Thursday, November 19, 2009

உங்களுக்கு எந்த கார் பிடிக்கும்...


மூத்தப் பதிவர் கேபிளாரின் தகப்பனார் மறைவிற்கு என் அஞ்சலியும், பிரார்த்தனைகளும். அவருக்கு வேண்டிய பொழுதில் கேட்காமலேயே ஓடோடி உதவிய மற்ற பதிவ நண்பர்களை எண்ணி வியக்கிறேன். நானும் பதிவர் ஜாதி என சொல்வதில் மகிழ்ச்சி. கேபிள் சார் நீங்கள் சீக்கிரம் இத்துயரிலிருந்து மீள மனமார பிரார்த்திக்கிறேன்.
சமீபத்தில் சகோதரரை இழந்த அரங்கப் பெருமாள் சார், நீங்களும் அத்துயரிலிருந்து மீள என் பிரார்த்தனைகள்.

****************************************************************************************************

நவம்பர் மாதம். டெல்லியில் குளிர் ஆரம்பமாகி விட்டது. நான்காண்டுகளுக்கு முன்பு டெல்லியில் அக்டோபரிலேயே ஸ்வெட்டருடன் நடுங்கிக் கொண்டிருந்தேன். இந்த முறை நவம்பர் பதினைந்துக்கு மேல் தான் ஆரம்பமென்றாலும் குறைவில்லாமல் நடுங்க வைக்கிறது. இன்னர் தெர்மல் வியர், ஜீன்ஸ், திக் டாப்ஸ், ஸ்வெட்டர், அதற்கு மேல் ஜாக்கெட், தலைக்குக் குல்லா, காலில் சாக்ஸ், ஷூ, கையில் கிளவுஸ், இது எல்லாவற்றிற்கும் மேல் ஷால் என ஒரு ரேஞ்சாகத் தான் ஆபிஸ் வர வேண்டியுள்ளது. இப்போதே இப்படியென்றால் டிசம்பர், ஜனவரியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் அலுவல் வேலைகளால் இங்கிருந்து தப்பித்து வருகிறேன். இவ்வருடம் எப்படியோ...
இதற்கு நடுவே டெல்லி வந்திருக்கும் கோவைத் தோழியை இரண்டு நாட்கள் முன்னர் அழைத்து "எப்படி டெல்லிக் குளிர்" என்றேன். "கோயம்பத்தூர் மாதிரி தான் இருக்கு. ரொம்ப அதிகமில்லை" என்றார். இன்று கேட்க வேண்டும் "கோவையில் எப்போது இப்படி நடுங்கினீர்கள் என்று. (கோவை சொர்க்கம். அங்கு உடலை வருத்தும் குளிருமில்லை, வாட்டும் வெயிலுமில்லை. இது தலைநகரம் :( )

****************************************************************************************************

டெல்லியின் சாலைகளை நினைத்து மகிழும் அதே நேரத்தில், நொய்டாவின் சாலைகளை நினைத்தால் எரிச்சலே மிஞ்சும். ஆங்காங்கே உடைந்த ரோடுகள், பழுதான டிராபிக் சிக்னல்கள் என தலைவலிகள் அதிகமிங்கு. எனக்குத் தெரிந்து ஒரு டிராபிக் லைட் கடந்த ஐந்து மாதங்களாக ஒரே சிக்னலைக் காட்டிக் கொண்டுள்ளது. இதனால் ஒரு பக்கத்து வாகனங்கள் எப்போதும் இரண்டு நிமிடம் நின்று பின் சிக்னல் பழுதானதை உணர்ந்து செல்கின்றன. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக இது சரிபடுத்தப்படவே இல்லை. இது குறித்து யாரிடம் புகார் கொடுக்க வேண்டுமென்றும் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். இந்த முறை நானே புகாரளிக்கப் போகிறேன்.
சாலைகளில் எனது அடுத்த தலைவலி, ஹார்ன் சத்தம். அடைக்கும் சாலை நெரிசலில் ஆம்புலன்ஸ் சத்தம் போல ஹார்ன் வைப்பவர்கள், அலறும் ஹார்ன் ஒலிப்பவர்கள், பைக்கில் சைலென்செர் இல்லாமல் ஓட்டுபவர்கள் இவர்களையும் ஒலி மாசுபடுத்துபவர்களாக புகாரளிக்க வேண்டும். என்ன நான் சொல்றது... (எங்க ஊருக்கு தான் இப்போ மெட்ரோ வந்துடுச்சே. இனிமே, சாலைப் போக்குவரத்து உபயோகம் குறையும்)

****************************************************************************************************

நம்ம வால் சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுப் பழகலாமின்னு, சேட் பண்ண தோழிகிட்ட கேள்வி கேக்க ஆரம்பிச்சேன். அவ வெறுத்துப் போய்ட்டா. அப்படி ஒன்னும் தப்பா நான் கேட்கலையே. நீங்க சொல்லுங்க, நான் எதுவும் தப்பாவா கேட்டேன்...
Hi de, How is ur hubby babe..
Is my hubby a babe for you?
Hey stupid, U r babe. And how is ur hubby?
Haiyaa, I am a little babe??? Thank you Aunty.
Hey, I am unborn de.
So, Am I speaking to a devil?
Hey, I mean to say I am very young.
So, nee Araikuraiyaa?
.................
Ennachu chellam, Mouna virathamaa?
Offline போய் விட்டாள்.(வால், கேள்விகள் கேக்கனும்னு சொன்னீங்க. விளைவுகள் என்னன்னு சொன்னீங்களா...)

****************************************************************************************************

எனக்குக் கார்களின் மீது எப்போதும் அலாதிப் பிரியமுண்டு. பெரும்பாலான கார்ப் பிரியர்களைக் கவர்பவை பெரிய வண்டிகள் தான். எனக்கும் தான். ஆனால் இப்போது இரண்டு சிறிய கார்கள் எப்போதும் என் கண்களை அவற்றின் பக்கம் திரும்ப வைக்கின்றன. கொள்ளை அழகாய் எனக்குத் தெரிகின்றன. Skoda Fabia & Honda Jazz. சிறிய கார்ப் பிரியர்களை மட்டுமலாது பெரிய கார்ப் பிரியர்களையும் ஈர்க்கும் இது போன்ற வடிவமைப்புகள் மனதை கொள்ளை கொள்கின்றன. (இதை என்னவர் கிட்ட சொன்னா மட்டும் காதிலேயே வாங்கிக்க மாட்டேங்குறார். Is it called husband reaction?)

****************************************************************************************************

யோகி டைம்ஸ்

நான் ஏற்கனவே சொன்னது போல என்னவரின் தமிழார்வம் அதிகமாகிக் கொண்டே போகிறது. போனில் அம்மாவின் பயிற்சியும், வீட்டில் என் பயிற்சியும் அவரை (அவரின் தமிழை) ஒரு ஷேப்பாக்கி வைத்திருக்கின்றன. போன வாரம் 'தமிழன்' படம் பார்த்துக் கொண்டிருந்தோம். 'ஹாட் பார்ட்டி' பாடல் வந்ததும் என்னிடம், "பிரியங்கா சோப்ரா நல்லா தானே இருக்கா. அவன் ஏன் 'பாட்டி'ன்னு பாடுறான்" அப்படினார்.'அய்யா, தமிழார்வம் உங்களுக்கு இவ்ளோ அதிகமாகக் கூடாது' என்றவாறே 'அது பாட்டி இல்ல, பார்ட்டி' என்று விளங்க வைத்தேன். இந்தத் தமிழ் பயிற்சி என் தமிழை வளர்க்கப் போகிறதா இல்லை, மறக்கடிக்கச் செய்யப் போகிறதாவெனத் தெரியவில்லை. (இப்போது எழுத்துக்களை எழுதப் பழக ஆரம்பித்துள்ளார். என்னென்ன கமெண்ட்ஸ் வரப் போகுதோ)


59 comments:

நேசமித்ரன் said...

ஆரம்பாமாகி ?

மிக நல்ல பகிர்வு

உங்கள் தோழி பாவம் தமிழ் போல .....

தினேஷ் said...

//.Mouna virathamaa?Offline போய் விட்டாள்.)//

ஹா ஹா ஹா..

டவுசர் பாண்டி... said...

//மூத்தப் பதிவர் கேபிளாரின்....//

ஏன் இந்த கொலைவெறி!

iniyavan said...

//இன்னர் தெர்மல் வியர், ஜீன்ஸ், திக் டாப்ஸ், ஸ்வெட்டர், அதற்கு மேல் ஜாக்கெட், தலைக்குக் குல்லா, காலில் சாக்ஸ், ஷூ, கையில் கிளவுஸ், இது எல்லாவற்றிற்கும் மேல் ஷால் என ஒரு ரேஞ்சாகத் தான் ஆபிஸ் வர வேண்டியுள்ளது.//

மூஞ்சிக்கு ஒண்ணுமில்லையா?

உங்க ஹஸ்பெண்டுக்கு தமிழ் தெரியாதா???

சூர்யா said...

இப்படியா கேள்வி கேக்கறது... :)

Prabhu said...

.'அய்யா, தமிழார்வம் உங்களுக்கு இவ்ளோ அதிகமாகக் கூடாது' ///

ha.ஹா...

உங்க கணவர் ஹிந்தியா? இந்தியால ஒண்ணு ரெண்டா இருக்கு. அஃபிஷியலா 14 மொழி இருக்கு. இதுல dialects வேற. என்ன கஷ்டம். எந்த நாட்டிலயாவது இப்படி இருக்கா?

வினோத் கெளதம் said...

சீக்கிரம் ப்ளாக் எழுதுற அளவுக்கு கத்து கொடுங்க..

கார்க்கிபவா said...

யோகி டைம்ஸ் தொடர்ந்து எழுதுங்க. அப்புறம் தமிழன் படமெல்லாம் காமிச்சா தமிழ் கற்க ஆர்வம் வருமா?

கார் பற்றி. ஒரு பதிவு எழுத தொடங்ங்ங்ங்ங்ங்ங்கி.. சரி விடுங்க.. கார் சீக்கிரமே வாங்குங்க

ஜெட்லி... said...

//ஏன் 'பாட்டி'ன்னு பாடுறான்" //

உங்களவர் சொன்னது உண்மையா கூட இருக்கலாம்....
பாட்டினு சொன்னதை சொன்னேன்....

வால்பையன் said...

//(வால், கேள்விகள் கேக்கனும்னு சொன்னீங்க. விளைவுகள் என்னன்னு சொன்னீங்களா...)//

இப்படியெல்லாம் கூட கேள்வி கேக்கலாம்னு இப்ப தாங்க தெரிஞ்சிகிட்டேன்!

அவ்வ்வ்வ்!

Rajalakshmi Pakkirisamy said...

aaha.. chat la sikka mattome....

सुREஷ் कुMAர் said...

//
கோவை சொர்க்கம். அங்கு உடலை வருத்தும் குளிருமில்லை, வாட்டும் வெயிலுமில்லை.
//
எங்க ஊர்னா சும்மாவா..

இப்போ அப்பப்போ லைட்டா மழைபெய்து கிளைமேட் சூப்பராகீதே..

सुREஷ் कुMAர் said...

ஹை. நான் தான் ஃபஸ்ட்டேய்..

सुREஷ் कुMAர் said...

//
கேபிள் சார் நீங்கள் சீக்கிரம் இத்துயரிலிருந்து மீள மனமார பிரார்த்திக்கிறேன்.
//
கொஞ்சம் லேட்டாதான் தெரிய வந்தது.. -:(

நானும் பிரார்த்திக்கிறேன்..

விஜய் said...

Skoda Fabia ரொம்ப அழகு

சீக்கிரமே வாங்குங்கள்

விஜய்

சுசி said...

//கேபிள் சார் நீங்கள் சீக்கிரம் இத்துயரிலிருந்து மீள மனமார பிரார்த்திக்கிறேன்.//
நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

//நவம்பர் மாதம். டெல்லியில் குளிர் ஆரம்பாமாகி விட்டது.//
அட நீங்க வேற... எங்களுக்கு செப்டம்பரிலேயே...

//இந்த முறை நானே புகாரளிக்கப் போகிறேன்.//
விக்கினம் தீர்க்கும் விநாயகா... விக்னேஷ்வரிய காப்பாத்துப்பா...

சுசி said...

//விளைவுகள் என்னன்னு சொன்னீங்களா...//
அதானே.. அதில்ல முக்கியம்.

//எனக்குக் கார்களின் மீது எப்போதும் அலாதிப் பிரியமுண்டு. பெரும்பாலான கார்ப் பிரியர்களைக் கவர்பவை பெரிய வண்டிகள் தான். எனக்கும் தான்.//
அட நீங்க என் கண்ணாளன் கட்சி.

//மறக்கடிக்கச் செய்யப் போகிறதாவெனத் தெரியவில்லை.//
கவலைப்படாதீங்க. மறந்ததுக்கு அப்புறம் அவர் கிட்டவே டியூஷன் வச்சுக்குங்க.

எம்.எம்.அப்துல்லா said...

//இது குறித்து யாரிடம் புகார் கொடுக்க வேண்டுமென்றும் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் //

திருமதி.பிரதிபாபாட்டீல்
ராஷ்ட்ரபதி பவன்
டில்லி.

எனக்குத் தெரிஞ்சு டெல்லியில பெரிய ஆள் இவங்கதான்.இங்ககிட்ட சொல்லிப்பாருங்க.

:))

Anonymous said...

//(கோவை சொர்க்கம். அங்கு உடலை வருத்தும் குளிருமில்லை, வாட்டும் வெயிலுமில்லை. இது தலைநகரம் :( )//

இதே வரிகளை நான் சொல்லி புலம்பிக்கிட்டு இருக்கேன். ஸ்ப்ரிங்லயே 35 டிகிரி இங்க கொளுத்துது. டிசம்பர்ல சம்மர் ஆரம்பிக்குது. கருவாடா ஆகிட்டுவர்றேன்.

//கார்ப் பிரியர்களைக் கவர்பவை பெரிய வண்டிகள் தான்.//

எங்க வீட்டிலையும் பெரிய கார்தான். Toyota - Altise. சின்ன கார் வாங்குங்கன்னு சொல்றதெல்லாம் எங்க காதில விழுகுது.

Anonymous said...

//'தமிழன்' படம்//

இப்படி ஒரு படம் வந்துச்சா என்னா?

அரங்கப்பெருமாள் said...

//டெல்லியில் குளிர் ஆரம்பாமாகி விட்டது//

உங்களுக்குத் தேவை" Hot" (அட சத்தியமா ‘டீ’ யைத்தான் சொன்னேன்.
)

// ஐந்து மாதங்களாக ஒரே சிக்னலைக் காட்டிக் கொண்டுள்ளது.//

அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு இல்ல. என்றும் ஒரேப் பேச்சு.

//Am I speaking to a devil?//
உங்களவர்தான் கன்ஃபார்ம் பண்ணனும்.

mvalarpirai said...

நீங்க கேள்வி கேட்ட தோழி பதிவரா? அப்படி இருந்தால் வலைப்பதிவு linka கொடுங்க ! செம பதில்கள்.. :)

M.S.R. கோபிநாத் said...

//'ஹாட் பார்ட்டி' பாடல் வந்ததும் என்னிடம், "பிரியங்கா சோப்ரா நல்லா தானே இருக்கா. அவன் ஏன் 'பாட்டி'ன்னு பாடுறான்" அப்படினார் //

சரியான ஜோக்

என்னிடம் ஒரு தெலுங்கு நண்பர் ஒருவர் சாமி படத்தில் வரும் “அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு” பாட்டைக் கேட்டுவிட்டு ..ரெண்டுபேரும் காதலிக்கும் போது எதுக்கு அய்யய்யோ அய்யய்யோனு
கத்துறாங்கனு கேட்டார்.. என்னிடம் பதில் இல்லை.. :-)

thiyaa said...

அருமையான பதிவு

Cable சங்கர் said...

நன்றி விக்னேஷ்வரி...

பதிவு இண்ட்ரஸ்டிங்..

தராசு said...

இப்படியா சாட் பண்ணுவாங்க, யப்பா...

Skoda Fabia, இப்பல்லாம் நிறைய பேருக்கு Skoda Fobia வந்த மாதிரி இருக்கு.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, ஹலோ எங்க தலைவர் வால்ஸ் கேள்வி மட்டும்தான் கேக்கச் சொன்னார் பதிலைப் படிக்கச் சொல்லவில்லை. உங்களை யாரு பதிலை எல்லாம் படிக்கச் சொன்னார்கள். உங்கள் தோழியுடன் நல்ல சாட். நன்றி.

Vidhoosh said...

The Office of the ASP (Traffic)
Sector 14 Noida,
Disst. Gautambudhnagar. PIN -201-301
Phone No.-+91-120-2422231
+91-120-2400000
Web Site: www.noidatrafficpolice.org
Email: info@noidatrafficpolice.org

இங்கே சென்று புகார் எழுத்தில் கொடுங்கள். நகலில் அலுவலக முத்திரை (official seal) இட்டுத் தருவார்கள். முடிந்தால் இரண்டு மூன்று பொது மக்களிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு தக்க துணையுடன் செல்லுங்கள். :)

உங்கள் முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

--வித்யா

Vidhoosh said...

24X7 Online and Telephonic support - 1073-ம் இருக்கிறது. முயற்சித்துப் பாருங்கள் (முக்கால்வாசி இந்த எண்கள் BSNL தொலைபேசியிலிருந்து டயல் செய்தால் மட்டும்தான் கிடைக்கும்.

Vidhoosh said...

அது சரி... நீங்க பஞ்சாபி கத்துண்டாச்சா?

:))

--வித்யா

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நல்ல பதிவு
//நவம்பர் மாதம். டெல்லியில் குளிர் ஆரம்பாமாகி விட்டது.//
இங்கும் ஆரம்பாமாகி விட்டது. கூடிய விரைவில் ஸிரோ டிகிரி வந்துடும்.
// கொள்ளை அழகாய் எனக்குத் தெரிகின்றன. Skoda Fabia & Honda Jazz. சிறிய கார்ப் பிரியர்களை மட்டுமலாது பெரிய கார்ப் பிரியர்களையும் ஈர்க்கும் இது போன்ற வடிவமைப்புகள் மனதை கொள்ளை கொள்கின்றன.//
என்னோட சாய்ஸ் எப்போவும் "டொயோடா கேம்ரி" தான்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

Kaarki://யோகி டைம்ஸ் தொடர்ந்து எழுதுங்க. அப்புறம் தமிழன் படமெல்லாம் காமிச்சா தமிழ் கற்க ஆர்வம் வருமா?//

:-(

But Kaarki, You too?

ப்ரியமுடன் வசந்த் said...

அனைத்தும் ரசித்து படித்தேன்..

கார் சீக்கிரம் வாங்க கடவ

கேள்வியெல்லாம் ரொம்ப கேட்ககூடாது சாட்ல...

தாரணி பிரியா said...

நீங்க விஜய் படம் எல்லாம் பாக்க வெச்சு அப்புறம் உங்களவர் உங்களையே அண்ணான்னு கூப்பிட போறார் பார்த்துகோங்க.

ஸ்கோடா சூப்பர் அதுவும் கருப்பு கலரில் இருந்தா சூப்பரோ சூப்பர்

நாமதான் ஆன்சர் சீட்லயே கேள்வி கேட்கிறவங்களாச்சே

விக்னேஷ்வரி said...

நன்றி நேசமித்திரன். நம்ம கிட்ட மாட்டின எல்லாரும் பாவம் தாங்க.

வாங்க சூரியன்.

வாங்க டவுசர் பாண்டி, உங்களுக்கு ஏங்க கொலை வெறி...

கண் முழுக்க மறைக்க கண்ணாடியும், மீதி முகம் மறைய ஷாலும் உபயோகமாகுது உலகநாதன்.
என்னவர் பஞ்சாபிங்க.

கேள்வி கேக்குறதுன்னு முடிவாகிடுச்சு, எப்படிக் கேட்டா என்ன சூர்யா. :)

இந்தியாவின் பன்மொழியை நினைச்சு சந்தோஷப்படணும் பப்பு. நம்ம மக்கள் தான் குறைஞ்சது இரண்டு மொழிகளாவது தெரிஞ்சவங்க.

அவருக்கு ப்ளாக்கிங் பிடிக்காது வினோத் கெளதம். சீக்கிரமே தமிழ்ல புக் போட வெச்சுடலாம்.

விக்னேஷ்வரி said...

உங்க பப்பு டைம்ஸுக்குப் போட்டியாவா கார்க்கி? ;)
தமிழ் மட்டும் இல்ல, இன்னும் நிறையவும் கத்துக்கதான் 'தமிழன்'. ;)
கார் பற்றி. ஒரு பதிவு எழுத தொடங்ங்ங்ங்ங்ங்ங்கி.. //
துறைப் பதிவுக்கே இந்த இழுவையா...

உங்களுக்கு பிரியங்கா சோப்ராவைப் பார்த்தா பாட்டி மாதிரி தெரியுதா ஜெட்லி...

இப்படியெல்லாம் எஸ்கேப் ஆகாதீங்க வால்.

ரொம்ப உஷாரா இருக்கீங்க ராஜி.

சீக்கிரமே வர்றேன் சுரேஷ், உங்க ஊர் கிளைமேட்டை என்ஜாய் பண்ண.
இத்தனை பேருக்கு அப்புறம் கமென்ட் போட்டுட்டு ஃபர்ஸ்ட்டா...
நம்மனைவரின் பிரார்த்தனையும் அவர்களைத் துயரிலிருந்து மீட்கட்டும்.

விக்னேஷ்வரி said...

நன்றி விஜய்.

எப்படி குளிரை மேனேஜ் பண்றீங்க சுசி, என்னை மாதிரியே பூச்சாண்டி வேஷம் தானா...
விக்கினம் தீர்க்கும் விநாயகா... விக்னேஷ்வரிய காப்பாத்துப்பா... //
நீங்க ரொம்ப நல்லவங்க.

அட நீங்க என் கண்ணாளன் கட்சி.//
என்னைப் பத்தி மாமா கிட்ட சொல்லி வைங்க அக்கா. :)

மறந்ததுக்கு அப்புறம் அவர் கிட்டவே டியூஷன் வச்சுக்குங்க. //
இந்த ஐடியா நல்லா இருக்கே.

நீங்க எப்போ டெல்லி வர்றீங்கன்னு சொல்லுங்க அப்துல்லா. சேர்ந்து போய் புகார் கொடுத்திடலாம்.

வாங்க அம்மிணி.
//'தமிழன்' படம்//
இப்படி ஒரு படம் வந்துச்சா என்னா? //

கார்க்கி, இந்த அநியாயயத்தைக் கேக்காம எங்க போயிட்டீங்க. நீங்க ரொம்ப அப்டேட் பண்ண வேண்டிருக்கு அம்மிணி.

விக்னேஷ்வரி said...

வாங்க அரங்கப் பெருமாள். ஆரம்பிச்சுட்டீங்களா உங்க அலும்பலை... :)

அவளுக்கும் பதிவுலகிற்கும் ரொம்பத் தூரம்ங்க வளர்பிறை.

வாங்க கோபிநாத். இப்படித் தான் பல பாடல்கள் ஏடாகூடமா வந்து, நாமளும் ரசிக்கிறோம். அர்த்தமெல்லாம் பார்த்தா அவ்ளோ தான்.

நன்றி தியா.

நன்றி கேபிள் சார். எப்படி இருக்கீங்க...

Skoda fobia எல்லாருக்கும் பொது நோயாகிடுச்சுங்க தராசு.

விக்னேஷ்வரி said...

நன்றி பித்தனின் வாக்கு. பதில் படிக்காமல் எப்படிங்க அடுத்தக் கேள்வி கேக்குறது?

தகவலுக்கு நன்றி வித்யா. நாளையே செல்கிறேன்.
அவருக்கு எந்த அளவுக்குத் தமிழ் தெரியுமோ அந்த அளவுக்கு எனக்கு பஞ்சாபி தெரியும்ங்க.

நன்றி பாலகுமாரன். ஸீரோ டிகிரி எல்லாம் எப்படிங்க சமாளிக்குறீங்க. இங்கே பத்துக்கே படாத பாடு படுறோம்.
கேம்ரிக்கு இணை எதுவுமில்லை.
I too love Camry.
கார்க்கி சொன்ன அர்த்தம் வேறங்க. நீங்க ஃபீல் பண்ணாதீங்க.

நன்றி வசந்த். கேள்வி கேட்டா அறிவு வளரும்னு வால் தாங்க சொன்னாரு.

நீங்க விஜய் படம் எல்லாம் பாக்க வெச்சு அப்புறம் உங்களவர் உங்களையே அண்ணான்னு கூப்பிட போறார் பார்த்துகோங்க. //
ஹாஹாஹா...

கருப்பு ஸ்கோடா நல்ல சாய்ஸ் தான் தாரணி.

நாமதான் ஆன்சர் சீட்லயே கேள்வி கேட்கிறவங்களாச்சே//
எப்படிங்க இப்படியெல்லாம்..... முடியல... :)

Jawahar said...

படிக்கிற காலத்திலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச கார் லீனா சந்தாவர்கார்!

http://kgjawarlal.wordpress.com

நாஸியா said...

நாங்கல்லாம் சென்னை மக்கள்.. வெயில் எவ்வளவு போட்டு வாட்டினாலும் கொஞ்சம் குளிருக்கே அம்பேல்.. இங்க ஒரு 28 டிக்ரீஸ் தான் இருக்கும், அதுக்கே நடுங்குது..

Anonymous said...

உங்க இந்த பதிவு சிறப்பாவும் சிரிப்பாவும் இருக்குப்பா..

வால் வாலாட்டாத இடமே இல்லை போல..பேசாமால் டெல்லி குளிரில் நடுங்க வைக்கலாமாடா?

தகவல்கள் பரிமாறிய விதம் அருமை

வால்பையன் said...

//டெல்லி குளிரில் நடுங்க வைக்கலாமாடா?//

ஒரு ஃபுல் பாட்டில் கொடுத்துட்டா அண்டார்டிக்காவுக்கே போவேன்!

கார்க்கிபவா said...

//Kaarki://யோகி டைம்ஸ் தொடர்ந்து எழுதுங்க. அப்புறம் தமிழன் படமெல்லாம் காமிச்சா தமிழ் கற்க ஆர்வம் வருமா?//

:-(

But Kaarki, You too?//

சும்மா சகா. தமிழன் பார்க்கிறாங்கன்னு அவங்க விஜய் ஃபேன் ஆயாச்சுன்னு அர்த்தம். இல்லைன்னா சிடி வாங்கிட்டு வந்து பார்பாங்களா?

பப்பு டைம்ஸா?ஆவ்வ்வ்.. ப்ளீஸ்.. அவன் பப்லு. எனக்கு இது கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.

அம்மிணி, நல்ல விஷயமே தெரியாதா உங்களுக்கு? விக்னேஷ்வரி பதிவு படிக்கிற நேரத்தில் விக்கிபீடியா போய் இளையதள்பதின்னு போட்டு தேடிப் படிங்க..:)))

Raghu said...

//Ennachu chellam, Mouna virathamaa?
Offline போய் விட்டாள்//

ப‌டிக்கும்போது ஆர‌ம்பிச்ச‌ குசும்பு இன்னும் போக‌லை பாருங்க‌, உங்க‌ளோட‌ சேட் செஞ்ச‌ உங்க‌ தோழி ந‌ல‌மோட‌ வாழ‌ இறைவ‌னை வேண்டிக்க‌றேன்.

ஃப்ரெண்டையே இந்த‌ ஓட்டு ஒட்ட‌றீங்க‌ளே, உங்க‌ளுக்கு புடிக்காத‌வ‌ங்க‌ மாட்னாங்க‌ன்னா? பொள‌ந்து க‌ட்டுவீங்க‌ போல‌!

அன்புடன் நான் said...

கலகலன்னும் இருக்கு... கலக்கலாவும் இருக்கு.

kanagu said...

சென்னை-ல ஒரே பருவநிலை தான்... கோடை... சோ குளிர் பத்தியெல்லாம் பேசி கடுப்பேத்தாதீங்க...

சாட் பண்ணும்போது இப்படி எல்லாம் பண்ணா... உங்கள் தோழியின் status online-la இனிமே இருக்கவே இருக்காது...

எனக்கு கார் ரொம்ப எல்லாம் புடிச்சது இல்ல....சோ நோ கமெண்ட்ஸ் ஆன் தட்....

உங்க கணவர் எப்டியும் துய தமிழ் கத்துகிட்டு இருக்கார்... அதனால தமிழ் படப் பாடல்கள விட்டுட்டு திருக்குறள், சிலப்பதிகாரம் அப்டி-னு எடுத்து கொடுங்க.. இல்ல பழைய பாட்டா பாருங்க.. ;)

angel said...

//Am I speaking to a devil?//

say to ur frnd not speaking but chating with an angel

malarvizhi said...

நானும் கார் ப்ரியைதான் . ஆனால் என் சின்ன கண்மணிக்கு கார் , பைக் , இரண்டும் அவனுடைய சுவாசம் . பகிர்வு அருமை . வருக என்னுடைய தளத்திற்கு . தருக உங்கள் கருத்தை. நன்றி.

விக்னேஷ்வரி said...

வாங்க ஜவஹர்.

28 டிகிரிக்கே நடுக்கமா... ஒரு முறை டிசம்பர்ல டெல்லி வாங்க நாஸியா.

நன்றி தமிழரசி. அவர் பதிலை கீழ பார்த்தீங்களா...

அது தான் எங்களுக்குத் தெரியுமே வால். நீங்க தனியா வேற சொல்லணுமா...

ஸாரி கார்க்கி. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு. :( வேறெந்த அர்த்தத்திலேயும் சொல்லல.

விக்னேஷ்வரி said...

வாங்க குறும்பன், பிடிக்காதவங்கனெல்லாம் யாரும் இல்லைங்க. ரொம்பப் பிடிச்சவங்களை மட்டும் தான் கலாய்க்க முடியும்.

நன்றி கருணாகரசு.

சென்னைல மழைன்னும் ஒன்னு இருக்குல்ல கனகு.
ஆமாங்க, அவ அதுக்கப்புறம் ஆன்லைன் வரவேயில்ல.
திருக்குறள், சிலப்பதிகாரமெல்லாம் போனா எனக்கே அர்த்தம் புரியாது.

That question was asked by me Angel.

நன்றி மலர்விழி

மதிபாலா said...

ஹோண்டா ஜாஸ் உண்மையில் ஒரு குட்டி சொர்க்கம்...எனக்கும் பிடித்தது....

ஆனால் , எனக்கு மிகவும் பிடித்த மகிழுந்து என்றால் நிஸான் எக்ஸ்டிரயல் தான்....அதன் வடிவமைப்பும் , உள்ளக வசதிகளும் உபயோகிப்பவர்களை அடிமைப்படுத்தும் !!!

http://www.niot.net/view/6046/nissan-xtrail/

Unknown said...

நீங்க கந்தசாமி பாத்துடீன்களோ ..

rajan said...

அந்த கேள்வி கேட்ட மேட்டர் சூப்பர்!

"உழவன்" "Uzhavan" said...

ம்ம்.. நல்ல டைம்பாஸ் பதிவு :-)

M.S.R. கோபிநாத் said...

விக்னேஷ்வரி,

இந்த பதிவைப் பார்க்கவும்.

http://bhrindavanam.blogspot.com/2009/11/blog-post_25.html

DHANS said...

Skoda Fabia & Honda Jazz. rendume kaasuketha dosai illai.

both are over priced cars with out much features compared to their competitors.

if you want a value for money then check out Fiat punto.

Jazz priced 8.5 lakhs on road where you will not get alloy wheels, automatic climate control, mycar features, msic system with USB, and more features.

விக்னேஷ்வரி said...

வாங்க மதிபாலா.

பார்த்துட்டேங்க பேநா மூடி. என்ன விஷயம்...

வாங்க ராஜன்.

நன்றி உழவன்.

விருதிற்கு நன்றி கோபிநாத்.

I agree to your points DHANS.

marumalarchi said...

hi plese if you don like vijay do not command anything this is my request