Monday, February 14, 2011

குட்லக் பாய்ஸ்!!!


காதல்ல விழுந்திருக்குற குடிமகனா நீங்கள்... ஆமான்னா இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். காதல்ங்குறது ஒரு அழகான விஷயம், அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட. எப்போ அழகாகும், எப்போது ஆபத்தாகும்ன்னே சொல்ல முடியாது. இந்தக் காதல்ல இருக்குறவங்க எப்போ பார்த்தாலும் செல்ஃபோனும் கையுமா அலையுறாங்களே அப்படி என்ன தான் பேசுவாங்கன்னு நம்ம காதைத் தீட்டி ஒட்டுக் கேட்டோம்ன்னா பெரும்பாலும் “ம்” தான் இருக்கும். ரெண்டு பேரும் மாறி மாறி “ம்” கொட்டிப்பாங்க. அடிக்கடி “வேற” அப்படிம்பாங்க. அப்படின்னா பேச ஒண்ணுமில்லை ஃபோனை வைப்பாங்கன்னு அர்த்தமில்லை. பேச ஒண்ணுமே இல்லைன்னாலும் பேசுறதுல ரொம்ப சிரத்தையா உலகத்தையே மறந்து பேசிக்கிட்டிருக்குற இவங்களைப் பார்த்தா வினோதமா இருக்கும்.


காதலனோ காதலியோ எதை, எப்படிப் பேசணும், எதைப் பேசக் கூடாதுன்னு விதிகள் உண்டு. பெரும்பாலும் இந்த விதிகள் கடைபிடிக்க வேண்டியது காதலன் தான். காதலிகளுக்குப் பெரிசா கஷ்டமான விதிகளெல்லாம் இல்லை. காதலன் கடைபிடிக்க வேண்டிய காதல் விதிகள் இங்கே.


1. நீங்க எந்த முக்கியமான வேலைல இருந்தாலும் உங்க காதலியின் அழைப்பை எடுக்காம விட்டுடாதீங்க. ஆஃபிஸ்ல முக்கியமான மீட்டிங்ல இருந்தாலும் கூட எடுத்து ஒரு ஹலோ சொல்லிட்டுப் பையில் போட்டுக்கோங்க. அடுத்து நீங்க லைன்ல இருக்கீங்களா, இல்லையாங்குற கவலையே இல்லாம அவங்க பாட்டு ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருப்பாங்க.


2. காதலி கூட எப்போவாச்சும் சண்டை போட்டா தப்பு அவங்க மேலவே இருந்தாலும் நீங்களே குற்றவாளியாகி ஸாரி சொல்லிடுங்க. “நீ செஞ்சது தப்பும்மா”ன்னு வாய் தவறிக் கூட சொல்லிடாதீங்க. அப்புறம் உங்களுக்கு உப்புமா கூட கிடைக்காது.


3. காதலிக்கு ஏதாச்சும் சோகமா.. பூக்கொத்துகளுடன் போய்ப் பாருங்க. அவங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு கால் உடைஞ்சு போய்ட்டாலோ , அவங்க பரீட்சையில் ஃபெயிலாகிட்டலோ அல்லது அலுவலகத்துல யார்கிட்டேயாவது டோஸ் வாங்கிக் கட்டிக்கிட்டாலோ கருப்பு ட்ரெஸ் போட்டுக்கிட்டு கையில் வெள்ளை மலர்க்கொத்துடன் போய் ஃபீலிங் குடுங்க. அந்த நேரத்துல நீங்க காதலிக்காகக் கண்ணீர் விடலைன்னா, அப்புறம் வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வேண்டியிருக்கும்.


4. உங்க காதலியோட எப்போ வெளில போனாலும் அவங்க கைல இருக்குற பெரிய பேகை நம்பிப் போகாதீங்க. அதுல பணம் தவிர எல்லாக் குப்பையும் இருக்கும். ஆனாலும் அவங்க எல்லாத்துக்கும் தானே பே பண்ற மாதிரி சீன் போடுவாங்க. ம்ஹூம், 2 ரூபாய் ஹேர்ப்பின்ல இருந்து 2000 ரூபாய் டெட்டி பியர் வரைக்கும் நீங்களே தான் செலவு பண்ணனும். பண்ணுங்க. எல்லாத்தையும் மொத்தமா அவங்கப்பா கிட்ட பின்னாடி வாங்கிக்கலாம் ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்காம இருந்தா.


5. காதலியை வெளில சாப்பிடக் கூட்டிட்டுப் போய் நீங்க வயிறு நிறைய சாப்பிட்டு ஏப்பம் விடாதீங்க. அப்புறம் அம்மணி உங்ககிட்ட இருந்து ஆறடி தள்ளிப் போயிடும்.


6. முடியும் போதெல்லாம் “ஐ லவ் யூ” சொல்லுங்க. பல நாட்கள் இது மட்டுமே பேச்சா ஓடலாம். உங்களுக்கு சொல்ல போரடிச்சா ரெக்கார்ட் பண்ணி வெச்சிட்டு அவங்க ஃபோன் பண்ணும் போது போட்டு விட்டுடுங்க. அந்த ஒரே டயலாக் கேட்டே அவங்க மனசு குளிர்ந்துரும்.


7. எப்போவுமே உங்க குடும்பத்தைப் பத்திப் பேசாதீங்க. அவ்ளோ தான். இப்போவே மாமியார் துவேஷம், நாத்தனார் கடுப்பெல்லாம் ஆரம்பமாகிடும். ஆனா அவங்க குடும்பத்தைப் பத்தி அவங்க சொல்லும் போது பொறுமையா கேளுங்க. முடிஞ்சா அவங்க கையைப் பிடிச்சுகிட்டோ இல்லைன்னா தலையைத் தடவிட்டோ கேளுங்க. அப்பப்போ ஒரு “ம்” மட்டும் சொல்லிக்கிட்டே இருக்கணும்.


8. அவங்க என்ன ட்ரெஸ் போட்டிருந்தாலும், என்ன மேக்கப் போட்டிருந்தாலும் “வாவ்”ன்னு ஒரு வார்த்தை சொல்ல மறக்காதீங்க. உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் கூட. ஆனா உங்க ட்ரெஸ் நல்லா இல்லைன்னு அவங்க சொன்னா அதை ஏத்துக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்கு ரசனை அதிகமாம்.


9. வீட்ல யார் யாரோ சமைச்சதைக் கொண்டு வந்து தானே சமைச்சதா சொல்லி உங்களுக்கு ஊட்டி விடுவாங்க. அப்போவே அந்த நல்ல சாப்பாடை அனுபவிச்சுக்கோங்க. கல்யாணத்துக்கப்புறம் தவறிக் கூட சமையலறை பக்கம் போக மாட்டாங்க. போனாலும் நீங்களே வேண்டாம்ன்னு தடுக்குற அளவுக்கு டெரரா சமைப்பாங்க.


10. அவங்க சொல்றதுல / செய்றதுல பெரும்பாலான விஷயங்கள் புரியாது. ஆனாலும் புரிஞ்ச மாதிரி மேனேஜ் பண்ணக் கத்துக்கோங்க. உதாரணத்துக்கு நிறங்களைப் பத்தி சொல்லும் போது இலைப் பச்சை, யானைக் கருப்பு, ரத்த சிவப்பு இப்படியெல்லாம் சொல்லுவாங்க. அதுக்காக போய் ஏகப்பட்ட இலை இருக்கு எந்த இலைன்னோ, ரத்தம் வரும் போது இருக்குற சிவப்பா, உறைஞ்சதுக்கப்புறம் இருக்குற சிவப்பான்னெல்லாம் கேக்கக் கூடாது. அதே மாதிரி கடை கடையா ஒரு நாள் முழுக்க அவங்க கூட உங்களை அலைய விட்டுட்டு கடைசில அம்பது பைசாவுக்கு ஒரு ஊக்கு வாங்கிட்டு வருவாங்க. அதுக்காக கடுப்பாகிக் கத்தக் கூடாது. பொறுமை முக்கியம் நண்பர்களே.


11. எல்லா மொழிலேயும் இருக்குற கொஞ்சுற வார்த்தைகளாக் கத்துக்கோங்க. அட, என்ன மொழின்னு தெரியலைன்னா கூட பரவாயில்லை. ஆனா கொஞ்சலா இருக்கணும் இப்படி செல்லம், சுச்சூ, புஜ்ஜூ, ப்யாரி, ஸ்வீட்டி, பப்ளி, நுன்னு,....


12. எப்போவும் எங்கேயும் அவங்களை 1 நிமிஷம் கூடக் காக்க வெச்சிடாதீங்க. அன்னிக்கு நாள் முழுக்க அர்ச்சனை வாங்குறதோட பர்ஸ் காலியாகுற அளவுக்கு ஐட்டங்களும் வாங்கிக் குடுக்கணும். ஏன்னா பொண்ணுங்க கெமிஸ்ட்ரி உங்க கூட ஒத்துப் போகுதோ இல்லையோ, தங்கம், வைரம்ன்னு நகைகள் கூட நல்லா ஒத்துப் போகும். ஆனா அவங்களுக்காக நீங்க மணிக்கணக்குல காத்திருக்குறதோட இல்லாம அதை ஒரு தடவை கூட சொல்லிக் காட்டிடாதீங்க.


இத்தனையையும் வெற்றிகரமா சமாளிச்சுட்டீங்க, நீங்க க்ரேட் தான். கண்ணாடி முன்னாடி போய் நின்னு தோளைத் தட்டி சபாஷ் சொல்லிக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்காக நீங்க இவ்ளோ செஞ்சதுக்கப்புறமும் கூட அவங்க உங்களைப் பாராட்ட மாட்டாங்க. நீங்க செய்யாம விட்ட தம்மாத்துண்டு பாயிண்ட்டைப் பிடிச்சுக்குவாங்க. பீ கேர்ஃபுல் அண்ட் குட் லக் (!) பாய்ஸ்.

(இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேக்கறவங்க பலக் காதலிகள் வைத்துத் துன்புற!)

32 comments:

vinu said...

இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேக்கறவங்க பலக் காதலிகள் வைத்துத் துன்புற!)


onnaaavathu kidaikkaathaanu ingittu thedittu thiriyurom; ithula neenga vera

CS. Mohan Kumar said...

//பொண்ணுங்களுக்காக நீங்க இவ்ளோ செஞ்சதுக்கப்புறமும் கூட அவங்க உங்களைப் பாராட்ட மாட்டாங்க. நீங்க செய்யாம விட்ட தம்மாத்துண்டு பாயிண்ட்டைப் பிடிச்சுக்குவாங்க//

அது!!!

பா.ராஜாராம் said...

:-)) செம!
.

Vidhya Chandrasekaran said...

பாவம் யோகி:))

S Maharajan said...

//“நீ செஞ்சது தப்பும்மா”ன்னு வாய் தவறிக் கூட சொல்லிடாதீங்க. அப்புறம் உங்களுக்கு உப்புமா கூட கிடைக்காது//

பாவம் யோகி சார் நெறைய நாள் கஷ்டப்பட்டு இருப்பார் போல
//உங்க ட்ரெஸ் நல்லா இல்லைன்னு அவங்க சொன்னா அதை ஏத்துக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்கு ரசனை அதிகமாம்//

பாரடா
//(இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேக்கறவங்க பலக் காதலிகள் வைத்துத் துன்புற!)//

சரி மேடம் இதெல்லாம் உங்க சொந்த அனுபவமா.....

ஷர்புதீன் said...

இன்னைக்கு அடியேன் கொடுத்த ( என் மனைவிக்குதாங்க! ) காதல் பரிசு சிறிய புத்தகம், இன்றிரவு நல்ல ஹோட்டலில் சாப்பாடு :-)

ஷர்புதீன் said...

சொல்லமறந்துட்டேனே ... இன்னைக்கு வரைக்கும் எனது மனைவியை பெயர் சொல்லி அழைத்ததில்லை, மிக கடினமான சூழல் முதல் கொண்டு இயல்பான சூழல் வரையிலும் கூட ***** தான் ( அது என்னவென்பதை தனியே தான் சொல்லமுடியும், இல்லைனா அவங்க பெர்மிசன் வேணும் :-)

தராசு said...

//ஏன்னா பொண்ணுங்களுக்காக நீங்க இவ்ளோ செஞ்சதுக்கப்புறமும் கூட அவங்க உங்களைப் பாராட்ட மாட்டாங்க. நீங்க செய்யாம விட்ட தம்மாத்துண்டு பாயிண்ட்டைப் பிடிச்சுக்குவாங்க.//

ங்கொய்யால, அப்ப வரும் பாருங்க ஒரு கோபம், அப்பிடியே கண்டம் துண்டமா வெட்டிப் போட்டறலாமான்னு பத்திகிட்டு வரும்.

அப்புறம்.... விக்கி, பாவம், யோகிய நெனச்சா எனக்கு அழுகையா வருது.

ராமலக்ஷ்மி said...

அருமை:))!

ADHI VENKAT said...

ம்..... :)

Priya said...

//பொண்ணுங்களுக்காக நீங்க இவ்ளோ செஞ்சதுக்கப்புறமும் கூட அவங்க உங்களைப் பாராட்ட மாட்டாங்க. நீங்க செய்யாம விட்ட தம்மாத்துண்டு பாயிண்ட்டைப் பிடிச்சுக்குவாங்க.//... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு விக்கி:)

Happy Valentines Day!!!

அன்பேசிவம் said...

ஹாய் விக்கி,வெல்கம் பேக் உங்களுக்கும் யோகிக்கும் காதலர்தின வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் said...

timing post

Cable சங்கர் said...

இது உங்க சொந்த அனுபவமா?

உங்க சாபம் பலிக்க.. வேண்டி :))

Anonymous said...

Pavam Yogi maama. =((

Anonymous said...

//பலக் காதலிகள் //

பல காதலிகள் is right =))

Nagasubramanian said...

காதலிக்கறது இவ்வளவு ஈஸியா?

Anbu said...

thanks akka....

dr.tj vadivukkarasi said...

hmmmm thank god iam not a boy

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

டிப்சுக்கு ரொம்ப தாங்க்ஸ்ங்கோ :)

mightymaverick said...

யக்கா... யோகி டைம்ஸ் இந்த பதிவுல இல்லாததுல இருந்தே அவர் இந்த கஷ்டத்தை எல்லாம் அனுபாவிச்சார்னு புரிஞ்சிக்கிட்டேன்...

'பரிவை' சே.குமார் said...

Athu Sari. Good one.

Pranavam Ravikumar said...

Good one..! Let me thank you for this first.

சிவகுமார் said...

/* நீங்க லைன்ல இருக்கீங்களா, இல்லையாங்குற கவலையே இல்லாம அவங்க பாட்டு ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருப்பாங்க */

Ya ya ya very correct .

DINESH said...

NICE POST...THIS MAY HELP ME IN FUTURE...BUT NINGA SONNA INTHA YELLA POINTSAYUM UNGA HUSBAND FOLLOW PANNANGALA####

பூமகள் said...

ஏன்.. ஏன்.. ஏன் இந்த கொலை வெறி...

பொண்ணுகள அலசுவதாக நினைச்சி இப்படி மானத்தைக் கப்பல் ஏத்திட்டீங்களே விக்கி...

ஹூம்.. இதை எங்க ஆத்துக்காரரிடமிருந்து மறைக்கனுமே...

RMS said...

சீர்காழி------->இது நம்ம ஏரியா
www.sirkaliarea.blogspot.com

jayakumar said...

ha...ha..ha....

Vijiskitchencreations said...

super vigneshwari.

குறையொன்றுமில்லை. said...

இதில் என்கருத்துனு எதுவும் இல்லை. நன்னா எழுதி இருக்கீங்க.

a said...

சற்றே தாமதமாய் படித்தேன்...
----------------------------
இன்னும் சிரித்து முடிக்கவில்லை...

Unknown said...

super