Wednesday, June 23, 2010

யாருக்கு விருது தரணும்...

நேற்று ஒவ்வொரு சேனலாக மாற்றி வரும் போது தமிழ்த் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் பார்வை பட்டது. எனக்கென்னவோ எல்லாத் தொடர்களும் பல வகைகளில் ஒன்றுபட்டு இருப்பதாகவே தெரிகிறது. எனக்குத் தெரியும் சில ஒற்றுமைகள். உங்களுக்கு எதுவும் கூடுதலாகத் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. கதை ஒரு பெண்ணைச் சுத்தியே நகரும். அந்தப் பெண்ணின் வாழ்வில் பல கஷ்டங்களும், பல அடிகளும் வந்து போகும். எப்போவும் அவரைச் சுற்றியிருக்குறவங்க அவங்களை அழிக்க சதித் திட்டம் தீட்டிட்டே இருப்பாங்க.

2. அவசியம் இன்னொரு பெண் தான் வில்லியாவும் இருப்பாங்க. இவங்க ரெண்டு பேருக்குள்ள சின்னப் புள்ளத் தனமா ஏதாச்சும் வாய்க்கால் சண்டை இருக்கும். அதுக்காக சீரியல்ல 10 வருஷம் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. ஆனாலும் கடைசி எபிசோட்ல கடைசி 10 நிமிஷத்துல ஹீரோயினோட வசனம் கேட்டுத் தப்பை உணர்ந்து திருந்திடுவாங்க.

3. கதாநாயகி சூப்பரா சேலைகட்டி, தோள்ல ஒரு ஹேண்ட் பேக் மாட்டிக்கிட்டு, மேக்கப் குறைவா போட்டுகிட்டு, எப்போவுமே அழுது வீங்கின கண்களோடவும் துணிச்சலான முகத்தோடவும் வலம் வருவாங்க. கூடவே நண்பர்ன்னு ஒருத்தர் சோக முகத்துடன் வருவார்.

4. சின்னத்திரை கதாநாயகி ஆகுறதுக்கான தகுதி என்னன்னா, கொஞ்சம் திரைப்படங்கள்ல ஹீரோயினா நடிச்சிட்டு அப்புறம் அக்கா, அண்ணி வாய்ப்புகள் வந்தும் “சினிமால நான் எல்லாப் பக்கங்களையும் பார்த்திட்டேன். இனி வளரும் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பறேன்”னு சும்மாச்சுக்கும் பேட்டி குடுத்திட்டாப் போதும்.

5. சீரியல்ல நடிச்சிட்டிருக்குற பொண்ணோ, பையனோ ஏதாச்சும் உடம்பு முடியாமப் போனாலோ, சொந்த வேலைகள் காரணமா நடிப்பைத் தற்காலிகமா துறக்க வேண்டி வந்தாலோ, அவங்களோட கதாபாத்திரங்கள் கொல்லப்படணும். இதையும் கதைக்கு நடுவுல திடீர்ன்னு கொண்டு வந்து புகுத்தி பார்க்குறவங்களை குழப்படிக்குறதுல கில்லாடிங்க சின்னத்திரை இயக்குனர்கள்.

6. கதாநாயகியைக் கல்யாணம் பண்ணிக்கிறவருக்கு இவங்களைத் தவிர வேறொரு மனைவியும் இருக்கணும் அல்லது அவர் கெட்டவரா இருக்கணும். இப்படியெல்லாம் இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம்ன்னு அவங்க அவருக்கு சேவை பண்ணுவாங்க.

7. கண்டிப்பா ஹாஸ்பிட்டல் சீன் இல்லாம எந்த ஒரு சீரியலும் எடுத்ததா சரித்திரமே இல்ல. மாசத்துக்கு ஒரு தடவை யாராச்சும் ஏதாச்சும் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுவாங்க. அதுவும் சாகுற நிலைமைல அட்மிட் ஆனா அது செவ்வாய், வெள்ளிக் கிழமைகள்ல தான் வரும்.

8. குடும்பத்துல இருக்குற யாராச்சும் பேசாம சண்டை போட்டு இருந்தாங்கன்னா, அவங்க கண்டிப்பா ஏதாச்சும் கோவில்ல சந்திச்சுக்குவாங்க. அப்போ பேசவா, வேண்டாமான்னு அவங்க முகத்துல எல்லா ரசமும் சொட்டும்.

9. ஹீரோயினோட அப்பா ரொம்ப நல்லவராவும், பெரும்பாலும் ஏழையாவும் இருப்பார். ஆனா அவரோட சம்பந்தி வீட்டுக்கு மட்டும் அவர் எப்போவுமே ரொம்பத் தப்பானவரா தெரிவார்.

10. வக்கீல், போலிஸ், டாக்டர், அரசியல்வாதி, ரௌடி, காமன் மேன் இப்படி ஹீரோயினுக்கு சம்பந்தமில்லாத, அந்த அம்மணியை முன்னப் பின்னப் பார்த்திருக்காதவங்க கூட அவங்களுக்கு நல்லது செய்யவே நினைப்பாங்க. ஏன்னா அவங்க முகத்துல அப்படி ஒரு நல்லவ அடையாளம் தெரியும். ஆனா எதிரிக்கு மட்டும் அது புரியவே புரியாது.

இப்போ சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதெல்லாம் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா உண்மையில் அதைக் கொடுக்க வேண்டியது பார்வையாளர்களுக்குத் தான். ஏன்னா எல்லாக் கதைகளும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு கதையிலேயும் இருக்குற கதாபாத்திரங்கள், சம்பவங்கள் இதையெல்லாம் நினைவு வெச்சுக்கறதோட இல்லாம, அவங்களுக்காக இவங்க அழுறதும், அவங்க வீட்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா, தன் வீட்ல சமைக்காம இருக்குறதும்ன்னு இவங்க செய்ற தியாகங்கள் அதிகம். அதுனால இனி பார்வையாளர் விருதுன்னு ஒண்ணு வந்தே ஆகணும். நீங்க என்ன சொல்றீங்க...

42 comments:

rad said...

very nice :)

rad said...

very nice .....

வால்பையன் said...

தமிழ்மணத்தில் சேர்த்து ஒரு ஓட்டும் போட்டாச்சு!

ரொம்ப சீரியல் பாக்காத்திங்க மனநலத்துக்கு கேடுன்னு ஒரு டாக்டர் சொல்லியிருக்காரு!

வெங்கட் நாகராஜ் said...

நிறைய வீடுகளில் சீரியல் நேரங்களில் வீட்டுக்கு வரும் கணவருக்கு/விருந்தாளிக்கு தண்ணி கூடம் குடுக்க மாட்டாங்க! அய்யோ இப்ப எதுக்கு வந்தாங்க இவங்கன்ற ஒரு பார்வை இருக்கும் கண்டிப்பா! நல்ல பதிவு. பார்க்கும் நபர்களுக்கு கண்டிப்பா விருது தரவேண்டியது தான். : )

Raghu said...

'சினிமாவுக்கும் சீரிய‌லுக்கும் பெரிய‌ வித்தியாச‌ம் இல்ல‌ங்க‌. இன்ஃபாக்ட் சொல்ல‌ப்போனா, சீரியல்ல‌ ந‌டிக்க‌ற‌துதான் ரொம்ப‌ க‌ம்ஃப‌ர்ட‌பிளா இருக்கு. எல்லாரும் ஆஃபிஸ் போயிட்டு வ‌ர்ற‌ மாதிரி நாங்க‌ளும் ஈவினிங்கே வீட்டுக்கு ரிட‌ர்ன் ஆயிட‌லாம். சினிமாவில் ந‌டிச்ச‌தை விட‌ சீரிய‌லில் ந‌டிக்கும்போதுதான் ம‌க்க‌ள்கிட்ட‌ ஈஸியா ரீச் ஆக‌முடியுது'........இதுவும் அழ‌கான‌ ஆன்ட்டிக‌ளின் டெம்ப்ளேட் பேட்டிக‌ளில் ஒன்று

ஆமா நீங்க‌ எப்போருந்து சீரிய‌ல் பார்க்க‌ ஆர‌ம்பிச்சிங்க‌?!

நான் ரொம்ப‌ ர‌சித்து பார்த்த‌ சீரிய‌ல்னா அது 'ம‌ர்ம‌தேச‌ம்'தான். 'விடாது க‌ருப்பு'வை டிவிடியா ரிலீஸ் ப‌ண்ணா க‌ண்டிப்பா வாங்கி ம‌றுப‌டியும் பார்க்க‌ணும்னு நினைச்சிருக்கேன்..பார்ப்போம்

Menaga Sathia said...

ha ha super vikki!!

அன்பேசிவம் said...

இந்த சீரியல் பாக்கிறதெல்லாம் மர்மதேசம் நிஷாகந்தியோட போச்சு விக்கி, அதெல்லாம் ஒரு ஈர்ப்போட பார்த்தேன்.. இப்ப சோ மச் போரிங்.... சில டைட்டில் பாடல்கள் நல்லா இருக்கேன்னு பார்ப்பேன் அவ்ளோதான் சீரியல் வாசம் நமக்கு.....

Ahamed irshad said...

:)

எம்.எம்.அப்துல்லா said...

:)

ஜெய் said...

அடடே... ஒரு research பண்ணற அளவுக்கு சீரியல் பாத்து இருக்கீங்க... முதல் பார்வையாளர் விருது உங்களுக்குதான்... :)

தராசு said...

//கதாநாயகியைக் கல்யாணம் பண்ணிக்கிறவருக்கு இவங்களைத் தவிர வேறொரு மனைவியும் இருக்கணும் அல்லது அவர் கெட்டவரா இருக்கணும்.//

பெண்ணிய வியாதிகளுக்கு ஆண்கள் மேல ஏந்தான் இப்பிடி ஒரு வெறுப்போ தெரியல

ஈரோடு கதிர் said...

:)))))

Vidhya Chandrasekaran said...

;))

RAMYA said...

விக்கி அக்கு வேறா ஆணி வேறா அலசி இருக்கீங்க:)

உண்மையா பரிசு உங்களுக்குத்தான் தரனும்:)

இன்றைய சின்னத்திரை நிலைப்பாடு இதுதான்.

ஜோசப் பால்ராஜ் said...

ரைட்டு,

ஷர்புதீன் said...

தங்கச்சிய நாய் கடிச்கிடுச்சிபா...
( வேற என்னத்த எழுத ...)

Iyappan Krishnan said...

:))

ப்ரியமுடன் வசந்த் said...

//1. கதை ஒரு பெண்ணைச் சுத்தியே நகரும். அந்தப் பெண்ணின் வாழ்வில் பல கஷ்டங்களும், பல அடிகளும் வந்து போகும். எப்போவும் அவரைச் சுற்றியிருக்குறவங்க அவங்களை அழிக்க சதித் திட்டம் தீட்டிட்டே இருப்பாங்க.

2. அவசியம் இன்னொரு பெண் தான் வில்லியாவும் இருப்பாங்க. இவங்க ரெண்டு பேருக்குள்ள சின்னப் புள்ளத் தனமா ஏதாச்சும் வாய்க்கால் சண்டை இருக்கும். அதுக்காக சீரியல்ல 10 வருஷம் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. ஆனாலும் கடைசி எபிசோட்ல கடைசி 10 நிமிஷத்துல ஹீரோயினோட வசனம் கேட்டுத் தப்பை உணர்ந்து திருந்திடுவாங்க.
//

எல்லா சீரியல் டைரக்டர்ஸும் ஒருவேளை பெண்ணாதிக்கவாதிகளாக இருப்பாங்களோ என்னவோ ?

:)

சுசி said...

ஹஹாஹா.. பெரிய ஆராய்ச்சிதான்..

மூணாவது சூப்பர்..

மைக் முனுசாமி said...

ராவண் - உங்க ஸ்டைல் விமர்சனம் எதிர்பாக்கிறேன். போடுவீங்களா..??

KKPSK said...

நல்ல observation

shortfilmindia.com said...

டெல்லில இருந்திட்டு பாக்குற நாலு மெயின் சேனல்லையே இவ்வள்வு விஷயம் எழுதியிருக்கிற உங்கள பாராட்டுறேன்.


cablesankar

Chitra said...

அவங்களுக்காக இவங்க அழுறதும், அவங்க வீட்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா, தன் வீட்ல சமைக்காம இருக்குறதும்ன்னு இவங்க செய்ற தியாகங்கள் அதிகம். அதுனால இனி பார்வையாளர் விருதுன்னு ஒண்ணு வந்தே ஆகணும். நீங்க என்ன சொல்றீங்க...


.....righttu!

Anonymous said...

epdi vikki epdi puttu puttu vachittenga

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

watch Thekkithi Ponnu!!!
spzly for Raja's Title Song.

R.Gopi said...

இம்புட்டு சீரியல் பாக்கறது ஒடம்புக்கு ஆகாதாம்...

எல்லாரும் சொல்றாங்க....

பாத்துக்கோங்க....

Anonymous said...

சீரியலை ஆராய்ச்சி பண்ணும் அளவிற்கு வெட்டியாக இருக்கும் விக்கியை பற்றி யோகிக்கு ஒரு கடிதம் எழுதலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்றே? :)

'பரிவை' சே.குமார் said...

பெரிய ஆராய்ச்சிதான்..!
சூப்பர்..!!

கார்க்கிபவா said...

aavvvvvvvvvv

விக்னேஷ்வரி said...

Hi Rad, Thank u da.

நன்றி வால். நான் சீரியலே பாக்குறதில்லைங்க.

வாங்க வெங்கட், நன்றி.

ஹாஹாஹா... சரி தான் ரகு. நான் சீரியல் பாக்குறதில்லை ரகு. எப்போவாச்சும் சேனல் மாத்தும் போது பார்த்தது. ம், எல்லாருக்கும் பிடிச்ச சீரியல் அது.

நன்றி மேனகாசாத்தியா.

ம், கரெக்ட் முரளி.

வாங்க அப்து.

விக்னேஷ்வரி said...

வாங்க அஹமது இர்ஷாத்.

அய்யோ ஜெய், நான் எந்த சீரியலும் ஒரு எபிசோட் கூட முழுசா உக்காந்து பார்த்ததில்லைங்க.

தராசண்ணே, உங்கள வெச்சு தான் அடுத்த கும்மி. ஜாக்கிரதை.

வாங்க கதிர்.

வாங்க வித்யா.

வாங்க ரம்ஸ், நன்றி.

வாங்க ஜோசப்.

விக்னேஷ்வரி said...

ஷர்ஃபுதீன்..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வாங்க ஜீவ்ஸ்.

வசந்து, பார்த்துப்பா. அடுத்து உங்களையும் கும்மிடுவோம். ;)

நன்றி சுசி.

இன்னும் படம் பார்க்கலைங்க முனுசாமி. நான் பார்த்துப் போடுறதுக்குள்ள படம் தியேட்டரை விட்டுப் போய்டும். ;) இருந்தாலும் போடுவோம்.

நன்றி KKPSK.

நன்றி கேபிள் சங்கர்.

விக்னேஷ்வரி said...

வாங்க சித்ரா.

மஹா... ஹிஹிஹி...

நான் எந்த சீரியலும் பாக்குறதில்லை பாலகுமாரன்.

ரைட் கோபி. :)

மயில் மறுபடியும் கடிதம், பேட்டின்னு இறங்காதீங்க ராசாத்தி. நாடு தாங்காது. ;)

நன்றி குமார்.

வாங்க கார்க்கி. ஏன் ஊளையிடறீங்க....

Thamira said...

எத்தனை சீரியல்ஸ் பாத்திருந்தா இப்படியொரு ஆராய்ச்சி பண்ணியிருப்பீங்க.. ஹிஹி.!!

ஹுஸைனம்மா said...

//நான் எந்த சீரியலும் பாக்குறதில்லை//

பாக்காமலே இப்படி ஒரு ஆராய்ச்சியா? பாத்திருந்தா??!!

மங்குனி அமைச்சர் said...

நீங்க இலவோ மேட்டார் கவனிச்சிங்களா ???? (நாம சீரியல் எல்லாம் பாக்குறது கிடையாதுங்க )

தமிழ்போராளி said...

நல்லதொரு தொகுப்பு தோழி. உங்களிடமும் அனைத்து பெண்களிடமும் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். இது போன்ற தொடர்களை நீங்கள் ஏன் எதிர்கவில்லை. பெண்களுக்கு பெண்களே எதிரியாக காட்டும் எல்லா தொலைக்காட்சிகளையும் உங்கள் போன்ற முற்போக்கான பெண் எழுத்தாளர்கள் எதிர்க்க வேண்டும்.ஆண்களுக்கு நிகர் பெண்களே. நாங்கள் சம உரிமை கொடுக்க முன் வந்துவிட்டார்கள். இன்னும் பழைய நிலைக்கு கொண்டு போகும் தொல்லைக்காட்சிகளின் தொடர்களை எதிர்க்க ஒன்று கூடுங்கள் தோழிகளே! நாங்கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

உண்மைத்தமிழன் said...

சின்னத்திரையில் விரைவில் நல்லதொரு கதாசிரியராக உருவெடுக்க தங்கச்சியை வாழ்த்துகிறேன்..!

Unknown said...

எந்த சீரியலா இருந்தாலும் ஆறு மாசத்துக்கு ஒரு தடவைப் பார்த்தாலும் கதை புரியும்

பிரேமி said...

வணக்கம் விக்னேஷ்வரி.

உங்கள் பதிவுகளை படிக்க சொல்லி தோழர் ஷர்புதீன் கூறினார். படித்தவுடன் அசந்து விட்டேன். மிக அருமை. வாழ்த்துகள். அப்புறம் இந்த சீரியல்.... நீங்களே எல்லாம் சொல்லிட்டீங்க! இனி என்ன சொல்றதுக்கு இருக்கு? அருமையான வலைப் பதிவை படிக்க சொல்லி இந்த முகவரியை எனக்கு கொடுத்த தோழர் ஷர்புதீனிற்கும், கலக்கும் உங்களுக்கும் நன்றிகள்.

அபி அப்பா said...

:-)))))பிரமாதம்! இருங்க கேபிள் கட் ஆக என் ஆசீர்வாதங்கள்:-))