போன வாரம் முழுக்க பதிவுலகின் முக்கியப் பதிவாக இருந்த "பிடித்தது, பிடிக்காதது" இந்த வாரம் எனக்கும். ஐந்து அதி முக்கிய நண்பர்கள் அழைத்திருக்கும் காரணத்தால் இதோ எனது "பிடித்ததும், பிடிக்காததும்"
அழைத்த நண்பர்கள் ராஜன், நாஸியா, அம்மிணி, ரோமியோபாய், பா.ராஜாராம் - அனைவருக்கும் என் நன்றிகள்.
எல்லாரும் போட்ட மாதிரியே நாமளும் போட்டாச்சு விதிகள்.
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நானே தமிழ்நாட்டுக்குள்ள இல்ல, பிடிச்சவங்க மட்டும் தமிழ்நாட்டுலே இருக்கனுமா...) 
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் (இது வேறவா.... இன்னும் யாராவது மிச்சம் இருக்காங்க இதை எழுதாம...)
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். (பிரபலமாக்கிடலாம்) அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம். (இது தப்பில்லையோ...) 
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். (தாண்டாது.... தாண்டாது.) 
5. நீங்கள் குறிப்பிடும் பிரபலம் உயிருடன் இருக்க வேண்டும். (மறைந்த சாதனையாளர்களை மறத்தல் தகுமோ...)
இப்போ கேள்விகளுக்குள்.
1.அரசியல் தலைவர்
        பிடித்தவர் : தமிழ்நாட்டுக்குள்ள யாருமில்ல.
       பிடிக்காதவர்: தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரும்.  
2.எழுத்தாளர்
        பிடித்தவர் : பாலகுமாரன். (பலருக்கும் பிடிக்காதவரெனினும் காதலை அவர் சொல்லும்                                அழகுக்காகப் பிடிக்கும்)
      பிடிக்காதவர்: முன்னாடி தேவியின் நாவல் புத்தகம் ஒன்னு வரும். (இப்போ வருதான்னு தெரியல.) அதுல எழுதுறதா சொல்லுற எல்லோரையும்.  
3.கவிஞர்
       பிடித்தவர் : வைரமுத்து. (அவரின் வைர வரிகளுக்காக.)
       பிடிக்காதவர்: வாலி  
4.இயக்குனர்
         பிடித்தவர் : மணிரத்னம், ராதா மோகன்
         பிடிக்காதவர்: சேரன்  
5.நடிகர்
        பிடித்தவர் : கமலஹாசன்
        பிடிக்காதவர்: பரத்
6.நடிகை
        பிடித்தவர் : பாவனா
        பிடிக்காதவர்: தமனா 
7.இசையமைப்பாளர்
       பிடித்தவர் : இளையராஜா
       பிடிக்காதவர்: தேவிஸ்ரீ பிரசாத்
8. நகைச்சுவை நடிகர்
     பிடித்தவர் : வடிவேலு
     பிடிக்காதவர்: வெண்ணிற ஆடை மூர்த்தி
9. வில்லன் நடிகர்
     பிடித்தவர் : ரகுவரன் (ஐயோ அவர் இப்போ இல்லையா....), பிரகாஷ் ராஜ்.
     பிடிக்காதவர்: ஆஷிஷ் வித்யார்த்தி. (உங்களுக்கு நடிப்பே வரல. இதுல வில்லத் தனம் வேறையா.... ஐயோ, ஐயோ...)  
அப்படியே நம்மையும் மதிச்சு விருது குடுத்த விதூஷ் வித்யாவிற்கு நன்றிகளும்.


 

28 comments:
அனைத்தும் நல்லாயிருக்கு.... (நானும் பின்னூட்டம் போட்டுட்டேன்)
பதில்கள் அனைத்தும் நல்லா இருக்கு அக்கா..
கோக்கு மாக்கான ரசனையாத்தான் இருக்கு
sub text interesting
ஆ... வடை போச்சே.... நான் உங்கள கூப்டலாம்னு இருந்தேன்.
எங்க வீட்டு நெட் + என் கண்ணாளன் செஞ்ச சதி. நேத்து போஸ்ட் போட முடியல.
சூப்பரா எழுதி இருக்கீங்க.
விதிகளுக்கு குடுத்த கமண்ட்ஸ் அசத்தல்.
//பிடிக்காதவர்: பரத்//
//பிடிக்காதவர்: தமனா//
Kanden Kaadhalai effect'a??
நீங்க சொன்ன பிடிச்சவங்க பிடிக்காதவங்க...
எல்லோரையும் எனக்கு பிடிக்கும்...சும்மா தமாஸ்
//2.எழுத்தாளர்
பிடித்தவர் : பாலகுமாரன். (பலருக்கும் பிடிக்காதவரெனினும் காதலை அவர் சொல்லும் அழகுக்காகப் பிடிக்கும்)//
கரெக்ட்டுங்க...
பதில்கள் கலக்கலா தான் இருக்கு..
எனக்கும் பரத் பிடிக்காது..;)
பல பிடிச்சவங்கள்ள ஒத்துப்போறொம். :)
:))
நன்றிங்க. சங்கிலியில் இணைத்ததற்கு.
ரசனைகள் எவ்வளோ வித்தியாசமா இருக்கு :)
ரசித்தேன்..
-வித்யா
சுட்டிக்கு நன்றி விக்னேஷ்வரி!
உங்கள் பதில்கள் அனைத்தும் அருமை!
பிடித்த பதிவர்?
//பிடிக்காதவர்: தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரும். //
மனசாட்சி இல்லாதவர்: விக்னேஷ்வரி
நன்றி சி.கருணாகரசு.
நன்றி அன்பு.
நீங்க சொன்னா சரிதான் நேசமித்திரன்.
வாங்க சுசி. நீங்க அவரை கேக் எல்லாம் செஞ்சு கொடுமைபடுத்தினா அவர் சதி பண்ணாம இருப்பாரா...
நன்றி சுசி.
இல்லை கார்ல்ஸ்பெர்க். இன்னும் படம் பார்க்கலை. இவங்க ரெண்டு பேரும் மத்த படங்களிலெல்லாம் அசத்திட்டாங்களாக்கும்....
வாங்க ஜெட்லி.
பாலகுமாரனோட 'இனிது இனிது காதல் இனிது' படிச்சிருக்கீங்களா வசந்த்....
நன்றி வினோத்கௌதம். ஐ, நீங்களும் என் கட்சியா...
எனக்கு அம்மிணியும் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்குமா...
நன்றி வித்யா.
வாங்க ராஜன். நன்றி. என்னால உங்க பதிவுகள்ல பின்னூட்டம் போட முடியல. ஏன்?
கண்டிப்பா நீங்க இல்லை கார்க்கி.
சீக்கிரம் நீங்க அரசியலுக்கு வாங்க சஞ்சய். எனக்குப் பிடிச்ச அரசியல்வாதியில உங்க பெயரைப் போட்டுக்குறேன்.
//பிடிக்காதவர்: சேரன்//
இத படிச்சார்னா, மறுபடியும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுடுவார்
சுருக்கமா.. சும்மா நச்சுன்னு இருக்கு விக்கி!!
http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_10.html
தொடரை தொடர்ந்தாச்சுங்கோ..
-வித்யா
now i correct it . u can leave me a comment..
//
பிடிக்காதவர்: சேரன்
//
:-)
//
பிடிக்காதவர்: பரத்
//
:-) அது சரி..
//
பிடிக்காதவர்: தமனா
//
இது ஏன்.. ஏதும் பொறாமையா அவங்கமேல..
//
பிடிக்காதவர்: வெண்ணிற ஆடை மூர்த்தி
//
ஆஹா.. இதை எதிர்பார்க்காவே இல்லை.. ஏன் இப்படி..
:) :)
என்ன கொடுமை இது! சஞ்சய் இன்னுமா அரசியலுக்கு வரலை?????அட்லீஸ்ட் நானாவது அரசியலில் இருக்கேனா விக்னேஷ்வ்வரியக்கா:-)))
அவரும் அழுது, நம்மளையும் அழ வைக்குறதுனால மட்டுமில்ல குறும்பன். வர வர கேனைத்தனமா படம் எடுக்கிறார். பார்க்க முடியல.
நன்றி கலையரசன்.
நன்றி வித்யா.
இப்போது பின்னூட்டமிட முடிகிறது ராஜன். நன்றி.
தமனாவைப் பார்த்து பொறாமைப்பட என்ன இருக்கு சுரேஷ்...
வாங்க ராஜி.
சஞ்சய் முழு நேர அரசியலில் வந்து அரசியல் தலைவராகட்டும் அபி அப்பா. நீங்க அரசியல்ல இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா, உங்களையெல்லாம் பிடிச்ச அரசியவாதியா சொல்ல முடியாதுப்பா. ;)
//பிடிக்காதவர்: சேரன்//
அட பாவமே..
பிடிச்சது எல்லாமே நல்லா இருக்கு..
என்னது தலைவி தமன்னாவை பிடிக்காதா? தமன்னாவை பிடிக்காத நபர் முதல் முறை பார்க்கிறேன். உங்க கூட நான் டூ விட்டு விட்டேன்
இனிது இனிது காதல் இனிது புத்தகம் இருந்தால் பார்க்கவும் அதில் மோகன் குமார் என்ற பெயரில் எனது கடிதம் மூணு பக்கத்துக்கு வந்திருக்கு. பாலா மேல் இருந்த மரியாதை நேரில் பார்த்தோன போய்டுச்சு. இது பற்றி ஒரு பதிவே எழுதலாம்
வர வர சேரன் பேசுறதெல்லாம் பினாத்தலா இருக்குங்க பிரசன்னா குமார்.
உங்களுக்கு தலைவியா தமனா.. இருக்கட்டும். உங்க ஹவுஸ் பாஸ் நம்பர் கொஞ்சம் சொல்லுங்க மோகன் சார்.
ஓ அப்படியா. என்னிடம் புத்தகம் இருக்கு. பாக்குறேன். மரியாதை போற அளவு என்னாச்சுங்க மோகன்
தமனா பிடிக்காதா? ஏன் உங்களை விட அழகு என்பதாலா? ( சும்மா ....)
பாலா குமரனை எனக்கும் மிகவும் பிடிக்கும்-நீங்கள் சொல்லும் அதே காரணத்திற்காக.
அன்புடன்
சூர்யா.
Post a Comment