெல்லியில் பனி மழை பொழிந்தது. மாலை நேரங்களில் புழுதிக் காற்றுடன் கூடிய மழையால் அலுவகத்திலிருந்து வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டாலும் இரவு நேரத்தில் வெக்கை தணிந்திருந்தது. ஆனால், டெல்லி வாசிகள் மகிழ்ந்ததற்கு மாறாக இப்போது மறுபடியும் கொளுத்த ஆரம்பித்து விட்டார் சூரிய பகவான். இன்றைய வெப்ப நிலை 43 டிகிரி. இது இன்னும் மே மாத இறுதி மற்றும் ஜூனில் உயரும். கூலரில் சமாளித்து விடலாம் என நினைத்த எங்களுக்கு ஏ.சி. வாங்கியே தீர வேண்டும் எனக் கட்டாயம். இந்த மாத சம்பளத்தில் ஏ.சி. பண்டுக்கென தனியாக ஒதுக்கியாச்சு. சீக்கிரமே வாங்கி வர வேண்டும். குளிர் காலத்தில் ஹீட்டரும், கோடை காலத்தில் ஏ.சி.யும் இல்லாமல் டெல்லியில் இருப்பது மிகவும் கடினம். (தலைநகரில் சவுகரியங்களைப் போல் அசவுகரியங்களுக்கும் குறையில்லை)  
**************************************************

நீங்கள் எப்போதாவது ஹிந்தி சீரியல்களைப் பார்த்திருக்கிறீர்களா... நான் ரெகுலராகப் பார்க்கும் வழக்கம் இல்லை எனினும், யாராவது பார்க்கும் போது தவிர்க்க முடியாமல் பார்க்க நேர்கிறது. நம் தமிழ் சீரியல்களில் அழுகையும், வில்லத்தனமும் எந்த அளவு சகிக்க முடியாதவையாக இருக்கின்றனவோ அதை விட அதிகமாகவே ஹிந்தி சீரியல்களில் மேக்கப்பும், ஓவர் ஆக்டிங்கும் தாங்க முடியவில்லை. தூங்கி எழும் சீனில் கூட நடிகையின் தலை சீராக வாரப்பட்டு, லிப்ஸ்டிக், ஐ லைனர், ஐ ஷாடோ மற்றும் அனைத்து அழகு சாதனப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டு ஒரு செயற்கைத்தனத்தை ஏற்படுத்துகிறது. இது தவிர நல்ல கதைகள் கொண்ட சில சீரியல்களில் கூட நடிகர், நடிகைகளின் நடிப்பு திகட்டுகிறது. உத்ரன் என்றொரு நல்ல கதை. அதில் வரும் சிறுமிகளின் முக பாவனைகளைப் பார்க்கும் போது ஐயோ என அலறி டிவியை அணைத்து விட தோன்றுகிறது. இது போதாதென்று எல்லா சேனல்களிலும் வரும் கலவரமூட்டும் ரியாலிட்டி ஷோக்கள். யாராவது இருவரை சண்டை போட வைத்து அதில் காசு பார்க்கும் வியாபார புத்தி, மிகுந்த எரிச்சலூட்டுகிறது. தற்போது நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள் இரண்டு. விஜய் டிவியின் " நீயா நானா? " மற்றும் " குற்றம் நடந்தது என்ன? " இதையும் சன் மற்றும் கலைஞர் டிவியினர் காப்பி அடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். (சன் மற்றும் கலைஞர் டிவியின் இம்சைகள் தாங்க முடியவில்லை. ஈயடிச்சான் காப்பி என்பதற்கு அப்படியே பொருந்துவது போல அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் participants ஐயும் காப்பி அடித்தது கொடுமையிலும் பெருங்கொடுமை)  
**************************************************

இந்த தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் சரத் பாபு பெற்ற ஓட்டுகள் 14101. அறியும் போதே பெருமையாய் இருக்கிறது. இதுவே அவருக்கு கிடைக்கும் பெரும் வெற்றியாக நான் எண்ணுகிறேன். எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் துணிச்சலாய் சுயேச்சையாய் நின்று 14101 வாக்குகளைப் பெற்ற சரத் பாபுவிற்கு வாழ்த்துக்கள். அடுத்த தேர்தலில் இன்னும் பலரது கண்கள் திறக்கும். அவர் வெற்றி பெறுவார் என நம்புவோம். (அரசியல் ஒரு சாக்கடை என்று மட்டுமே நினைத்திருக்கும் நம் நடுவே அதை சுத்தப்படுத்த அதற்குள் இறங்கிய சரத்பாபு உண்மையிலே பலரின் உள்ளங்களில் ஜெயித்து விட்டார்)

Tuesday, April 28, 2009

கலைஞரின் நடிப்புத் திறமை

இன்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தி. கலைஞர் உண்ணாவிரதம், இலங்கைப் போர் தற்காலிக நிறுத்தம்.




இன்றைய தினமலரில் முதல் பக்கம் ஓய்ந்தது குண்டு சத்தம் என கொட்டை எழுத்துகளில் வந்துள்ளது. எங்கே ஓய்ந்தது.... அதே தினமலரில், அதே முதல் பக்கத்தில் கீழே மற்றுமொரு செய்தி. போர் நிறுத்த அறிவிக்குப் பின்னும் தாக்குதல்.



நல்லா நம்மள கேனையன் ஆக்குறாருயா. இத்தனை நாள் இதை செய்யத் தெரியாமல் நேற்று தான் கலைஞருக்கு ஞானம் பிறந்ததா? இல்லை நேற்று தான் இலங்கையில் பல உயிர்கள் சாகின்றன என்பது கலைஞர் புத்திக்கு தெரிந்ததா? அல்லது பதவி பயம் வந்ததால் செய்யும் பாசாங்கா? மாறாக, கூட்டுக் கட்சியிலிருந்து சிங், தேர்தலுக்கு பதினைந்து நாள் முன்னாள் இப்படி செய்தால் நல்லது என ட்ரைனிங் கொடுத்தாரா....

எத்தனை கேள்விகள் அனைவர் மனதிலும். இத்தனை கேள்விகள் எல்லோர் மனதில் இருந்தும், அவரின் அடிவருடிகளைத் தவிர யாரும் கலைஞரின் நாடகத்தை ஏற்பதாக இல்லை. இன்னொரு விசேஷம் என்னவென்றால் அவரால் நான்கு மணி நேரத்திற்கு மேல் உட்கார முடியவில்லை எனவும், அதற்குப் பிறகு மருத்துவர்களின் அறிவுரையால் அவர் படுத்துக் கொண்டே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் எனவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அப்படி படுக்க வேண்டுமானால், தரையில் ஒரு பாயை விரித்தோ அல்லது கயிற்றுக் கட்டிலிலோ கடல் காற்று வாங்க வேண்டியது தானே. அதை விட்டு சாவகாசமான மரக்கட்டிலில் மெத்தை, தலையணையுடன், இரண்டு மின் விசிறிகள் மற்றும் இரண்டு ஏர் கூலர்கள், கூட பத்து பேர் காவலுக்கு. என்ன சொல்லி திட்டினா, இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு புத்தி வரும் எனத் தெரியவில்லை. கோபம் கோபமா வருது. முடியல.

சரத்பாபு.... நீங்க ஜெயிக்கணும். அப்போ தான் கலைஞரையும், அம்மாவையும் ஒண்ணா உக்கார வச்சிட்டு, அவங்க இவ்வளவு நாள் என்னத்த கிழிச்சாங்கனு நாம கிழிச்சுக் காட்ட முடியும். உங்களை ஜெயிக்க வைப்போம்.
தென் சென்னை மக்களே, மனசு வைங்க. நல்லது உங்க தொகுதில இருந்து ஆரம்பிக்க வழி செய்யுங்க.


நன்றி : தினமலர்.