Friday, February 19, 2010

குழந்தையின் வாழ்த்து

சிகரங்களில் கூடு கட்டும்
பறவைகள் பறக்கும் உயரத்திலிருந்து
தெரியும் பூமியில்
நீர்க் கிழித்து எழுந்து மறையும்
டால்ஃபின் கண்ணில் தெரியும் ஆகாயமாய்
அர்த்தம் தெறித்து மறையும்
கவிதைகள் கண்ணாமூச்சி

துண்டு துண்டாய் வெட்டுபட்டாலும்
கவிதையில் இருக்கிறது
மண் புழுவாய் உயிர்
காட்டு நதியில்
நீர் குடிக்கும் மான்களின் மௌனம்
சலனமுறுகிறது
நிழல் இருக்கும் மரத்தின்
ஒரு முதிர்ந்த இலையுதிர்வில்

பெரும் பாலையின்
பறவைகள், மிருகங்கள்
கால் வலி கடக்கும்
மணல் சூரையின் உஷ்ணம் சொற்கள் இருந்தாலும்
ஒட்டகத்தின் வயிற்றில் எப்போதுமிருக்கும்
நீர்மை அன்பு
காகித மிருகத்தின்
கண்களில் ஒலிக்கும் பசி
கால்களுக்களிக்கும் பிடிவாத ஓட்டத்தின்
சுவடுகளின் அழுத்தம்
செலுத்திக் கொண்டிருக்கிறது
உன்னையும் உன் கவிதையையும்

இருவிரல் பற்றிக் கடித்த ஆப்பிளாய்
பூமியின் உள்ளும் புறமும்
கிளை மற்றும் வேர் விரித்து
கவிதை மனத் தாவரம்

கோபுர நிழலை
மிதிக்கத் தயங்கும்
குழந்தையின் கால்கள் வார்த்தைகளாக
வாழ்த்தித் தொடர்கிறேன்
இந்த நாளை

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

(உங்களைப் போல் எழுதி உங்களை வாழ்த்த விரும்பினாலும், உங்களளவுக்கு இல்லை தான். புழக்கடைச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பா.)

(திரு. நேசமித்திரன் அவர்களுக்கு.)

35 comments:

Rajalakshmi Pakkirisamy said...

பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் நேசமித்ரன்..நல்ல கவி வாழ்த்து...

அன்பேசிவம் said...

அட, அருமையா இருக்குங்க..... வாழ்த்துக்கவிதை.

நேசமித்திரனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

creativemani said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நேசமித்ரன் சார்... வெரி குட் ஒன் விக்னேஷ்வரி!!!

CS. Mohan Kumar said...

நேசமித்ரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அட அவர் பாணியிலேயே எழுதிருக்கீங்க!!உங்களுக்கும் வாழ்த்து ..

Raghu said...

வாவ், திருப்ப‌திக்கே ல‌ட்டா?...:)

//துண்டு துண்டாய் வெட்டுபட்டாலும்
கவிதையில் இருக்கிறது
மண் புழுவாய் உயிர்
காட்டு நதியில்
நீர் குடிக்கும் மான்களின் மௌனம்
சலனமுறுகிறது
நிழல் இருக்கும் மரத்தின்
ஒரு முதிர்ந்த இலையுதிர்வில்//

எப்ப‌டிங்க‌ இப்ப‌டிலாம்....சூப்ப‌ர்:))

//கோபுர நிழலை
மிதிக்கத் தயங்கும்
குழந்தையின் கால்கள் வார்த்தைகளாக
வாழ்த்தித் தொடர்கிறேன் //

அழ‌கான‌ வ‌ரிக‌ள், இதுபோல‌ அடிக்க‌டி எழுதுங்க‌.....ஆனா த‌லைப்பு ம‌ட்டும் ஏன் இப்ப‌டி காமெடியா வெச்சிருக்கீங்க‌:)))

நேச‌மித்ர‌ன் அவ‌ர்க‌ளுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் நேசமித்ரன்..
\\\இருவிரல் பற்றிக் கடித்த ஆப்பிளாய்//

விக்கி , வித்தியாசமான கற்பனை..

பித்தனின் வாக்கு said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நேசமித்திரன். நல்ல பா மாலை சூட்டியுள்ளீர்கள். நன்றி.

Vidhya Chandrasekaran said...

படிக்கும்போது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது விக்கி. வாழ்த்துகள் நேசமித்ரன்.

அப்புறம் நீங்க குழந்தையா. இந்தக் காமெடிதான வேணாங்கறது:))

பா.ராஜாராம் said...

வாவ்!

ரொம்ப நல்லா வந்திருக்கு நேசமித்ரி!

:-)

மக்கா,வாழ்த்துக்கள்டா!

பா.ராஜாராம் said...

ஆனாலும் இந்த "குழந்தையின் வாழ்த்து" என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் மருமகளே..

:-)

ஒருவேளை யூகி-யை சொல்லி இருப்பீங்களோ?

ஹேமா said...

இன்னும் இன்னும் நிறைவடைய அன்பின் வாழ்த்துக்கள் நேசனுக்கு.

அன்புடன் நான் said...

துண்டு துண்டாய் வெட்டுபட்டாலும்
கவிதையில் இருக்கிறது
மண் புழுவாய் உயிர்//

கவிவரி... அழகும் அடர்த்தியும்.... பராட்டுக்கள்.

நேசமித்திரனுக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீவி சிவா said...

கவிதையின் சொற்கள் கண் வழியே புகுந்து
மூளையில் ஏறி அமர்ந்து,
மனதை செல்லரிக்கத் துவங்கும் பொழுதில்
இடுகிறேன் இப்பின்னூட்டத்தை!

:) :) :)
சும்மா உங்க புது ஸ்டைல்ல (அ) நேசமிதரனோட வழக்கமான ஸ்டைல்ல ஒரு ட்ரை... அவ்ளோதான்.

நேசமித்திரனுக்கு அன்பும் வாழ்த்துக்களும்!!!

புது முயற்சி நல்லா வந்துருக்கு விக்கி... தொடருங்கள்!!!

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கவிதை அருமையா இருக்குங்க.

மங்குனி அமைச்சர் said...

நேசமித்திரனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அருமையான கவிதை மேடம்.
அது என்னக மேடம் மிட்நைட்
6:29-க்கு போஸ்ட் பன்னிருக்கிங்க தலைநகரத்துல நைட் தூங்க மாடிங்களா

Jerry Eshananda said...

சகோதரி,விக்னேஸ்வரிக்கு,நன்றி,அன்பின் நேசமித்ரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,கை கால் சுகத்தோடு,நீடிய ஆயுளோடு,நீங்கள் வாழ,எல்லாம் வல்ல ,இயற்கையை பிரார்த்திக்கிறேன்.தற்போது,நீங்கள் ஊருக்கு வந்திருப்பதாக செய்தி,உங்களை அலைபேசியில் பலதடவை தொடர்பு கொண்டேன்,தற்போது நீங்கள்,நாட்..ரீச்சபிளில் இருக்கிறீர்கள்,வருகிற ஞாயிறு கட்டாயம் வந்து விடுங்கள்,மதுரையில் பதிவர் சந்திப்பு வைத்துள்ளோம்,தங்கள் கவிதைகள் அனைத்தையும் PDF -ல் பிரிண்ட் எடுத்து வரவும்.இந்த பின்னூட்ட செய்தியை நீங்கள் பார்த்தால் தயவு செய்து என்னை அழைக்கவும்.mobile:9791390002

ராகவன் said...

அன்பு விக்னேஷ்வரி,

வாழ்த்துச் சொல்ல மலர்கள் வேண்டாம், பரிசுகள் வேண்டாம் இது மாதிரி கவிதை போதும். நிறைய பிறந்த நாள்களில் ஆயுளை நிரப்பலாம் பழுதில்லாமல்.

அழகாய் இருந்தது கவிதை, உங்கள் கவிதை புரிகிறதே விக்னேஷ்வரி!! (நேசமித்ரன் மன்னிப்பாராக!) மஹா உங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள் ஒரு நாள், அதிக சுவாரசியமானவராய் இருக்க வேண்டும் நீங்கள்.

அன்புடன்
ராகவன்

விக்னேஷ்வரி said...

வாங்க ராஜி. நன்றி.

நன்றி புலிகேசி.

நன்றி முரளி.

நன்றி மணிகண்டன்.

நன்றி மோகன் குமார்.

நன்றி ரகு. என்ன... தலைப்பு காமெடியா...

விக்னேஷ்வரி said...

நன்றி முத்துலெட்சுமி.

நன்றி பித்தனின் வாக்கு.

நன்றி வித்யா. கவிதைக் குழந்தைன்னு சொல்ல வந்தேங்க. அதுக்குள்ளேயா...

நன்றி பா.ரா. நேசமித்ரிக்கு நாலு வயசாகுது. அது நானில்லை மாம்ஸ்.

நான், யோகி ரெண்டு பேருமே குழந்தைகள் தான். :)

நன்றி ஹேமா.

நன்றி கருணாகரசு.

விக்னேஷ்வரி said...

நன்றி சிவா.

நன்றி குமார்.

நன்றி அமைச்சரே. காலைல சொன்னாதானே வாழ்த்து.

நன்றி ஜெரி. உங்கள் அழைப்பு நேசமித்திரனை சென்றடையும்.

நன்றி ராகவன். கவிதை நான் எழுதினதால புரியும். அவர் ஸ்டைலில் தானே எழுதிருக்கேன். அவராவே எழுத முடியுமா...

மஹாவிற்கு என் நன்றிகள்.

Prathap Kumar S. said...

வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

பூவோடு சேர்ந்து நார் மணக்கின்றது :)

Chitra said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், நேசமித்திரன் sir.
அருமையான வாழ்த்து கவிதை எழுதி அசத்தி விட்டீர்கள், தோழி.

Anonymous said...

ஆரம்பமே சூப்பரா இருக்குங்க.
வாழ்த்துவதற்கு வயது இல்லை
அதனால் வணங்குகிறேன்
கவிதைக்கும்
கவிபாடபட்டவறியும்...

"இத்தளம் படிக்கும் பொது தமிழ் மொழிமீது தங்கள் உள்ள பற்று
மெய்சிலிர்க்க வைக்கிறது."

இப்படிக்கு
வருத்தபடாத சங்கம் சார்பாக
"ஒரு வாசகன்"

மங்குனி அமைச்சர் said...

நன்றி - க்கு நன்றி

எங்க ஊர்லயெல்லாம் ஏர்லி மார்னிங் 10 மணிதான். (நான் கொஞ்சம் சோம்பேறி ஹி ஹி ஹி .....)

"உழவன்" "Uzhavan" said...

என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..
அழகான கவிதையின் மூலமாக வாழ்த்திய உங்களுக்கும் வாழ்த்துகள்

Thenammai Lakshmanan said...

பிறந்த நாள் வாழ்த்துகள் நேசன் ..கவிதை அருமை விக்னேஷ்வரி

பனித்துளி சங்கர் said...

அருமையான கவிதையுடன் கூடிய வாழ்த்து
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நேசமித்ரன்.

அகநாழிகை said...

வாழ்த்துகள் இருவருக்கும்.

கார்க்கிபவா said...

தாமதமான வாழ்த்துகள்..

இருவருக்கும்

Vinitha said...

Nice! :-)

ஆர்வா said...

அழகான வர்ணனைகள்.. இனிமையான சொல்லாடல்..
நல்ல கவிதை...

என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்குறேன்....

Thamira said...

வாழ்த்துகள் இருவருக்கும்.!

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமையான வாழ்த்து கவிதை வாழ்த்துகள் .

வாழ்த்துக்கள் நேசமித்ரன் !