Wednesday, May 5, 2010

டெல்லி டு கோலாப்பூர் - 1 - டெல்லி விமான நிலையம்


பதினைந்து நாட்கள் வீட்டிலிருந்து விடுதலை. கோலாப்பூருக்கு வேலை விஷயமாகப் பயணம். இந்தப் பயணக் கட்டுரையை வித்தியாசமா வீட்டிலிருந்து கிளம்பினதுல இருந்து ஆரம்பிக்கலாம்.

காலைல ஒன்பதரைக்கு ஃப்ளைட். எட்டரைக்கு ஏர்போர்ட்ல இருந்தாப் போதும். ரிலாக்ஸ்டா ஆறரைக்கு வீட்ல இருந்து கிளம்பி ஏழரைக்கெல்லாம் ஏர்போர்ட் போயாச்சு. டெல்லி ஏர்போர்ட் எவ்ளோ மாறிடுச்சு. மாசத்துக்கு குறைஞ்சது நாலு முறையாச்சும் அங்கே போனாலும் எப்போவும் சரியான நேரத்துக்குப் போறதால அங்கே இருக்குற விஷயங்களை சரியா பார்க்கவும், அதைப் பத்தி சிந்திக்கவும் முடியறதில்ல. இந்த முறை நல்லா நேரம் கிடைச்சது.

2-3 வருஷத்துக்கு முன்னாடி காலை ஃப்ளைட்னாலே வேண்டாம்னு கேன்சல் பண்ணி மதிய நேரமா பயணிப்பேன். காரணம் என்னன்னா காலை 5 மணியிலேருந்து 10 மணி வரைக்கும் டெல்லி சப்ஜி மண்டியை விட ஏர்போர்ட்ல தான் கரைச்சல் அதிகமா இருக்கும். அந்த கூட்டத்தைப் பார்த்தா நம்மூர் சிட்டி பஸ்ல துண்டு போட்டு இடம் போட்டுட்டு அந்த இடத்துல யாரும் உக்கார்ந்திடாம இருக்க முண்டியடிச்சிக்கிட்டு ஏறுர மக்கள் நினைவு வரும். எப்படியோ சில பல காலை நேர அனுபவங்கள் கொடுமையா இருந்திருக்கு. இதுக்கு நடுவுல பெங்களூர்ல புது ஏர்போர்ட் ரெடியானப்போ, அஹமதாபாத்தோட கூட்டமில்லாத ஏர்போர்ட் பார்க்குறப்பவெல்லாம் டெல்லியும் இப்படி இருக்கக் கூடாதான்னு தோணும். ஆனா நிஜமாவே இப்போ சூப்பரா இருக்கு.

காமன்வெல்த் கேம்ஸுகளுக்கு ஒரு நன்றியைக் கட்டாயம் சொல்லியே ஆகணும். அது டெல்லில நடக்குறதால டெல்லில எவ்வளவு மாற்றங்கள்... விமான நிலையம் போகற வழில டக்கரா ஃப்ளை ஓவர் கட்டிட்டாங்க. நல்ல ஸ்பேஸ் விமான நிலையத்துக்கு முன்னாடி. புதுப்பிக்கப்பட்ட டெர்மினல்கள், கூட்டமே தெரியாத அளவுக்கு விரிவாக்கப்பட்ட கவுண்ட்டர்கள், காத்திருக்க விசாலமான இடம், ஏகப்பட்ட கடைகள்ன்னு ரொம்ப நல்லாப் பண்ணிட்டாங்க. ஆனாலும் டெல்லி ஏர்போர்ட்டில் மாறாத ஒரே விஷயம் ட்ராஃபிக். எப்போவுமே லேண்டிங் 10 நிமிஷமாவது டிலே ஆகுறதுண்டு. காரணம் 5 நிமிஷத்துக்கு ஒரு ஃப்ளைட் லேண்டாகுற பிஸியான ஏர்போர்ட் இது.


அடுத்ததா ஏர்போர்ட் போறதுக்கான சாலைகள். புதுசா கட்டின ஃபளை ஓவரால ட்ராஃபிக் ஜாம் நல்லாவே குறைஞ்சுடுச்சு.


சரி, நாம மறுபடியும் ஏர்போர்ட்டுக்குள்ள வரலாம். உள்ளே சாப்பாட்டுக் கடையும், புத்தகக் கடையும் தவிர வேறெந்த கடையிலும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடியல. அங்கங்கே இருக்குற ட்ரெஸ் கடைலேயும், கிஃப்ட் கடைகளிலேயும் ஒரு ரெண்டு பேர் சும்மா சுத்திப் பார்த்திட்டு இருந்தாங்க. இந்தக் கடைகளில் வியாபரமே இல்லையே பின்ன ஏன் இங்கே கடை வெக்குறாங்கன்னு யோசிச்சப்போ தான் தெரிஞ்சது “இதுவும் ஒரு வியாபார விளம்பரம்”ன்னு. இங்கே யாரும் வாங்கலைன்னாலும் இந்தக் கடைகளின் ப்ராண்டுகள் வெளியூர் / வெளிநாட்டுப் பயணிகளின் மனதில் பதிஞ்சிடுது. இங்கே வாங்க முடிஞ்சவங்க இங்கேயும், வாங்க முடியாதவங்க இதே கடைகளில் வெளியேயும் வாங்கிக்கலாம். ப்ராண்ட் நேமை எப்படியோ நம்ம மண்டைக்குள்ள கொண்டு வந்துட்டாங்க. ம், ஓகே.

நம்மூர் விமான நிலையங்களில் எனக்குப் பிடிச்ச கடைகள் புத்தகக் கடைகள். எல்லா வகையான புத்தகங்களும் கிடைக்கும். ரொம்ப நாள் கழிச்சு யாரையாவது பார்க்கப் போறவங்களுக்கு அவங்களுக்கு ஏத்த மாதிரியான புத்தகங்கள் வாங்கிட்டுப் போக வசதியா இருக்கு. சின்னக் குழந்தைகளோட ட்ராயிங், க்விஸ் புக்லேயிருந்து மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், வீட்டுல இருக்குற அம்மணிகளுக்கு உபயோகமாகுற புத்தகங்கள், பிஸினஸ், மேனேஜ்மெண்ட் புத்தகங்கள், அனைத்து வகை நாவல்கள், பாட்டி, தாத்தா வாசிக்க ஆன்மீகம், மருத்துவம், கதைப் புத்தகங்கள்ன்னு எல்லாமே இருக்கு. ஆனா எல்லாமே இந்திய மொழிகள் எதுலேயுமே இல்லாம ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். ஏன்னா நம் தாய்த் திரு நாடு “இந்தியா”.

அடுத்தது சாப்பாட்டுக் கடைகள். டெல்லி முழுக்கவே சாப்பாட்டுக் கடைகள் விலை அதிகம்தான்னாலும் இங்கே இன்னும் அதிகம். ரெண்டு ப்ரட்டுக்குள்ள அழுகிப் போன காய்கறிகளை ஒளிச்சு வெச்சிட்டு 200 ரூபாய் வாங்கிடுறாங்க. நம்மூர்ல நல்லா ஸ்டீல் க்ளாஸை வெந்நீர்ல கழுவி ப்ரூ காபி போட்டு நுரை பொங்க ஆத்திக் கூடவே டபராவும் குடுத்து 5 ரூபாய்க்குக் குடிச்ச காஃபியோட சுவையும், மணமும் இங்கே மெஷின்ல இருந்து எடுத்து பேப்பர் டம்ளர்ல குடுக்குற 100 ரூபாய்க் கேப்பசினோல இல்ல. ஆனாலும் வேற வழியில்லாம அதைத் தானே வாங்கிக் குடிக்க வேண்டியிருக்கு. இங்கே விட்டுட்டா அடுத்து ஃப்ளைட்ல அக்கா வந்து வெந்நீர், பால் பவுடர், காஃபி பவுடர், சீனியெல்லாம் குடுத்து நம்மளையே காஃபி கலந்து குடிக்க சொல்லும். அந்த நேரத்துல தான் ஃப்ளைட் ஜெர்க் ஆகி காஃபி நம்ம மேலயும், நம்ம பக்கத்துல தூங்கிட்டிருக்குற அங்கிள் மேலேயும் கொட்டும். தூங்கிட்டிருக்குறவர் எழுந்து முறைக்கும் போது நாம வழக்கம் போல அசடா சிரிக்க வேண்டியிருக்கும். இதை விட பெட்டர் இங்கன 100 ரூபாய்க்குக் காஃபி குடிக்குறது.

செக்கிங் முடிச்சு உள்ளே போனதும் நேரா புத்தகக் கடைக்குள்ள போய் என் ரெகுலர் புத்தகமான இண்டீரியர் மேகஸின் வாங்கிட்டு, அப்படியே ஒரு கேப்பசினோவையும் கையில் ஏந்திக்கிட்டு வந்து உக்காந்தேன். காதுல வைரமுத்து வரிகளுக்கு ரஹ்மான் தாலாட்டு, கைல இண்டீரியர் மேகஸின், குளுகுளு ஏசி ஹால், இதமா தொண்டை நனைக்குற காஃபி.... இப்படியே 24*7 இருக்க சொன்னாலும் இருப்பேன் நான். ஒண்ணரை மணி நேரம் சட்டுன்னு போயிடுச்சு.

ஒன்பது மணிக்கு ஃப்ளைட்டுக்குப் போக கேட் நோக்கிப் போனா எவ்ளோ பெரிய க்யூ. ரீசஷன் முடிஞ்சதுன்னு தெரிஞ்சது. க்யூவெல்லாம் குறைஞ்சதும் அங்கே இருக்குற பஸ்ல (அட, கூகுள் பஸ் இல்லைங்க) போய், ஏர்க்ராஃப்ட்டுக்குள்ளேயும் போயாச்சு. ஐ.பி.எல்.ல விஜய் மால்யா எவ்ளோ லாஸாகிருக்காருங்குறது கிங் ஃபிஷர் சர்வீஸ்லேயே தெரிஞ்சது. அதை அடுத்த பதிவில் தொடர்றேன். இப்போதைக்கு டாட்டா சொல்லுங்க. ஃப்ளைட் கிளம்பப் போகுது.

44 comments:

க ரா said...

ஆரம்பமே அசத்தல்.

நேசமித்ரன் said...

அடுத்தது சப்பாட்டுக் கடைகள் ?

Chitra said...

இப்போதான் வண்டி கிளம்புது..... பயணம் ஆரம்பம் ஆயிடும்..... கலக்கலா எழுதி இருக்கீங்க......

Jerry Eshananda said...

கூடவே பயணிக்கும் உணர்வு........சூப்பர்.

சுசி said...

டாட்டா.. உங்க பயணம் இனிதே அமையட்டும் :))

Priya said...

ரொம்ப அழகா விளக்கமா எழுதி இருக்கிங்க.
சரி,ஃப்ளைட் வேற கிளம்ப போகுது... டாட்டா, டேக் கேர்!!!

'பரிவை' சே.குமார் said...

thodaraga payanakkatturaiya...

mmmmm....

kalakkunga...

nalla nataiyil azhaga ezuthiirukkinga.

Paleo God said...

தொடருங்கள், :))

கார்க்கிபவா said...

பெங்களூரு வெற்றிகரமான் டீம் மேடம்.. அதிக லாஸ் எல்லாம் இல்லை. அது எல்லாம் இன்வெஸ்மெண்ட்தான் :))

பயணம் விர்ருன்னு ஸ்டார்ட் ஆயிடுச்சு போல

பனித்துளி சங்கர் said...

எந்த பயண சீட்டும் இன்றி நானும் கோலாப்பூர் பயணம் செய்த ஒரு உணர்வுகளை ஏற்படுத்தியது . உங்களின் அனுபவக்கட்டுரை . மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கும் முறை சிறப்புத்தான் . பகிர்வுக்கு நன்றி !

Anonymous said...

:))குட்

ஜெய்லானி said...

சீக்கிரமே மீதியையும் போடுங்க...

தராசு said...

ம், சரி, சரி, சீக்கிரம் டேக் ஆஃப் ஆகட்டும்.

Anonymous said...

nadu seata parthu ukkarnunga..

appuram seat belt ellam poda choluvainga athu ellam podathenga..

apprum valakkam pola late vanthu
supera introduction agai erukenga..

way to introduction nice.

surya

Ganesan said...

விக்கி,

நீ கிளப்புடா, கியர போட்டு ப்ளைட் பயணத்த...

எம்.எம்.அப்துல்லா said...

//வீட்ல இருந்து கிளம்பி ஏழரைக்கெல்லாம் ஏர்போர்ட் போயாச்சு.

//


ஒரு ஏழ்ரையே
ஏர்போட்டுக்கு
ஏழரைக்கு போயிருக்கே (ஆச்சர்யகுறி)

ஆஹா..கவித..கவித..

எம்.எம்.அப்துல்லா said...

//நம்மூர் விமான நிலையங்களில் எனக்குப் பிடிச்ச கடைகள் புத்தகக் கடைகள். எல்லா வகையான புத்தகங்களும் கிடைக்கும்.

//

சுத்தமா 30% க்கும் மேல கூட விலை வைக்கிறாங்க. பெட்டர் வெளியில் வாங்குவது.

janaki said...

happy journey

mightymaverick said...

//நம்மூர்ல நல்லா ஸ்டீல் க்ளாஸை வெந்நீர்ல கழுவி ப்ரூ காபி போட்டு நுரை பொங்க ஆத்திக் கூடவே டபராவும் குடுத்து 5 ரூபாய்க்குக் குடிச்ச காஃபியோட சுவையும், மணமும் இங்கே மெஷின்ல இருந்து எடுத்து பேப்பர் டம்ளர்ல குடுக்குற 100 ரூபாய்க் கேப்பசினோல இல்ல.//நமக்கெல்லாம் இது சரிப்பட்டு வராதுங்க... பிளாஸ்குல வீட்டில் இருந்தே டிக்காசன் இறக்கி காபி போட்டு எடுத்து போய் சாப்பிட்டு விட்டு நல்ல பிள்ளையா பிளாஸ்கை பொட்டியில் போட்டு மூடி உள்ளே அனுப்பி விடுவது தான் பழக்கம்... காபின் பேக்கேஜில் வைத்திருந்தால் ஆயிரத்தெட்டு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய வேலை இருக்கும் பாருங்க.அதான்...


//அந்த நேரத்துல தான் ஃப்ளைட் ஜெர்க் ஆகி காஃபி நம்ம மேலயும், நம்ம பக்கத்துல தூங்கிட்டிருக்குற அங்கிள் மேலேயும் கொட்டும். தூங்கிட்டிருக்குறவர் எழுந்து முறைக்கும் போது நாம வழக்கம் போல அசடா சிரிக்க வேண்டியிருக்கும். இதை விட பெட்டர் இங்கன 100 ரூபாய்க்குக் காஃபி குடிக்குறது.//


இதுக்கு தான் கைப்புள்ள உசுரே போனாலும் விமானத்திற்குள் எதையும் வாங்கி சாப்பிடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கோமுள்ள...


//காதுல வைரமுத்து வரிகளுக்கு ரஹ்மான் தாலாட்டு, கைல இண்டீரியர் மேகஸின், குளுகுளு ஏசி ஹால், இதமா தொண்டை நனைக்குற காஃபி.... இப்படியே 24*7 இருக்க சொன்னாலும் இருப்பேன் நான். ஒண்ணரை மணி நேரம் சட்டுன்னு போயிடுச்சு. //


ஆமா... ஆமா... யோகி கூட எப்போ பார்த்தாலும் விக்கி தூங்கிகிட்டே இருக்காப்புலன்னு ரொம்ப கவலைப்பட்டார்... நல்ல வேளை விமான நிலையத்திலேயும் தூங்கி விமானத்தை கோட்டை விடாமல் இருந்தீர்களே... ஏன்னா நாம் கொஞ்சம் தாமதம் ஆனாலும் பேருந்தில் சிறிது படிக்கட்டு பயணம் செய்யலாம். விமானத்தில் எல்லாம் அந்த வசதி இன்னும் செய்து தர வில்லை...


//ஐ.பி.எல்.ல விஜய் மால்யா எவ்ளோ லாஸாகிருக்காருங்குறது கிங் ஃபிஷர் சர்வீஸ்லேயே தெரிஞ்சது.//


நீங்க வேற... லலித் மோடிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் கிடைத்ததை விட அவருக்கு தான் அதிகம் பணம் கிடைத்திருக்கிறது... ஏன்னா, மூன்று அணிகளுக்கு உற்சாக பானம் (சோம பானமும் சோமம் இல்லாத பானமும்) அவரது நிறுவனம் தான் ஸ்பான்சர்... அதிலேயே கொள்ளை லாபம் பார்த்திருப்பார்... ஏன் உங்களுக்கு விமானத்திற்குள் ரம்முக்கு பதிலாக வெறுமே ஒரு பீர் மட்டும் கொடுத்து ஏமாற்றி விட்டார்களா? அல்லது விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திய அதே சட்டைகளையும், கால் சராய்களையும் விமான பணிப்பெண்களுக்கு கொடுத்து விட்டார்களா? அல்லது அவர்களது உடையின் அளவை மேலும் குறைத்து விட்டார்களா? அல்லது விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திய உடுப்புகள் என்று கூறி ஏலம் ஏதேனும் விட்டார்களா?

அன்பேசிவம் said...

டாட்டா, சீக்கிரமா கிளம்புங்க...
சாப்பாட்டுக்கடை வந்ததும் இறங்கிடுங்க..

Raghu said...

ஓகே..ஃப்ளைட் கிள‌ம்ப‌ போகுது போல‌ருக்கு, சீட்ல‌ உட்கார்ந்து ட்ராவ‌ல் ப‌ண்ணுங்க‌...ஃபுட்ஃபோர்ட்லாம் வேணாம்! :))

☼ வெயிலான் said...

அப்துண்ணே! அசத்தல் கவித! :)

ஸ்ரீவி சிவா said...

ம்ம்ம்ம்... நல்லா எழுதியிருக்கீங்க விக்கி.

இதன் தொடர்ச்சியை கிங் பிஷர் விமான பணிப்பெண்களை பற்றிய விவரிப்புடன் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். ;-)

Vidhoosh said...

அப்துல்லா.... ஹா ஹா ஹா...

விக்கி.. டக்கர் பதிவு

Vidhoosh said...

அப்டியே கொட்டிகிட்டதை பத்தியும் சொல்லி எங்க வயித்தெரிச்சலை கொட்டிகோங்க

Anonymous said...

tata

*இயற்கை ராஜி* said...

//பதினைந்து நாட்கள் வீட்டிலிருந்து விடுதலை//

இதில் பிழை உள்ளது தோழி... "பதினைந்து நாட்கள் யோகிக்கு விடுதலை" அப்படின்னு இருக்கணும்;-)

Venkat M said...

Nice,

All the best for your business trip

தாரணி பிரியா said...

tata bye bye :)

ஷர்புதீன் said...

பைலெட்ட வண்டி வோட்ட விட்டீங்களா??
:)

இரசிகை said...

TATA..........

பா.ராஜாராம் said...

டாடா...

என்ன ம.மகள்ஸ்..

இப்பதான் டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தது போல் இருந்தது.அதுக்குள்ள ஆபிசராயிட்டீங்க?(போட்டோ)

பிராண்ட் ரைட்டிங்.

அப்துல்லாதானே?.விடுங்க.வந்து வச்சுக்குவோம்...

(அப்துல்லா,ஹா..ஹா..சைலென்ட் ப்ளீஸ்)

Ahamed irshad said...

பயணம் இனிதாக வாழ்த்துக்கள்..

ஷர்புதீன் said...

இயற்கை ராஜியை வழிமொழிகிறேன்

சாமக்கோடங்கி said...

இத்தனை நாளா உங்களைப் படிக்காம மிஸ் பண்ணீட்டேன்.. இவ்வளவு எழுதி இருக்கீங்களா...?

நான் இதுவரை விமானம் ஏறுனதில்லை.. ஏர்போர்ட் ஒரு முறை போயிருக்கேன்(என் அண்ணனை வழியனுப்ப)..

உங்களின் இந்தப் பதிவு எனக்கு ஒரு ஏற்போர்ட்டுக்குள் போய் வந்த உணர்வைத் தருகிறது...

அசத்துங்க..

நன்றி..

Thamira said...

இன்ஃபர்மேடிவ் அன்ட் சுவாரசியம்.

மங்குனி அமைச்சர் said...

//அந்த நேரத்துல தான் ஃப்ளைட் ஜெர்க் ஆகி காஃபி நம்ம மேலயும், நம்ம பக்கத்துல தூங்கிட்டிருக்குற அங்கிள் மேலேயும் கொட்டும்.///

கரக்டா சொன்னிங்க ஆன்டி?

விக்னேஷ்வரி said...

நன்றி இராமசாமி கண்ணன்.

எழுத்துப் பிழையை சரி செய்திட்டேன் நேசமித்திரன்.

நன்றி சித்ரா.

அப்படியே வாங்க ஜெரி, கிங்ஃபிஷர் பொண்ணுங்களையும் பார்த்திட்டு வரலாம். ;)

டாட்டா சுசி. நன்றி.

நன்றி ப்ரியா. டாட்டா.

விக்னேஷ்வரி said...

நன்றி சே.குமார்.

நன்றி ஷங்கர்.

ஓ, ஆனாலும் படு லாஸான மாதிரித் தான் கார்க்கி இருந்தது சர்வீஸ் எல்லாம்.
ஆமாங்க, ஸ்டார்ட் ஆகி முடிஞ்சும் போச்சு. பேக் டு டெல்லி நௌ.

நன்றி சங்கர். இன்னும் நாம கோலாப்பூர் போகவே இல்ல பாஸூ.

வாங்க விஜி.

போட்டுடுவோம் ஜெய்லானி.

விக்னேஷ்வரி said...

ஆயாச்சு தராசு.

என்ன காம்ப்ளான் சூர்யா... எல்லாம் உல்டாவா சொல்றீங்க. நான் எப்போவுமே aisle சீட்ல தான் ட்ராவல் பண்ணுவேன். அப்புறம் ஏறின உடனே சீட் பெல்ட் போட்டா இறங்கும் போது தான் கழட்டுவேன். நடு நடுல கழட்டி மாட்டி என்ன வேலை...
நன்றிங்க.

வாங்க காவேரி கணேஷ். :)

அப்துல்லா... வீட்ல பூரிக்கட்டையைப் பார்த்து ரொம்ப நாளாச்சோ... அண்ணிக்கிட்ட சொல்லிக் கண்ல காட்ட சொல்வோமா?

இல்லை அப்துல்லா, இங்கும் புத்தக விலைகள் எம்.ஆர்.பி.யில் தான் உள்ளன. விலை அதிகமாக இருக்கும் புத்தகங்களைக் கவனித்துப் பாருங்கள். பைண்டிங் அல்லது தாளின் தரம் வேறுபடலாம்.

Thank you Janaki.

விக்னேஷ்வரி said...

ஐ, நல்ல ஐடியா. நானும் அடுத்த தடவை காஃபி போட்டு எடுத்திட்டுப் போய்டலாமோ.... அய்யோ, ஆனா செக்கிங்ல உள்ளே தண்ணியைக் கூட கொண்டு போக விடமாட்டேங்குறாங்க. காஃபியெல்லாம் டூ மச்ங்க.
கைப்புள்ள, உங்க சபதத்துக் கூட என்னையும் சேர்த்துக்கோங்க.
அவர் என்ன லாஸ், ப்ராஃபிட் ஆனாரோ... ஆனா விமானத்துக்குள்ள சர்வீஸ் படு மோசம்.

முரளி ஹிஹிஹி...

சரிங்க ரகு சார்.

வெயிலான், அவர் கமெண்ட்டே உங்களுக்கும்.

நம்மூர்க்காரர் கேட்டு இல்லாமலா தொடர்ந்திடுவோம் சிவா.

வாங்க விதூஷ். நன்றி.

விக்னேஷ்வரி said...

கண்டிப்பா விதூஷ். அது இல்லாமலா... படங்களோட கோலாப்பூர் அயிட்டங்கள் வரும். :)

டாட்டா மஹா.

ராஜி சீக்கிரம் கல்யாணம் பண்ணு ராசாத்தி. அப்புறம் பார்த்துக்குறோம் நாங்க.

நன்றி வெங்கட்.

பை தாரணி.

பைலட் ஏரியாக்குள்ளேல்லாம் நான் நுழையுறதில்ல ஷர்ஃபுதீன்.

விக்னேஷ்வரி said...

டாட்டா இரசிகை.

ஹிஹிஹி... நாமளும் ஆஃபிசர்தான்னு காமிக்கத் தான் பா.ரா.மாம்ஸ். ;)
நன்றி மாம்ஸ்.

நன்றி அஹமது இர்ஷாத்.

ஷர்ஃபுதீன் அப்படியே இந்தக் கமெண்ட்டை உங்க அம்மணிக்குப் பார்சல் பண்றேன். நீங்க இல்லாதப்போ இவர் ரொம்ப சந்தோஷப்படுறாராம்ன்னு. :)

வாங்க பிரகாஷ். நான் எழுதிருக்குறதைப் பார்த்துக் கூட “இவ்வளவு எழுதி இருக்கீங்களான்னு கேட்டுட்டீங்களே...” ரொம்பப் பெருமையா இருக்கு உங்களை நினைச்சு.
நன்றி பிரகாஷ். சீக்கிரமே பறக்க வாழ்த்துகள்.

நன்றி ஆதி.

விடுங்க மங்குனி அங்கிள்.

அபி அப்பா said...

\\ஒரு ஏழ்ரையே
ஏர்போட்டுக்கு
ஏழரைக்கு போயிருக்கே (ஆச்சர்யகுறி)\\

அடிச்சாண்டா தம்பி அப்து சிக்ஸர்!!!!!!!!!!!!:-))))