Tuesday, March 9, 2010

உறைந்திருக்கும் வசந்தம்


எனது காதலையெல்லாம்
காகிதத்தின்
ஒற்றைப் பக்கத்தில்
கவிதையாக்க முயற்சித்த
காலங்கள்

பயணங்களின் போதும்
கைப்பிடித்து
தோள் சாய்ந்து உறங்கிய
பிரியாத நெருக்கங்கள்

பொய்யாய் எனக்கு வந்த
வயிற்று வலிக்கெல்லாம்
நீ எடுத்த விடுப்புகள்

அலுவல்கள் அதிகமென்றாலும்
தவறாமல் உன்னிடமிருந்து வந்த
அலைபேசி அழைப்புகள்

நீ கொடுத்த
பரிசுப் பொருட்களைச் சுற்றி வந்த
காகிதத்தைக் கூடக்
கசங்காமல் மடித்து வைத்து
சேமித்து வைத்த காலங்கள்

உன் பெயர்
எழுதியெழுதியே
மை தீர்ந்த பேனாக்கள்

எல்லாம் அடங்கிவிட்டன
இந்த ஐந்து வருடத் திருமண வாழ்வில்

உனக்கான அலுவல்களில் நீயும்
எனக்கான வேலைகளில் நானும்
மூழ்கிப் போய் விட்டாலும்
அமைதியாய் அழகாய்
ஆழப் பதிந்து விட்டது
உன் மீதான அன்பு மட்டும்!


நான் கிறுக்குறது பத்தாதுன்னு கிறுக்க ஆர்வமிருக்குற எல்லாரையும் ஊக்குவிச்சுட்டு இருக்கேன். ஆயிரம் பேரை மண்டை காய விட்டாத் தான் அரைக் கவிஞர் ஆக முடியும். (ப்ளாக் மொழி) மேலே உள்ள வரிகள் என் தோழியொருத்தியின் முயற்சி, உங்கள் கருத்துகளுக்காக இங்கே.

55 comments:

ராமலக்ஷ்மி said...

உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

//உனக்கான அலுவல்களில் நீயும்
எனக்கான வேலைகளில் நானும்
மூழ்கிப் போய் விட்டாலும்
அமைதியாய் அழகாய்
ஆழப் பதிந்து விட்டது
உன் மீதான அன்பு மட்டும்!//

இதுதானே வேண்டும். அருமை.

சிவாஜி சங்கர் said...

:) ரசித்தேன்

rad said...

Very Nice vikky..... Kodhai Kalakita... so sweeeeet dear

பனித்துளி சங்கர் said...

மென்மையான உணர்வுகள் . அழகாய் கவிதையாய் . அருமை . வாழ்த்துக்கள் !

தராசு said...

//என் தோழியொருத்தியின் முயற்சி//

அதான கேட்டேன்

எம்.எம்.அப்துல்லா said...

உண்மையிலேயே நல்லாருக்கு.

Vidhya Chandrasekaran said...

நிஜமாலுமே நல்லாருக்கு.. அப்புறம் தோழி பேர்ல நான் போட்டேன்னு சொன்னிங்கன்னா நல்லாவே இல்ல;)))

Anonymous said...

ஏன் பெண்கள் காதலைப்பற்றி மட்டுமே கவிதை புனைகிறார்கள்?

அன்புடன் நான் said...

உன் பெயர்
எழுதியெழுதியே
மை தீர்ந்த பேனாக்கள்///
யதார்த்தம்... மிக ரசித்தேன். பாராட்டுக்கள்.

மாதேவி said...

அன்பின் ஆழத்தை எடுத்துச் சொல்லும் கவிதை அருமை.

சைவகொத்துப்பரோட்டா said...

எனது வாழ்த்துக்களை உங்கள் தோழியிடம் கூறி விடுங்கள்.

Anbu said...

நல்லா இருக்கு அக்கா..

Unknown said...

தோழி விக்கிக்கு என் வாழ்த்துக்கள்......

..


..


..


.....

விக்கி தோழிக்கு என் வாழ்த்துக்கள்,

அட எப்படி படிச்சாலும் ஒரே மாதிரி அர்த்தம் வருதே?
!

விக்னேஷ்வரி said...

அவசியம் சொல்கிறேன் ராமலக்ஷ்மி. நன்றி.

நன்றி சிவாஜி சங்கர்.

தேங்க்ஸ் ராதா. அவ கிட்ட சொல்லிடுறேன்டா.

நன்றி பனித்துளி சங்கர்.

ஏங்க தராசு, நல்லாருக்கா...

நன்றி அப்துல்லா. தோழிகிட்ட சொல்லிட்டேன்.

விக்னேஷ்வரி said...

நன்றி வித்யா. பயப்படாதீங்க. தோழியோடது தான்.

தெரியலையே ஜோ. அவங்கவங்களுக்குப் பிடிக்குறதைத் தானே எழுத முடியும். காதல் தவிர மற்ற விஷயங்களை எழுதும் பெண்களை நீங்கள் இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன்.

நன்றி கருணாகரசு.

நன்றி மாதேவி.

அவசியம் தெரிவிக்கிறேன் சைவக் கொத்து பரோட்டா. என்னங்க பேர் உங்களுது...

நன்றி அன்பு.

நன்றி முரளி. ஒரே அர்த்தம் வரலைங்க. வேறு வேறு தான். :)

andal said...

nice

Chitra said...

தோழிக்கு பாராட்டுக்கள். உங்கள் ஊக்கப் பணிக்கும் பாராட்டுக்கள்.

அரங்கப்பெருமாள் said...

மிக நன்று...

//அலுவல்கள் அதிகமென்றாலும்
தவறாமல் உன்னிடமிருந்து வந்த
அலைபேசி அழைப்புகள்
//

ஆமாங்க... ரூ 7500 கிட்ட ஒருதடவை கட்டினேன்.

thiyaa said...

நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

Raghu said...

முத‌ல் அஞ்சு வ‌ரி ப‌டிக்கும்போதே நீங்க‌தான் எழுத‌னிங்க‌ளோன்னு நினைச்சேன்:)

//உனக்கான அலுவல்களில் நீயும்
எனக்கான வேலைகளில் நானும்
மூழ்கிப் போய் விட்டாலும்
அமைதியாய் அழகாய்
ஆழப் பதிந்து விட்டது
உன் மீதான அன்பு மட்டும்!//

இதை நீங்க‌ எழுத‌லைன்னு சொன்னா ந‌ம்ப‌வே முடிய‌ல‌, க‌விதை முழுவ‌தும் விக்கியிஸ‌ம் தெரியுது, தோழிக்கு வாழ்த்துக்க‌ள் சொல்லிடுங்க‌:)

Priya said...

உங்கள் தோழிக்கு பாராட்டுக்கள்.

கார்க்கிபவா said...

அட இங்கேயும் தோழி அப்டேட்ஸா???

அன்புடன் அருணா said...

தோழியை வலைப்பூ ஆரம்பிக்கச் சொல்லுங்கள்!அழகான க்விதை.

சுசி said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லாருக்குனு தோழி கிட்ட சொல்லிடுங்க விக்னேஷ்வரி.

பதிவிட்ட உங்களுக்கு நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

//எனது காதலையெல்லாம்
காகிதத்தின்
ஒற்றைப் பக்கத்தில்
கவிதையாக்க முயற்சித்த
காலங்கள்//

இரண்டுபக்கங்களிலும் எழுதினால் திருப்பி படிக்க வேண்டியிருக்கும் என்பதாலா?

அன்பு கூட அப்டித்தானேங்க பிச்சு பிச்சு காட்டாம ஒரேமூச்சுல தங்களோட முழு அன்பையும் காட்டணும்னு.....

நீ வேறையான்னு கேட்க்காதீக...

ரொம்ப நல்லா இருக்கு தோழிக்கு வாழ்த்துகள்....

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு தோழி!

தோழியின் தோழி,நன்றி!

Anonymous said...

தோழிகிட்ட நல்லா இருக்குன்னு சொல்லிடுட்ங்க

Jerry Eshananda said...

உங்க தோழியும் உங்களை மாதியே நல்லா கவிதை எழுதுறாங்கன்னு தெரியுது.

Prabhu said...

onnum solrathukilla... nama department ila..

லதானந்த் said...

தமிழிலே தற்குறிப்பேற்றணி என்ற ஒன்று இருக்கிறது.

vidivelli said...

உங்க தோழிக்கு வாழ்த்து சொல்லிடுங்க..........
சுப்பர்.....

புதிய அபிமானி.........
நம்ம பக்கமும் வாங்க........

Anonymous said...

//தெரியலையே ஜோ. அவங்கவங்களுக்குப் பிடிக்குறதைத் தானே எழுத முடியும். காதல் தவிர மற்ற விஷயங்களை எழுதும் பெண்களை நீங்கள் இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன்.
//

Why not you? Or, the friend to whom you have surrogated ur blog for poetry writing?

When the world does not shrink within two persons, why not look at others too and express ur feelings on them or their affairs, whatever they may be, if they strike you deeply? Shouldn't you be alive to the world outside too?

Write such poetry or encourage your friends to do that, cant u?

Males begin with love poems, and finish that when they cross their teens; they look outside. If at at males are found to be still longing for and writing for another female, they are considered to be a development between man and child! Or Child-man!

Here is a male who loved, but wrote differently:

TELL me not, sweet, I am unkind
That from nunnery
Of thy chaste breast and quiet mind,
To war and arms I fly.

True, a mew mistress now I chase,
The first foe in the field;
And with a stronger faith embrace
A sword, a horse, a shield.

Yet this inconstancy is such
As you too shall adore;
I could not love thee, dear, so much,
Loved I not honor more.

So, I suggest

Disentangle yourself from the grip of one man; he will never allow your mind grow! Your poetry will suffer and remain mere doggerals.

In my considered opinion, in human civilisation, men have found variety of ways to enslave women: one such is manipulating their minds through love-making. In the affairs of love, he emerges unscathed and begin to enjoy others things life offers. Women, alas, ends up cringing at his feet - through love poems! No reservations in poetry writing can help you, it is you who should help yourself!

E.B.Browning wrote many love poems to her real lover Browning. But Browning wrote just a few to her.

Today, it is the man who is remembered and read widely and appreciated - not for his love poems but for his all other poems.

BE REMEMBERED!

தேவன் மாயம் said...

என் வாழ்த்துக்களையும் உங்கள் தோழியிடம் கூறி விடுங்கள்.
நல்லா ஊக்குவிக்கிறீங்க!!!!

புளியங்குடி said...

நல்லது. நீங்க கவிஞர் ஆயிட்டீங்களா?

கண்ணகி said...

அழகான கவிதை...

தாரணி பிரியா said...

தோழி நல்லா எழுதறாங்க. அவங்களையும் ப்ளாக் ஆரம்பிக்க சொல்லுங்க‌

அஷீதா said...

உங்க தோழிக்கு வாழ்த்து சொல்லிடுங்க..........

ஜீவன்சிவம் said...

தோழியின் கவிதை அருமை. விரைவில் அவரும் ப்ளாக் ஆரம்பிக்கலாம்

Saminathan said...

அடக் கடவுளே..

வெள்ளிநிலா said...

@ அருணா மேடம்..
தோழியை வலைப்பூ ஆரம்பிக்கச் சொல்லுங்கள் - கிளிஞ்சது....! (கவிதையை சொல்லலே...)

அமிர்தவர்ஷினி அம்மா said...

தலைப்பை பார்த்தவுடன் உங்க கவிதைன்னு நினைச்சேன், கடைசிலதான் தெரிஞ்சுது.

இந்தக் கவிதை(யும்) நல்லாத்தான் இருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

மிக அருமை

ஸ்ரீவி சிவா said...

விக்கி, நல்லாயிருக்கு உங்க தோழியோட கவிதை...


//ஆயிரம் பேரை மண்டை காய விட்டாத் தான் அரைக் கவிஞர் ஆக முடியும்//
நிதர்சனமான வார்த்தைகள். கண்ணும் கருத்துமா இவ்வளவு நாளா நானும் அதைதான் பண்ணிட்டு இருக்குறேன்.

Nallavar said...

இந்த படத்துல இருக்கிறது தான் உங்க தோழி ங்கள? படம் நல்ல இருக்குங்க...

இராயர் said...

உங்களின் நண்பிக்கு வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

நன்றி ஆண்டாள்.

நன்றி சித்ரா.

நன்றி அரங்கப் பெருமாள்.

நன்றி தியா.

ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ரகு. அதுனால எழுத்தும் ஒரே மாதிரி இருக்கோ...

நன்றி ப்ரியா.

வாங்க கார்க்கி. இது தோழியின் அப்டேட்ஸ்.

சொல்லிடுவோம் அருணா. நன்றி.

சொல்லிடுறேன் சுசி. நன்றி.

வசந்த்... ஏன் இப்படியெல்லாம். நன்றி.

விக்னேஷ்வரி said...

நன்றி. பா.ரா.

சொல்லிடுறேன் அம்மிணி.

நன்றி ஜெரி.

நீங்க சின்னப் பையன்னு ஒத்துக்கிட்டா சரி பப்பு. :)

எனக்கு அந்த அளவுக்குத் தமிழ் தெரியாது லதானந்த்.

நன்றி விடிவெள்ளி. வரேனுங்க.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஜோ.

சொல்லிடுறேன் தேவன் மாயம். நன்றி.

நான் இல்லைங்க புளியங்குடி. என் தோழி.

நன்றி கண்ணகி.

விக்னேஷ்வரி said...

நன்றி தாரணி. சொல்லிடலாம்.

சொல்லிடுறேன் அஷீதா. நன்றி.

நன்றி ஜீவன் சிவம்.

என்னாச்சு பூந்தளிர்...

வாங்க ஷர்ஃபுதீன்.

தலைப்பு என்னோடது, கவிதை தோழியோடது அமித்து அம்மா. :)

நன்றி உழவன்.

நன்றி சிவா.

நன்றி நல்லவர்.

நன்றி இராயர் அமிர்தலிங்கம்.

rajasundararajan said...

மிக மென்மையானவை; வாசனையெனக் கசிந்து
கற்சுவர் கதவுத் தடை கடப்பவை;
மழையிறங்கித் தீண்டிய உள்ளாடை
உணர்வு எனத் தணுப்பவை;
கண்ணிமைநீர்த் தேங்கலென வெதுவெதுப்பவை;
கடுப்பில், கசப்பில் நீடவிடாமல் நம்மைக்
கனிவுக்குள் வீழ்த்துபவை ஆதலால்
படிக்கப் பிடிக்கிறதில்லை
பெண்பாற் கவிஞர்தம் கவிதைகள்!

Madumitha said...

கவிதை நன்று.
உங்கள் தோழிக்கும்
உஙகளுக்கும்
வாழ்த்துக்கள்.

Thamira said...

குட்.

Thamira said...

குட்.

எங்கே நெகடிவான முடிவாக இருக்குமோனு நினைச்சு வாசிச்சேன். :-)

prince said...

எதோ ஒரு கனவு மாதிரி இருக்கு இந்த காலத்தில இதெல்லாம் சாத்தியமா என்று தெரியல்ல ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு சொல்லுவாங்க . கவிதை அருமை இந்த கவிதையே நிஜ வாழ்விலும் இருந்தால். வேறென்ன வேண்டும்

Unknown said...

//உனக்கான அலுவல்களில் நீயும்
எனக்கான வேலைகளில் நானும்
மூழ்கிப் போய் விட்டாலும்
அமைதியாய் அழகாய்
ஆழப் பதிந்து விட்டது
உன் மீதான அன்பு மட்டும்!//

very nice really ur friend is experienced..then only she wrote like that..me too in the same stage....

commomeega said...

தோழி-இன் கவிதை அருமை.