Monday, January 18, 2010

அழகாவோம் பொண்ணுங்களே


வலையுலகின் புது முயற்சி இது. ஏதேதோ கிறுக்கி வந்த எனக்கு முதல் முறையாக துறைப் பதிவெழுதும் ஆர்வம். துறைப் பதிவுகள் அதிகம் எழுதப்பட்டு வந்தாலும் எனது துறை வித்தியாசமானது: எல்லோருக்கும் பிடித்தமானது; தேவையானதும் கூட. இந்தத் துறைப் பதிவிற்கு என்னை வழி நடத்தி கருத்தளித்து அனைவருக்கும் உபயோகமானதாக மாற்ற உங்களை என்னுடன் அழைக்கிறேன்.பெண்களுக்கான அவசியமான ஆடைக் குறிப்புகளுடன் இன்றைய பதிவைஆரம்பித்து, ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான அவசியமான விஷயங்களைப் பகிர்கிறேன்.

Fashion & Interior - இது தான் இந்த தொடர் பதிவில் அலசப் படப் போவது.உடனே பொண்ணுங்களுக்கான தொடர்ன்னு நினைச்சு ஓடும் ஆண்களே, ஒரு நிமிஷம். நீங்களும் உடுத்துறீங்க. ஒரு வீட்ல இருக்கீங்க. உங்களையும், உங்களின் இடத்தையும் அழகாக வைக்கும் யுத்திகள் உங்களுக்கும் தெரிந்திருக்கட்டும்.

இந்த வாரம் Fashion சார்ந்த சிறிய அறிமுகம் மட்டுமே.

ஆள் பாதி ஆடை பாதி என்பது எவ்வளவு உண்மையான விஷயம். எவ்வளவு சுமாரானவரையும் அழகாக்கும் ஆடைகள். எவ்வளவு அழகானவரையும் பொலிவிழக்கச் செய்பவையும் அவையே.

யாருக்கு எந்த மாதிரி ஆடைகள் அழகாக, சரியாக இருக்கும் என்பது பற்றிய பெண்களுக்கான டிப்ஸ் இங்கே.

பெண்களுக்கான முக்கியமான விஷயம் இந்த ஆடைகள். ஆண்களை விட பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை பல. ஏனெனில், அழகாய் இருக்கப் படைக்கப்பட்டவர்களே பெண்கள் என்பது என் கருத்து. அழகாக இருப்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விஷயமாகும். அது ஆடைகள் மூலம் சாத்தியமாவது மறுக்க முடியாதது.

* எப்போதும் பளிச்சென்ற நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். அவை உங்களை ரசனையானவரகவும் காட்டும்.


* ஆடைகளை சிக்கென அணியுங்கள். தளர்ச்சியான ஆடைகளைத் தவிர்த்தல் நல்லது.

* குள்ளமானவர்கள் நீளமான ஒல்லியான பேன்ட் அணியலாம்.அது உங்களின் உயரக் குறைபாட்டை மறைக்கும்.


* ஒரே நிற ஆடையாய் இல்லாமல் வண்ணங்கள் கலந்த மேலாடைகள் உங்களை உயரமாகவும் ஒல்லியாகவும் காண்பிக்கக் கூடியவை. ஆனால், கலந்திருக்கும் வண்ணங்கள் Monochromatic ஆக இருக்கட்டும்.

* நீளவாக்கில் டிசைன் செய்யப்பட்ட ஆடைகள் உங்களை ஒல்லியாகவும்,உயரமாகவும் காட்டும்.


* உயரமான, ஒல்லியானவர்கள் குறுக்கு வாக்கில் உள்ள டிசைன்களை அணிவது நல்லது. அது உங்களின் உயரத்தைக் குறைத்துக் காட்டக் கூடியது.


* அகன்ற கழுத்து கொண்ட ஆடைகள் பெண்களை ஒல்லியாகக் காட்டக்கூடியவை.

* நீளமான பாவாடைகளுடன் (Long skirts) டி-ஷர்ட் அணிவது உங்களை குண்டாகக் காட்டும். தவிர, நல்ல combination உம் இல்லை. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது. Long Skirt உடன் ஸ்லீவ்லெஸ் டாப் எடுப்பாகச் செல்லும்.


* எந்த ஆடை அணிந்தாலும் உங்கள் உள்ளாடைகள் வெளியில் தெரியா வண்ணம் அணியுங்கள். அது உங்களை விரசமாகக் காட்டாதிருக்கும்.

* கருப்பு நிற லிப்ஸ்டிக் தவிருங்கள்.

* பகல் நேரத்திற்கு அதிக மேக்கப் வேண்டாம். இயல்பான தோற்றம் நல்லது.

* உங்களிடம் இருக்கும் அனைத்து அணிகலன்களையும் ஒன்றாக எடுத்துப் போட வேண்டாம். உதாரணத்திற்கு எல்லா விரல்களிலும் மோதிரம் போடுவது அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சங்கிலிகள் அணிவதைத் தவிர்க்கலாம்.

* உங்கள் தோற்றத்தின் ப்ளஸ்ஸாக நீங்கள் நினைக்கும் விஷயம் தெரியும் விதமும், மைனசாக நினைக்கும் விஷயத்தை மறைக்கும் வகையிலும் ஆடைகளை உடுத்துங்கள்.

* அழகாகத் தெரிய வேண்டுமென்பதற்காக உங்களுக்கு சௌகரியமில்லாத ஆடைகளை அணிய வேண்டாம்.

* உங்கள் கால நிலைக்குத் தகுந்த உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.

* உங்கள் தலையலங்காரம் எப்போதும் உங்கள் உடைக்குப் பொருத்தமானதாக இருக்கட்டும்.

* வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் உடை உங்களின் ரசனையைக் காட்டுவதாகவும், உங்கள் மீதான மதிப்பைக் குறைக்கா வண்ணமும் இருக்கட்டும். தோள்கள், முதுகு, வயிற்றுப் பகுதிகளை முழுவதுமாக மறைப்பதாக இருக்கட்டும் உங்கள் ஆடைகள்.


* உங்களின் செருப்பு உங்கள் பாதம் முழுவதையும் உட்கொண்டிருக்கட்டும்.பெண்களின் ஆடை அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10பொருட்கள்.

- இளநிற பளிச்சென்ற ஒரு காட்டன் புடவை / சுடிதார்.

- சரியாக ஃபிட்டாகும் ப்ரான்டெட் ஜீன் (Branded Jean).

- 'V' கழுத்து டாப்.

- வெள்ளை மற்றும் பிரவுன் நிற பெல்ட்.- பட்டுப் புடவை அதற்கு ஒத்துப் போகும் அணிகலன்களுடன்.


- டிசைனர் புடவை அதற்கான அணிகலன்களுடன்.

- நெடியில்லாத பெர்ஃப்யூம்

- மேக்கப் கிட்.

- ஒரு வெள்ளை மற்றும் கருப்பு நிற உடை.

- குறைந்தது இரண்டு Hand Bgas.இதெல்லாம் முடியுமான்னு யோசிக்காதீங்க. கொஞ்சம் கொஞ்சமா உங்க மேல அக்கறை எடுக்க ஆரம்பிங்க. உங்களுக்கே பிடிக்கும். கலக்குங்க லேடீஸ்

நம்ம ஊர் ஆண்கள் தான் உலகத்திலே அழகான ஆண்மக்களாக நான் நினைப்பவர்கள். ஆணுக்கு அழகு அவர்களின் மாநிறமே. ஆனால், இவ்வளவு அழகான நம்மூர்ப் பசங்க அணியும் ஆடைகளைப் பார்த்தால் கோபமா வரும். ஏன்பா உங்களுக்கு ரசனையே இல்ல? உங்களுக்கான டிப்ஸ் அடுத்த பதிவில். கொஞ்சமாவது ஸ்மார்ட்டா இருங்க பசங்களா...


67 comments:

கார்க்கிபவா said...

//அழகாவோம் பொண்ணுங்களே//

எதுக்கு இதெல்லாம் எஙக்ளுக்கு? நாங்க எல்லாம் பார்ன் அழகனுங்க..

ஆனா பதிவு ரியலி டிஃப்ரெண்ட். குட் ஒர்க். வாழ்த்துகள்..

Prathap Kumar S. said...

//ஏன்பா உங்களுக்கு ரசனையே இல்ல?//
அவ்வ்வ்வ்வ்.

ஆண்கள் இயற்கையிலேயே அழகுங்க... எங்களுக்கு இதுக்கு மேலயுமே அழகு வேணும்...?

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதெல்லாம் முடியுமான்னு யோசிக்காதீங்க. கொஞ்சம் கொஞ்சமா உங்க மேல அக்கறை எடுக்க ஆரம்பிங்க. உங்களுக்கே பிடிக்கும். கலக்குங்க //

ரொம்பவும் வித்தியாசமா ஆனா கவரும் வகையில் பளிச்சுன்னு இருக்கு பதிவு.

தொடர வாழ்த்துக்கள்.

அன்பேசிவம் said...

ம்ம்.. புசுசா இருக்குங்க விக்கி, யாரும் எழுதுவதில்லைன்னு நினைக்கிறேன். தொடருங்கள். :-)

அண்ணாமலையான் said...

சரி வெய்ட் பன்னிக்கிட்டுருக்கேன்..

CS. Mohan Kumar said...

நல்ல டிப்ஸ். இப்படியாவது வாரம் ஒரு முறை எழுத போகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி

Raghu said...

//கருப்பு நிற லிப்ஸ்டிக் தவிருங்கள்//

க‌ருப்புல‌ கூட‌வா இருக்கு???

//ஆணுக்கு அழகு அவர்களின் மாநிறமே//

எல்லாரும் அஜித், அமிர்கான் க‌லர்ல‌ கேட்டா நாங்க‌ள்லாம் என்ன‌ ப‌ண்ற‌து... ந‌ல்ல‌வேள‌ நீங்க‌ளாவ‌து சொன்னீங்க‌ளே, தேங்க்ஸ்:)

என்ன‌தான் மாட‌ர்ன் டிர‌ஸ் போட்டு நிறைய‌ போட்டோ இருந்தாலும் அந்த‌ சேலை க‌ட்டுன‌ பொண்ணு இருக்கே, ஹி..ஹி..சூப்ப‌ருங்க‌:)

Vidhoosh said...

வாவ்... விக்கி (அப்டி கூப்பிடலாமா) நல்ல பதிவு. ஆனா, இதையே நானும் ஒன்னு எழுதிட்டு இருக்கேன்..பாவி!!!
சரி, அந்தப் பதிவுகளை உங்களுக்கு அனுப்புகிறேன். சேர்த்து பதிஞ்சுருங்க. ஒண்ணா இருக்கும் பாருங்க... :))
--வித்யா

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//ஆணுக்கு அழகு அவர்களின் மாநிறமே//
ரைட்டு!!!
"வில் ஸ்மித்" மாதிரி...
//உங்களுக்கான டிப்ஸ் அடுத்த பதிவில்//
எங்களுக்கு டிப்ஸ் வேண்டாங்க.

தராசு said...

//ஏனெனில், அழகாய் இருக்கப் படைக்கப்பட்டவர்களே பெண்கள் என்பது என் கருத்து//

நூறு சதவீத உண்மை. ஏனெனில் ஆண்கள் அறிவோடு இருக்க படைக்கப்பட்டவர்கள்.

//நெடியில்லாத பெர்ஃப்யூம்//

நெடி இல்லைன்னா அது பெர்ஃப்யூமா???

அப்பா, முடிஞ்ச வரைக்கும் கலாய்ச்சாச்சு.

வாழ்த்துக்கள் விக்கி, இன்னும் நிறைய எழுதுங்கள்.

Anonymous said...

Nice one Vicky

கார்க்கிபவா said...
This comment has been removed by the author.
Prabhu said...

கார்க்கி தான் குண்டா இருக்கிறது மட்டுமில்லாம கூட்டம் வேற சேர்க்க பாக்குறாரு.

அப்போ எங்கள மாதிரி ட்ரிம்மா இருக்கறவங்கள யாரு பார்க்கிறதாம்?

Anonymous said...

விக்கி கண்டிப்பா தொடர்ந்து எழுதுங்கள் :))

Unknown said...

நம்ம ஊர் ஆண்கள் தான் உலகத்திலே அழகான ஆண்மக்களாக நான் நினைப்பவர்கள். ஆணுக்கு அழகு அவர்களின் மாநிறமே.

ரிபீட்டு .....
ஆண்களுக்கு டிப்ஸ் போடும் போது ஒல்லியானவர்களை பெண்கள் அதிகம் விரும்புவதில்லை. சற்று பருமனான ஆண்களே அழகுன்னு ஒரு பிட்டு சேர்த்து போடுங்க..

ரிபீட்டு .....ரிபீட்டு .....

SK said...

நல்ல தொடர். இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள ஆசை. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.. :-)

sathishsangkavi.blogspot.com said...

டிப்ஸ் எல்லாம் சூப்பருங்கோ...
கொஞ்சம் குண்டான பொண்ணுங்களுக்கு சீக்கிரம் சொல்லுங்க...

creativemani said...

எப்போங்க அடுத்த பதிவு... ;)

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு. தொடருங்க. கலக்குங்க.

நேசமித்ரன் said...

திருத்தமான இடுகை . செய் நேர்த்தி என்பதை உங்கள் பதிவுகளில் தொடர்ந்து காண முடிகிறது

துறை சார் பதிவுகள் மலிந்து கிடக்கும் வலைவெளியில் இது ஒரு நல்ல துவக்கம். பயின்றதை பகிர்வதில் கொஞ்சம் சுவை சேர்த்து சொல்லியிருப்பது ஈர்ப்புக்கு உரியதாகிறது

தொடர்க !!!

Paleo God said...

கார்க்கி said...
ஆண்களுக்கு டிப்ஸ் போடும் போது ஒல்லியானவர்களை பெண்கள் அதிகம் விரும்புவதில்லை. சற்று பருமனான ஆண்களே அழகுன்னு ஒரு பிட்டு சேர்த்து போடுங்க..//

repeattuuuu ::))

எம்.எம்.அப்துல்லா said...

//உங்களுக்கான டிப்ஸ் அடுத்த பதிவில். கொஞ்சமாவது ஸ்மார்ட்டா இருங்க பசங்களா...

//


என் காஸ்ட்டியூம் எப்போதும் வெள்ளைச் சட்டை,கருப்பு பேண்ட்தான். நான் வேறு கலர் டிரெஸ் போட்டா அன்னைக்கு மழை வருது :)

Kumar said...

அருமையான பதிவு. அடுத்த பதிவு எப்போது?

ஹுஸைனம்மா said...

//"அழகாவோம் பொண்ணுங்களே"//

ஆனா பின்னூட்டியிருக்கிறதுல முக்காவாசி ஆண்கள்!!

ம்ம்ம்..புரியுது..டிப்ஸை அள்ளிவிட்டு பந்தா காட்டலாமே!!

விக்னேஷ்வரி said...

ஆமாமா, கழுதை கூட பொறக்கும் போது ரொம்ப அழகா இருக்குமாம் கார்க்கி. :)
நன்றிங்க.

அதைத் தான் பிரதாப் நானும் சொல்றேன். இயற்கையிலே அழகானவங்க ஆண்கள். ஆனா அதுக்கப்புறம் உங்க டிரெஸ்ஸிங்னால அதைக் கெடுத்துக்குறீங்க.

நன்றி அமித்து அம்மா.

நன்றி முரளி.

சீக்கிரமே போடுறேன் அண்ணாமலையான்.

நன்றி மோகன்.

எல்லா கலர்லயும் லிப்ஸ்டிக் இருக்குங்க குறும்பன்.
எப்படி எங்களுக்கு கறுப்புப் பசங்களைப் பிடிக்குதோ அப்படித் தான் உங்களுக்கும் புடவை கட்டின பொண்ணுங்க. :)

என்ன வித்யா. கூப்பிடவெல்லாம் அனுமதி கேக்கணுமா... உங்கள் எண்ணங்களை நீங்கள் பதியுங்கள். அங்கேயும் கும்மலாம். :)

விக்னேஷ்வரி said...

வில் ஸ்மித் மாதிரி இல்லைங்க பாலகுமாரன். நம்ம ஊர்ப் பசங்க மாதிரி.
அப்படியெல்லாம் வேண்டாம்னு சட்டு புட்டுன்னு சொல்லிட்டா, நான் என்ன பண்றது...

ஆண்கள் அறிவோடு இருக்க படைக்கப்பட்டவர்கள்.//
இப்படியெல்லாம் அறிவு இருக்குற மாதிரி காட்டிக்க படைக்கப்பட்டவர்கள். அங்கே என்ன வாழுதுன்னு தான் எங்களுக்குத் தெரியுமே.

நெடி இல்லைன்னா அது பெர்ஃப்யூமா??? //
நெடி இருந்தா அது ஆசிட். வாசனை இருந்தா தான் பெர்ஃப்யூம்

நன்றிங்க தராசு.

நன்றி அம்மிணி.

நீங்க குண்டுன்னு ஒத்துக்கிட்டா சரி தான் கார்க்கி. :)

கவலைப்படாதீங்க பப்பு. உங்களுக்காகவும் எழுதுறேன்.

நன்றி மயில். கண்டிப்பா.

நல்லா ரிப்பீட்டுறீங்க பேரரசன்.

சீக்கிரமே எழுதுறேன் SK

விக்னேஷ்வரி said...

நன்றிங்க. ஒன்னொன்னா எழுதுவோம் சங்கவி.

சீக்கிரமே மணிகண்டன்.

நன்றி வித்யா.

உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி நேசமித்திரன்.

நீங்களுமா பலா பட்டறை.

அப்போ கலர் டிரஸ் போட்டு, மேல ரெயின் கோட் போட்டுக்கோங்க அப்துல்லா.

நன்றி குமார். சீக்கிரமே.

எல்லார் வீட்டிலேயும் பெண்கள் இருக்காங்கல்ல ஹுசைனம்மா.

Chitra said...

நல்ல டிப்ஸ். அசத்துங்க.

Thenammai Lakshmanan said...

சுப்பர்ப் விக்னேஷ்வரி..

கலக்கு கலக்குனு கலக்கிட்டீங்க நல்ல உபயோகமுள்ள பதிவு

தாரணி பிரியா said...

நல்ல பதிவு தொடருங்க:) கலக்குங்க.

சுசி said...

ரொம்ப நல்ல பதிவும் முயற்சியும் விக்னேஷ்வரி.

ஆர்வம் யாருக்குன்னு பாத்தீங்களா.. அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க..

எம்.எம்.அப்துல்லா said...

//அப்போ கலர் டிரஸ் போட்டு, மேல ரெயின் கோட் போட்டுக்கோங்க அப்துல்லா

//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

Rajalakshmi Pakkirisamy said...

Good Start :) :) :) Continueeeeeeeeeeeee mam

ப்ரியமுடன் வசந்த் said...

இந்த துறைப்பதிவு நானும் எழுதிருக்கணும் பாழாப்போன கட் ஆஃப் மார்க்னால போயிந்தி அந்தோ நீங்க படிச்ச அதே காலேஜ்ல சேரமுடியாம போச்சு...! ஃபேசன் படிக்கிறது மிஸ்ஸானாலும் ஃபேசனா ட்ரெஸ் பண்றது நிப்பாட்டுறதில்லல அடுத்த போஸ்ட்டுக்கு வெயிட்டிங்...! எங்க உங்கள் சாகொதரிகளை காணோம் எல்ல்லாம் இதப்படிச்சுட்டு ட்ரெஸ்ஸ் எடுக்க கடைக்கு போயிட்டாங்களா?

எப்போ இண்டீரியர் டிசைனிங் போஸ்ட் போடப்போறீங்கோ? டூ வெயிட்டிங்
தொடர்ந்து அவசியம் எழுதுங்கம்மணி...

cheena (சீனா) said...

அன்பின் விக்னேஷ்வரி

பாஃஷன் டெக்னாலஜியா

நல்லாருக்கு படங்களும் கருத்துகளும்

பசங்களுக்கு வேற எழுதப் போறிங்களா

நல்வாழ்த்துகள் விக்னேஷ்வரி

நாஸியா said...

\\//"அழகாவோம் பொண்ணுங்களே"//

ஆனா பின்னூட்டியிருக்கிறதுல முக்காவாசி ஆண்கள்!!

ம்ம்ம்..புரியுது..டிப்ஸை அள்ளிவிட்டு பந்தா காட்டலாமே!!\\


ஹிஹி... ஆமால்ல..

நாஸியா said...

எனக்கு பல வருஷங்கள் முன்ன குமுதத்தில் நடிகர்களோட இமெயில் பத்தி ஒரு கற்பனை கட்டுரை மாதிரி போட்டுருந்தாங்க. அதுல பிரசாந்தோடது: கலர்ஃபுல்சட்டை@எங்கவாங்குனீங்கோ.காம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல தொடக்கம் விக்னேஷ்வரி தொடருங்கள்.... முதலிலேயே குள்ளமான ஒல்லியான ஆளுங்களுக்கு சொன்னதுக்கு தனி நன்றி.. :))

Anbu said...

\\\கொஞ்சமாவது ஸ்மார்ட்டா இருங்க பசங்களா...\\\


Raittu...

விக்னேஷ்வரி said...

நன்றி சித்ரா.

நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.

நன்றி தாரணி.

நன்றி சுசி.

டென்ஷன் ஆகக் கூடாது அப்துல்லா. டிசைனர் சொன்னா கேட்டுக்கணும். :)

நன்றி ராஜி.

விக்னேஷ்வரி said...

நன்றி வசந்த். படிச்சுத் தான் ஆகணுமா என்ன, ஆர்வத்தாலேயும் ஆகலாமே. ஆக்கிடுவோம்.

நன்றி சீனா சார்.

வாங்க நாஸியா.

வாங்க முத்தக்கா. நன்றி.

வாங்க அன்பு.

பாத்திமா ஜொஹ்ரா said...

???!!!!!

Raman Kutty said...

உண்மையாகவே ஒரு வித்தியாசமான பதிவு, இது மாதிரி கட்டுரைகள் வெகுஜன பத்திரிக்கைகளில் மட்டுமே வரும். வாழ்த்துக்கள் தங்களின் வித்தியாசமான் முயற்சிக்கு.வித்தியாசம் மட்டுமல்ல பயனுள்ளதும் கூட.. அப்படியே ஆண்களுக்கானதும், ஏனா, உங்கள் பார்வயில் தெரிந்து கொள்ள ஆவல்.

புளியங்குடி said...

இப்பதான் எல்லாமே புரியுது.

அபி அப்பா said...

ஆஹா கை பரபரங்குது விக்கி எதிர் பதிவு போட! வித் யுவர் பர்மிஷன் போட்டுடலாமா???

☼ வெயிலான் said...

துணிக்கடை வச்சிருக்கீங்களா?

துறைப்பதிவுனு சொன்னதால கேட்டேன் :)

"உழவன்" "Uzhavan" said...

//
கொஞ்சமாவது ஸ்மார்ட்டா இருங்க பசங்களா... //
 
அட.. இங்க பார்ரா

Vinitha said...

நல்ல பதிவு!

நீங்கள் ஈ.ஆர்.பி. தொழில் சாப்ட்வேர் பற்றியும் எழுதலாம். அதில் வீட்டிலிருந்தே என்ன படிக்க முடியும்?

கிருபாநந்தினி said...

அழகாவோம் பொண்ணுங்களே! நான் இதை ஒத்துக்கமாட்டேன். பொண்ணுங்கன்னாலே அழகானவங்கதான்! :)

Priya said...

//அழகாக இருப்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்//..100%,சோ,ஒரு தன்னம்பிக்கை தொடர் ஆரம்பமாயிருச்சி.

//நம்ம ஊர் ஆண்கள் தான் உலகத்திலே அழகான ஆண்மக்களாக நான் நினைப்பவர்கள்//.....

நானும் இப்படிதான் நினைக்குறேன், இந்த ஆண்களை மேலும் அழகாக்கியே தீருவோம்!

நசரேயன் said...

//கொஞ்சமாவது ஸ்மார்ட்டா இருங்க பசங்களா... //

வயசாகிப் போச்சி

Kitcha said...

Hai Friend...

Super... Super... Super...

Anonymous said...

நல்ல பதிவு தொடருங்க:) கலக்குங்க

வால்பையன் said...

:)

எல்லாத்தையும் பண்ணிட்டு கடைசியா ****** போட்டுக்கலைனா கடவுள் சொர்க்கத்துல இடம் தர மாட்டாராமே!?

வால்பையன் said...

@ பேரரசன்!

சந்து சாக்குல நீங்க ரொம்ப குண்டுன்னு பிட்டை போட்டுட்டு போயிட்டிங்களே!
ஆம்பளை எப்படி சிக்குன்னு இருக்கனும்னு என்னைய பார்த்து தெரிஞ்சிகோங்க!

Unknown said...

@வால்பையன்

என்னவோபோங்க....நான் குண்டா....?
நீங்க...

சிக்கா,,,,,?:))

கண்ணகி said...

அழகான படங்கள் விக்னேஸ்வரி...டிப்ஸ் தொடரட்டும்...

சாந்தி மாரியப்பன் said...

அழகுக்கு அழகு சேர்க்க டிப்ஸா..!!!

போட்டுத்தாக்குங்க விக்கி. :-)).

விக்னேஷ்வரி said...

என்ன குழப்பம் பாத்திமா?

மிக்க நன்றி ராமன்.

நன்றி புளியங்குடி.

நக்கலடிக்காம எதிர்ப் பதிவு போட்டா சரி தான் அபி அப்பா.

நான் ஃபேஷன் டிசைனிங் வெயிலான்.

வாங்க உழவன்.

நன்றி வினிதா. ERP பத்தி உங்களுக்கு மட்டும் வேணும்னா மெயில் எழுதுறேன்.

இன்னும் அழகாக்கத் தான் இந்தத் தொடர் நந்தினி. டென்ஷன் ஆகாதீங்க.

விக்னேஷ்வரி said...

தன்னம்பிக்கைத் தொடரா.... ஆஹா... ரைட்டு பிரியா. நீங்க சொன்னா சரி தான். என்ன பண்ண, ஆண்களை அழகாக்கினா தான் நாம பார்க்க முடியும் ;)

வயசானாலும் ஸ்மார்ட் ஆகலாம் நசரேயன்.

நன்றி கிட்சா.

நன்றி மஹா.

வாலு, இங்கேயும் உங்க வாலை ஆரம்பிச்சுட்டீங்களா... வேண்டாம்.:) சிக்குன்னா... அப்படின்னா????

பேரரசன் கவலைப்படாதீங்க. எல்லாம் இருக்குறது தான்.

நன்றி கண்ணகி.

நன்றி அமைதிச்சாரல்.

suvaiyaana suvai said...

interesting tips!!

Nithi... said...

Hmm Nalla oru idea... gud and thx

அழகாக இருப்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விஷயமாகும்.////

alakku yenbathu thannambikaikku sambantham iali..

விக்னேஷ்வரி said...

நன்றி சுவையான சுவை.

Unknown said...

இப்போதுதான் உங்கள் பதிவுகளைப் பார்க்க நேர்ந்த்து. மிகவும் அருமை.இனி நானும் உங்கள் Follower-களில் ஒருவன்

Unknown said...

இப்போதுதான் உங்கள் பதிவுகளைப் பார்க்க நேர்ந்த்து. மிகவும் அருமை.இனி நானும் உங்கள் Follower-களில் ஒருவன்

goma said...

vikki
அருமையான பதிவு....

தொடரட்டும் ...வாழ்த்துக்கள்

Bharathi Dhas said...

//ஏனெனில், அழகாய் இருக்கப் படைக்கப்பட்டவர்களே பெண்கள் என்பது என் கருத்து

இது ரொம்ப ஓவர்

// நானும் இப்படிதான் நினைக்குறேன், இந்த ஆண்களை மேலும் அழகாக்கியே தீருவோம்!

இது நல்லா இருக்குங்க.

// கமெண்ட் நம்ம அக்காவாச்சே