Wednesday, July 7, 2010

கும்மலாம் வாங்க

தராசு - இவரின் வலைத்தளத்தின் பெயரைப் போலவே அதிலுள்ள விஷயங்களும் சரியானதாகவே இருக்கும். எந்தவொரு விஷயத்தை எழுதினாலும் முழு ஈடுபாடோடும், அதைப் பற்றிய ஆழ்ந்த அறிதலோடும் இவர் எழுதுவது எனக்கு மிகுந்த ஆச்சரியம்.

கொங்கு மண்ணில் பிறந்து, சென்னையில் கண்ணாலம் கட்டிக்கிட்டு, மத்தியப் பிரதேசத்தில் ஆணி பிடுங்கிட்டு இருக்கும் இவரின் நிஜப் பெயர் கொஞ்ச பேருக்குத் தான் தெரியும். இந்த பெஞ்சமின் பொன்னைய்யா வட்டார வழக்குப் பதிவுகளாகட்டும், ஜூகல் பந்தியில் தகவல்களைக் கொட்டுவதாகட்டும், வீட்டு அம்மணியைக் கலாய்ப்பதாகட்டும், விளையாட்டுப் பற்றிய பதிவுகளாகட்டும் ஒரு ரவுண்டு பின்னி விடுகிறார்.

மெல்லிய புன்னகையையும் கூடவே கொஞ்சம் யோசனையையும் தர வைக்கும் இவரது “ங்கொய்யால பக்கங்கள்” என் ஃபேவரிட். விவரங்கள் தெரிந்த மனிதன், நாகரீகமான நண்பன், அன்பான கணவன், அனுசரணையான மகன், தோழமையான தகப்பன் என எல்லா முகங்களிலும் தன்னை சிறப்பாக நிரூபித்துள்ள இவரை இன்னிக்கு எல்லாரும் கும்மு கும்முன்னு கும்மலாம். ஏன்னா நாற்பத்தி... சரி அது வேண்டாம், கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி தல இன்னிக்குத் தான் பொறந்தாராம். மேட்டர் அவ்ளோ தான்.

அவருக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி, அவர் மனம் நிறையக் கும்மும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பெஞ்சு, பில்டப்பு போதும்ல. ஸ்டார்ட் ம்யூசிக்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பெஞ்சமின்.

53 comments:

ஷர்புதீன் said...

நாற்பத்தி......ம் அதுக்கு பிறகு ....விடமாட்டோம்லே

ஷர்புதீன் said...

"இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பெஞ்சமின்."

இத சொல்லாமலா .....

Kousalya Raj said...

'happy birthday' to u

'பெஞ்சமின் பொன்னைய்யா'sir...

ஈரோடு கதிர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பெஞ்சமின்

உண்மைத்தமிழன் said...

தராசுவுக்கு கொஞ்சமும் எடை குறையாத பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

CS. Mohan Kumar said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தராசு அவர்களே. சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பில் உங்களை பார்த்தேன் பேச முடியலை. இன்னொரு முறை சந்திப்போம்.. பேசுவோம்..

Chitra said...

HAPPY BIRTHDAY, BENJAMIN SIR!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

வாழ்த்துக்கள்!!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

"கும்மலாம் வாங்க"
இப்படி சொல்லிடு கமன்ட் மாடரேசன் வச்ச எப்படி கும்முவது?
எங்கண்ணே குசும்பருக்கு ஆள் அனுப்பி கூட்டியார சொல்லிருக்கேன்.

விக்னேஷ்வரி said...

ஷர்ஃபுதீன், பப்ளிக் பப்ளிக்.

நன்றி ஷர்ஃபுதீன்.

வாங்க கௌசல்யா.

வாங்க கதிர்.

உ.த., :)

வாங்க மோகன்.

வாங்க சித்ரா.

வாங்க பாலகுமாரன்.
கமன்ட் மாடரேசன் வச்ச எப்படி கும்முவது? //
அதுக்குத் தான ஆன்லைன்லேயே இருக்கேன். கமெண்ட்டின அடுத்த நிமிஷம் மாடரேட் ஆகிடும்.
சூப்பர், ஆள் வெச்சுக் கும்முறது இதுதானா..

தராசு said...

ஷர்புதீன்,
கௌசல்யா,
ஈரோடு கதிர்,
உண்மைத்தமிழன் அண்ணே,
மோகன் குமார் (கண்டிப்பா சந்திப்போம்)
சித்ரா (சார் வேண்டாமே)
பாலகுமாரன் (ஆமாம், உங்களுக்கு நல்லது நினைக்கவே தோணாதா)

எல்லாருக்கும் நன்றிகள்.

Vidhya Chandrasekaran said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பெஞ்சமின் சார். விக்கி சரியா செக் பண்ணீங்களா? நாற்பது சொச்சமா இல்ல ஐம்பது ப்ளஸா??

இராகவன் நைஜிரியா said...

நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

soundr said...

ஒண்ணும் ப்ரியலெயேபா....
தராசு பொறந்த நாளக்கு அவர் பதிவுலல்ல கும்மனும்.
இங்க எதுக்குபா ......

http://vaarththai.wordpress.com

ஜெய்லானி said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் பெஞ்சமின்

Senthilmohan said...

தராசு அவர்களுக்கு Happy B'day.
அப்புறம், அவர் பொறந்தது, வாழ்ந்தது, வாழ்க்கைப்பட்டதுனு அவர்ப் பத்தி எல்லாம் சொல்லிட்டு அவரோட Blog link கொடுக்காம விட்டுடீங்களே. At least, profile லிங்க் கொடுத்திருந்தா எனக்கு 10 minutes மிச்சமாயிருக்கும்.

சௌந்தர் said...

கும்மலாம் வந்த இப்படி வாழ்த்து சொல்ல, சொல்லுரீங்க.இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்... பெஞ்சமின் சார்

நேசமித்ரன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பெஞ்சமின்

சுசி said...

இனிய கும்மிகள் பெஞ்சமின்.

Raghu said...

எட‌ர்ன‌ல் யூத் க்ள‌ப்பின் நீண்ட‌ கால‌ உறுப்பின‌ர் த‌ராச‌ண்ண‌னுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள் :)

தராசு said...

வாங்க வித்யா - (ஹூக்கும், இந்த ஆராய்ச்சி இப்ப ரொம்ப அவசியம்),
வாங்க சிதம்பரம்,
வாங்க ஜெய்லானி,
வாங்க செந்தில் மோகன்,
வாங்க சௌந்தர்,
வாங்க நேச மித்திரன்
வாங்க சுசி,
வாங்க ரகு (ஹலோ, நாங்க எப்பவுமே யூத்து தாங்க)

வாழ்த்திய இனிய உள்ளங்களுக்கு நன்றி.

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தோழரே!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

தராசு said...

//பாலகுமாரன் (ஆமாம், உங்களுக்கு நல்லது நினைக்கவே தோணாதா)//
ஏன்??? விக்கிதானே கும்மலாம் வாங்கன்னு, ப்ளான் பண்ணிருக்காங்க.
நான் ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சேன். இன்னக்கின்னு பர்ர்த்து குசும்பர் பிசி!!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இந்தா, எங்க தல வந்துட்டார்!!!
அடுத்து குசும்பர் தான்!!!!

Joseph said...

அண்ணண் பெஞ்சமினுக்கு 49வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி said...

இன்னிக்கு இப்படி நன்றி சொல்லியெல்லாம் தப்பிச்சுக்க முடியாது பெஞ்சு. கும்மி தான்.

தெரியல வித்யா, அவர் சொல்றதை நம்பறேன். உண்மையோ, பொய்யோ.

அவரைக் கும்மணும். அவ்ளோ தான். அவர் பதிவா இருந்தா என்ன, வேற பதிவா இருந்தா என்னங்க சிதம்பரம்...

வாங்க ஜெய்லானி.

ஸாரி செந்தில், இப்போ குடுத்துட்டேன்.

கும்மி இல்லாம என்ன வாழ்த்து சௌந்தர்...

விக்னேஷ்வரி said...

வாங்க நேசமித்திரன்.

வாங்க சுசி. ஹிஹிஹி...

ரகு, ஹிஹிஹி...

பார்றா மறுபடியும் வாழ்த்தியன்னு நன்றிய. கும்மியன்னு சொல்லுங்க பெஞ்சு.

வாங்க வால்.

பரவாயில்லை நாமளே மேனேஜ் பண்ணுவோம் பாலா.

ஜோசப்பு, அவர் வயசைக் குறைச்சு சொன்னா கனவுல பாம்பு வருமாம். :)

ராம்ஜி_யாஹூ said...

me the 27 th kummal, oops, 27 the wishing person,

Best wishes

அன்புடன் நான் said...

வலைபதிவரின் நாற்பத்தி.... பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பெஞ்சமின்

விக்னேஷ்வரி said...

வாங்க ராம்ஜி.

என்ன குசும்பன், இப்படி சிம்பிளா சொல்லிட்டீங்க. :(

வாங்க கருணாகரசு. :)

ரிஷபன் said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் பெஞ்சமின் நண்பரே..

அத்திரி said...

அண்ணாச்சிக்கு இனிய நாற்பத்தி .... பிறந்த நாள் வாழ்த்துக்கள்

க ரா said...

பிறந்த நாள் வாழ்த்துகள் பெஞ்சமின் சார். :-).

'பரிவை' சே.குமார் said...

"இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பெஞ்சமின்."

Cable சங்கர் said...

என் இனிய நண்பரின் பிறந்த நாளை நினைவு படுத்தியமைக்கு நன்றிகள்பல.. விக்கி.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//என்ன குசும்பன், இப்படி சிம்பிளா சொல்லிட்டீங்க. :(
//
அதான் சொன்னேனே அண்ணா பிசி!!!

தராசு said...

வால் பையன் அண்ணாச்சி,

நன்றி

தராசு said...

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,

நல்லாருங்கப்பு.

தராசு said...

வாங்க சோஜப்பு,

ஒரு டெரரான யூத்தை வாழ்த்தறீங்கங்கறது ஞாபகம் இருக்கட்டும்.

தராசு said...

ராம்ஜி,

டேங்சு

தராசு said...

குசும்பன்,

வணக்கம், டேங்சு

தராசு said...

வாங்க கருணாகரசு,

டேங்சு.

தராசு said...

//@விக்னேஷ்வரி

என்ன குசும்பன், இப்படி சிம்பிளா சொல்லிட்டீங்க. :(//

ஆமா, அந்தாளு ஒண்ணும் தெரியாத அப்பாவி, அவுருக்கு இவுங்க எடுத்து குடுக்கறாங்க....

தராசு said...

வாங்க அத்திரி,

டேங்சு

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,

நல்லாருங்கப்பு.//

எங்க???? சப்புன்னு போச்சே!!!

ஆர்வா said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள்

எல் கே said...

vaalthukkal tharasuu

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆண்டொன்று போனால், வயது ஒன்று குறையும்...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெஞ்சமின் அய்யா(?)

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் பெஞ்சமின்

Senthilmohan said...

//*ஸாரி செந்தில்**/
இதுக்கெல்லாமா Sorry? சரி அத விடுங்க. எனக்கு பெஞ்சமின் சாரப் பத்தி ஒரு தகவல் தெரியனும். அவர சார்னு கூப்பிட வேணாங்குறார். ஆனால் 'பெஞ்சமின் பொன்னைய்யா', 'நாற்பது சொச்சமா இல்ல ஐம்பது ப்ளஸா', 'எட‌ர்ன‌ல் யூத் க்ள‌ப்பின் நீண்ட‌ கால‌ உறுப்பின‌ர்', 'இந்த ஆராய்ச்சி இப்ப ரொம்ப அவசியம்', 'டெரரான யூத்தை', 'பெஞ்சமின் அய்யா(?)' போன்ற வாழ்த்து மொழிகளைப் பாக்கும் போது அவருக்கு எங்க அப்பா வயசுக்கு பக்கமா இருக்கும் போலிருக்கே. நான் அவர என்னனு கூப்பிட? கொஞ்சம் Clarify பண்ணுங்களேன் விக்கி.

jothi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பெஞ்சமின்

அன்பரசன் said...

Belated Birthday wishes to Mr.Benjamin