இன்றைய தினமலரில் முதல் பக்கம் ஓய்ந்தது குண்டு சத்தம் என கொட்டை எழுத்துகளில் வந்துள்ளது. எங்கே ஓய்ந்தது.... அதே தினமலரில், அதே முதல் பக்கத்தில் கீழே மற்றுமொரு செய்தி. போர் நிறுத்த அறிவிக்குப் பின்னும் தாக்குதல்.
நல்லா நம்மள கேனையன் ஆக்குறாருயா. இத்தனை நாள் இதை செய்யத் தெரியாமல் நேற்று தான் கலைஞருக்கு ஞானம் பிறந்ததா? இல்லை நேற்று தான் இலங்கையில் பல உயிர்கள் சாகின்றன என்பது கலைஞர் புத்திக்கு தெரிந்ததா? அல்லது பதவி பயம் வந்ததால் செய்யும் பாசாங்கா? மாறாக, கூட்டுக் கட்சியிலிருந்து சிங், தேர்தலுக்கு பதினைந்து நாள் முன்னாள் இப்படி செய்தால் நல்லது என ட்ரைனிங் கொடுத்தாரா....
எத்தனை கேள்விகள் அனைவர் மனதிலும். இத்தனை கேள்விகள் எல்லோர் மனதில் இருந்தும், அவரின் அடிவருடிகளைத் தவிர யாரும் கலைஞரின் நாடகத்தை ஏற்பதாக இல்லை. இன்னொரு விசேஷம் என்னவென்றால் அவரால் நான்கு மணி நேரத்திற்கு மேல் உட்கார முடியவில்லை எனவும், அதற்குப் பிறகு மருத்துவர்களின் அறிவுரையால் அவர் படுத்துக் கொண்டே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் எனவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அப்படி படுக்க வேண்டுமானால், தரையில் ஒரு பாயை விரித்தோ அல்லது கயிற்றுக் கட்டிலிலோ கடல் காற்று வாங்க வேண்டியது தானே. அதை விட்டு சாவகாசமான மரக்கட்டிலில் மெத்தை, தலையணையுடன், இரண்டு மின் விசிறிகள் மற்றும் இரண்டு ஏர் கூலர்கள், கூட பத்து பேர் காவலுக்கு. என்ன சொல்லி திட்டினா, இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு புத்தி வரும் எனத் தெரியவில்லை. கோபம் கோபமா வருது. முடியல.
சரத்பாபு.... நீங்க ஜெயிக்கணும். அப்போ தான் கலைஞரையும், அம்மாவையும் ஒண்ணா உக்கார வச்சிட்டு, அவங்க இவ்வளவு நாள் என்னத்த கிழிச்சாங்கனு நாம கிழிச்சுக் காட்ட முடியும். உங்களை ஜெயிக்க வைப்போம்.
தென் சென்னை மக்களே, மனசு வைங்க. நல்லது உங்க தொகுதில இருந்து ஆரம்பிக்க வழி செய்யுங்க.
நன்றி : தினமலர்.
20 comments:
மேடம் வெளுத்து வாஙகிறீங்க.
நாங்கெல்லாம் சென்னைல வீட்டுக்கு டாடா சுமோ அல்லது டயோடா குவாலிஸ் வரும்னு பேசமா இருக்கோம்.
வாழ்த்துக்கள்.
தென் சென்னை தொகுதியில் ஒட்டு போடப்போவது இணையத்தில் உலாவும் மக்கள் மட்டுமல்ல
உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
எல்லாமே நாடகம் தானங்க.. நீங்க சொல்ற மாதிரி சரத் ஜெயிச்சு வந்தா ஒரு மாற்றம் வரலாம்.. பார்ப்போம்..
உண்மை தான்..சரி விடுங்க வயதானவர் எதோ பண்ணிவிட்டு போகிறார்..
well said.
nice article
காங்கிரஸின் கபட நாடகம் கலைஞர் மூலம் அதிகாலையில் அற்புதமாக அரங்கேறியது. நடிகர் திலகத்தை திரைஉலகிற்கு தந்த கலைஞருக்கு நடிப்பது ஒன்றும் பெரியதால்ல.
its a shame to tamilnadu and tamilan... there is a end for their endless shelfishness... "saadu (tamilan) miranduvittan... suuthin suthiratharikal alivu nookki"
கேனையன் // கேனச்சி என்றல்லவா இருக்க வேண்டும்?!
Yathrikan Said:
//தென் சென்னை தொகுதியில் ஒட்டு போடப்போவது இணையத்தில் உலாவும் மக்கள் மட்டுமல்ல//
உண்மை தான் எல்லோரையும் அவர் போய் சேர வேண்டும்..
நல்ல பதிவு...தினமலர் படித்து விட்டு நானும் இதைத்தான் சிந்தித்தேன்...கலைஞர் உண்ணாவிரதம் இருந்தாராம்...அதனால் இலங்கை பணிந்த்தாம்...ஏதாவது நம்பும் மாதிரி இருத்தால் பரவாயில்லை...தமிழ்நாட்டில் விரல்சூப்பும் குழந்தை கூட இந்த கூற்றை ஏற்க்காது..தினமலர் போன்ற நல்ல நாளிதழ்கள் இது போன்ற கருத்துத்திணிப்பை நிறுத்தவேண்டும்..அதற்க்கு உங்களைப்போன்ற நல்ல பதிவர்களின் இடித்துரைத்தல் அவசியம்..!!
நட்புடன்,
ம. சுந்தர் ராஜ்
"நல்லா நம்மள கேனையன் ஆக்குறாருயா. இத்தனை நாள் இதை செய்யத் தெரியாமல் நேற்று தான் கலைஞருக்கு ஞானம் பிறந்ததா? இல்லை நேற்று தான் இலங்கையில் பல உயிர்கள் சாகின்றன என்பது கலைஞர் புத்திக்கு தெரிந்ததா?"
Very well said.. I too have the same view on this episode.
அரசியல் பதிவு..
ம்ம்ம் நடக்கட்டும் :) :)
நன்றி ரவிஷங்கர்.
இங்கேயும் பிளைட் பிடிச்சு வந்தாலும், வருவாங்க.
நீங்கள் சொல்வது சரி தான் யாத்ரீகன். ஆனால், இணையத்தில் உள்ள மக்களுக்கு தென் சென்னை தொகுதியில் தெரிந்தவர்கள் இருப்பின், நம் கோரிக்கையை வைக்கலாமே.
அவரை ஜெயிக்க வைக்குறாங்களா, இல்லை அங்கேயும் இந்த அரசியல் சுயநலவாதிகள் தான் ஜெயிக்கப் போறாங்களானு பார்ப்போம். தென் சென்னை மக்களிடம் தான் நாட்டுக்கான மாற்றமே இருக்கு கார்த்திகைப் பாண்டியன்.
ஏதோ ஒரு பதிவுல படிச்ச மாதிரி, வயசாகிட்டதால ஒவ்வொரு இடமா போய்ப் பிரச்சாரம் பண்ண முடியாதுல்ல. அதான் இப்படி பண்றார் வினோத் கௌதம்.
Thank you Kanna.
நடிகர் திலகத்தை திரைஉலகிற்கு தந்த கலைஞருக்கு நடிப்பது ஒன்றும் பெரியதால்ல. //
சரி தான் திண்ணை தோழன்.
அப்படித்தான் நம்புவோம் உதயதேவன்.
கேனையன் // கேனச்சி என்றல்லவா இருக்க வேண்டும்?! //
அடுத்த முறையிலிருந்து திருத்திக் கொள்கிறேன். நன்றி செல்வா.
உண்மை தான் எல்லோரையும் அவர் போய் சேர வேண்டும்.. //
சேர்வதற்கான நம் முயற்சியை நாம் மேற்கொள்வோம்.
கருத்துக்கு நன்றி சுந்தர்ராஜ்.
நன்றி ராஜா.
வாங்க SK.
நல்ல பதிவு விக்னேஷ்வரி...கேள்விகளுக்கு மட்டும் விடை கிடைக்குமென்றால்...ஹ்ம்ம்!
சரத் ஜெய்க்க வேண்டாம். கணிசமான ஓட்டு வாங்கினாலே நல்லாயிருக்கும்.. அடுத்த தேர்தலில் பலருக்கு தைரியம் வரும்
Hi விக்னேஷ்வரி,
This is Bharat. Can you send me your original post of "ஈழத்தின் முடிவு இதுதானா...." to my mail id bharat_karur@yahoo.co.in
Thanks,
Bharat
Sorry Bharat,
I have deleted that.
Post a Comment