Monday, February 23, 2009

கடனாய் வேண்டும், கொஞ்சம் நேரம்!சிலரது ப்ளாக்குகளை படிக்கையில், அப்படியே ஒரு நாள் ஓடிவிடும். அவ்வளவு சரக்கு இருக்கும் உள்ளே. ஆனால், ஏனோ என்னால் மட்டும் ஒரு மாதத்திற்கு ஒரு பதிவு மட்டுமே எழுத முடிகிறது. நான் குறைவாக எழுதினாலும், அதை வாசித்து பின்னூட்டமிடும் சிறு நண்பர்கள் வட்டம் எனக்குண்டு. ஆனால், அவர்களிடமிருந்து எனக்கு வைக்கப்பட்ட கேள்வி, "நீங்க ஏன் நிறைய எழுத மாட்டேங்குறீங்க..."

எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தான். ஆனால், நேரம் இல்லை என்பது தான் உண்மை. பல பேரும் நேரம் இல்லை என சொல்வதைக் கேட்டு "எல்லாருக்கும் இருக்கறது 24மணி நேரம் தான். அதை மேனேஜ் பண்ண தெரியாமல் நேரம் இல்லை என சொல்வது தவறு" என்று அட்வைஸ் அம்புஜமாக நான் அவதாரமெடுத்தது நினைவிற்கு வருகிறது. ஆனால், இன்று அதை உண்மையாகக் உணரும் போது தான் எனக்கும் 24 மணி நேரம் போதாதது போல் தெரிகிறது.

கார்க்கியிடம் "உங்களால் எப்படி இத்தனை பதிவுகள் எழுத முடிகிறது" எனக் கேட்டிருந்தபோது, தினமும் ஒரு பதிவு என்ற கணக்கில் எழுத சொன்னார். நல்ல யோசனை தான் என்று, நானும் அவ்வாறே எழுத எண்ணிய நாள், வேலை விஷயமான ட்ரிப் வந்தது. வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேர்ந்தால், அங்கு நேரம் கிடைப்பது குதிரைக் கொம்பு. காரணம், காலையில் 9 மணிக்கு அலுவலகத்தில் நுழையும் நான், வெளியேற குறைந்தது 8 மணி ஆகிவிடும். பின் அரை மணி நேர பயணத்தில் ஹோட்டல். வந்ததும், refresh ஆகி, டின்னர் முடித்து, மணி பார்த்தால், 10 ஆகி இருக்கும். பின் தினசரிகளை அரை மணி நேரம் புரட்டி, செய்திகளையும் அதே சமயத்தில் கேட்டு கொஞ்சம் அப்டேட் செய்து விட்டு, laptop ஐ திறந்து அன்றைய User problems ஐ solve செய்து, அடுத்த நாளுக்கான பிளானை தயார் செய்து விட்டு, தூங்க ஒரு மணி ஆகிறது. காலை ஏழு மணிக்கு அலாரம் வைத்து, அதை ஆப் செய்து விட்டு, எட்டு மணிக்கு எழுந்து அரக்க பறக்க கிளம்பி, மறுபடியும் 9 மணிக்கு அலுவலகம். இதில் எப்படி தினமும் ஒரு பதிவு எழுதுவது....

இதில் சில தோழிகளின் கேள்வி, உடம்பை குறைக்க யோகா பண்ணக் கூடாதா.... பண்ண ஆசை தான். அதற்கும் நேரம் வேண்டுமே!!! எங்காவது கடனாய்க் கிடைத்தால் நல்லது.

6 comments:

கார்க்கிபவா said...

நான் இங்க தனியா இருப்பதால் ப்ளாக் தான் பொழுது போக்கே.. இரவில் மடிகணிணியில் தட்டச்சு செய்து காலை, அலுவலகம் வந்து பதிவேற்றிவிடுவேன்.. ஒரு வேளை சென்னையில் இருந்தால் இது சாத்தியமா என தெரியவில்லை.. தினமும் இல்லையென்றாலும் வாரம் நாலு பதிவு எழுத முயற்சி செய்யுங்கள்..

Anonymous said...

பரவாயில்லை எப்பையாவது ஒண்ணு எழுதறீங்க. அதையும் உருப்படி எழுதறைங்க அதுவே போதும். (ஆனா இந்த தலைப்புல தான் உருப்படி இல்லாத விசயத்தையும் உருப்படியா எழுத முடியும்ங்கறத உங்க மூலம் தெரிஞ்சுங்க முடிந்தது.

விக்னேஷ்வரி said...

முயற்சிக்கிறேன் கார்க்கி. உங்களுடைய வருகைக்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

நன்றி மணி.

சந்தனமுல்லை said...

எண்ணிக்கை ஒன்றும் முக்கியமில்லை..என்ன எழுதுகிறோம் என்பதுதான் மேட்டரே! இல்லையெனில் ஒருவித செயற்கைத்தனம் வந்துவிடும்! எனக்கும் முன்பு இருந்தது நேரப்பிரச்சினை..ஆனால் இப்போது பரவாயில்லை...தினம் ஒரு குட்டிப் பதிவாவது போட நேரம் கிடைக்கிறது..அல்லது அடிக்ஷனா தெரியவில்லை..:-)..நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்..சுவாரசியமாக இருக்கிறது உங்கள் பதிவுகள்!

விக்னேஷ்வரி said...

கிட்டத்தட்ட addiction மாதிரி தான் சந்தனமுல்லை. உங்கள் கருத்துக்கு நன்றி.