Wednesday, May 26, 2010

ப்ளாகோமேனியாஉசுரே போகுதே உசுரே போகுதே....ன்னு கார்த்திக் உருகும் போது நிஜமாவே உசுரே போகுது. ச்சே, என்ன ஃபீல் குரல்ல இந்த மனுஷனுக்கு. காலேஜ்ல இருக்கும் போது கார்த்திக்கின் குரல் மீது தீராக் காதல் கொண்டவள் நான். யாருக்குக் கார்த்திக்கை ரொம்பப் பிடிக்கும்ன்னு பொண்ணுங்களுக்குள்ள போட்டியெல்லாம் உண்டு. அவர் வேற சின்ன பையனா ஸ்மார்ட்டா இருப்பாரா.. எந்தப் பொண்ணுக்குத் தான் பிடிக்காது. எங்க ரூம் முழுக்க தினமும் சாயங்காலம் கார்த்திக் குரல் ஒலிச்சுட்டு இருக்கும். ப்ரொஃபஸர்ஸோட லெக்சர்ஸ்ல இருந்து மண்டையைக் காப்பாத்தினது கார்த்திக் தான். அவரோட நேந்துக்கிட்டேன்ல ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் ஒவ்வொண்ணுமே ரசனை ரகம். சரி, இப்போதைக்குக் கார்த்திக்கை விட்டுடலாம். அவரோட “உசுரே போகுதே” தான் மேட்டர். எல்லாருக்கும் இந்தப் பாட்டுப் பிடிக்கும்ன்னு தெரியும். இதைக் கேட்டவங்க இதே பாட்டை அவர் ஹிந்தில பாடிருக்குறதையும் கேளுங்களேன். ச்சே, அதே உருக்கம். தமிழ் “உசுரே போகுதே”லேயும், ஹிந்தி “பெஹனே தே”லயும் அவர் குரல்ல என்ன வித்தியாசம்ன்னு தெரிஞ்சுக்க ரெண்டையும் ஒரே நேரத்துல ப்ளே பண்ணிக் கேட்டேன். ச்சே, ஒரே மாதிரி போகுது ஏ.ஆர்.ஆர். ம்யூசிக்கும், கார்த்திக் குரலும். கார்த்திக்கைப் புகழ்ற இந்த நேரத்துல அவர் கூட சேர்ந்து போற குரலை மட்டும் விட்டுட்டா எப்படி... மொஹமத் இர்ஃபான் குரல் கார்த்திக் குரல் கூட அவ்ளோ ஆப்ட்டா பொருந்திப் போகுது. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு நல்ல பாட்டைக் குடுத்ததுக்கு நிச்சயம் பாராட்டுகள். (என்னை மாதிரியே கார்த்திக் குரலைக் காதலிப்பவர்களின் செவிக்கு விருந்து இங்கே. என்ஜாய் மக்களே)

*************************************************************************************************************

ரொம்ப நாளாக ஃபேஸ்புக்கிற்குள் நுழையாமல் தவிர்த்து வந்தேன். நேரமின்மை அதற்கான காரணமாக இருந்திருந்திருக்கலாம்.போன வாரம் கலீக் ஒருத்தன் அதில் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து கேட்டேன். அவனே சொல்லிக் கொடுத்து ஆரம்பித்தும் கொடுத்தான். அன்றிலிருந்து இன்று வரை தினமும் வீட்டு ஸ்டவ்வில் என்ன இருக்கிறதென மெனக்கிடுகிறேனோ இல்லையோ, கஃபேயில் என்ன என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.இது தவிர ஆரம்பித்த 2 நாட்களில் காலை எழுந்ததும் அய்யோ நேத்து அடுப்புல வெச்சது பொங்கி வழிஞ்சிருக்குமே எனப் பதறி லேப்டாப்பைத் திறந்தேன். கிட்டத்தட்ட ஒரு அடிக்‌ஷன் மாதிரி ஆகிவிட்டது. இனி எது பொங்கி வழிஞ்சாலும், எத்தனை ஈ மொய்ச்சாலும் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கக் கூடாதுன்னு இருக்கேன். (இந்த முறையாவது சொன்ன வாக்கைக் காப்பாத்துறேனான்னு பார்க்கலாம்)*************************************************************************************************************

நேற்றைய பேப்பரில் வாசித்த செய்தி ஒன்று. தொலைபேசி, கைபேசி, இண்டெர்னெட் என எல்லாம் கண்டுபிடிக்கக் கூடிய தகவல் தொடர்பென்பதால் தீவிரவாதிகள் வண்ணமிட்ட புறாக்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் புறாக்களின் வாலிலும், இறகுகளிலும் செய்திகளை எழுதிப் பரிமாறிக் கொள்வதாக மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அனைத்துப் புறாக்களையும் பிடித்து சோதனை நடத்தப்படுகிறது. பாவம் போலீஸ். இப்படிப் புறா பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்களே. (இனி காவல் துறை ட்ரெய்னிங்கில் புறா பிடிக்கும் பயிற்சியும் சேர்ப்பாங்களோ!)


*************************************************************************************************************

வோடஃபோனின் சர்வீஸ்களில் தற்போது மிகவும் பயனுள்ள, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமாக இருப்பது வோடஃபோன் ட்யூஸ்டே ஆஃபர்ஸ். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் TUESDAY M (For Movie) அல்லது TUESDAY F (for Food) என 56789 என்ற எண்ணுக்கு எஸ்ஸெமஸ்ஸினால் நமக்கு ஒரு கோட் கிடைக்கிறது. அதைக் கொண்டு குறிப்பிட்ட சினிமா தியேட்டர்களிலும், ரெஸ்டாரண்ட்களிலும் 1+1 ஆஃபர் செல்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு வருடமாக சென்று கொண்டிருந்தாலும் இந்த மாதம்தான் அதை உபயோகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 150 ரூபாய்க்கு இரண்டு சினிமா டிக்கெட்டுகளும், 350 ரூபாய்க்கு 2 பீட்சாக்களும் குறைவில்லை தானே. முயற்சித்துப் பாருங்களேன். இந்த ஆஃபரின் கீழ் வரும் ரெஸ்டாரண்ட்களும் மூவி ஹால்களும் இங்கே. (பல தோழிகளை வைத்துக் கொண்டு பர்ஸ் வெயிட்டை யோசித்துக் கொண்டிருக்கும் சகாக்கள் செவ்வாய்க் கிழமைகளில் பட்டையைக் கிளப்பலாம்)

*************************************************************************************************************

வர வர ப்ளாகோமேனியா முத்திப் போய் அலையுறேன். எப்போது எதைப் பார்த்தாலும் அதை எப்படி எழுத்து நடையில் கொண்டு வருவது என்ற யோசனையாகவே உள்ளது. பதிவெழுதுவதற்காகவே புது ரெஸ்டாரண்ட்களையும், புது ரக உணவுகளையும் முயற்சிக்கத் தோன்றுகிறது. எப்போதும் யோகியிடம் “யோகி இந்த டாபிக் வெச்சு எப்படி எழுதலாம்” என ஆலோசனை கேட்கிறேன். ஏதாச்சும் கான்செப்ட் கிடைச்சா நைட்டெல்லாம் யோசிச்சுட்டே தூங்கிப் போய் பதிவு கனவுலேயே பில்டப் ஆகிடுது. யார்கிட்டே பேசினாலும் புத்தகங்களையோ, எழுத்துகளைப் பத்தியோ பேசத் தோணுது. யோகி பாவம். என்னை வெச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டம் தான். (ஓவரா முத்திப் போய் ரோடுல திரியாம இருந்தா சரி தான்)

*************************************************************************************************************

சில நாட்களுக்கு முன்பு ராவண் படம் பற்றிய தொகுப்பு ஹிந்தி செய்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதில் வந்த நடனக் காட்சி ஒன்றில் அபிஷேக் பச்சன் ஆடிக் கொண்டிருந்தார். என்னுடனிருந்த சக நண்பர்கள் அதை “ஆ”வெனப் பார்த்துக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒருவர் சொன்னார். “அபிஷேக் பச்சன் இதுவரைக்கும் எந்த படத்துலையாச்சும் ஆடிருக்காரா... அவரையும் ஆட வைக்க மணிரத்னமாலத்தான் முடியும். மணிரத்னம் க்ரேட்யா” உண்மையா? (தமிழனை இவங்க புகழ்றதுலேயும் குறைச்சலிருக்காது. அவன் கிட்ட வேலையைப் பிழியறதுலேயும் குறையிருக்காது)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

போன வாரம் நாங்க உக்காந்து படம் பார்த்துட்டு இருந்தப்போ டேபிள்ல என் கை லேசா இடிச்சிடுச்சு. “ஆ”ன்னு ஒரு சவுண்ட் குடுத்ததும் யோகி என் கையில தடவிக் குடுத்துட்டு டேபிளை லேசா அடிச்சிட்டு சொன்னார். “இது தான் கல்யாணமாகி 2 வருஷத்துல இருக்குற எஃபெக்ட். 20 வருஷமாச்சுன்னா, இடிச்ச டேபிளைத் தடவிக் குடுத்து, என்னால தான் முடில இதாச்சும் தைரியமா உன்னை அடிக்குதேன்னு சந்தோஷப்பட்டுட்டு, உன்னை பார்த்து உக்கார மாட்டியான்னு திட்டிட்டுப் போயிடுவேன்”. ஙே! (20 வருஷத்துக்கப்புறம் நான் எப்படி இருப்பேன்னு தெரியாமப் பேசுறார். அப்பிராணி.)

42 comments:

Kousalya Raj said...

நீங்கள் எழுதிய அனைத்துமே சுவாரசியமானவை....! கார்த்திக் பாட்டு பிடிக்கும் ஆனா நீங்க சொன்னதை பார்த்த பிறகு ரொம்ப பிடித்து விட்டது......!!

Menaga Sathia said...

துணுக்ஸ் சூப்பர்ர்ர்!!

CS. Mohan Kumar said...

Colourful.

பனித்துளி சங்கர் said...

///////நேற்றைய பேப்பரில் வாசித்த செய்தி ஒன்று. தொலைபேசி, கைபேசி, இண்டெர்னெட் என எல்லாம் கண்டுபிடிக்கக் கூடிய தகவல் தொடர்பென்பதால் தீவிரவாதிகள் வண்ணமிட்ட புறாக்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் புறாக்களின் வாலிலும், இறகுகளிலும் செய்திகளை எழுதிப் பரிமாறிக் கொள்வதாக மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அனைத்துப் புறாக்களையும் பிடித்து சோதனை நடத்தப்படுகிறது. பாவம் போலீஸ். இப்படிப் புறா பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்களே. (இனி காவல் துறை ட்ரெய்னிங்கில் புறா பிடிக்கும் பயிற்சியும் சேர்ப்பாங்களோ /////////


ஆஹா இது நல்ல பயிற்சியாக இருக்கிறதே புறாக்களை பொறி வைத்தததுப்பிடிக்காமல் துரத்திப் பிடிக்க சொன்னால் நல்லது .
அப்பொழுதாவது நம்ம உயர் அதிகாரிகளின் தொப்பை குறையும் .பகிர்வுக்கு நன்றி !

எல் கே said...

பல அருமையான விஷயங்கள். facebookla ஒஎங்கள் மட்டும்தான் இவ்வாறு இருக்கிறர்கள்

Guna said...

//அன்றிலிருந்து இன்று வரை தினமும் வீட்டு ஸ்டவ்வில் என்ன இருக்கிறதென மெனக்கிடுகிறேனோ இல்லையோ, கஃபேயில் என்ன என யோசித்துக் கொண்டிருக்கிறேன்//

Super ponga

ஷர்புதீன் said...

@ யோகி டைம்ஸ்
இதுக்குதான் ஷாலினியோட புத்தகங்கள் எல்லாம் அதிகமா படிக்க கூடாது.,

ஆமா ..., இதுக்கு முன்னாடி அந்த "நல்ல" மனுசனோட போடோவ எங்களுக்கு காட்டி இருக்கீங்களா?

Priya said...

உண்மையிலேயே கார்த்திக் பாடும்போது ஒருவித மயக்கம் இருக்கத்தான் செய்யுது.

பாவம் யோகி... அவரோட பாயின்ட் ஆஃப் வியூல இருந்து சொல்லி இருக்கார்..... ஆனா அதே இருபது வருஷத்தில விக்கி எப்படி மாறப்போறாங்கன்னு தெரியாம:)

நேசமித்ரன் said...

பாடல் , முகப் புத்தகம்,அலைபேசி வழி உணவகம் ,சினிமா , யோகி

வர்ணக் குழம்பாக இருக்கிறது இடுகையும் எழுத்தும் !

பருப்பு (a) Phantom Mohan said...

Mr. Yogi's punch was timing comedy and of-course it's true.

வாய் விட்டு சிரித்தேன்

Superb Mr.Yogi!

Your post like cocktail, nicely mixed.

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு

Anonymous said...

கார்திக் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பாடியது (ஃபைனல் ரவுண்ட்) இப்பவும் கண்ணில் நிக்கிறது. கடையில் கொஞ்சம் தடக்கிய போது கார்த்திக் செலக்ட் ஆக மாட்டாரானு எங்க ஆன்ட்டி வரை டென்ஷனில் ஒக்காந்திருந்தோம். இவ்ளோ அருமையா பாடிட்டிருந்தார். இப்ப என்னடான்னா இவ்ளோ பெரிய செலப் ஆயிட்டார். வாவ்.

//ஆஹா இது நல்ல பயிற்சியாக இருக்கிறதே புறாக்களை பொறி வைத்தததுப்பிடிக்காமல் துரத்திப் பிடிக்க சொன்னால் நல்லது .
அப்பொழுதாவது நம்ம உயர் அதிகாரிகளின் தொப்பை குறையும் .பகிர்வுக்கு நன்றி !//
ஹாஹா. நீங்க எப்டி எனக்குத் தோனினதை எழுதலாம். கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாம் தானே. ஹூக்கும் =))

ஜெய்லானி said...

பிளாக் ஆரம்பிச்சதும் என் நிலையும் இப்படிதான் இருக்கு. டீ காப்பி மாதிரி இதுவும் தவிர்க்க முடியாத நிலையாயிடுச்சி.

S Maharajan said...

அருமையான விஷயங்கள்.
கார்த்திக் பாட்டும் நல்லா தான் இருக்கும்
இருபது வருசத்துக்கும் பிறகு நீங்க இப்படியே தான் இருபிங்க
என்ன ஒரு மூணு லட்சம் பதிவு எழுதி இருபிங்க

மேவி... said...

semaiya eluthi irukkeenga

ஜெட்லி... said...

//யார்கிட்டே பேசினாலும் புத்தகங்களையோ, எழுத்துகளைப் பத்தியோ பேசத் தோணுது/எழுத்தாளர் ஆனாலே இப்படி தான்..... :))

புலவன் புலிகேசி said...

"உசிரே போகுதே" தான் இப்ப என்னோட காலர் ட்யூன்.மனுசன் என்னமா ஃபீல் பண்ண வச்சிட்டாரு. தலயோட இசை, தல அறிமுகத்தில் வந்த பாடகர்னா சும்மாவா........

Romeoboy said...

\\யார்கிட்டே பேசினாலும் புத்தகங்களையோ, எழுத்துகளைப் பத்தியோ பேசத் தோணுது. //

Same Blood .. he he he

Chitra said...

வர வர ப்ளாகோமேனியா முத்திப் போய் அலையுறேன். எப்போது எதைப் பார்த்தாலும் அதை எப்படி எழுத்து நடையில் கொண்டு வருவது என்ற யோசனையாகவே உள்ளது. பதிவெழுதுவதற்காகவே புது ரெஸ்டாரண்ட்களையும், புது ரக உணவுகளையும் முயற்சிக்கத் தோன்றுகிறது.


...... ha,ha,ha,ha,ha.... take it easy!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

Sukumar said...

நல்ல அனுபவ பகிர்வு!!!

தராசு said...

//எப்போது எதைப் பார்த்தாலும் அதை எப்படி எழுத்து நடையில் கொண்டு வருவது என்ற யோசனையாகவே உள்ளது. //

ஒரு எழுத்தாளர் ஆயிட்டா, எத்தனை பிரச்சனை பாருங்க.....

Vidhya Chandrasekaran said...

கார்த்திக்கு ரசிகை மன்றம் ஆரம்பிக்கலாமா??

Ganesan said...

கலக்கல்.

யோகி பாவம் தான் விக்கி.

mightymaverick said...

//(20 வருஷத்துக்கப்புறம் நான் எப்படி இருப்பேன்னு தெரியாமப் பேசுறார். அப்பிராணி.)//யோகிக்கான பதிலையும் நீங்களே எழுதி இருக்கீங்களே - //யோகி பாவம். என்னை வெச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டம் தான். (ஓவரா முத்திப் போய் ரோடுல திரியாம இருந்தா சரி தான்)////எப்போதும் யோகியிடம் “யோகி இந்த டாபிக் வெச்சு எப்படி எழுதலாம்” என ஆலோசனை கேட்கிறேன். ஏதாச்சும் கான்செப்ட் கிடைச்சா நைட்டெல்லாம் யோசிச்சுட்டே தூங்கிப் போய் பதிவு கனவுலேயே பில்டப் ஆகிடுது.//இது எழுதும் ஆர்வம் உள்ள யாவருக்கும் இருக்கும் வியாதி தான்... போகப்போக சரியாகிடும்... என்னோட ப்ளாக்ல கூட கிட்டத்தட்ட 8 பதிவுகள் பாதியில் நிற்கின்றன... அத்தோடு 4 பதிவுகளுக்கான தலைப்புகளும் விசயங்களும் மனதில் இருக்கின்றன... நேரம் இருந்தும், வீட்டில் இணைய இணைப்பு சரி செய்யப்படாத காரணத்தினால் தொடர்ந்து எழுத முடிவதில்லை...


//இனி எது பொங்கி வழிஞ்சாலும், எத்தனை ஈ மொய்ச்சாலும் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கக் கூடாதுன்னு இருக்கேன்.//ஆமாங்க.. . ஈ மொய்த்த பண்டம் உடம்புக்கு நல்லதில்லை... அதனால அதை தூக்கிப்போட்டுட்டு வேற வலையை பாக்கலாம்...


//(தமிழனை இவங்க புகழ்றதுலேயும் குறைச்சலிருக்காது. அவன் கிட்ட வேலையைப் பிழியறதுலேயும் குறையிருக்காது)//தமிழனுக்கு தாழ்வு மனப்பான்மை எப்போது போகுதோ அப்போ இதெல்லாம் காணாமல் போயிடும்...

நர்சிம் said...

;)

Anonymous said...

(ஓவரா முத்திப் போய் ரோடுல திரியாம இருந்தா சரி தான்)//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :))

Unknown said...

ராவணாமேனியாவா இருக்கே? கலகலன்னு இருக்கு பதிவு. :-)

அ.முத்து பிரகாஷ் said...

பதிவின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் பூச்சுகள் எதுவுமின்றி ...
நீங்கள் நீங்களாக....
வாழ்த்துக்கள் விக்கி ...
யோகி கிடைக்க கொடுத்து வைக்கணும் ...
பல புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்திய என் அக்கா வித்யா இப்போ வாசிக்கிறதுக்கே வாய்ப்பற்ற சூழலில் தவிக்கிறா ...

ராஜ நடராஜன் said...

//வர வர ப்ளாகோமேனியா முத்திப் போய் அலையுறேன். எப்போது எதைப் பார்த்தாலும் அதை எப்படி எழுத்து நடையில் கொண்டு வருவது என்ற யோசனையாகவே உள்ளது. பதிவெழுதுவதற்காகவே புது ரெஸ்டாரண்ட்களையும், புது ரக உணவுகளையும் முயற்சிக்கத் தோன்றுகிறது. //

சந்தேகமேயில்லை...இல்ல...இல்ல.... புது சென்னை மொழியிலே,சான்ஸே இல்லை(நோய் பரப்பியது மானாட மயிலாட கலா மாஸ்டர்) இது பிளாகோமேனியேவேதான்:)

ராஜ நடராஜன் said...

//அபிஷேக் பச்சன் இதுவரைக்கும் எந்த படத்துலையாச்சும் ஆடிருக்காரா... அவரையும் ஆட வைக்க மணிரத்னமாலத்தான் முடியும். //

அது சரி:)

Raghu said...

//உசுரே போகுதே பாட‌ல்//

உண்மைதான், முத‌ல் முறை கேட்கும்போதே அச‌ந்துட்டேன்!

போலீஸ் புறா பிடிக்க‌லாம் விக்கி, காக்கா பிடிச்சாதான் த‌ப்பு ;))

//பல தோழிகளை வைத்துக் கொண்டு பர்ஸ் வெயிட்டை யோசித்துக் கொண்டிருக்கும் சகாக்கள் செவ்வாய்க் கிழமைகளில் பட்டையைக் கிளப்பலாம்//

இப்போ கிள‌ப்ப‌ற‌தை விட‌வா?......'ஏழு' நாட்க‌ளுக்கும் ஆஃப‌ர் குடுத்து இருக்க‌லாம்

//நைட்டெல்லாம் யோசிச்சுட்டே தூங்கிப் போய் பதிவு கனவுலேயே பில்டப் ஆகிடுது//

சேம் ப்ள‌ட் ;)

//அவன் கிட்ட வேலையைப் பிழியறதுலேயும் குறையிருக்காது//

ச‌ர‌க்கு இருக்க‌ற‌வ‌ன் வேலை செய்வான், இல்லாத‌வ‌ன் வேலை வாங்குவான்...நான் டேமேஜ‌ரை ப‌த்தி சொல்லல‌

//20 வருஷத்துக்கப்புறம் நான் எப்படி இருப்பேன்னு தெரியாமப் பேசுறார். அப்பிராணி//

இதுமாதிரி அடிக்க‌டி ந‌கைச்சுவையா எழுதுங்க‌...ரொம்ப‌ ந‌ல்லாருக்கு :)))

ஹுஸைனம்மா said...

//ஓவரா முத்திப் போய் ரோடுல திரியாம இருந்தா சரி தான்//

யார் - நீங்களா, உங்களால் யோகியா? ;-))

/தமிழனை இவங்க புகழ்றதுலேயும் குறைச்சலிருக்காது//

வழக்கமா, வடநாட்டவர்கள் தமிழர்களைப் புகழ்ந்ததா சரித்திரமே கிடையாதே?!! :-))

//தீவிரவாதிகள் வண்ணமிட்ட புறாக்களைப் பயன்படுத்துகிறார்கள்//

பால்கனில உக்கார்ற புறாவையும் இனிமே சந்தேகத்தோடத்தான் பா(ரசி)க்கணும்போல!! ;-)))

Athisha said...

உங்க யோகி டைம்ஸயே தொகுத்து ஒரு புக்கா போடலாம்.. ரொம்ப சுவாரஸ்யம் (திருமணத்திற்கு பிறகு படிக்கும் போது உணர்ந்து சிரிக்க முடிகிறது)

Anonymous said...

// என்னால தான் முடில இதாச்சும் தைரியமா உன்னை அடிக்குதேன்னு சந்தோஷப்பட்டுட்டு, உன்னை பார்த்து உக்கார மாட்டியான்னு திட்டிட்டுப் போயிடுவேன்”. ஙே/

ஒரு பத்து வருஷம் போகட்டும். எல்லாம் அப்படித்தான் . அனுபவம் பேசுது.

ஸ்ரீவி சிவா said...

கார்த்திக் நெஜமாவே பட்டய கிளப்புவார்.. எனக்கும் பிடிக்கும்.
'நேந்துக்கிட்டேன்' பாட்டுல - உருகியிருப்பார். ஞாபகபடுத்திட்டீங்க... அந்த பாட்டை கேட்ட பிறகுதான் வேற வேலைய பார்க்க ஆரம்பிச்சேன். ;-)

நல்ல வேளை... இந்த ஃபேஸ்புக் விவசாயம்/டீக்கடை-ன்னு எந்த யாவாரமும் பண்ணி addict ஆகல.

வோடஃபோன் இந்த சலுகைக்காகவே, இன்னும் சில தோழியர் சேர்க்கலாம் போல... ;-)

FunScribbler said...

//வர வர ப்ளாகோமேனியா முத்திப் போய் அலையுறேன். எப்போது எதைப் பார்த்தாலும் அதை எப்படி எழுத்து நடையில் கொண்டு வருவது//

ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்ச காலத்துல இப்படிதான் இருந்தேன். எல்லாம் பழகி போய்விடும்! :)))

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு:)!

Ahamed irshad said...

Nice Post.

உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

சீனு said...

எனக்கென்னவோ ராவணன் பாடல் பிடிக்கவேயில்லை. ரெக்கார்டிங் பிடிக்கவில்லை.

கார்த்திக்கின் குரல் இனிமை தான். அவரோட 'விழி மூடி யோசித்தால்' அருமையா இருக்கும்.

அப்புறம், 'கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை, 'உயிரே...என்னுயிரே,என்னவோ நடக்குதடி', 'ஆடாத ஆட்டமெல்லாம்', 'நம் நடை கண்டு' அட்டகாசமாய் இருக்கும். ஆனால், இந்த பாடல் மட்டும் பிடிக்கவில்லை.

Unknown said...

நைஸ்

தக்குடு said...

nice collection pa!