Monday, May 4, 2009

Pizza Hutபோன வீகென்ட் சைனீஸ் சாப்பிடலாம்னு நொய்டாவின் பேமஸ் ரெஸ்டாரண்ட் பெர்கோஸ் போனோம். அங்கு சாப்பாடின் சுவை, உள்ளமைப்பு (Ambience) மற்றும் ட்ரிங்க்ஸ்க்காக எப்போதும் கூட்டம் உண்டு. நாங்கள் போனது ஞாயிறு டின்னருக்கு. அதனால் இடம் இல்லை. ஏற்கனவே இருபதுக்கும் மேலானோர் காத்துக் கிடக்கவே சைனீஸ் சாப்பிடலாம் என்ற எண்ணத்தை இட்டலியனாக மாற்றி, பீட்சா ஹட் போனோம்.


பீட்சா ஹட் வழக்கமான ரெஸ்டாரண்ட் தான் என்றாலும் இந்த முறை முயற்சித்தது கோல்டன் சர்ப்ரைஸ் (Golden Surprise). அங்கேயும் ஐந்து நிமிட காத்திருப்பிற்குப் பின்னரே டேபிள் கிடைத்தது. நியூ அரைவலான கோல்டன் சர்ப்ரைசில் இருந்த வெரைட்டிகளில் (Veggie Crunch, Veggie Lovers, Country Feast and Veggie Supreme) Veggie Supreme உம், ஆளுக்கொரு கோல்ட் டிரிங்கும் ஆர்டர் செய்தோம். முதலில் இது போதாது என நினைத்தாலும், சாப்பிட்டு விட்டு மீதி ஆர்டர் தரலாம் என 
நினைத்தால், இதுவே சாப்பிட முடியாத அளவுக்கு ஹெவியாக இருந்தது. (மேல இருக்குற பீட்ஸா ஹட் போட்டோ அட்டா மார்க்கெட், நொய்டா ல நைட் பத்து மணிக்கு எடுத்தது.)

இது நான் ஆர்டர் செய்த ஐஸ் டீ வித் வனிலா. ஸ்பெஷலா சொல்ல ஒண்ணும் இல்ல. ட்ரை பண்ணலாம்.

இது அவரின் மாங்கோ ட்ரிங்க். ரஸ்னா மாங்கோ ட்ரிங்க் மாதிரி இருக்குன்னார்.


இது நம்ம Veggie Supreme Golden Surprise Pizza.


Very Very Yummy. Don't miss it.


mm..... crunchy....


ஒரு பீட்ஸா, ரெண்டு கூல் ட்ரிங்க்ஸ் வித் டாக்ஸ் 563 ரூபாய் . ஆனா, இவ்வளவு டேஸ்டி பீட்சாவுக்கு இவ்வளவு செலவு செய்யலாம். இந்த Golden Surprise Pizza தாராளமா ரெண்டு அல்லது மூணு பேர் சாப்பிடலாம்.

சீக்கிரமே ஒரு நல்ல நார்த் இந்தியன் புட் பதிவும், சைனீஸ் பதிவும் வரப் போகுது. காத்திட்டிருங்க SK. ;)

20 comments:

வினோத் கெளதம் said...

ஒரே பொறாமையா இருக்குங்க நீங்க சாப்டுற Items நினைச்ச..:)

Vidhya Chandrasekaran said...

விக்னேஷ்வரி வாழ்க. எங்க அந்த SK?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அசத்துங்க.. :)

கார்க்கிபவா said...

லன்ச் டைம்ல இது தேவையா கார்க்கி??????

நான் போய் சாப்பிட்டு வரேன்

சந்தனமுல்லை said...

கலக்கல்! ஒரு சின்ன சந்தேகம்..கோல்ட் ட்ரிங்-ஆ இல்ல கூல் ட்ரிங்க்-ஆ..

SK said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

கூட்டணியா சேருறீங்க ரெண்டு பேரும். வெயிட் அண்ட் சீ. :) :) இதுக்கு எதிர் பதிவு நிச்சயம் வரும். :) :)

விக்னேஷ்வரி said...

பொறாமைப்படாதீங்க வினோத் கெளதம். நீங்களும் Pizza Hut பக்கம் ஒரு என்ட்ரி குடுத்துட்டு வாங்க. :)

SK வெல்லாம் கண்டுக்காதீங்க வித்யா. நாம சாப்பிடுவோம்; எழுதுவோம். அவர் பாவம், அவரா ஏதாவது சமைச்சு கருக வச்சு அதைப் பதிவா போடுவார். ;)

வாங்க முத்துலெட்சுமி அக்கா.

விக்னேஷ்வரி said...

நான் போய் சாப்பிட்டு வரேன் //

எங்க பீட்ஸா ஹட்டுக்கா கார்க்கி.

கோல்ட் ட்ரிங்-ஆ இல்ல கூல் ட்ரிங்க்-ஆ.. //

இங்கே cold drink னு தான் சொல்வோம் முல்லை.

இதுக்கு எதிர் பதிவு நிச்சயம் வரும். :) :) //

எங்க கிட்டயே சமையல் குறிப்பு வாங்கி, சமைச்சு, உங்க கிச்சனையே நாறடிச்சு அதை Pizza Hut க்கு எதிர்ப் பதிவா எழுதப் போறீங்களா.... ஏன் SK காமெடி பண்றீங்க. ;)

லதானந்த் said...

மேங்கோ ட்ரிங்கில ரெண்டு ஸ்ட்ரா இருகுற மாதிரி தெரியுது. சரிதானே?

விக்னேஷ்வரி said...

இல்லிங்க லதானந்த் சார். ஒன்னு ஸ்டிர்ரெர், இன்னொன்னு ஸ்ட்ரா :)

எம்.எம்.அப்துல்லா said...

ரெஸ்டாரண்ட் நல்லாயிருக்கும் போல!!!

சரி நான் டெல்லி வர்றப்ப அங்கேயே கூட்டிட்டு போய்ருங்க :))

லதானந்த் said...

எப்பமாச்சும் ரண்டு ஸ்ட்ரா யூஸ் பண்ணிப் பாருங்க!

லதானந்த் said...

கோவையில் இளம் தம்பதிகள் ஒரே இளனியில் ஒரே சமயத்தில் இரண்டு ஸ்ட்ரா யூஸ் பண்ணியதைப் பார்த்தன் விளைவே எனதுமுந்தைய பதிவு!

லதானந்த் said...

இந்தப் பதிவைப் பாருங்க ஒங்களை மென்ஷன் பண்ணியிருக்கேன்
http://blogintamil.blogspot.com/2009/05/blog-post_6967.html

Sanjai Gandhi said...

பீட்சா என்ன எவரெஸ்ட் சிகரமா? கொடி எல்லாம் நட்டு இருக்காங்க? :))

pizza வை ஏன் பீட்ஸான்னு சொல்றாங்க? அது பிஸ்ஸா இல்லையா? :(

selventhiran said...

நான் உன்னைத் தேடி வரும் அரிய பொழுதுகளிலெல்லாம் உதைத்துத் துரத்துகிறாய்.

விக்னேஷ்வரி said...

பிட்ஸா ஹட் சென்னைலயும் இருக்கு அப்துல்லா. இது ட்ரை பண்றதுக்காக நீங்க டெல்லி வர வேணாம். ;)

ஒரு க்ளாஸ்ல ரெண்டு ஸ்ட்ரா போட்டுக் குடிக்குறதெல்லாம் கோவை பேஷனா இருக்கலாம் லதானந்த் சார். இங்கே அப்படி குடிச்சா ரெண்டு கூல் ட்ரிங்க் வாங்க காசு இல்லையானு கேப்பாங்க.

உங்க பதிவைப் பார்த்தேன் லதானந்த் சார். நன்றி. அப்படியே நீங்க குறிப்பிட்ட மேல் தட்டு வர்க்க சாயல் என்னனு சொன்னீங்கன்னா திருத்திக்கறேன்.

ஏதோ ஸ்பெஷல் பீட்சாவாம்ங்க. அதான் கொடியெல்லாம். பிஸ்ஸா இல்லைங்க அதோட pronunciation பீட்ஸா தான்னு எனக்கு கிளாஸ் எடுத்த மேடம் சொல்லிக் குடுத்தாங்க சஞ்சய் காந்தி.

விக்னேஷ்வரி said...

சாரி செல்வா நீ கேட்ட டீடைல்ஸ் என்னால குடுக்க முடியல. சீக்கிரமே தர்றேன். கோவிச்சுக்காதப்பா.

Nithi... said...

Pizza Hut
Super

விக்னேஷ்வரி said...

Thanks Nithi