கன்றீனும் பசுவின் அரற்றலை
அவள் புடவைத் தலைப்பிலொளிந்து
மிரண்டு கண்ட பொழுது-
கண்ணாமூச்சி விளையாட்டின்
கை சிராய்ப்பில்
அவள் பதறிக் கண்ணீர் துளிர்க்க
மருந்திட்ட பொழுது-
மதிப்பெண் குறைந்த
தேர்வட்டையை
அப்பாவிடம் நேரம் பார்த்து சொல்லி
கனமில்லா திட்டுகளுடன்
கையெழுத்து வாங்கித் தந்த பொழுது-
பள்ளித் தோழியுடன்
அதிகம் பகிர்கையில்
தன் ஏமாற்றம் மறைத்து
அவளை வரவேற்ற பொழுது-
என் நண்பனை
நண்பனாகவே
ஏற்றுக் கொண்ட
சினேகத்தின் பொழுது-
மகளின் காதல்
சரியாயிருக்க வேண்டுமேயெனும்
தவிப்புடன் கூடிய
திருமண ஏற்பாட்டின் போது-
முன்னெப்போதையும் விட
மசக்கை உடல் மலர்த்த
ஒருக்களிக்கக் கூடாமல்
ஈருடலாய் ஆனபோதே
இன்னும் பெருகுகிறது
நெஞ்சுக்கூட்டு ஈரம்
இரைக்க இரைக்க
அம்மாவெனும் போது...
திரிசக்தி தீபாவளி மலரில் வெளியான எனது கவிதை.
19 comments:
நாங்கூட தமிழ்நாடு சி.எம். பத்தி ஏதோ எழுதிருக்கீங்கன்னு நெனைச்சேன்..
:)
ரைட்டு,
கடைசி வரிகள் .....
வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு.அடிக்கடி எழுதுங்களேன்.
நல்ல கவிதை.... பத்திரிகையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்....
சரி, இது பெண்கள் உலகம். நல்லா இருக்கு என்று ஆண்களாகிய நாங்கள் சொன்னாலும் அது அரைகுறைதான். (அதாவது ஆண்கள் 50 என்றால், அதை 100 ஆகக் கொள்ளலாம்.)
இங்கு, இரசிகையின் "ம்மா.." கவிதையை, அதன் அரசியலுக்காக, நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ம்மா..
வலி
கண்ணீரில்லா
அலறல்கள்
பிறந்துவிட்டான்
இன்னும் மயக்கமுறவில்லை
நான்
தெளிவான குரலில்..
என்னோட அம்மாவை
கூப்பிடுறீங்களா..
கொஞ்சம் பாக்கணும்!!
துணியில்
சுற்றிய பேரனுடனும்
புன்னகையுடனும் அவள்
இப்போதும்,
வலி
துளிக்கண்ணீர்
சத்தமில்லா
அலறல்களுடன்
தெளிவான மயக்கம்
என்னுள்..!
ராமலக்ஷ்மி has left a new comment on your post "அம்ம்ம்ம்மா....":
மிக அருமை விக்னேஷ்வரி.
திரிசக்தி தீபாவளி மலர் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!
//நாங்கூட தமிழ்நாடு சி.எம். பத்தி ஏதோ எழுதிருக்கீங்கன்னு நெனைச்சேன்.. // Ditto.
வாழ்த்துகள்!
நல்லதொரு கவிதை.
பத்திரிக்கையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.
அம்மாவைப் பற்றிய அருமையான கவிதை.சரியாக எனது அம்மாவின் பிறந்த நாளான இன்று இந்தக் கவிதையைப் படிக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி. கடைசி வரிகளுக்கும் திரிசக்தி தீபாவளி மலர் பத்திரிக்கையில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துக்கள்!!!
விக்னேஸ்வரி எப்பிடி இருக்கீங்க.ரொம்பக் காலமாச்சு உங்க பக்கம் வந்து.சுகம்தானே !
அம்மா...அம்மா...அம்மா...சொல்லிக்கொண்டேயிருக்கலாம்.எல்லாமே அவளுக்குள் அடக்கம்.அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் !
வாழ்த்துகள் :) ஸ்பெஷலா கடைசி வரிக்காக
நல்ல கவிதை...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
வாழ்த்துகள். பாராட்டுகள்
தொடர்ந்து எழுதுங்கள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
பார்க்கவும்
http://muelangovan.blogspot.in/
hii.. Nice Post
Thanks for sharing
இப்பல்லாம் எழுதுறது இல்லையா?
அம்ம்மாவைப்பற்றி உணர்ந்தெழுதிய அருமையான கவிதை...!
Super கவிதை
Post a Comment