Sunday, March 14, 2010

நிறம் மாறா மனிதர்கள் - 1

இந்தத் தொடர் இரத்த சம்பந்தமில்லாத என் உறவுகள்/நட்புகளைப் பற்றியது. நொடிக்கொரு தரம் பச்சோந்தியாய் மாறும் மனித உறவுகளுக்கிடையே எனக்குத் தெரிந்த நாள் முதல் இந்நொடி வரை மாறாத தூய அன்பு கொண்ட என் சுற்றங்களைப் பற்றியது.

இப்பதிவில் குருசாமி மாமா.


என் அம்மாவின் உடன் பிறவாத இவர் எனக்குத் தாய்மாமா. எனக்கு எப்போதிலிருந்து இவரைத் தெரியுமென்றால் அந்தக் கேள்விக்குப் பதிலில்லை. நான் பிறக்கும் முன்பே என் வீட்டுடன் நட்பு கொண்டிருந்தவர். அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் பிறந்தும், கவனிக்க/கொஞ்ச ஒரு குடும்பமே வாய்க்கப் பெற்றவள் நான். மாமாவின் அப்பாவிற்கு நான் ரொம்பச் செல்லமாம். என் சிறு வயதிலேயே அவர் இறந்து விட்டதால் எனக்கு நினைவில்லை. பாட்டியும் (மாமாவின் அம்மா), மாமாவும் தான் எனக்கு என் அம்மா, அப்பாவை விட அதிக செல்லம் கொடுத்தவர்கள். என் குடும்பத்தில் அம்மாவின் சொந்த சகோதரர்கள் 5 பேர், என்னை நடுவில் அமர வைத்து இதுல யாருடா உனக்குத் தாய்மாமாஎனும் போது அங்கில்லாத குருசாமிமாமாவைச் சொல்லி அவர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.

இவரை இத்தொடரில் நான் முதல் ஆளாக எழுதக் காரணமுண்டு. என் அம்மா அப்பாவை விட சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தவர், இப்போதும். சிறுவயதின் அனைத்து சேட்டைகளுக்கும் என்னை அனுமதித்தது இவர் தான். நான் நடக்க ஆரம்பிக்கும் முன் இந்தப் புள்ள நடக்குமாமா.. பேசுமாமா... எப்போம்மா...என மாமா அவர் அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருப்பாராம். என் கால்களைத் தடவிக் கொடுத்து என்னை நடக்க வைத்தது இவர் தான். இப்போதும் பெருமைப்பட்டுக் கொள்வார். பல மாலைகளில் மாமா வீட்டிலே நான் தூங்கிப் போவதுண்டு. அப்போதெல்லாம் எந்த அசைவுகளுமின்றி கண்ணாடி தூக்கிச் செல்லும் கவனத்தோடு என் வீட்டிற்குத் தூக்கிச் சென்று, படுக்கையில் இட்டு, நான் தூங்கும் போது எந்த சத்தமும் யாரையும் எழுப்ப விடாமல் பார்த்துக் கொண்டிருப்பாராம்.

தினமும் என்னைக் காட்டிற்குத் தூக்கிச் சென்று வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டே எழுத்துக்கள், சொற்கள் கற்றுக் கொடுத்தார். கிராமத்து பம்ப் செட்டில் குளிப்பாட்டி விட்டு அங்கிருந்து திரும்பி வீடு வரும் போது என் காலில் மண் ஒட்டிவிடாமலிருக்க சைக்கிளின் பெடலில் என் கால்களை வைத்து டக்கடிப்பதுஇல் ஆரம்பித்து நான் கற்றது தான் மிதிவண்டி. அப்போதும் ஏதேனும் பாடங்கள் சொல்லிக் கொண்டே வருவார். மாமாவின் லைஃப்பாய் சோப்பின் மணம் இப்போது நினைத்தாலும் என்னைக் கடந்து போகும் காற்றில் கலந்து செல்கிறது.

கிராமத்து வாசனையுடன் என் பெயரை அழைக்கும் ஒரே மனிதர். விக்கினேசுஎன மாமா அழைக்கும் போது வரும் சந்தோஷமே தனி. சிறு வயதில் பல முறை இவர் இப்படி அழைப்பதைக் கூறி அழுதிருக்கிறேன், என் பேர் விக்னேஷ்வரி. விக்னேஷ்ன்னு சொல்லுங்கஅப்படின்னு. ஆனால் இப்போது மாமாவால் அழைக்கப்படும் போது மட்டும் தான் என் பெயர் அழகாகத் தெரிகிறது.

பள்ளி செல்வதற்கு நான் தயாரான போது மாமாவின் கல்யாணப் பேச்சு ஆரம்பமானது. சுற்றியிருந்தோர் உங்க மாமாவுக்குக் கல்யாணம் ஆகப் போகுது. அப்புறமெல்லாம் இப்படி உன்னைத் தூக்கிக்கிட்டு சுத்த மாட்டான்என சொல்லிச் சிரித்த நேரங்களில் வெம்மையான நீர் கண்களை நிறைத்துக் கொள்ளும். மாமாவின் அம்மாவிடம், “பாட்டி, மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டா வர்ற அத்தை, என்னை மாமா கூட பம்ப் செட் போக விட மாட்டாங்களா?” எனக் கண்ணீர் பொங்கக் கேட்டு அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் வர்றவ அப்படி சொன்னா அவ அம்மா வீட்டுக்கே அனுப்பிருவேன்டா கண்ணு. நீ அழாதஎனப் பாட்டி சமாதானப்படுத்தியிருக்கிறார். அந்த வயதில் தோன்றிய அறிவாளித் தனமான ஐடியாவால் கொஞ்ச நாளைக்கு நானே எங்க மாமாவைக் கல்யாணம் பண்ணிப்பேன். அப்புறம் நானும் மாமாவும் பம்ப் செட் போவோம், காட்டுக்குப் போவோம், எல்லா இடத்துக்கும் சுத்துவோம்என சொல்லித் திரிந்திருக்கிறேன்.

எனக்கு 14 வயதிருக்கும் போது மாமாவுக்குத் திருமணமானது. அப்போது புதிதாய் வரப் போகும் அத்தையைக் காணும் ஆவல் மட்டுமே இருந்தது. கொஞ்சம் சிறுபிள்ளைத் தனம் குறைந்திருந்ததோ என்னவோ. மாமாவிற்குத் திருமணமான பின்பும் என் மீதான அன்பு மாறவில்லை. பள்ளி செல்லும் காலை அவசரத்தில் மாமா போயிட்டு வரேன்ன்னு கத்திக்கிட்டே ஓடும் போது இருடா கண்ணுஎனத் தன் பையிலிருந்து எவ்வளவு எனப் பாராமல் கையில் வந்த சில்லரைகளைக் கொடுத்தனுப்புவார். வேண்டாம் மாமா அப்பா திட்டுவாங்கஎன்றால் என் மருமகளுக்கு நான் செய்றேன், யார் என்ன சொல்றதுஎன்ற அவரின் உரிமை, அவர் மீதான அன்பை அதிகரிக்கும்.

பள்ளி நாட்களில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தால் நேராக மாமாவிடம் தான் ப்ராக்ரஸ் கார்டை நீட்டுவேன். அப்படியே மாமா வீட்டிலேயே புத்தக மூட்டையை வைத்து விட்டு நேரே ஹோட்டலுக்கு அழைத்து சென்று விடுவார். முதல் ரேங்க் எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரின் கற்பகம் (ஹோட்டல்) சோலா பூரியும், ஒரு டசன் வளையலும் எனக்குக் கிடைப்பது உறுதி. அம்மா, அப்பாவின் மீதான பாசமும், பயமும் பெற்றுத் தராத அந்த முதல் மதிப்பெண்ணை என்னைத் தொடர்ந்து பெற வைத்தது மாமாவின் அன்பும், சோலா பூரியும் தான்.

எதிர்பார்ப்பு, ஆதாயம், தன்னலம், சூது இவை எதுவுமில்லாத அதே தூய அன்பை 2 குழந்தைகளுக்குத் தகப்பனான பின்பும் மாமாவிடம் பார்க்க முடிகிறது. போன முறை ஊருக்கு சென்றிருந்த பொழுது என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “விக்கினேசு கண்ணு, உன்னை வயக்காட்டுக்கும், பம்பு செட்டுக்கும் கூட்டிட்டுப் போய் ஆனா, ஆவன்னா’ சொல்லிக் குடுத்து அடிப்படைக் கல்வி குடுத்ததால தான்டா இன்னிக்கு இவ்ளோ பெரிய உத்தியோகத்தில இருக்க”. ஒவ்வொரு முறையும் அவர் சொல்வது. அவரின் அன்பைப் பெற்ற கர்வத்தில் ஒரு சிரிப்புடன் ஆமா மாமா கண்டிப்பாஎன்பேன். வயதின் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் மாமாவிடம் அதே ஓட்டத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் நான் வந்தால் உடனே அவரின் ஸ்பெஷலான இஞ்சி டீ கொண்டு வந்து கொடுத்துக் குடிடா கண்ணுஎன்பார். இப்போ தான் மாமா காஃபி குடிச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சுக் குடிக்குறேன்என்றால் அதனால் வாடிப் போகும் அவர் முகம் பார்க்க சங்கடமாயிருக்கும். அதனால் டீயையும் குடித்து விடுவேன். மாமாவின் பாசத்தையும், அக்கறையும் விட வயிற்றுப் பிரச்சனை பெரிதா என்ன.

என் திருமணத்தின் போது என் அப்பாவைக் காட்டிலும் அதிக பிஸியாக இருந்தார் மாமா. நான் மறந்து விட்ட ஒரு பதற்ற கணத்தில் என்னவர் மாமா எங்கேஎனத் தேடி மணவறைலிருந்து இறங்கிச் சென்று சமையலறையிலிருந்த மாமாவை அழைத்து வந்து புகைப்படம் எடுக்க வைத்தார். 25 வருடங்களுக்கு முன்பிலிருந்து தொடரும் மாமாவின் அதே அன்பை இப்போது அத்தையிடமும் அவரின் குழந்தைகளிடமும் பார்க்கும் போது அதை விட சந்தோஷமும் நிம்மதியும் தரக் கூடியது வேறெதுவுமில்லை எனத் தோன்றும். மாமாவை டெல்லி அழைத்துக் கொண்டிருக்கிறேன், கொஞ்ச நாள் எங்களுடன் தங்கிப் போக. உன் குழந்தை வரட்டும்டா. அதுக்கு ஆனா, ஆவன்னாசொல்லித் தர வாரேன்என்கிறார். டெல்லில பம்ப்செட் இல்லையே மாமா என்றேன் ஒருவித மெல்லிய இழப்புடன்.

63 comments:

Anonymous said...

என்னுள் பல நினைவுகளை மீட்டெடுத்தது. லைபாய் சோப்பின் வாசம்... சூப்பர்ங்க....
எனக்கும் சில வாசங்கள் கடப்பதுண்டு அவப்போது பல நினைவுகளை சுமந்துக்கொண்டு...

நீண்ட நாடகளுக்கு பிறகு ஒரு கட்டுரையை பொறுமையாக உட்கார்ந்து படித்தேன்...
உங்கள் எழுத்துக்களிலும் பொறுமையிருந்தது...
வாழ்த்துக்கள்...

Madumitha said...

டெல்லில பம்ப் செட்
இல்லேன்னாலும்
ஷவர் இருக்குமில்ல?

Raghu said...

முத‌ல்ல‌ வ‌ழ‌க்க‌ம் போல‌ கிண்ட‌லாதான் ஏதாவ‌து பின்னூட்ட‌னும்னு நினைச்சேன் விக்கி. ஆனா முழுதும் ப‌டிச்ச‌ப்புற‌ம்....எல்லார்க்கும்.......வார்த்தையே வ‌ர‌லை. மாமாவை ரொம்ப‌ கேட்ட‌தா சொல்லுங்க‌ :)

கண்ணகி said...

இப்படி ஒரு மாமா எனக்கு இல்லயே என்று வருத்தமாக இருக்கிறது....

ப்ரியமுடன் வசந்த் said...

//அந்த வயதில் தோன்றிய அறிவாளித் தனமான ஐடியாவால் கொஞ்ச நாளைக்கு “நானே எங்க மாமாவைக் கல்யாணம் பண்ணிப்பேன். அப்புறம் நானும் மாமாவும் பம்ப் செட் போவோம், காட்டுக்குப் போவோம், எல்லா இடத்துக்கும் சுத்துவோம்” என சொல்லித் திரிந்திருக்கிறேன்.//

ஹா ஹா ஹா

நல்ல அழுத்தமான உறவின் பகிர்தல் நல்லாருக்கு விக்கினேசு..

Prabhu said...

touching ;)

விக்னேஷ்வரி said...

நன்றி இந்திராகிசரவணன்.

ஷவர்ல குளிக்க சைக்கிள்ல ஒரு கிலோ மீட்டர் போக வேண்டியிருக்காதே மதுமிதா.

நன்றி ரகு. கண்டிப்பா மாமாவைக் கேட்டதா சொல்றேன்.

எங்க வீட்டுக்கு வாங்க கண்ணகி. மாமாவை அறிமுகப்படுத்துறேன்.

நன்றி வசந்து.

நன்றி பப்பு.

Chitra said...

நான் மறந்து விட்ட ஒரு பதற்ற கணத்தில் என்னவர் “மாமா எங்கே” எனத் தேடி மணவறைலிருந்து இறங்கிச் சென்று சமையலறையிலிருந்த மாமாவை அழைத்து வந்து புகைப்படம் எடுக்க வைத்தார்


.......மிகுந்த அக்கறை கொண்ட மாமா, அன்பின் ஆழம் தெரிந்து பாராட்டும் கணவர் - உங்களுக்கு கிடைத்திருக்கும் உறவுகள் எல்லோரும் ஆசிர்வாதங்கள்.

Paleo God said...

அருமை..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

good post vikki

சுசி said...

நல்லாருக்கு விக்னேஷ்வரி..

அழுத்தமான எழுத்து..

மைக் முனுசாமி said...

நல்ல பதிவு. இது போன்ற உறவுகள் நமக்காக உயிரையும் கொடுக்கும், நமக்காகவே வாழும்... அவர் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நிலையுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

புலவன் புலிகேசி said...

இது போன்ற மனிதர்கள் நிறைய பேரை நானும் கடந்திருக்கிறேன்...

Anonymous said...

தாஜ்மஹால் பாக்க வரசொல்லுங்க மாமாவை.

நேசமித்ரன் said...

நல்லாருக்குங்க

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Hi விக்னேஷ்வரி,

I started reading you because of your name. My sister and you have the same name. :)

Lovely post.

-Mathy

Jerry Eshananda said...

ஞாபகத்தை கிளறி விட்டீர்கள்,........நாம் கடந்து வந்த...பால்யத்தை சுற்றி இப்படி..எத்தனை,இனிமையான ..உறவுகள்,தொடர்கிறோம் விக்கினேசு

மணிநரேன் said...

அன்பான மனிதரைப்பற்றிய அழகான பகிர்தல்...:)

ஜெய்லானி said...

கொடுத்து வைத்த ஆள்தான் நீங்க.

அன்பேசிவம் said...

ஆகா அடுத்த கிலுகிலுப்பைய எழுதனும் போல இருக்கே, வாழ்த்துக்கள்.விக்கி

பாபு said...

கொடுத்து வச்சிருக்கீங்க

கார்க்கிபவா said...

நல்லாருக்குங்க

_______________

/சுசி said...
நல்லாருக்கு விக்னேஷ்வரி..

அழுத்தமான எழுத்து//

அப்படின்னா என்னங்க? மூச்சி விடாம போட்டு அழுத்துமா? :)))

தாரணி பிரியா said...

அன்பான மாமா :) அவரை ரொம்ப கேட்டதா சொல்லுங்க.

Unknown said...

Hmmmm Inum marakkamal engalukum solliya ungalku nandri..

Namakku vudavi pannavangala Marakkam manam dhan Manithan..

தராசு said...

மாமா, ஒரு மா மனிதர் தான்.

Anonymous said...

தமிழர் கலாச்சாரத்தில் தாய்மாமனுக்கு கடமைகள் பலவுண்டு.

அவற்றை நன்றாகச் செய்திருக்கிறார் Mr குருசாமி.

எனினும், அவர் கடமையாகப்பார்க்காமல் செய்திருப்பதால், his memory can be cherished by you always.

(ரொம்ப பெர்சனாலாக பதிவு எழுதும் ஒரே பதிவர் இவராகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன்)

குட்டி said...

என்னதான் கனிணி உலகில் வாழ்ந்தாலும்,நம்முடைய உணர்வின் வலிதனை புரிந்த்து , நம்முள் மாற்றதினை கொனர்வது இது போன்ற தூய அன்புதான்.

வாழ்துக்கள்

☼ வெயிலான் said...

எழுத்தோடு உண்மையும், அன்பும், பாசமும் இழையும் போது தான் இது போன்ற சிறந்த பதிவுகள் அமைகிறது.

க.பாலாசி said...

மாம்ஸ்......நினைவுகள்... :-)

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)

Anonymous said...

Ms Mehar....!

Such research is going on in many univessities. However, it may be quite new in our side.

Whatever your research method, I hope, divisions will be one among many.

I mean, divide the bloggers into various categories:

Personal, Impersonal, political, literary, or plain drooling etc.
Divide them also, into men and women. Sub-divide women further:
Personal and impersonal. Sub-sub-divide personal into: Personal and intensely personal

Put at the top of the list 'intensely personal' this blogger Mrs Vigneswari.

In my view, her blogs may form the touchstone to derive certain conclusions. She may be, according to me, the archtypal female blogger, who puts to use blogging in certain directions.She is an interesting study for you.

For an example of how personal elements can be used to create social awareness, there are many bloggers, among whom the most interesting will be Jackie Sekar.

You are a woman. But dont be partial to female bloggers. Along the way in your reading of all bloggers, the conclusion will be crystal clear to you:

Male bloggers and female bloggers live in two different worlds. Although they may be writing on a same matter, they 'feel' differently.

..............................

(The above is an academic post. All others may pl ignore it.)

எம்.எம்.அப்துல்லா said...

வழக்கம்போல நக்கலா எதாவது பின்னூட்டம் போடலாம்னு நினைச்சேன் குறிப்பா “பள்ளி நாட்களில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தால்” இதைப் படிச்சப்ப. ஆனா படிச்சு முடிச்சதும் ஒன்னும் சொல்லத்தோணல.

மன்னார்குடி said...

கொடுத்துவைத்தவர் நீங்கள். எல்லோருக்கும் இந்த மாதிரி அற்புதமான உறவுகள் அமைவதில்லை. வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல உணர்வுப்பூர்வமான எழுத்து.. மாமாவுக்கு வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

அநேகமான பதிவுகள்ல வர்ற மாதிரி, சோக முடிவு வந்துடக்கூடாதேன்னு பிரார்த்திச்சுட்டே படிச்சேன். நிஜமா ரொம்ப சந்தோஷம் விக்னேஷ்வரி.

நாடோடி இலக்கியன் said...

சிறந்த பதிவு விக்னேஷ்வரி.

இதுவரையிலான உங்க பதிவில் இதுதான் தி பெஸ்ட்.

மாமாவை கேட்டதாகச் சொல்லவும்.

'பரிவை' சே.குமார் said...

உங்கள் முதல் தேர்வுக்கு தகுதியானவர்தான் மாமா. கிராமத்து வாசமும் பாசமும் நிறைந்த மனிதர். உங்கள் வரிகளில் நான் எனது கிராமத்திற்கே சென்று வந்தேன். அருமை. முதல் முறை உங்கள் தளம் வந்தேன். நல்ல பதிவு.

Unknown said...

மிக அருமையான பதிவு...என்னுள் பல நினைவுகைளை அசை போட வைக்கிறது...

*இயற்கை ராஜி* said...

arumai.... siru vayathu ninaivukal malarkirathu:-)

Raghu said...

200க்கு வாழ்த்துக்க‌ள் :)

சுசி said...

//
/சுசி said...
நல்லாருக்கு விக்னேஷ்வரி..

அழுத்தமான எழுத்து//

அப்படின்னா என்னங்க? மூச்சி விடாம போட்டு அழுத்துமா? :)))//

கார்க்கீஈஈஈஈஈஈஈஈஈ..

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

Thamira said...

என் 25 வயது வரை என் சின்ன தாத்தா என்று நான் நினைத்துக்கொண்டிருந்தது என் தாத்தாவின் தோழரை என்பது பின்னர்தான் தெரிந்தது. (ஒரு தகவலுக்காக மட்டும் சொல்கிறேன், அவர் எங்கள் ஜாதியைச்சேர்ந்தவரும் இல்லை)

நல்லதொரு பகிர்வு. இப்படிப் பல உறவுகள் நிறைந்ததுதான் வாழ்க்கை.

prince said...

நல்மனம் படைத்தவர்கள் புதையல் மாதிரி. கிடைப்பது அரிது. அந்த புதையலே உங்கள் அருகில் !!!!! ஆனால் சிலபேரால அதை உணரவோ மதிக்கவோ தெரியாது கையருகில் கிடைத்தால் கற்கண்டையும் கல்லாய் நினைப்பார்கள்...உங்கள் உயர்வுகளின் ஏணிப்படி... என்னுள்ளும் சில ஏக்கங்கள் காகித கப்பல்களாய்...என்று தணியுமோ

பனித்துளி சங்கர் said...

நல்ல பகிர்வு .
கடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மீண்டும் புதிப்பிக்கப்பட்டுள்ளது .

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமையான புனைவு . அதிக நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த பதிவு வாசித்த உணர்வு பகிர்வுக்கு நன்றி தோழி !

மீண்டும் வருவான் பனித்துளி !

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//அம்மா, அப்பாவின் மீதான பாசமும், பயமும் பெற்றுத் தராத அந்த முதல் மதிப்பெண்ணை என்னைத் தொடர்ந்து பெற வைத்தது மாமாவின் அன்பும், சோலா பூரியும் தான்.//

சிறுவயதில் எல்லோருக்கும் ஒரு குருசாமி மாமா இருந்திருப்பார்..வெவ்வேறு பெயரில், உறவு முறையில்... இதுபோல தட்டிக் கொடுக்க!
அழகான கவிதை வாசித்த திருப்தி! தொடரட்டும்!!!

விக்னேஷ்வரி said...

நன்றி சித்ரா.

நன்றி ஷங்கர்.

நன்றி முத்துலெட்சுமி.

நன்றி சுசி.

நன்றி மைக் முனுசாமி.

வாங்க புலிகேசி.

கூப்பிட்டுக்கிட்டே தான் இருக்கேன் அம்மிணி.

நன்றி நேசமித்திரன்.

நன்றி மதி கந்தசாமி அண்ணே.

நன்றி ஜெரி.

விக்னேஷ்வரி said...

நன்றி மணிநரேன்.

ஆமா ஜெய்லானி. நன்றி.

நன்றி முரளி. உங்க கிலுகிலுப்பைக்கு வெயிட்டிங்.

ஆமா பாபு. நன்றி.

நன்றி கார்க்கி. யாரையாச்சும் ஓட்டலைன்னா உங்களுக்குப் பொழுது போகாதா... பாவம் சுசி.

நன்றி தாரணி. அவசியம் சொல்கிறேன்.

நன்றி rock.

நன்றி தராசு.

நன்றி ஜோ. என் பெர்சனல் எழுத்து என் பெர்சனல் வாழ்வைப் பாதிக்காதவாறு எழுதுகிறேன்.

சரியா சொன்னீங்க குட்டி. நன்றி.

விக்னேஷ்வரி said...

நன்றி வெயிலான்.

வாங்க பாலாசி.

சரி மெஹர், உங்கள் கொஸ்டினரை அனுப்பி வையுங்கள். என்னாலான உதவியை நிச்சயம் செய்கிறேன்.

உங்கள் கருத்துகள் மெஹருக்குப் பயன்படும். நன்றி ஜோ.

வாங்க அப்துல்லா.

நன்றி மன்னார்குடி.

நன்றி உழவன்.

நன்றி ஹூஸைனம்மா.

நன்றி நாடோடி இலக்கியன். கண்டிப்பாக சொல்கிறேன்.

நன்றி சே.குமார்.

விக்னேஷ்வரி said...

நன்றி Han!F R!fay

நன்றி இயற்கை.

நன்றி ரகு.

நான் இருக்கேன் சுசி, உங்களுக்கு சப்போர்ட் பண்ண. :)

நன்றி PrinceR5.

நன்றி பனித்துளி சங்கர். இது புனைவல்ல.

ஆமா கவுதமன். நன்றி.

விக்னேஷ்வரி said...

ம், இது போன்ற உறவுகள் தான் வாழ்க்கையை அர்த்தமானதாக்கும் ஆதி. மகிழ்ச்சி.

ஸாரி, உங்க கமெண்ட்டை எப்படி விட்டேன்னு தெரில.

pichaikaaran said...

nice writing

Unknown said...

I enjoy your way of writing and presentation. Beautiful remembrance Vigneshwari…

CS. Mohan Kumar said...

உங்க வழக்கமான நடையில் இல்லாமல் இருந்த பதிவு. ரொம்ப நெகிழ்வாய் அருமையாய் இருந்தது. உண்மைக்கென்று தனி அழகு எப்போதும் உண்டு

அமிர்தவர்ஷினி அம்மா said...

great!!!!!!!

சைவகொத்துப்பரோட்டா said...

என் பால்ய கால நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள்.

மங்குனி அமைச்சர் said...

வரும் காலங்களில் "குருசாமி மாமா" வாக நாம் மாறுவோம் .

பனித்துளி சங்கர் said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

mvalarpirai said...

நல்ல பகிர்வு ! மகிழ்வா இருந்தது படிக்கும் போது !

Anonymous said...

எல்லாருக்கும் மறக்காமல் VOTE OF THANKS போடுற பதிவர் இவராகத்தான் இருக்கும் என்பதை மெஹர் குறித்துக்கொள்ள்லாம்.

(இதற்கு தனியாக ‘நன்றி’ சொல்லிடுவிங்களோ! ஆளை விட்டுடிங்க. எனக்கு வலைபின்னப்போகனும்)

விக்னேஷ்வரி said...

நன்றி பிச்சைக்காரன் (ஸாரிங்க இப்படி சொல்லக் கஷ்டமா தான் இருக்கு).

நன்றி கிருஷ்ணபிரபு.

நன்றி மோகன் குமார்.

நன்றி அமித்து அம்மா.

மகிழ்ச்சி சைவக் கொத்துபரோட்டா.

நல்லது மங்குனி.

ஹாஹாஹா... போட்டுட்டேன் சங்கர்.

நன்றி வளர்பிறை.

விக்னேஷ்வரி said...

கண்டிப்பாக உங்களுக்கும் என் நன்றி உரித்தாகும் ஜோ. மறுபடியும் மெஹருக்கு அடுத்ததாய் டிப்ஸ் கொடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சியே.

உங்களிடம் நான் கேட்க வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. உங்களுக்கு என்னிடம் என்ன பிரச்சனை? என் சமீபப் பதிவுகளிலெல்லாம் நீங்கள் எதிர்ப் பின்னூட்டமிடும் நோக்கமென்ன? பதிலுக்கு நானும் உங்களை எதிர்த்து ஏதாவது சொன்னால்/வாதிட்டால் அதை வைத்து ஒரு பதிவு ஒப்பேற்றிவிடும் எண்ணமா? என்னவாவோ இருந்துவிட்டுப் போகட்டும்.

இது என் தளம். இங்கு நான் என் கருத்துகளைப் பதிகிறேன். அதை மதித்துத் தங்கள் நேரத்தை ஒதுக்கி வாசித்துப் பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு சிரமமாக இருந்தால் எனக்குக் கவலையில்லை. நீங்கள் என் பக்கம் வராததால் எனக்குப் பின்னூட்டமிடாததால் நான் நிச்சயம் எவ்வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை. நீங்கள் தாராளமாக உங்கள் வலையைப் பின்னுங்கள். பலரும் எழுதுவது பொழுதுபோக்கிற்காக; ஆர்வத்தின் காரணமாக. இதிலும் குறை கண்டுபிடிக்கும் உங்கள் மனிதம் எனக்குப் புரிகிறது. இனி உங்கள் பின்னூட்டங்களை அனுமதித்தோ அதற்கு விளக்கமளித்தோ என் நேரத்தை வீணடிக்க மாட்டேன். நீங்களும் இங்கு வந்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

முத்துகுமரன் said...

அற்புதமான உறவுகள் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. உங்க குருசாமி மாமாவை நினைக்கும் போது எனக்கு என் அப்பாவின் ஞாபகம்தான் வருகிறது. என் அப்பாவின் கல்லூரி காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பு அது. ராஜப்பாமாமா - ஜெயா அத்தை இருவருக்குமே அப்பா அண்ணன்தான். இருவேறு மதங்களைச் சேர்ந்த அவர்களின் திருமணத்தை முன்னின்று நடத்தியது முதல் ஏறத்தாழ 35 ஆண்டுகாலமாக தொடரும் நட்பு அது. மாமாவின் இரு பெண் குழந்தைகளுக்கும் தாய்மாமனாக சபையில் அப்பாதான் சம்பந்தம் பேசினார். இன்றைக்கும் அவர்களுக்கு மாமா என்றால் அப்பாதான். சென்ற ஆண்டுதான் மாமாவிற்கு மணிவிழா நடந்தது. அதையும் அப்பாதான் நடத்தினார். அதில் குறிப்பிட வேண்டியது பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு இரவில் என்னுடன் பேசிக்கொண்டிருந்த போது நான் இல்லாவிட்டால் நீ முன்னின்று அதை நடத்த வேண்டும் என்றார். அப்பாவே அதையும் நடத்தி வைத்தது அளவில்லா மகிழ்ச்சி. தங்கமே விரும்பாத நான் போட்டிருக்கும் மோதிரமும், பிரேஸ்லெட்டும் இப்படியான இரு நட்புறவுகளின் அன்பின் அடையாளமாகவே என்னோடு உறவாடி வருகிறது...

ஆத்மார்த்தமான உறவுகளை மறுமுறை எண்ணி மகிழ வைத்த உங்களுக்கு நன்றி