Friday, April 24, 2009

ஆகிரிதியின் மறைவு கவனக் குறைவா?


ஆகிரிதி. வசந்த் குஞ் இல் இருக்கும் மாடர்ன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி, போன செவ்வாய் காலை வரை. செவ்வாய் (21/04/09) காலை பள்ளிக்கு சென்ற பெண்ணிற்கு ஆஸ்த்மா வரவே அவளின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம். பெற்றோர் வந்து பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த பொழுது, பாவம் அவள் உயிருடன் இல்லை.


இந்த சம்பவம் அவள் குடும்பத்தாருக்கு மிகுந்த துக்கத்தையும், இழப்பையும் ஏற்படுத்தியிருந்தாலும் டெல்லிப் பள்ளிக் குழந்தைக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கண்டிப்பாக பீதியை ஏற்படுத்தி உள்ளது. மாடர்ன் பள்ளி டெல்லியின் சிறந்த பள்ளிகளில் ஒன்று. ஆனால் அங்கிருந்த மாணவிக்கு உடல் நிலை சரியில்லாத போது முதலுதவி கொடுக்கவோ, உடனே ஆம்புலன்சை அழைக்கவோ தவறிவிட்டது பள்ளி. இது குறித்து அப்பெண்ணின் மாமா பள்ளி நிர்வாகத்தைப் பற்றி புகார் கொடுத்துள்ளார்.


"அவள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவே காரணம். ஆகிரிதி மூச்சு விட முடியாமல் தவித்த போது, பள்ளியினர் ஆம்புலன்சை அழைக்காமல் எங்கள் வீட்டு வாகனம் வரும் வரை ஏன் காத்திருந்தனர். நாங்கள் வந்து அவளை மருத்துவமனையில் சேர்த்த பொழுது அவள் இறந்து விட்டிருந்தாள். இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ஆகிரிதியின் மாமா திரு.வெர்மா புகாரளித்துள்ளார்.


இது குறித்து Delhi Commission for Protection of Child Rights அமைப்பும் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "பள்ளியில் அடிப்படை முதலுதவி வசதிகள் இல்லாததாலும், ஆகிரிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது அதை சரியாக கையாளத் தெரியாததாலும் தான் அவள் இறந்தாள். இதற்கு தக்க விளக்கத்தை பள்ளி முதல்வர் ஏழு நாட்களுக்குள் தர வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இது போன்ற பள்ளியின் கவனக் குறைவுகளால் நாம் இன்னும் பல ஆகிரிதிகளை இழக்கும் முன்னர் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது கடமை. போன பின் புலம்புவது வேலைக்காகாது. வரும் முன் காப்போம்.


ஆகிரிதிக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.

26 comments:

SK said...

wonderful post

SK said...

This is the one incident we know.. Many we dont know..

If this is the stage of private schools then what about govt. schools ??

:( :(

How many of our govt. school have basic facilities ?

How many of our teachers have idea about first aid ??

No body can answer. Hope to have some awareness atleast in near future.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பள்ளிக்கூடங்களில் முதலிலேயே என்ன என்ன தொந்திரவுகள் உண்டு அலர்ஜிகள் என்ன என்று எல்லாம் கேட்டு வைத்துக்கொள்கிறார்கள்..ரெக்கார்ட் செய்து வைத்தாலும் அது பயன்படுத்தப்படுவது எவ்வாறு என்பதன் நடைமுறை தெரியவில்லை.

சிறிது நாட்களு க்கு முன் ஆசிரியை அடித்து இறந்த குழந்தைக்கு அம்மாவை வீட்டிலிருந்து அழைத்து டாக்டரிடம் கூட்டிச்செல்லுமாறு அறிவுறுத்தி இருந்தும் அந்த தாய்( அப்பாவியோ அறியாதவரோ) வீட்டில் கொண்டு வைத்து பின் இறந்ததாக சொல்லி இருக்கிறார்கள்..

ஆக்ஸிடண்ட் கேஸ்களை அனுமதிக்காத தனியார் மருத்துவமனை போலவே ... பள்ளி நிர்வாகங்களும் நடந்து கொள்கின்றன. ஆக்ஸிடண்ட் கேஸ்களுக்கு சிகிச்சை அளிக்கக் கட்டாயப்படுத்திய சட்டம் போலவே இதற்கும் சட்டம் தான் போடவேண்டும் போல.. :(

Anonymous said...

ஆக்ரிதி மரணம் பற்றிய விவகாரத்தை பதிவுலகில் எடுத்து வந்ததற்கு நன்றி.

இந்த சம்பவம் தொடர்பான செய்திகளை நேற்று ஓரளவு முழுமையாக படித்தேன்.

இங்கே குறை கூற வேண்டியது, பள்ளியின் நிர்வாகத்தை மட்டுமே என்பது எனது கருத்து.

ஆக்ரிதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பள்ளி முதல்வரின் அனுமதி கையெழுத்து பெறுவது உள்ளிட்ட விதிமுறைகளுக்கு மட்டுமே 15 நிமிடம் செலவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் கண்ணாபிண்ணாவென்று லாஜிக் இன்றி விதிமுறைகளும், கட்டுப்பாட்டுகளும் ஒரு சிறை அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதே... இன்று நாம் ஆக்ரிதியை இழந்து நிற்பதற்கு காரணமாகிவிட்டது.

ஆபத்தான காலம், தேவையான போது விதிமுறைகளை தளர்த்துக்கொள்வதில் தவறில்லை என்பதை உணரவேண்டும்.

Vidhya Chandrasekaran said...

:(

DHANS said...

its really bad to hear this.

am thinking about the government schools which has worst facilities compared to private schools.

Inthiyaavai Thiruttha mudiathu, yaaravathu Thirutthinaal atharkku piragu athu marupadiyum kettuppogamal irukka paadupaduven. very tired of trying to educate the educated people.

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்..:( முதலில் என் அனுதாபங்கள்!
பள்ளியில் முதலுதவிக்கான measure-ஐ வைத்திருக்க வேண்டுமென்பது கடைபிடிக்க வேண்டியத் அவசியமாக்கப்பட வேண்டும்!

//இது போன்ற பள்ளியின் கவனக் குறைவுகளால் நாம் இன்னும் பல ஆகிரிதிகளை இழக்கும் முன்னர் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது கடமை. போன பின் புலம்புவது வேலைக்காகாது. வரும் முன் காப்போம்.//

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்!

Sasirekha Ramachandran said...

முதலில் முதலுதவி பற்றி அனைவருக்கும் (மாணவர்களுக்கும் சேர்த்துதான்)சொல்லித்தரவேண்டும்.

அதெப்படி ஒரு பள்ளியில் முதலுதவி செய்யாமல் இருந்தார்கள்?மிகவும் வேதனையாக உள்ளது.

ஆகிரதிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!:(

மணிநரேன் said...

வருத்தமளிக்கும் விடயம்.

கவனக்குறைவினால் இன்னும் எத்தனை உயிர்களை இழந்துகொண்டிருக்க போகிறோம் என தெரியவில்லை.

சரவணன் said...

ஆகிரிதியின் மறைவு கவனக் குறைவே தான் காரணமாக இருக்க முடியும்.

விக்னேஷ்வரி said...

wonderful post //

நன்றி எஸ்.கே.

If this is the stage of private schools then what about govt. schools ?? //

அது இதை விட மோசம் தான். ஏதோ, இது போன்ற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் வசதியான குடும்பத்திலிருந்து வருவதால் அவர்களின் இழப்பு வெளியே தெரிகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் வெளியுலகிற்கு தெரியாமலே போய் விடுகிறது.

How many of our teachers have idea about first aid ?? //

இது மிக முக்கியமான கேள்வி. ஏதேதோ பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. ஆனால், முதலுதவிப் பயிற்சி வழங்கப்படுவதில்லை.

ரெக்கார்ட் செய்து வைத்தாலும் அது பயன்படுத்தப்படுவது எவ்வாறு என்பதன் நடைமுறை தெரியவில்லை. //

அதற்குத் தக்க பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

ஆக்ஸிடண்ட் கேஸ்களை அனுமதிக்காத தனியார் மருத்துவமனை போலவே ... பள்ளி நிர்வாகங்களும் நடந்து கொள்கின்றன. //

மிக சோகத்திற்குரிய விஷயம்.

கார்க்கிபவா said...

ம்ம்.. இது போன்ர விஷயங்களுக்கு முடிவேயில்லை இந்தியாவில் :((

விக்னேஷ்வரி said...

ஆபத்தான காலம், தேவையான போது விதிமுறைகளை தளர்த்துக்கொள்வதில் தவறில்லை என்பதை உணரவேண்டும். //

உண்மை தான். உங்கள் அனைத்துக் கருத்துக்களையும் நான் ஆமோதிக்கிறேன் globen.

Inthiyaavai Thiruttha mudiathu, yaaravathu Thirutthinaal atharkku piragu athu marupadiyum kettuppogamal irukka paadupaduven. //

இதை ஏன் மாற்ற முடியாது என நினைக்கிறீர்கள். சமுதாயத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் நாம் உருவாக்கியவை; நமக்காக உருவாக்கப்பட்டவை. நம்மால் எல்லாவற்றையும் மாற்ற முடியும். நம்மால் முடியாதெனில், வேறு யாரால் முடியும்?

உங்கள் கருத்து சரி தான் முல்லை. ஒரு பள்ளியில் எந்த அளவுக்கு முதலுதவி வசதிகள் உள்ளன என்பதை கேட்டு குழந்தைகளை சேர்ப்பது பெற்றோரின் கடமையாகக் கொள்ள வேண்டும்.

முதலில் முதலுதவி பற்றி அனைவருக்கும் (மாணவர்களுக்கும் சேர்த்துதான்)சொல்லித்தரவேண்டும். //

மிகச் சரி சசிரேகா. மிக முக்கியமானது ஆசிரியர்களுக்கு அந்த பயிற்சி அளிக்கப் பட வேண்டும் என்பதே.

விக்னேஷ்வரி said...

கவனக்குறைவினால் இன்னும் எத்தனை உயிர்களை இழந்துகொண்டிருக்க போகிறோம் என தெரியவில்லை. //

அவ்வாறு இழப்பதற்கு முன் முதலுதவி பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் மணிநரேன்.

ஆகிரிதியின் மறைவு கவனக் குறைவே தான் காரணமாக இருக்க முடியும். //

கண்டிப்பாக சரவணன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கவனக் குறைவு என்றால் நீங்கள் விசாரணையைப் பெற்றோரிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

என்றைய தேதியிலிருந்து ஆஸ்த்மா?

கடுமையான ஆஸ்த்மா என்றால் அன்று விடுப்பு எடுத்திருக்கலாம்.

கையில் ஆஸ்த்மா நிவாரணி இன்ஹேலர் எதையும் கொடுத்துவிடவில்லையா?

இது போன்ற சில கேள்விகள்

...........................

இவ்வளவு மூச்சிறைக்கும் பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் பள்ளி நிர்வாகம். இல்லையென்றால் வெகுநேரத்திற்கு முன்பே பெற்றோருக்கு தகவல் கொடுத்திருக்கலாம்

.............................

பகல் நேரத்தில் உயிரைக் குடிக்கும் அளவு ஆஸ்த்மா அவ்வளவு கொடூரமாக தீடீரென பள்ளி வளாகத்தில் தோன்ற காரணம் என்னவாக இருக்கும்?

கடும் குளிர், அல்லது நிறைய மகரந்தத்தூள்கள் அல்லது நோயாளிக்கு ஒவ்வாவை விளைவிக்கக் கூடிய பொருட்கள் ஏதாவது அதிக அளவில் பட்டால்தான் பொதுவாக ஆஸ்த்மா வீரியமாக வரக் கூடும்.

இங்கே என்ன நடந்தது?

...............................

பள்ளிகளில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் உடல் மற்றும் மனநலம் தொடர்பான பயிற்சிகளை சீரிய இடைவெளிகளில் நடத்தப் படவேண்டும். அப்போதுதான் இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப் பட முடியும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தவிரவும் இந்தப் பள்ளி பணக்கார மாணவர்கள் படிக்கும் பள்ளி என்றும் துக்கம் விசாரிக்க பெரிய பெரிய தலைகள் வந்தார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறதே.. உண்மையா தல...

அதே போல் சில தினங்களுக்கு முன் கோமாவிற்குப் போய் இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்த இவர்கள் வரவில்லை என்றும் பேசிக் கொள்கிறார்களே... உண்மையா தல....


உத்திர பிரதேசத்தில் இருப்பதால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும் என்று நினைக்கிறோம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

குழந்தைகளின் மீதான வன்முறைகள் பற்றிய என்னுடைய சந்தேகங்கள் பற்றிய பதிவு இது.சுட்டியைச் சொடுக்கி தங்கள் கருத்துக்களையும் கூறுங்களேன்

விக்னேஷ்வரி said...

ம்ம்.. இது போன்ர விஷயங்களுக்கு முடிவேயில்லை இந்தியாவில் :(( //

முடிவிருந்தால் இது இந்தியா இல்லை.

முடிவு கொண்டு வருவோம் கார்க்கி.

விக்னேஷ்வரி said...

நீங்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் மிக சரியானவையே சுரேஷ். ஆனால், இது போன்ற கேள்விகளால், பள்ளி நிர்வாகத்திற்கு எதுவும் வந்து விடப் போவதில்லை. எல்லாம் எப்போதும் போல் செவ்வனே செல்லும். காரணம் இரண்டு. நம் நாடு இந்தியா, பணம் பத்தும் செய்யும்.

விக்னேஷ்வரி said...

உத்திர பிரதேசத்தில் இருப்பதால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும் என்று நினைக்கிறோம். //

தெரிந்த நிலவரங்கள் உண்மையா எனத் தெரியவில்லை. உறுதிப்படுத்தி விட்டு, இதைப் பற்றி ஒரு தனிப் பதிவெழுதுகிறேன் சுரேஷ்.

Vijay said...

ஆக்ரிதியின் மரணம், பள்ளிகளில் நடக்கும் அசம்பாவிதங்களின் இன்னொரு அத்தியாயம் அவ்வளவே. லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கும் பள்ளிகள் எந்த வித மாற்றங்களையும் கொண்டு வரப்போவதில்லை. என்ன தான் பள்ளி நிர்வாகத்தின் மீது குறை கூறினாலும், தன் மகளுக்கு என்ன மாதிரியான நோய் இருக்கிறது என்பது அவ்ளுடைய தெரிந்திருக்கும். அப்படியிருக்க அவர் ஏன் உடனடியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யவில்லை. ஆக்ரிதியின் தாய் பெயரிலும் தப்பு இருந்திருக்கிறது.

Raja Manickam said...

Yes, certainly it's a fault of School Administration.
The responsiblity of Children are with School officials till the school hours.
Hope the school principal is booked for his negligence.

Nithi... said...

Yaar mithu tavaru irunthalum antha kolanthai kapattha mudiyaviali..
its a school mistake only...
oru first aid illai antha school la ipadi iruntha enna panna mudiyum..

school buliding,, bus,, hostal,, irukka paarkura munadi antha school pakkathala oru hospital irukka nu paarkanum....

விக்னேஷ்வரி said...

பள்ளிகளில் நாம் தான் மாற்றம் கொண்டு வர வேண்டும் விஜய். கண்டிப்பாக மாற்றலாம். கவலைப்படாதீங்க.

அந்த பொண்ணுக்கு அன்னிக்கு மூச்சுத் திணறல் வரும்னு அவங்க பெற்றோர் எதிர்பார்த்திருக்காமல் இருக்கலாம்.

உங்கள் கருத்துக்கு நன்றி ராஜா.

கரெக்ட் நிதி.

deesuresh said...

இது போன்ற இறப்புகள் இன்னும் கும்பகோணம் துயரை நினைவூட்டுகின்றன. விதிமுறைகளைப் பின்பற்றாததால் பிஞ்சுக் குழந்தைகள் மரணம். விதிமுறையைக் கடுமையாய்ப் பின்பற்றியதால் ஆகிரிதியின் மரணம். விதிமுறைகள் என்பது நமக்கு நாமே நல்வழியில் நடப்பதற்கு விதித்துக் கொண்டது. அதை கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளாவிடில் இது போன்ற சோகங்கள் தொடர்கதையாகவே இருக்கும்.

ஆகிரிதிக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்

Vijay said...

I have no words to write out how worst I felt on hearing this shocking news. Where do we go? What is that we are doing? Have we lost humanity? Are we alive? When is the day meant for us to bring back things we lost? Who is the one to save us? Who is the one to put an end to all nonsense? Who is going to take responsibility for what all happened? and who is the best replacement? The Answer is Us. Yes, We should be held responsible for all that happens around us. The Good Leader is in you or just next to you. Find Him, Guide him, Vote for him and Bring the best out of him. Please make your vote count. Jai Hind.