Thursday, January 14, 2010

லோடி கொண்டாடியாச்சு


இன்று லோடி (Lohri) தினம். பஞ்சாபிப் பொங்கல். கோதுமை அறுவடை நாள். இன்று மாலை நேரத்தில் வீட்டிற்கு முன் நெருப்பிட்டு அக்னி தேவனை வணங்கும் நாள். அக்னியை சுற்றி வந்து வணங்கி, கடலை, எள் மிட்டாய், எள்ளுருண்டை, பாப்கார்ன், முள்ளங்கி ஆகியவற்றை அக்னிக்குப் படைத்து நன்றி கூறும் நாள். திருமணமான பின் வரும் முதல் லோடியும், குழந்தைக்கு வரும் முதல் லோடியும் மிகச் சிறப்பு. நெருப்பை வணங்கிய பின் டோல் எனப்படும் இசைக்கருவியை ஒலித்து நெருப்பை சுற்றி முழுக் குடும்பமும் அமர்ந்து பேசி மகிழும் நன்னாள். லோடி பற்றிய நண்பர் செல்வேந்திரனின் விரிவான பதிவு இங்கே. எங்க வீட்டில் லோடி முடிஞ்சது.

லோடிக்குத் தயாராய் கடலை, முள்ளங்கி, பாப்கார்ன், எள்ளுருண்டை மற்றும் எள் மிட்டாய்.


குக்கர் பொங்கல் போல பால்கனியில் மண்தொட்டி லோடி (எங்கள் வீட்டில்)பக்கத்து வீட்டில் தயாராகும் லோடி


தீமூட்டத் தொடங்கும் ஆண்கள்


அதை சுற்றி வணங்கும் மொத்தக் குடும்பம்


பூஜை முடித்து இரவு உணவு வெல்ல சாதம் பாஸ்மதி அரிசியில். (கடைசியா நம்மூரு பொங்கலுக்கு வந்தாச்சா... )லோடி தினத்தன்று இந்தப் பாடலைப் பாடி பெரியவர்களிடமிருந்து சிறியவர்கள் பணம் வாங்குவது வழக்கம்.(பாட்டெல்லாம் பாடாம கால்ல விழுந்தே கலெக்ஷன் கரெக்ட் பண்ணிட்டோம்ல நாம)
தேரா கோன் விச்சாரா ஹோ
துல்லா பட்டி வாலா ஹோ
துல்லா தி தீ வ்யாயே ஹோ
சேர் ஷக்கர் பாயி ஹோ..........
எனத் தொடங்கி போகும் சிறுவர்களின் கலாய்க்கும் பாடல்.

நம்மூர்ப் பொங்கலுக்கு சிறிதும் குறைவில்லாமல் போகும் கலாட்டாக்கள். முழுப் பஞ்சாபியாய் மாறி விட்ட பின் பொங்கல் சாப்பிட முடியலைன்னு மட்டும் வருத்தப்பட முடியுமா.

காலையில் பொங்கலும், கையில் கரும்புமாக பொங்கல் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

32 comments:

தராசு said...

பொங்கல் வாழ்த்துக்கள்

Unknown said...

காலையில் பொங்கலும், கையில் கரும்புமாக பொங்கல் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.///

நன்றி, உங்களுக்கும் லோடி வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

இங்கே ஜெய்ப்பூரில் சங்க்ராந்தி...பட்டத் திருவிழா!

ராஜன் said...

உங்களுக்கும் லோடி வாழ்த்துக்கள்

Raja Manickam said...

Happy Lohri..

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

Paleo God said...

தரைகட”லோடி” திரவியம் தேடிய உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்..::))

Anonymous said...

பொங்கல் லோடி வாழ்த்துக்கள் :))

அன்புடன் நான் said...

லோடி இப்பத்தன் கேள்விப்படுகிறேன்.... உங்களுக்கு.... பொங்கல் போல கொண்டாடும் லோடி தின வாழ்த்திக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பால்கனி லோடி கூட அழகாத்தான் இருக்கு.. :)

Raghu said...

//முழுப் பஞ்சாபியாய் மாறி விட்ட பின் பொங்கல் சாப்பிட முடியலைன்னு மட்டும் வருத்தப்பட முடியுமா//

நோ நோ, நோ வ‌ருத்த‌ம்! டெல்லில‌ ச‌ர‌வ‌ண‌ ப‌வ‌ன் இருக்கே, அங்க‌ க‌ண்டிப்பா பொங்க‌ல் இருக்குமே, என்ன‌, அவ‌ங்க‌ குடுக்க‌ற‌ quantity, அமாவாசை-கிருத்திகைல‌ எங்க‌ம்மா காக்காக்கு வெக்க‌ற‌த‌விட‌ க‌ம்மியா இருக்கும், அவ்ளோதான்!

பொங்க‌ல் & லோடி தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்:)

SK said...

லோஹ்ரி வாழ்த்துக்கள். கரும்பு சாப்பிட்டு கொண்டாட்டம் போடறவங்களை நினைச்சு வருத்த படமா.. ஒண்ணுமே இல்லாம ஒக்காந்து வேலைக்கு வந்திட்டு பதிவை எல்லாம் படிச்சு பீலிங்க்ஸ் ஆப் இந்தியா ஆகிற கும்பலை பார்த்து சந்தோஷ படவும். :-)

நேசமித்ரன் said...

தைப்பொங்கல் மற்றும் லோடி தின வாழ்த்துகள்

கான்க்ரீட் லோடி
:)

அபி அப்பா said...

அவசரத்திலே லேடின்னு படிச்சுட்டேன் விக்கி:-))

லோடி & பொங்கல் வாழ்த்துக்கள்!!!

Priya said...

பொங்கல் மற்றும் லோடிதின வாழ்த்துகள்!!!

வினோத் கெளதம் said...

Happy Lohri..:)

angel said...

belated happy lohry and happy pongal

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

Unknown said...

பொங்கல்லோடி வாழ்த்துக்கள் விக்னேஷ்வரி.

பக்கத்து வீட்டுக்காரர் பாவம்..

M.S.R. கோபிநாத் said...

பொங்கல் வாழ்த்துக்கள் விக்னேஷ்வரி

butterfly Surya said...

பொங்கல் (லோடி) வாழ்த்துகள்.

நசரேயன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Rajalakshmi Pakkirisamy said...

லோடி தின வாழ்த்துகள்

Sakthi said...

happy pongal

சாந்தி மாரியப்பன் said...

பொங்கல்&லோடி வாழ்த்துக்கள் விக்னேஷ்வரி,

மண்தொட்டி லோடி சரி... பாங்க்டா டான்ஸ் இருந்திருந்தா இன்னும் ரசிக்கலாம்.

லதானந்த் said...

மத்த ஐட்டங்கள் எல்லாம் செரி. பச்ச முள்ளங்கிய அப்பிடியே திங்கறதுதான் நெம்பக் கஷ்டமா இருக்கும் சாமி.

விக்னேஷ்வரி said...

நன்றி தராசு. உங்களுக்கும் பொங்கல் ஆபிஸ்ல தான் போச்சா...

நன்றி முரளி.

ம், என்ஜாய் அருணா.

நன்றி ராஜன்.

நன்றி ராஜா.

நன்றி பலா பட்டறை.

நன்றி மயில்.

நன்றி கருணாகரசு.

நன்றி முத்துலெட்சுமி.

சரவண பவன் போய் பொங்கல் சாப்பிடுறதுக்கு நானே வீட்டுல செஞ்சு சாப்பிட்டுக்குவேன் குறும்பன். நன்றி.

நாமள்லாம் ஒரே கட்சி குமார்.

நன்றி நேசமித்திரன்.

அபி அப்பா, ஆரம்பிச்சுட்டீங்களா.... நன்றி.

விக்னேஷ்வரி said...

நன்றி ப்ரியா.

நன்றி வினோத் கௌதம்.

நன்றி Angel.

நன்றி அண்ணாமலையான்.

நன்றி சுசி. ஏங்க, பக்கத்து வீட்டுக்காரருக்கு என்ன?

நன்றி கோபிநாத்.

நன்றி சூர்யா.

நன்றி நசரேயன்.

நன்றி ராஜி.

நன்றி சக்தி.

நன்றி அமைதிச் சாரல். டோல் ஒலிக்கும் போது பாங்கடா இல்லாமலா... ஆடினோமே...

இங்கே எல்லாரும் அதை தினமும் சாப்பிடுறோம் லதானந்த்.

creativemani said...

இனிய பொங்கல் மற்றும் லோடி வாழ்த்துக்கள்.. தூம் பஞ்சாபி.. பஞ்சாபி.. தூம் பஞ்சாபி.. :)

*இயற்கை ராஜி* said...

லோடி வாழ்த்துக்கள் லேடி:-))

பா.ராஜாராம் said...

"எங்க ராசாத்தி" ன்னு நெட்டி முறிக்க தோணுது விக்னேஷ்!

இரண்டையும் கலந்த விதம்.

great!

Raman Kutty said...

லோடி (Lohri) spelling correcta??

பாட்டு ஹிந்தியா இருக்கே சப் டைட்டிலோட போடுங்க..

ஹுஸைனம்மா said...

ஒரு டிஃப்ஃபரண்டா இருக்கட்டுமேன்னு நீங்க பொங்கலும் சேத்துவச்சு லோதியைக் கொண்டாடியிருக்கலாமே?

பச்ச முள்ளங்கியை உப்புத் தொட்டு உஸ் உஸ்னு சின்ன வயசுல சாப்பிட்டது!!