Friday, April 17, 2009

Chandni Chowk


என்னவரும் நானும் ஒரே ஆபிசில் வேலை செய்கிறோம். காலையும், மாலையும் சேர்ந்து வருவது வழக்கம். போன வாரம் அவர் ஆபிசில் மீட்டிங் முடிந்து ஒன்பது மணிக்கு தான் கிளம்பினார். ஏழு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விட்டது. கிளம்பி போகலாம் என்றால், இங்கு ஆட்டோகாரன் போகும் விதத்தை நினைத்தாலே, போக பிடிக்காது. ஆட்டோ, மேலும் கீழும் குலுங்கிச் செல்லும். நொய்டா ரோடு அப்படி. வேறு வழியின்றி, எட்டு மணி வரை கொஞ்சம் வேலைகளை முடித்து விட்டு, காத்திருந்தேன். பசி காதை அடைக்க, கோபம் வந்து விட்டது. பேசாமல் கண்களை மூடி உட்கார்ந்து விட்டேன். அவர் வந்து "Sorry dear, ரொம்ப லேட் ஆகிடுச்சா" ன்னார். வந்த கோபத்தை அப்படியே சிரித்து சமாளித்து, "No Problem, இன்னிக்கு டின்னர் வெளில" என்றேன்.

டெல்லியில் குறைந்தது டின்னருக்கு 500 ரூபாய் செலவாகும். சரி எனக் கிளம்பி, Pizza Hut போகலாம் என்றவரை, Domino's போகலாம் என நான் சொல்ல, Shopprix Mall இல் உள்ள Domino's போனோம். இது வரை அவ்வளவு மோசமான பிட்சாவை நான் என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. ஓரங்கள் உலர்ந்து, பார்க்க ஒரு அப்பீலே இல்லாமல் இருந்தது. இருந்த பசியில் ஒன்றும் சொல்லாமல், சாப்பிட்டாச்சு. அறுநூறு ரூபாய் பில் வேறு. வெளியே வந்தவர் என்னைப் பார்த்து, "தன்வி, நல்ல பிட்சா சாப்பிடனும். சீக்கிரமே பிட்சா ஹட் போகலாம்" என்றார். என்ன சொல்ல எனத் தெரியாமல் "ஈ ஈ...." என்றேன். அப்புறம் சொன்னார், "இனிமே ஆபிசிலிருந்து ஏழு மணிக்கே கிளம்பிடலாம். ஒவ்வொரு தடவை லேட் ஆகும் போதும் என்னால இவ்வளவு செலவு பண்ண முடியாது" என்றார். நம்ம ஐடியா வொர்க் அவுட் ஆனதில் அநேக குஷி. (சில நேரங்களில் விவேகம் முக்கியம். விக்கி, புரிஞ்சிக்கிட்ட) **************************************************

இப்போதெல்லாம் ஆபிசில் வேலை பார்க்கவே பிடிக்கவில்லை. எப்போதும் ஏதாவது ப்ளாக்களை மேய்ந்து கொண்டோ அல்லது சமையல் ரெசிபிகளை தேடியோ பொழுதைக் களிக்கிறேன். இப்படியாக படித்த ரெசிபிகளைக் கொண்டு போன வாரம் முழுக்க சமைக்க, என்னவருக்கு பயங்கர சந்தோசம். "இவ்ளோ நாள் இந்த திறமை எல்லாம் எங்க போச்சு" எனப் புகழும் அளவுக்கு ஆகி விட்டது. வெளிநாட்டில் ரெஸ்டாரண்ட் வைத்து நடத்தும் நண்பர் சத்யாவிடம் இதை சொல்லிக் கொண்டிருந்த பொழுது சொன்னார், " The main ingredient of food is love" இது தான் அவர் ரெஸ்டாரண்டின் தாரக மந்திரமாம். நல்ல விஷயம் தான். இது போல் எல்லோரும் நினைத்தால், கஸ்டமர்ஸ் பெருகுவார்கள். (இப்படியே சொல்லிகிட்டே சாப்பாடுல வேண்டியதை போட மறந்துடாதீங்க மக்கா)
**************************************************




ரெண்டு வாரம் முன்னாடி, சாந்தினி சோக் ஷாப்பிங் போயிருந்தோம். நொய்டாவிலிருந்து டூ வீலரில் அரை மணி நேரத்தில் ரெட் போர்ட் போயாச்சு. அங்கே இருந்து அரை கிலோமீட்டர் இருக்கும் மார்க்கெட் போக ஒரு மணி நேரம் முழுதாய் ஆனது. அவ்வளவு டிராபிக் ஜாம். வார நாள், விடுமுறை நாள் என பாராபட்சமின்றி எல்லா நாளும் கூட்டம் இருக்கும் இடம் சாந்தினி சோக். எனக்குத் தெரிந்து இந்தியாவின் மிகப் பெரிய ஹோல் சேல் மார்க்கெட். அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. அங்கு ஷாப்பிங் செல்ல ஒரு முழு நாள் வேண்டும். டெல்லி மார்கெட்களில் சாந்தினி சோக் என்னுடைய ஒன் ஆப் த பேவரிட்ஸ். ஒரு சமோசா, ஒரு கச்சோரி, ஒரு கிளாஸ் ரப்டி பலூடா, முடிந்தது லஞ்ச். முடித்து விட்டு, ஷாப்பிங் ஆரம்பித்தோம். எட்டு சல்வார் மட்டீரியல். ஒரு மின்ட் பிளாங்கெட், ரெண்டு ஸ்டோல் என சூப்பெர் ஷாப்பிங். நீங்க எப்போ டெல்லி வந்தாலும் சாந்தினி சோக் ஷாப்பிங் மிஸ் பண்ணிடாதீங்க. (ரெட் போர்ட் பார்த்திட்டு, அப்படியே ஷாப்பிங் போயிட்டு வர ஒரு நாள் வேணும்)
**************************************************
எல்லா இடத்திலேயும் எலெக்ஷன் பத்தி பேச்சு. காலைல நியூஸ் பேப்பெர்ல எலெக்ஷன் பத்தி செய்தி. வெளில போனா பெரிய பெரிய கட் அவுட், போஸ்டர்ல அத்வானி சிரிக்குறாரு. டிவில பிரச்சாரம். எப்போ தான் இது முடியுமோன்னு இருக்கு. இந்த அத்வானி, மன்மோகன் சிங், கருணாநிதி, ஜெயலலிதா, ஷீலா தீக்ஷித் இன்னும் பல கிளடுங்கல்லாம் எப்போ தான் ரிட்டயர்ட் வாங்கிப் போவாங்களோ. இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம இவங்க தொல்லையெல்லாம் தாங்கி ஆகணுமோ. யாராவது இளைஞர்கள் முன்னால வந்தா, கொஞ்சம் நல்லா இருக்கும். சினிமால காமிக்குற ஹீரோ மாதிரி, நிஜத்துல யார் வரப் போறா. இப்படியே நாம காலம் காலத்துக்கும் புலம்ப வேண்டியது தான். (இந்திய சினிமா பார்த்து ரொம்ப தான் கேட்டுப் போய்ட்டேனோ)
**************************************************


போன வாரம் மட்டும் நாலு சினிமா பார்த்தாச்சு. Diamonds are forever, Forrest Gump, Just My Luck and Hancock. இதுல Diamonds are forever பத்தி நான் எதுவும் சொல்ல வேணாம். 70 களில் வந்த James Bond படம். சூப்பர்.

Forrest Gump - பிதாமகன் விக்ரம் நடிப்பை மிஞ்சிட்டார், Tom Hanks. ச்சே, என்ன கதை, என்ன நடிப்பு. பிரமாதம். 3 Golden Globe Awards உம், 6 Academic Awards (OSCAR) உம் வாங்கிருக்குற படம். கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.

Just my luck - Okay kind of a movie. எப்போதும் குட் லக் உடைய ஹீரோயினும், பேட் லக்குடைய ஹீரோவும் முதல் முத்தத்தில் தங்கள் லக் மாற, தொடர்ந்து தங்கள் லக்கைத் தக்க வைக்க என்ன செய்கிறார்கள் என்பது தான் கதை. பார்க்கலாம்.

Hancock - 2008 இல் வெளிவந்த Will Smith படம். கேனைத்தனமான படம். இதைத் தவிர இந்த படத்தைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. (படம் பார்க்க நேரமே இல்லை என்றாலும் எப்படியாவது வாரத்திற்கு குறைந்தது மூன்று படங்கள் பார்த்து விடும் கப்பிள் நாங்கள்)

27 comments:

Vijayashankar said...

நல்லா எழுதுறீங்க. உங்கள் பெயர் காரணம்?

விக்னேஷ்வரி said...

நன்றி விஜய். எந்த பெயர்க் காரணம்?

Vijayashankar said...

விக்னேஷ்வரி! Why Khanna?

Your email intex@gmail.com bounced.

விக்னேஷ்வரி said...

Khanna is my husband's name.
My e-mail id is sv.intex@gmail.com

cupidbuddha said...

தோழி விக்கிக்கு.....

உங்கள் பதிவுகள் படித்தேன்......... ஒரு அழகிய ,இனிமையான குழந்தை ஒன்றின் டைரியை அதற்க்கு தெரியாமல் படித்த சுகம் உணர்ந்தேன்.

ப்ளாக் படிக்கும் வழக்கம் குறைவு என்றாலும் படித்த அனைத்திலும் ஏதோ ஒன்றினை,ஏதோ ஒரு கருத்தை எப்படியாவது படிப்பவருக்குள் திணித்து விட வேண்டும் என்ற அதீத ஆர்வத்திலும்,ஆசிரிய மனோபாவத்திலும் எழுதுக்கொண்டு இருக்கும் அனேக ப்ளாகர்கள் மத்தியில் உங்கள் ப்ளாக்கின் அழகு அதன் எளிமை மற்றும் எதையும் வலியுறுத்தாத தன்மை.

ரத்தக்களறியுடன் காணக்கிடைக்கும் பல படங்களுக்கு மத்தியில் மஹேந்திரன் படம் பார்த்த உணர்வு

விக்னேஷ்வரி said...

மிக்க நன்றி சத்யா.

Vidhya Chandrasekaran said...

ஹே நீங்களும் foodie:)
சின்ன அட்வைஸ் எக்காரணம் கொண்டும் இனிமேல் டோமினோஸ் போகாதீங்க. they r the worst. பிட்ஸா ஹட் தான் பெட்டர். அங்க authentic italian எதாவது இருந்தா ட்ரை பண்ணுங்க. அப்புறம் பிட்ஸா ஹட்டே மோசம்னு சொல்வீங்க:)

விக்னேஷ்வரி said...

கண்டிப்பா, சாப்பாடு விஷயத்துல நம்மல்லாம் ஒண்ணு தான் வித்யா.
ஐயோ, இனி டாமினோஸ் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேன். நான் எப்போவும் போறது பீட்ஸா ஹட் தான். ஒரு தடவை கோயம்புத்தூர்ல டாமினோஸ் ட்ரை பண்ணேன். ஓகேவா தான் இருந்தது. ஆனா, இங்கே மோசம்.
கண்டிப்பா வித்யா, சீக்கிரமே நல்ல இட்டாலியன் தேடி போறேன்.

Vijayashankar said...

பெங்களூர் டாமினோசில் பீட்சா சாபிட்டோம். ஜூன் 1999 . கொடுமை! அரை வேக்காடு. பாதி வேஸ்டு. பீட்சா ஹட் தான் பெஸ்டு. ரெடிங் (பென்சில்வேனியாவில்) எனக்கு பிடித்து "பாப்பா ஜான்ஸ்". அப்புறம் ஒபாமாவிற்கு பிடித்த செயின்ட் லூயி "பை" பீட்சா.

பன்னிரண்டு மையில்கள் டிரைவ் செய்து, ஹாரிஸ்பர்க் சென்று வெள்ளி மதியம் பீட்சா ஹட் பப்பே ஒரு கட்டு கட்டுவோம்.

Chockalingam Sivakumar said...

Vikki,
Unga postings padikka romba inimaiyaa irukku. Eluthaalar ramakrishnan'in sila katturaigal ippadi thaan miga menmaiyaa irukkum. Padippavargal manathil oru ithamaana unarvu tharum. Special'a ethum try pannaama, iyalbaa ungalukku thonuratha eluthunga, athuthaan unga balam.

வினோத் கெளதம் said...

ரொம்ப அழகான கலவையா எழுதி இருக்கீங்க..

டெல்லி காலேஜ் படிக்கும் பொழுது ஒரு தடவை வந்து இருக்கிறேன்.
நீங்க சொன்ன மாதிரி Chandini chowk shopping பண்றதுக்கு ஒரு நாள் தேவை படும்..அவ்வளவு பெரிய ஏரியா..

அப்புறம் தென் சென்னை தொகுதியில் இப்பொழுது சரத்பாபு என்று ஒரு இளைஞர் போட்டி இடுகிறார். உங்களக்கு தெரியுமா..IIM student...இது ஒரு ஆரம்பம் தன் இன்னும் நிறைய இளைஞர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..

Dominos, Pizza Hut இதுவரை உள்ளே கூட நுழைந்தது இல்லை..

விக்னேஷ்வரி said...

பத்து வருஷமா இவ்வளவு மட்டமான பீட்சாவோட இன்னும் டோமினோஸ் இருக்கறதே பெரிய விஷயம் தான் Vijay.

நன்றி Shankar.

விக்னேஷ்வரி said...

நன்றி Vinoth gowtham

எனக்குத் தெரிந்து சாந்தினி சோக்கில் இல்லாத பொருட்களே இல்லை. Best Place for Shopping.

தென் சென்னை தொகுதியில் இப்பொழுது சரத்பாபு என்று ஒரு இளைஞர் போட்டி இடுகிறார். உங்களக்கு தெரியுமா..IIM student...இது ஒரு ஆரம்பம் தன் இன்னும் நிறைய இளைஞர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.. //

தகவலுக்கு நன்றி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

Dominos, Pizza Hut இதுவரை உள்ளே கூட நுழைந்தது இல்லை.. //

Dominos உள்ள போகாத வரைக்கும் பொழச்சீங்க. Pizza Hut போங்க. நல்ல Italian Food சாப்பிடலாம்.

Purush said...

விக்னேஷ்வரி, அழகான எழுத்து நடை. பாராட்டுக்கள்!

அப்புறம் pizza என்றால் என்ன? அதை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? அதை சாப்பிடுவதால் என்ன பயன்?

SK said...

நல்லா தான் இருக்கு :)

எட்டு சல்வார் துணி, ..

ஆறு நூறு ஹோட்டல்.. பாவம் கண்ணா :)

வித்யா, இங்க வந்து ஹோட்டேல் பதிவு போடா ஆளா தேத்துறீங்க :) அடங்க மாடீங்க போல :)

SK said...

// இப்போதெல்லாம் ஆபிசில் வேலை பார்க்கவே பிடிக்கவில்லை. எப்போதும் ஏதாவது ப்ளாக்களை மேய்ந்து கொண்டோ அல்லது சமையல் ரெசிபிகளை தேடியோ பொழுதைக் களிக்கிறேன் //

ரெசிபி தேடுறது இல்லை.. ஆனா வேலை ஒழுங்க செய்யறது இல்லை.. எங்க போய் நிக்க போகுதுன்னு தெரியலை :)

விக்னேஷ்வரி said...

நன்றி Purush.

அப்புறம் pizza என்றால் என்ன? அதை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? அதை சாப்பிடுவதால் என்ன பயன்? //

இப்படியான எடக்கு மடக்கான கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா.... ;)

விக்னேஷ்வரி said...

பாவம் கண்ணா ///

அவர் கல்யாணத்துக்கு முன்னாடி செலவு பண்ணதை விட, இப்போ செலவு பண்றது ரொம்ப கம்மிங்க SK.

ரெசிபி தேடுறது இல்லை.. ஆனா வேலை ஒழுங்க செய்யறது இல்லை.. எங்க போய் நிக்க போகுதுன்னு தெரியலை :) //

கூடிய சீக்கிரமே உங்களுக்கு நல்ல ரெசிபிஸ் தர்றேன் SK. :)

SK said...

அதே தான் நானும் சொல்றேன். அவரு செலவு பண்றது கம்மி தான்.. அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹாய் விக்னேஷ்வரி.. சாந்தினி சவுக்ல பரோட்டாக்கா கலி போய் பரோட்டா சாப்பிட்டீங்களா ?

விக்னேஷ்வரி said...

சாந்தினி சோக் போகும் போதெல்லாம் பராத்தா சாப்பிடாம வர மாட்டோம். அங்கே உள்ள எல்லா வெரைட்டி பராத்தாவும் சாப்பிட்டாச்சு. இந்த தடவை, அங்கே ஃபதெபுரி மார்க்கெட் போயிருந்தோம். அங்கே, ட்ரை பண்ணது தான் ரப்டி ஃபலுடா. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க முத்துலெட்சுமி-கயல்விழி.

சந்தனமுல்லை said...

:-) துணுக்ஸ் ரொம்ப நல்லாருக்குப்பா! நல்ல இயல்பான நடை..சொல்ற விதமும் ஒரு ப்ரெண்ட் கிட்டே பேசிக்கிட்டு இருக்கற உணர்வு! வாழ்த்துகள்!

Indian said...

//எனக்கு பிடித்து "பாப்பா ஜான்ஸ்". //

Pappa Johns Pizza have come to India.
They have opened their restaurant in Bangalore already.

லதானந்த் said...

ஆஹா! சாப்பாட்டப் பத்தி நெம்ப எழுதுங்க. எனக்கு நெம்பப் புடிச்ச மூணு விஷயத்துல சாப்பாடும் ஒண்ணு!

மிச்சம் ரண்டு என்னனு கண்டுபுடிங்க பாப்பம்?

விக்னேஷ்வரி said...

நன்றி சந்தன முல்லை.

Papa Jones is there in Delhi too. But I haven't tried there yet.

சாப்பாடப் பத்தி எழுதுறதுல என்ன சார் கஷ்டம். நிறைய எழுதிடலாம். மத்த ரெண்டு விஷயமும் எனக்கு தெரியலயே. ;) (தப்பிச்சாச்சு)

VIKNESHWARAN ADAKKALAM said...

:)) டபல் செலவு...

Anonymous said...

ஃபாரஸ்ட் கம்ப் பற்றிய எனது பதிவு ஒருவேளை உங்களுக்குப் பிடிக்கக்கூடும்.

http://globen.wordpress.com/2009/04/06/forrestgump/