Tuesday, December 23, 2008

டிப்ஸ்.....

தற்போதெல்லாம் வேலை கொஞ்சம் இழுபறியாகவே செல்கிறது.எனக்கும், அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதிலும், அங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி, என் பர்சையும் பதம் பார்க்கிறது.
ஆள்குறைப்பு, சம்பளகுறைப்பு போன்றவை அதிகமாய் எல்லா இடத்திலும் அரங்கேறிக் கொண்டிருக்க, அந்த நெருக்கடி எதுவும் இல்லை எனினும், சம்பளம் வருவதே பெரும் பாடாய் உள்ளது. இந்த நேரத்தில், என் அலுவலக தோழி என்னிடத்தில் வந்து அழ, அவளுக்கு கொடுத்த டிப்ஸ் அனைவருக்கும் உபயோகமாகும் என நினைக்கிறேன்.

வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து, ரூமில் பருப்பு சாதம் செய்தோ அல்லது ரொட்டி சப்ஜி செய்தோ சாப்பிடு.

புதிதாக எந்த ஆடை, அலங்காரப் பொருளிலும் செலவிட வேண்டாம்.

ரிக்ஷாவிற்கு பத்து ரூபாய் செலவு செய்வதை விட்டு, உடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து செல்.

போனில் யாருடன் இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசுவதை தவிர் (நீ அழைத்திருந்தால்)

என்ன மெயில் அனுப்புவதாக இருந்தாலும், அதை ஆபிசிலேயே முடித்து விடு. வீட்டில் போய் இன்டர்நெட் உபயோகிக்காதே

வேலைக்காரியையும், ஜிம் போவதையும் நிறுத்து. ஜிம் போவதாக நினைத்து, அந்த நேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய பழகு.

தீபாவளி தள்ளுபடி, புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விளம்பரங்களில் மயங்காதே

பேப்பர் வாங்குவதை தவிர்த்து, ஆன்லைனில் பேப்பர் படிக்க பழகு. (அதுவும் அலுவலக இடைவெளி நேரத்தில்)

பார்லர் போவதை குறைத்துக் கொள்.

மாதத்திற்குள் ஒரு முறை மட்டுமே திரையரங்கு செல்வது என பழகு

சம்பள டென்சனை வேலையில் காட்டாதே. அன்றன்றைய அலுவல் வேலைகளை அன்றே முடித்து விடு. அப்போது தான் வேலையாவது நிலைக்கும்.

ஆபிசில் கிடைக்கும் மட்டமான டீ பிடிக்கவில்லை எனில், நீயே வீட்டிலிருந்து தயாரித்து எடுத்து வா. வெளியில் ஒரு டீ பதினைந்து ரூபாய்க்கு வாங்கி குடிக்காதே.

எப்போதும் பர்சில் இருக்கும் பாக்கி சில்லரையை உண்டியலில் போட்டு பழகு
எல்லாவற்றிற்கும் மேலாக ஆறு மாத சம்பளத்தை எப்போதும் ரிசர்வில் வைத்திரு.

10 comments:

trdhasan said...

பெண்களுக்கு மட்டும் சொல்லியிருக்கீங்க. ஆண்களுக்கு எதாவது டிப்ஸ் கொடுக்கலாமே...! (பெண்கள் சிக்கனமா இருந்தாலே எல்லாம் சரியாகிடும்ன்னு நெனச்சிட்டிங்களா?)

GIYAPPAN said...

நல்ல அறிவுரைகள். ஆனால் கடைபிடிப்பவர் முதலில் தன்னை நன்கு உணர வேண்டும். தான் வளர்ந்த சூழல், தன் பெற்றோர் படும் அவஸ்தை இவற்றை நினைவில் கொண்டால் மனம் தானாக பக்குவப்பட்டுவிடும். பிறகு சிக்கனமாக இருப்பது பெரிய விஷயமாகப் படாது. உங்கள் குறிப்புகள் மிகவும் உபயோகமாக இருக்கும் அப்பொழுது.

Raja Manickam said...

arumiyana tips..

ur tamil writing skills are exceptionally good..

விக்னேஷ்வரி said...

கேள்வியையும் கேட்டு பதிலும் நீங்களே சொல்லிட்டீங்களே மணி.

சரி தான் ஐயப்பன் சார்.

நன்றி ராஜா.

Nithi... said...

Tips nala Irukku...!!

விக்னேஷ்வரி said...

நன்றி நிதி.

Suresh Kumar said...

மொத்ததில சம்பளம் குறைத்ததினால் அலுவலக பணியை குறைத்துவிட்டு அலுவலகத்திலே சொந்த பணிகளை பெரும்பாலும் முடிக்க பழகனும்னு சொல்றீங்க . நல்ல டிப்ஸ் தான்

Suresh said...

உங்க பதிவுகள் அருமை
வாங்க வாங்க என்னோட சக்கரை http://sakkarai.blogspot.com/
படித்து பிடித்தல் சுவைத்ததை சொல்லிவிட்டு போங்க

விக்னேஷ்வரி said...

அலுவலகத்தில் சொந்த பணிகளை செய்யலாம். ஆனால், அலுவலக நேரத்தில் தான் செய்யக் கூடாது. சரி தானே சுரேஷ் குமார்.

விக்னேஷ்வரி said...

நன்றி சுரேஷ், கண்டிப்பா உங்க பதிவுகளைப் பார்க்கிறேன்.