Wednesday, February 4, 2009

இந்த வாரம் இவ்வளவு தான்

அவர் இரண்டு நாள் லூதியானாவிற்கு சின்ன டூர் அடித்திருப்பதால், வழக்கம் போல் துணைக்கு யாரையாவது அழைத்து வர வேண்டுமே. போன முறை சோனல் ஐக் கூப்பிட்டு மூன்று வேளையும் தோசையைப் போட்டு பாடாய்ப்படுத்தியதால், இந்த முறை மோனிகாவை அழைத்தேன். தினமும் ஆபிசில் என் சாப்பாட்டை சுவைத்து 'வாவ்!' சொல்பவள் அவள். அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதால், என்னிடம் சமையல் கற்று கொள்வேன் என்று வீட்டிற்கு வந்து அவள் செய்யும் சமையல் கூத்தில் எனக்கே சமையல் மறந்து விடும் போலிருக்கிறது. [நானே இப்போ தான் கொஞ்சம் தேறிட்டு வர்றேன்! அதுக்குள்ளே ஆப்பா.... :( ]

**************************************************
ரெண்டு நாளாய் ஆன்லைனில் முழு நேரமும் ஆனந்த் இருப்பதை பார்த்து, அவர் விடுமுறையில் இருப்பதாய் விவரமறிந்தேன். வெட்டியா ஆன்லைனில் உக்காந்து என்ன பண்றீங்கன்னு நேற்று ஒரு மணி நேரம் போனில் போட்ட மொக்கையில் இன்றைக்கு காலைலேயே மனுஷன் எங்கேயோ எஸ்கேப். போன் செய்து கேட்டதில் சாதராவிற்கு ஏதோ ஒரு வேலையை முடிக்கப் போனதாய் சொன்னார். சந்தோசம்.[நான் சொல்லி கூட கேக்க ஆள் இருக்குப்பா.... :) ]

**************************************************
"தோஸ்தானா" படத்தை அளவுக்கு அதிகமாய் சிரித்து பார்த்ததில், கடுப்பாகிப் போயிருந்தார், என்னவர். படம் பார்க்கும் போது அதில் அதிகமாய் காமெடி இருப்பதாய் நினைத்து ஓவராய் சிரித்து விட்டேன். படம் முடிந்ததும், "இதில அப்படி என்ன இருக்குன்னு இப்படி விழுந்து விழுந்து சிரிச்ச" என்று அவர் கேட்ட போது சற்றே யோசித்து "ஆமா, ஒண்ணுமே இல்ல. இதுக்கு ஏன் இவ்வளவு சிரிச்சேன்" என்றெண்ணி அவரிடம் அசடு வழிந்து தொலைந்தேன். [அடிக்கடி இந்த மாதிரி ஏதாவது கேனைத்தனங்கள் செய்வதுண்டு]

**************************************************
இரண்டு நாட்களாய் Project Manager இல்லாத கொழுப்பில், அனைத்து தமிழ் Blogகளையும் தேடி படித்து விட்டு, நாளை அவரிடம் ரிப்போர்ட் செய்வதற்காக வேலையை அவசரமாய் முடித்துக் கொண்டிருக்கிறேன். [வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யணுமே.]

**************************************************

6 comments:

A said...

மோனிகா சமையல் ஒரு நாள் சாப்டதுக்கு நீங்க இப்டி சொல்றீங்க... .....................................................................................
நல்லது சொன்னா எல்லாரும் கண்டிப்பா கேட்பாங்க..மிக்க நன்றி...
தங்களின் அறிவுரைக்கு..

விக்னேஷ்வரி said...

உங்களுக்கு ஒரு நாள் சமைச்சு தர சொல்றேன் ஆனந்த். அப்புறம் தெரியும் உங்களுக்கு.

நல்லதுன்னு எல்லோரும் எடுத்துக்க மாட்டாங்க. நீங்க அப்படி எடுத்துட்டதுக்கு நன்றி ஆனந்த்.

Sundar Raj said...

பாவம் மோனல்....நீங்களே புடிக்காதுன்னு முடிவு பண்ணி கூப்பிடாம விட்டுடீங்க.....சரி..இந்த தடவை மோனிகா-க்கு தான் லக்....!!

---------------------------------
ஆனந்த்..பாவமுங்க...பச்ச் புள்ள....அவரை ஏங்க பயமுறுத்தி ஊருக்கெல்லாம் அனுப்புறீங்க...?
---------------------------------
படத்துல காமெடியே இல்லேன்னு சிரிச்சீங்களாக்கும்..?
---------------------------------
ஹி ஹி...மேனஜர்..ஊருக்கு போயிட்டா...ஓ.பி. தானா....?
நான் எங்க கம்பேனி-ல மட்டும்தான் அப்பிடின்னு நினைச்சேன்....
---------------------------------

விக்னேஷ்வரி said...

வருகைக்கு நன்றி சுந்தர் ராஜ்.

பாவம் மோனல்....//
அது மோனல் இல்ல, சோனல்.

ஆனந்த்..பாவமுங்க...பச்ச் புள்ள....அவரை ஏங்க பயமுறுத்தி ஊருக்கெல்லாம் அனுப்புறீங்க...?//
ஆனந்தை பயமுறுத்தலீங்க. நல்லது சொன்னேன். வேலைய பாக்க சொன்னேன்.

ஹி ஹி...மேனஜர்..ஊருக்கு போயிட்டா...ஓ.பி. தானா....?
நான் எங்க கம்பேனி-ல மட்டும்தான் அப்பிடின்னு நினைச்சேன்....//
இருந்தாலே ஒ.பி. அடிப்போம். இல்லைனா சொல்லவா வேணும்.

cupidbuddha said...

துணுக்குகளை விட துணுக்குகளுக்கு கீழே நீங்களே தரும் இணைப்பு துணுப்பு மிக அருமை வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

நன்றி சத்யா.