Tuesday, July 6, 2010

ரொம்ப நல்ல பசங்க

போன வாரம் முழுக்க வீடு கலகலவென இருந்தது. சென்னையிலிருந்து அத்தை குடும்பமும் கூடவே அத்தை பையனின் 2 நண்பர்களும் வந்திருந்தனர். வீடு நிறைய சந்தோஷம். பசங்க 3 பேரும் கல்லூரி முதல் ஆண்டு சேரப் போகிறார்கள். எப்போவும் லேப்டாப்பும், விடியோ கேம்ஸுமாய் இருக்கும் பசங்களுக்கு இந்த ட்ரிப் செம ஜாலியா இருந்திருக்கும். அவங்களுக்கு இருந்ததோ இல்லையோ எனக்கு இருந்தது.

டெல்லி, ஆக்ரா, மதுரா எல்லாம் சுற்றிக் களைப்படையும் வேளையில் இந்தப் பசங்க மூணும் பேச ஆரம்பிச்சுதுங்கன்னா போதும். ஸ்ஸப்பா... பேசிட்டே இருக்கானுங்க. “டேய், பேசிப் பேசியே டயர்டாக மாட்டீங்களாடா”ன்னா... “நோ வே”ன்னு கோரஸ் சௌண்ட் வேற.

அஞ்சு நாட்களா பசங்க செய்த கலவரங்களில் சேம்பிளுக்கு இங்கே கொஞ்சூண்டு.

வீட்டுக்கு வந்து சேர்ந்த அன்னிக்கு “போய்க் குளிச்சிட்டு வாங்கடா. நான் ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணி வைக்கறேன்” அப்படின்னேன்.
முதலாய்க் குளிச்சிட்டு வந்த அத்தை பையன் பாலாஜி கிச்சனில் வந்து சொன்னான். “அக்கா சமைக்குறதை ஃபோட்டோ எடுத்து வைக்கணும். சில அரிய விஷயங்கள்லாம் எப்போதும் பார்க்கக் கிடைப்பதில்லை”

காலை சாப்பிட அவல் உப்மா ரெடியானதும் எல்லாரும் மூக்குப் பிடிக்கக் கொட்டிக்க்கிட்டு சொல்றாங்க. “அக்கா இருந்த பசில டேஸ்ட் கூட தெரியாமக் கொட்டிக்கிட்டோம். அப்படியே இதுக்கு நீங்க என்ன பேர் வெச்சிருக்கீங்கன்னும் சொல்லிடுங்களேன்”

நானும் என்னவரும் வீட்டில் பேசிக்கிட்டிருந்தோம். பேந்தப் பேந்த முழித்த பாலாஜி சொன்னான் “வெறும் சத்தம் மட்டும் தான் கேக்குது. ஒண்ணும் புரியல”. எங்களுக்கும் ஹிந்தி தெரியும் என அவன் நண்பர்கள் கிஷோரும், லோகேஷும் ஹிந்திப் படப் பேர்களா சொல்லி சாவடிச்சுட்டாங்க.

மெட்ரோ பயணம் அவங்களுக்குப் புதுசு. நல்லா என்ஜாய் பண்ணிப் பயணித்துக் கொண்டிருந்தோம். இடம் கிடைத்து உட்கார்ந்திருந்த ரெண்டு பேரும் அங்க நின்னுட்டிருந்த முதியவருக்கு எழுந்து இடம் கொடுத்தாங்க. நம்ம ஊட்டுப் பசங்களா இப்படின்னு புல்லரிச்சுப் போச்சு. இறங்கும் போது தான் கவனித்தேன் அந்தப் பக்கம் நின்னுட்டு இருந்த பிங்க் டாப்ஸை.

ரெட் ஃபோர்ட் போயிருந்தோம். அங்கிருந்த ஒரு இடத்தைக் காண்பித்து, “அது மன்னரோட அறை. போய்ப் பார்த்திட்டு வாங்கடா பசங்களா” என்றார் அத்தை. சோம்பேறிப் பசங்க சொன்னாங்க “ஸாரி ஆண்ட்டி. அடுத்தவங்களோட அறையை எட்டிப் பாக்குற பழக்கம் எங்களுக்கில்லை”

ன்னை அக்கான்னும், என்னவரை அங்கிள்ன்னும் கூப்பிட்டிருந்த பசங்ககிட்ட சொன்னேன். “டேய், அங்கிள்ன்னா ரொம்பப் பெரியவரா இருக்கு. அக்கா புருஷனுக்கு ஹிந்தில ‘ஜிஜூ’. அப்படியே சொல்லுங்கடா”. கொஞ்ச நேரம் கழிச்சு அவரை நான் கூப்பிட்டேன் “ஜி..” பின்னாடியிருந்து மூணு பேரும் ஒரு சேர “ஜூ”ங்குறாங்க.

போகும் வழி முழுக்கப் பேசிக்கிட்டே வந்தாங்க. பாலாஜி சொன்னான் என் தங்கையைப் பற்றி. “அக்கா, வர வர அவ ரொம்ப நல்லாப் பேச ஆரம்பிச்சுட்டா. முன்னல்லாம் ரொம்ப அமைதியா இருப்பா. இப்ப செமையா பேசுறா.”
“காலேஜ் போய்ட்டாலப்பா அதான்” நான்.
“டேய் பாலாஜி, அவ நமக்கு அத்தை பொண்ணுடா. சூப்பர்” மூணு பேரும் சேர்ந்துக்கிட்டாங்க. (இதுலெல்லாம் ஒற்றுமை தான்)
“டேய் அவ உன்னை விட ரெண்டு மாசம் பெரிய பொண்ணுடா” நினைவூட்டினேன்.
“அய்யயோ பாலாஜி, வட போச்சே” - கிஷோர்.
“டேய், நீயும் அவளை விட சின்னவன் தாண்டா” - பாலாஜி.
“உனக்கும் வட போச்சே” சந்தோஷமாக சொன்னான் லோகேஷ்.

நல்ல பசங்க இல்லை. ரொம்ப நல்ல பசங்க.

ல்லாரும் செம வெயிலில் 4 நாட்கள் சுத்தினதால் ஃபேஷியல் செஞ்சு விடறேன்னு சொல்லிருந்தேன். அதை ஞாபகப்படுத்துமாறு லோகேஷ் சொன்னான் “அக்கா, உங்களை விட அழகாயிடுவோன்னு தானே எங்களுக்கு ஃபேஷியல் பண்ணி விடாம ஏமாத்துறீங்க”
கிஷோர், “டேய், கம்ப்ளெய்ண்ட் பண்ணுவன்னு பார்த்தா, அவங்க அழகா இருக்காங்கன்னு காம்ளிமெண்ட்டா தர்ற” என முறைக்க, பின்னாடி ரெண்டு பேர்கிட்டேயிருந்தும் மொத்து வாங்கினான் லோகேஷ்.

டெல்லி மால்ஸ் காமிக்கலாம் பசங்களுக்குன்னு கூட்டிட்டுப் போனார் என்னவர். பசங்களோட ப்ரைவஸியை ஸ்பாயில் பண்ணக் கூடாதுன்னு அவங்களுக்கு டைம் குடுத்துத் தனியா அனுப்பிட்டார். நாங்க லேடீஸ் ஒரு இடத்துல தனியாவும், யோகியும் அங்கிளும் வேறொரு இடத்திலேயும் சுத்திட்டு இருந்தோம். கடைசியா எல்லாரும் சேர்ந்து வெளில வரும் போது யோகி கேட்டார் “இங்கே மால் எப்படி இருக்கு?” லோகேஷ் ஆர்வமா சொன்னான் “எங்கூர் மாதிரி தான் இருக்கு. ஆனா கல்ர்ஃபுல்லா இருக்கு” சுதாரித்தவன், “நான் கடைகளை சொன்னேன்” என்றான்.
“ஓகேடா, நீங்க நல்லவனுங்க இல்லை. ரொம்ப நல்லவனுங்க”ன்னேன் நான்.

வங்க ஊருக்குக் கிளம்புற அன்னிக்கு சப்பாத்தி பண்ணிட்டிருந்தேன். நான் டைரக்டா பர்னர்ல வெச்சுப் பண்றதைப் பார்த்த பாலாஜி சொன்னான் “வெரி குட். சப்பாத்தி சாஃப்ட்டா இருக்கு. சூப்பர். அப்படித் தான் நாங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே செய்யணும்”.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ருக்குக் கிளம்பிட்டாங்க. ரொம்ப ஃபீலிங்க்ஸோட நான் அழுதிட்டே வழியனுப்பப் போனேன். பாலாஜி ஃபைனல் டச்சாக “அக்கா, பேசாம நீங்களும் எங்க கூடவே வந்திடுங்க. ஜப் வீ மெட்ல கரீனாகபூர் டி.டி.யைக் கன்வின்ஸ் பண்ற மாதிரி நாங்க பேசிக் கன்வின்ஸ் பண்றோம். அப்படியே அவர் ஒத்துக்கலைன்னா மண்டைல ரெண்டு தட்டு தட்டி ‘போ, போய் வீட்ல யாராச்சும் பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா’ன்னு அனுப்பிடலாம்” என்றான். கண்ணீரோடே சிரித்தேன்.

ட்ரெய்ன் வந்தாச்சு. எல்லாரும் ஏறினதுக்கப்புறம் பை சொல்லிவிட்டு நாங்கள் இறங்கினோம். எங்கள் கூடவே வந்த மூணு பசங்களும் சொன்னாங்க. “அக்கா, 20-26”
நான் ரொம்ப அக்கறையா “இல்லப்பா, உங்க சீட் 49-54”
“அக்கா, நீங்க இன்னும் வளரணும். நாங்க சொன்னது இந்த கம்பார்ட்மெண்ட்ல இருக்குற பொண்ணுங்க வயசு.”
அடப்பாவி, இதுக்குத் தான் சார்ட் எப்போ ஒட்டுவாங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்தீங்களா....

செமஸ்டர் விடுமுறையில் வருவதாக சொல்லிப் போனவர்களை இப்போதிருந்தே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

28 comments:

mightymaverick said...

//என்னை அக்கான்னும், என்னவரை அங்கிள்ன்னும் கூப்பிட்டிருந்த பசங்ககிட்ட சொன்னேன். “டேய், அங்கிள்ன்னா ரொம்பப் பெரியவரா இருக்கு. அக்கா புருஷனுக்கு ஹிந்தில ‘ஜிஜூ’. அப்படியே சொல்லுங்கடா”. கொஞ்ச நேரம் கழிச்சு அவரை நான் கூப்பிட்டேன் “ஜி..” பின்னாடியிருந்து மூணு பேரும் ஒரு சேர “ஜூ”ங்குறாங்க.//எல்லாரும் ஜூவிலேருந்து (zoo) வந்ததினாலேயோ???//“அக்கா இருந்த பசில டேஸ்ட் கூட தெரியாமக் கொட்டிக்கிட்டோம். அப்படியே இதுக்கு நீங்க என்ன பேர் வெச்சிருக்கீங்கன்னும் சொல்லிடுங்களேன்”//ஏதாவது ஹிந்தி வார்த்தையை சொல்லி மாட்டிக்காம இருந்தீங்களே...//“அக்கா சமைக்குறதை ஃபோட்டோ எடுத்து வைக்கணும். சில அரிய விஷயங்கள்லாம் எப்போதும் பார்க்கக் கிடைப்பதில்லை”//போட்டோ எடுத்துருந்தா நல்லதா ஒரு போர்ட்ரைட் போட்டு வீட்டுல வைக்க சொல்லுங்க... நீங்க சமைக்கிறது ஒரு அறிய பொக்கிஷம் அல்லவா...

//நம்ம ஊட்டுப் பசங்களா இப்படின்னு புல்லரிச்சுப் போச்சு. இறங்கும் போது தான் கவனித்தேன் அந்தப் பக்கம் நின்னுட்டு இருந்த பிங்க் டாப்ஸை.//ச்சே... கடைசில அந்த பசங்க காலை நல்லா வாரி விட்டுட்டீங்க...

//எல்லாரும் செம வெயிலில் 4 நாட்கள் சுத்தினதால் ஃபேஷியல் செஞ்சு விடறேன்னு சொல்லிருந்தேன். அதை ஞாபகப்படுத்துமாறு லோகேஷ் சொன்னான் “அக்கா, உங்களை விட அழகாயிடுவோன்னு தானே எங்களுக்கு ஃபேஷியல் பண்ணி விடாம ஏமாத்துறீங்க”கிஷோர், “டேய், கம்ப்ளெய்ண்ட் பண்ணுவன்னு பார்த்தா, அவங்க அழகா இருக்காங்கன்னு காம்ளிமெண்ட்டா தர்ற” என முறைக்க, பின்னாடி ரெண்டு பேர்கிட்டேயிருந்தும் மொத்து வாங்கினான் லோகேஷ்.//நல்ல வேளை... பேசியல் பண்ணி இருந்தா, அந்த பசங்க இங்கே கோவை வந்து இறங்கினதும், ரயில் நிலையத்தில் எல்லாரும் பயந்து ஓடி இருப்பார்கள்... அப்படி எதுவும் நடக்க வில்லை என்றே நினைக்கிறேன்...

//எங்கள் கூடவே வந்த மூணு பசங்களும் சொன்னாங்க. “அக்கா, 20-26” நான் ரொம்ப அக்கறையா “இல்லப்பா, உங்க சீட் 49-54”“அக்கா, நீங்க இன்னும் வளரணும். நாங்க சொன்னது இந்த கம்பார்ட்மெண்ட்ல இருக்குற பொண்ணுங்க வயசு.”அடப்பாவி, இதுக்குத் தான் சார்ட் எப்போ ஒட்டுவாங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்தீங்களா....
செமஸ்டர் விடுமுறையில் வருவதாக சொல்லிப் போனவர்களை இப்போதிருந்தே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.//சங்கத்து ரகசியங்களை இப்படி வெளிப்படையா பேசுறாங்களே.... கொடுமை சார்...

ஜோசப் பால்ராஜ் said...

எங்கள மாதிரி சின்னப் பசங்கள மேய்கிறது எல்லாம் சாதாரண விசயம் இல்லீங்க.

கனிமொழி said...

:))
போஸ்டே கலகலப்பா இருக்குங்க...
அப்போ வீடு எப்படி இருந்தது இருக்கும்!!

ராம்ஜி_யாஹூ said...

அருமை, வருஷம் பதினாறு படம் போல பசங்க ஒரே லூட்டி போல.

உங்கள் பெயர் எனக்கு விநோதமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, விக்னேஸ்வரி என்றால், பிள்ளையாரின் தாயரா பார்வதி யை குறிக்கிறதா அல்லது பிள்ளையாரின் தோழி சித்தி யை குறிக்கிறதா என்று தெரிய வில்லை.

Unknown said...

Hi
very good
perfect students:)

ப்ரியமுடன் வசந்த் said...

வாசிக்க வாசிக்க நல்ல கலகலப்பா இருந்துச்சுங்க

Thamira said...

அனைவரிடத்திலும் ரொம்பப் பிரியமானவரென்பது தெரிகிறது.

Thamira said...

.

Priya said...

விக்கி உண்மையை சொல்லனும்னா ரொம்பவே நல்ல பசங்கதான்... படிக்கும் போது நானும் உங்களுடன் இருந்ததுபோல தோன்றியது. ரசிச்சு படிச்சேன்!

நேசமித்ரன் said...

ரொம்ப நல்ல நரேஷன்

சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க

வாழ்த்துகள்!!!

சுரேகா.. said...

:)

நல்ல பசங்க!!

மைக் முனுசாமி said...

கொஞ்ச நேரம் என்னை மறந்து இருக்க முடிந்தது..! நன்றி

rajasundararajan said...

பிறந்த இடத்தில் இருந்து ஒரு கண்ணி - அது தமிழோ, பால்கோவாவோ, ஆட்களோ - கிட்டுகையில் அது கண் நிறைக்கும் அனுபவம்தான், கண்ணீராலும். உணரமுடிகிறது.

ஜெய்லானி said...

ஹா..ஹா.வடை போச்சே.!!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தாலே, அதுவும் நம்ம அலைவரிசைல இருக்கிறவங்க வந்தா ஒரே சந்தோஷம்தான். கல்லூரி கால நினைவுகளை தூண்டியது.

ஈரோடு கதிர் said...

|| ‘போ, போய் வீட்ல யாராச்சும் பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா’ன்னு அனுப்பிடலாம்” ||
ரொம்ப்ப்ப்ப்ப நல்ல பசங்கதான்

ஷர்புதீன் said...

//அனைவரிடத்திலும் ரொம்பப் பிரியமானவரென்பது தெரிகிறது.//

:)

Anonymous said...

//பாலாஜி சொன்னான் “வெறும் சத்தம் மட்டும் தான் கேக்குது. ஒண்ணும் புரியல”.//

இந்திப்படம் பாக்கும்போது எங்க வீட்ல இதே கமெண்ட் கேக்கும் :)

Senthilmohan said...

//*போ, போய் வீட்ல யாராச்சும் பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா**/
ஒருவாட்டி இது மாதிரி TT கிட்ட பேசும் போது கொஞ்சம் Wrong ஆயிடுச்சு. Katpadi-ல இறக்கி மாமாகிட்ட மாட்டிவிட்டுட்டார். Rs.2500/- fine கட்டினாத்தான் Train ஏற முடியும்னு வேற சொல்லிட்டார். அப்புறம் மாமாகிட்ட நைசா business பேசி TT-க்கு 500, மாமாவுக்கு 500 கப்பம் கட்டிட்டு ஏறினோம். அப்பொழுது நடந்த சில பல காமெடிகள், தர்க்கங்கள், நியாய/அநியாய விவாதங்கள் எல்லாம் நியாபகத்துக்கு வந்திடுச்சு.
//*அஞ்சு நாட்களா பசங்க செய்த கலவரங்களில் சேம்பிளுக்கு இங்கே கொஞ்சூண்டு.**/
அடுத்த முறை வரும் போது, அவங்க பண்ற எல்லா கலவரங்களையும் நோட் பண்ணி, ஒரு பதிவு போடுங்க. 10
நிமிஷம் Extra-வா சிரிச்சுக்குவம்.

Vidhya Chandrasekaran said...

Boys r always boys:))

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..ஹா..

மொத்த இடுகையிலும் சிரித்து மகிழ்ந்தேன் மருமகளே.

fantastic!

மணிநரேன் said...

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1st time coming to ur blogs. its very nice

VELU.G said...

உங்கள நெனைச்சா பொறாமையா இருக்குங்க

ரொம்ப நல்ல பசங்க தாங்க

Aravindhan said...

படிக்கும்போது என்னை மறந்து சிரித்து கொண்டிருந்தேன்,என் நண்பன் அத பார்த்துட்டு சொன்னான் மச்சி நீ பண்ணது எல்லாம் நியாபகத்துக்கு வருதோனு,என் கல்லூரி வாழ்க்கையை நியாபகப் படுத்தியது உங்கள் பதிவு.வாழ்த்துகள் விக்கி

--