Monday, August 9, 2010

இக்கரைக்கு அக்கரை பச்சை

திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகப் போகின்றன. தினசரி ஒரே கதை. காலை ஏழு மணிக்கு அலாரம், எட்டு மணிக்கு சமையலறை, ஒன்பது மணிக்கு பூஜை, பத்து மணிக்கு அலுவலகம். எட்டு முதல் பத்து மணி நேர வேலையில் க்ளையண்ட் இஷ்யூஸ், சப்போர்ட் க்வெரி, சேல்ஸ் கால்ஸ் மானிட்டரிங், சேல்ஸ் ஃபாலோஅப், சேல்ஸ் ஸ்ட்ரேடஜி, இன்வாய்ஸ் ப்ரிபரேஷன், நடுவே புத்துணர்ச்சிக்கு யோகியின் புன்னகை. மாலை 8 மணிக்கு வீடு. மறுபடியும் சமையலறை. ஒன்பதரைக்கு சாப்பாடு. அரை மணி நேரம் தொலைக்காட்சிக்கும், 1 மணி நேரம் புத்தகத்திற்குமென பகிர்ந்தளித்துப் பின் 12 மணிக்குத் தூக்கம். நடுவே தொழில் பயணங்கள். வேலைக்கான நேரம் இவ்வளவென குறிப்பிட்டுக் கூற முடியா அளவு ஒரு கையில் டூத் ப்ரஷுடனும், மறுகையில் லேப்டாப்புடனும் ஆரம்பாமகும் வேலைகள். இரவு கண்ணயர்ந்து மூடும் வேளை லேப்டாப்பை அணைக்கக் கூட முடியாது. இவைகளுக்கு நடுவே எங்காவது சென்று 4 நாட்கள் களைப்பாறி வர எண்ணும் பொழுதுகளிலும் அலுவலகத்திலிருந்து அழைப்புகள் வந்த வண்ணமிருக்கும்.

யோகியிடம் கடந்த ஒரு வருடமாய் சொல்லிக் கொண்டிருக்கிறேன் வேலையை விட்டு விடுகிறேனென. ஓய்வாய் உட்கார்ந்திருப்பது அவ்வளவு எளிதில்லை என்கிறார், அதுவும் எனக்கு. வீட்டிலிருந்து விடலாமெனும் நினைப்பு அதிகமாகும் நேரங்களில் வேலை பார்க்க முடியாமல் அலுவல்களில் குற்ற உணர்ச்சி மேலிடுவது கண்டு மிரள்கிறேன். வேலையின் மீதான காதல் குறைவது கண்டு வருத்தமாயிருக்கிறது. தவிர, வீட்டையும் அவரையும் பார்த்துப் பார்த்துக் கவனிக்கும் மனைவியாய் இருக்கவும் ஆசையாயிருக்கிறது. இக்குழப்பத்துடன் உடனிருப்போரைக் கேட்டால் அவர்களனைவரும் ஆளாளுக்கு ஒன்று சொல்லிக் குழப்புகிறார்கள். இறுதியாய் ஒரு வார விடுமுறையெடுத்து வீட்டிலிருப்பதன் சவால்களை சந்திக்கத் தயாராகிவிட்டேன். ஒரு வாரம் சலிக்கவில்லையெனில் இதை ஒரு மாதமாக நீடித்து அதற்கு மேலும் வீட்டிலிருப்பது சிரமமாயிருந்தால் அலுவலகம் போகலாமென எண்ணம். இதுவே பிடித்தமாயிருந்தால் நல்லதொரு இல்லத்தரசியாய் இருந்து விட ஆசை. முழு ஒத்துழைப்பு தர என்னவர் இருக்கையில் என்ன கவலை...

சென்ற வெள்ளிக் கிழமையிலிருந்து விடுமுறை ஆரம்பம். பத்து மணிக்கு அவரை அலுவலனுப்பி விட்டு, வீட்டு வேலைகளை பணிப்பெண்ணிடம் முடித்து வாங்கிவிட்டு, ஃபேஸ்புக், ப்ளாக், சமையல், வாசிப்பு, பெயிண்டிங் என்கையில் இதமாயிருக்கிறது, புதிதாயும். முதல் அத்தியாயத்துடன் நிற்கும் பல புத்தகங்களையும் தூசி தட்டி எடுத்தாயிற்று. அலமாரியை அழகாய் அடுக்கியாயிற்று. ரொம்ப நாளாய் செய்ய வேண்டியிருந்த வீட்டு இண்டீரியரின் மாற்றங்கள் செய்து கொண்டுள்ளேன். புதிதாய்ச் செடிகள் வாங்கி வந்து நட்டாயிற்று. தினமும் நீரூற்றி அவற்றுடன் பேச பத்து நிமிடங்கள் தேவையாயிருக்கிறது. பால்கனியில் நின்றவாறே கீழே கிரிக்கெட் விளையாடும் வாண்டுகளை ரசிக்கப் பிடித்திருக்கிறது. “ஆன்ட்டி, பால்” என வரும் சிறுவர்களுக்கு பந்துடன் சாக்லேட்டுகளையும் கொடுக்கையில் பதிலாய் அவர்கள் தரும் குறும்புச் சிரிப்பு நிறைவாயிருக்கிறது. மாமியாருக்காய் கிருஷ்ணர் பெயிண்டிங் செய்து அனுப்ப வேண்டும். யோகியின் கைக்குட்டைகளில் எம்ப்ராய்டிங் செய்ய வேண்டும். சமைக்க மறந்திருக்கும் கீரைகளை ஆய்ந்து சமைக்க வேண்டும். மாலையில் அவர் வருகையில் விதம் விதமாய் சமைத்து அசத்த வேண்டும். அட, வீட்டிலும் செய்ய எவ்ளோ வேலைகளிருக்கு.

செய்யலாம், சலித்துப் போகும் வரை அல்லது அலுத்துப் போகும் வரை அல்லது அலுவல் அழைக்கும் வரை. நிச்சயமாய் எத்தனை நாட்களுக்கு நல்லதொரு மனைவியாய் வீட்டிலேயே இருக்க முடியுமெனத் தெரியவில்லை. எக்கரை பச்சை எனப் பார்த்து விடலாம்.

கடைசியா, எதுக்கு இவ்ளோ பெரிய பதிவெழுதினன்னு உறுமுறவங்களுக்கு... , ம். அதே தான். இவ்வாரம் முழுக்க நான் வீட்டில். அதனால் தினம் பதிவுகளுண்டு. மொக்கைகளுமுண்டு. குல தெய்வத்தை வேண்டிட்டு இந்தப் பக்கம் தினம் வந்து போங்க மக்கா.

50 comments:

கண்ணகி said...

விக்னேஸ்....வீட்டில் இருந்துபாருங்க...அப்புறம் தெரியும்...அக்கறைக்கு இக்கரை பச்சைன்னு.....

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே இரண்டு விதமான அனுபவங்கள். “தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு” என்பது உங்களுக்குப் புரியும். இந்த விடுமுறையை நன்கு அனுபவிக்க வாழ்த்துக்கள்.

Mohan said...

போரடிக்காமல் இருக்க வாழ்த்துகள்!

Anonymous said...

ரொம்ப கஷ்டம் விக்கி, இருக்கவே முடியாது... இருந்தாலும் குறுகிய கால விடுமுறை என்பதால் என்ஜாய் :))

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள்! Happy Holidays!

ஸ்ரீ....

சௌந்தர் said...

விக்னேஸ்வரி அக்காவுக்கு இனி விடுமுறை அனைவர் ப்ளாக் பக்கம் வருவார்கள்...

ஜெய் said...

// ஆன்ட்டி //
வயசாயிடுச்சு போல.. ;-)

ஆமா... விகடன்ல பதிவு பத்தி வந்துருக்குன்னு கேள்விப்பட்டேன்... அப்படியா?

தமிழன் சுந்தரா said...

நல்ல முயற்சி, ஏனென்றால் வாழ்கை ஒரேமாதிரி போச்சின்னா நல்லா இருக்காது. இதுமாதிரி சின்ன சின்ன இடைவேளை நல்லதுதான்.

என்ன இந்த யோசனை மே மாதம் நடுல வந்திருந்தா நான் பாக்கியவானாயிருபேன். :-)

உங்கள் விடுமுறையை மகிழ்வுடன் அனுபவியுங்கள்! வாழ்த்துகள்!

a said...

//
குல தெய்வத்தை வேண்டிட்டு இந்தப் பக்கம் தினம் வந்து போங்க மக்கா
//
கண்டிப்பாக............

நம் கண்ணுக்கு தற்போது ரசனையாய் தெரியும் விசயங்கள், ஓய்வு நிரந்தரமாகும்போது சற்றே ஆயாசம் அளிக்க கூடியதாய் தெரியும். நன்றாக யோசித்து முடிவெடுங்கள்...

கவி அழகன் said...

நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

ஹாலிடேயை என்ஜாய் பண்ணுங்க விக்னேஷவ்ரி..:))

Unknown said...

ஓய்வு என்பது நம் மனம் சம்மந்தப்பட்டதுதான்.

சென்னை டிராஃபிக் போலீஸ்களில் ட்யூட்டியில் இருக்கும் போதே ’ஓய்வாக’ இருப்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

உங்களை விட பிஸியாக இருக்கும் இல்லத்தரசிகளையும் பார்த்திருக்கிறேன்.

இனி, உங்களுக்கு பதிவெழுத நேரம் இருக்குமா என்பது சந்தேகமே!

S Maharajan said...

வாழ்த்துக்கள்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஒரு வாரம் லீவா?
ரைட்டு!!!
என்ஜாய் யுவர் டைம்.

எல் கே said...

தவறாக என்னைவிட்டால் இன்னுமொரு யோசனை. வேலைக்காரிக்கு ஒரு வாரும் விடுமுறை கொடுத்து அந்த வேலைகளையும் நீங்களே செய்துப் பாருங்கள் . இன்னும் வித்யாசமாக இருக்கும்

ஸ்ரீவி சிவா said...

அலுவலக வேலைகளை முன்னிறுத்தி மற்ற விஷயங்களை இழந்து வருந்துவதற்கு பதில், இது நல்ல முடிவாகத் தோன்றுகிறது.
ரசனையோடு ஒரு மாற்றத்திற்கு ஆயத்தமாக்கிக் கொள்ளுங்கள்.

எழுத்து நடையில் ஒரு வசீகரம் தெரிகிறது விக்கி. very much Notable. கலக்குங்க!

Anonymous said...

நான் ஒரு ஆறு மாசம் வீட்டில் இருந்து எஞ்சாய் பண்ணினேன் போன வருஷம். இப்பல்லாம் காண்ட்ராக்ட்தான். அப்பதான் ப்ரேக் எடுக்க முடியும். வீட்டில் இருக்க முடியாதுன்னு இல்லை. நான் சந்தோஷமா இருந்தேன்.
போரடிக்கலையான்னு மத்தவங்க கேட்டு உங்களுக்கே போரடிச்சுடுச்சுன்னு தோணிடும் :)

Anonymous said...

ஒரு வாரம் ரொம்ப கம்மி சோதனைக்கு. ஒரு மாதம் விடுமுறை எடுத்துப்பாருங்க. எனக்கு ஆறு மாதம் கூட போரடிக்கவே இல்லை.

ஹுஸைனம்மா said...

விக்னேஷ்வரி, வேலை குறித்தான உங்கள் எண்ணங்கள் அப்படியே எனது உணர்வுகளையும் பிரதிபலிக்கின்றன. ”இந்த மாசத்தோட ரிஸைன் பண்ணப்போறேன்” என்ற என் அறிக்கை வீட்டில் வழக்கமான வாடிக்கையாகிவிட்டது. சின்னவன் வேறு அவ்வப்போது குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்துகிறான்.

உங்களின் டெஸ்ட் செய்து பார்த்து முடிவெடுக்கும் முடிவு நல்ல முயற்சி!!

'பரிவை' சே.குமார் said...

வீட்டில் இருந்துபாருங்க...அப்புறம் தெரியும்...அக்கறைக்கு இக்கரை பச்சைன்னு.

Senthilmohan said...

சும்மா இருக்குறது எவ்ளோ பெரிய கஷ்டம்னு எல்லாருக்கும் தெரியும். But internet ஒன்னு போதும். 24 Hrs-சே பத்தாதுங்க. சும்மா பேச்சுக்காகன்னு சொல்லல. College முடிச்சுட்டு வேலைக்கு join பண்றதுக்கு ஒரு நாலு மாசம் ஆகிடுச்சு. அப்பவெல்லாம் இண்டர்நெட்டும், TV-யும் தான் துணை. அப்ப ஆரம்பிச்சது தான் Blog, Facebook, Myspace, Youtube etc எல்லாமே. சும்மா Blog-ல நாம follow பண்றவங்க, நம்ம Blog-க follow பண்றவங்கன்னு எல்லாரோட First post-லிருந்து கடைசி வரைக்கும் படிச்சு கமெண்ட் போடுறது. அவங்க யாரஎல்லாம் follow பண்றாங்கன்னு பாத்து, புடிச்சிருந்தா நாம follower ஆவுறது. இங்க மறுபடியும் மேற்கண்ட வேலையப் பண்றது. இல்லாட்டி இருக்கவே இருக்குது நம்ம மதுரை Project , Techsatish Project, Facebook Games(தோட்டம், மீன்தொட்டி, பேக்கரி-ன்னு பலது இருக்கு. Try பண்ணிப் பாருங்க.), scribd, etc., சுடு தண்ணி வெக்க மட்டுமே தெரிஞ்ச சிலர், கல்யாணத்துக்கு அப்புறம் சமையல்ல பட்டய கெளப்புறாங்க. உங்களுக்கு சமைக்க வேற தெரியும்னு சொல்றீங்க. So உங்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை. இனி உங்க வீட்டுல வேளைக்கொரு வித்தயாசமான Dish தான். கொஞ்ச நாள் போன பின்னாடி இதுவும் போர் அடிக்கும். என்னடா இது? அதே Routine மாதிரி தான் இருக்குது. அப்ப சமையல், ஆபீஸ், க்ளையண்ட் இஷ்யூஸ், சேல்ஸ் ஸ்ட்ரேடஜி etc., இப்ப internet, புக்ஸ், cooking, painting, etc., பண்ற வேல மட்டும் தான் வித்தியாசம்னு தோணும். இப்படி தோணாத மாதிரி plan பண்ணிட்டு, சீக்கிரம் vrs வாங்கிட வாழ்த்துக்கள்.

அன்பேசிவம் said...

//வீட்டிலிருந்து விடலாமெனும் நினைப்பு அதிகமாகும் நேரங்களில் வேலை பார்க்க முடியாமல் அலுவல்களில் குற்ற உணர்ச்சி மேலிடுவது கண்டு மிரள்கிறேன். வேலையின் மீதான காதல் குறைவது கண்டு வருத்தமாயிருக்கிறது.//

அட அட அட ...:-)
பாசாங்கில்லாமல் உண்மையை அழகாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் விக்கி. ஹேப்பி ஹாலிடேஸ்

அன்பேசிவம் said...

அட அட அட பாசாங்கில்லாமல் உண்மையை அழகாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் விக்கி. ஹேப்பி ஹாலிடேஸ்

Raghu said...

//எட்டு முதல் பத்து மணி நேர வேலையில் க்ளையண்ட் இஷ்யூஸ், சப்போர்ட் க்வெரி, சேல்ஸ் கால்ஸ் மானிட்டரிங், சேல்ஸ் ஃபாலோஅப், சேல்ஸ் ஸ்ட்ரேடஜி, இன்வாய்ஸ் ப்ரிபரேஷன், நடுவே புத்துணர்ச்சிக்கு யோகியின் புன்னகை//

ப‌திவெழுதுத‌ல், ப‌திவு வாசித்த‌ல், பின்னூட்ட‌மிடுத‌ல், த‌மிழ்ம‌ண‌ம், சாட்....இதெல்லாம் இதுல‌ வ‌ராதா விக்கி? ;))))

தராசு said...

ரைட்டு

Vidhya Chandrasekaran said...

யார் சொல்றதையும் காதுல போட்டுக்காதீங்க. உங்களுக்கு என்ன தோணுதோ செய்ங்க. ஹேப்பி ஹாலிடேஸ்.

அப்புறம் தினக்கும் பதிவு. கொஞ்சம் ரீ கன்ஸிடர் செய்ங்க. நாங்க பாவம்:)))))))))))

சி.பி.செந்தில்குமார் said...

விகடனில் பேட்டி வந்ததற்கு வாழ்த்துக்கள்.பிடிக்காத வேலை பற்றி குறிப்பிட்ட விதம் அருமை.7 நாட்கள் கழித்து ஆஃபீஸ் ஓடப்போறீங்க

சுசி said...

//இவ்வாரம் முழுக்க நான் வீட்டில். அதனால் தினம் பதிவுகளுண்டு. மொக்கைகளுமுண்டு. குல தெய்வத்தை வேண்டிட்டு இந்தப் பக்கம் தினம் வந்து போங்க மக்கா.
//

பிள்ளையாரப்பா.. என்ன ஒரு நல் மனம்!!

Cable சங்கர் said...

வீட்டிலிருப்பது மொனாட்டனி ஆகும்போது வேலைக்கு போகத் தோன்றும்.. சரி விடுங்க அதுவரை என் ஜாய்.

அது சரி நீங்க 2states படிச்சிட்டீங்களா?

CS. Mohan Kumar said...

இந்த உண்மையான எழுத்தும் பகிர்வும் ரொம்ப பிடிச்சிருக்கு விக்கி.

Menaga Sathia said...

இக்கரைக்கு அக்கரை பச்சைதான் விக்கி..நானும் சிலசமயம் வேலைக்கு போகலாம்ன்னு நினைக்கிறேன்னு என் வீட்டுக்காரர் கிட்ட சொல்வேன் அதற்க்கு அவர் வீட்லதான் என்னை தொல்லை பண்ற அங்கபோய் யார் உயிரை எடுக்கப்போற..எல்லாம் ஒன்னுதான்ன்னு சொல்லுவார்..விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்...

எல் கே said...

/அதற்க்கு அவர் வீட்லதான் என்னை தொல்லை பண்ற அங்கபோய் யார் உயிரை எடுக்கப்போற..//

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு

RajaS said...

உங்கள் பதிவு அருமை ....எந்த ஒரு வேலை யையும் பிடித்து ரசித்து செய்தால் கண்டிப்பாக சலிகாது ....

நிலாரசிகன் said...

//தினமும் நீரூற்றி அவற்றுடன் பேச பத்து நிமிடங்கள் தேவையாயிருக்கிறது. //

அருமை. விடுமுறை சிறப்பாகட்டும்.

Radhakrishnan said...

:) நல்ல வசந்தமான வாழ்க்கை. எக்கரையையும் அக்கறையுடன் அணுகினால். அலுப்பு தட்டாமல் வாழ்வது எப்படி அப்படின்னு ஒரு பதிவு கட்டாயம் உங்ககிட்ட இருந்து வரும்.

தேவன் மாயம் said...

எக்காரணம் கொண்டும் வேலையை விட வேண்டாம்!

Paleo God said...

:)

ஹாப்பி ஹாலிடேஸ்!

விக்னேஷ்வரி said...

ம், ஆமா கண்ணகி அதைத் தெரிஞ்சுக்க தான் ஆசை.

நன்றி வெங்கட்.

நன்றி மோகன்.

ம், பார்க்கலாம் விஜி. நன்றி.

நன்றி ஸ்ரீ.

கண்டிப்பா வருவேன் சௌந்தர் அண்ணா. நான் அக்கா இல்ல :)

ஆமா ஜெய். 4 வயசு குழந்தையை விட நமக்கு வயசு அதிகம் தானே. :)
பதிவு பத்தி வரல. தமிழ் வலைப்பூக்கள் பற்றின கட்டுரையில் என் கருத்தும் வந்திருக்கு.

வாங்க சுந்தரா. நன்றி. உங்க கல்யாணத்துக்கு வர முடியாமப் போனதுக்கு ஸாரி.

விக்னேஷ்வரி said...

ரொம்ப சரியா சொன்னீங்க யோகேஷ். நிச்சயம் நிதானமாய் யோசித்தே முடிவெடுப்பேன்.

நன்றி யாதவன்.

நன்றி தேனம்மை.

தெரியலை இளங்கிழவன். எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

நன்றி மகாராஜன்.

நன்றி பாலகுமாரன்.

க்ளிக் செய்து வாசித்தால் ஒண்ணுமே பிரிய மாட்டேங்குது ராஜ்.

விக்னேஷ்வரி said...

ஹிஹிஹி... இந்த விஷப் பரீட்சை வேண்டாம் LK. அப்புறம் வீட்டு வேலை பார்க்கப் பிடிக்காமல் வேலைக்கு ஓடிடுவேன். :)

நன்றி சிவா.

கரெக்ட் தான் அம்மிணி. அதனால தான் யார்கிட்டேயும் வேலை விடப் போறேன்னு இன்னும் சொல்லல. ஒரு வாரம் தாக்குப் பிடிக்க முடிஞ்சா ஒரு மாசமா ஆக்கிக்கலாம்.

நன்றி ஹூஸைனம்மா. உங்களுக்கும் வேலை செய்வது பளுவாக இருந்தால் கொஞ்சம் ப்ரேக் கொடுத்துப் பாருங்களேன்.

ம், பார்க்கறேன் குமார்.

கரெக்டா சொன்னீங்க செந்தில் மோகன். ஆனா அதிகம் வெட்டி வேலைகள் செய்யாமல் மன நிறைவோடு நேரத்தைக் கழிக்க ஆசை. பார்க்கலாம்.

நன்றி முரளி.

விக்னேஷ்வரி said...

ரகு, ஏன்... ஏன்........

வாங்க தராசு.

சரி வித்யா. ஹேய், நோ எஸ்கேப். தினம் பதிவு வந்தே ஆகும். :)

நன்றி செந்தில் குமார். ம், பார்க்கலாம் ஓடப் போறேனா இல்லையானு.

சுசி, ஹிஹிஹி...

ம், பார்க்கலாம் கேபிள். ஓ புத்தகம் வந்தவுடனேயே வாங்கி வாசிச்சாச்சுங்க. :)

ரொம்ப நன்றி மோகன்.

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... பாவம் மேனகா நீங்க. வேலை பார்க்க ஆவலாயிருந்தால் வீட்டிலிருந்தே ஏதாவது முடியுமாவெனப் பாருங்களேன். குக்கிங் க்ளாஸ் எடுங்களேன்.

பாவம் LK அவங்க. :)

கரெக்ட் தான் ராஜா. பிடித்தம் தானே முக்கியம். அது தானா வரணும் தானே...

நன்றி நிலாரசிகன்.

நன்றி ராதாகிருஷ்ணன்.

அந்த எண்ணமிருக்கு டாக்டர். பார்க்கலாம்.

நன்றி ஷங்கர்.

வினோ said...

விடுமுறை நன்கு அமைய என் வாழ்த்துக்கள் விக்கி..
தினமும் ஒரு பதிவா? சூப்பர்.. கலக்குங்க..

ராம்ஜி_யாஹூ said...

INSTEAD OF 8+ HRS WORK, YOU COULD TRY FOR 2 TO 3 HRS WORK PER DAY OR CHANGE THE LINE OF WORK AS TEACHING OR IN NGO.

RAGUNATHAN said...

//தவிர, வீட்டையும் அவரையும் பார்த்துப் பார்த்துக் கவனிக்கும் மனைவியாய் இருக்கவும் ஆசையாயிருக்கிறது.//

யோகி கொடுத்து வச்சவருதான்...பதிவு நல்லா இருக்குங்க விக்னேஸ்வரி. நல்ல நடை. :)

mvalarpirai said...

வேலைக்கு போன பெண்களுக்கு, வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பது ரொம்ப கடினம் என தோழிகள் சொல்ல கேள்விபட்டிருக்கேன்...பார்ப்போம் உங்க அனுபவம் எப்படினு

முகுந்த்; Amma said...

வீட்டில இருப்பது கொஞ்ச நாளைக்கு ரொம்ப நல்லா இருக்குங்க. ஆனா, அதுவே ஒரு ரொடீன் ஆகிட்டா அதுவும் கடி ஆயிடும், அதனால, போர் அடிக்கிற வரை என்ஜாய்.

commomeega said...

// தேவன் மாயம் said...
எக்காரணம் கொண்டும் வேலையை விட வேண்டாம்!\\

இதை நான் 100% வழி மொழிகிறேன்.விகடன் பேட்டி-யை எப்படி நான் மிஸ் பண்ணேன். ப்ளீஸ் அது எந்த வாரம் என்று சொல்லுங்கள் .

mariammal said...

வேலைக்கும் வீட்டுக்குமான வாழ்க்கை தான் best வீட்ல இருந்தா ஒரே போர்