Friday, December 11, 2009

நன்றி மக்காபத்து நாட்களாகப் பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை. ஆனாலும், தொடர்ந்து மெயிலனுப்பி விசாரித்த நண்பர்களை எனக்குத் தந்த இந்தப் பதிவுலகிற்கு மிக்க நன்றி.

சுசி அழைத்திருந்த ஒரு தொடர் பதிவு ரொம்ப நாளா பெண்டிங். இன்னிக்கு அதை முடிச்சிடுவோம்.
நான் பதிவெழுத வந்த கதை. (எழுதுற கொடுமை போதாதுன்னு அதை எப்படி எழுத வந்தன்னு கதை வேறவான்னு மனசுக்குள்ள திட்டாதீங்க மக்கா....)

பதிவெழுத நான் ஆரம்பித்தது மார்ச் 2008. நான் தமிழை மிகவும் இழந்த நேரமது. தமிழ்ப் பேச்சு, நண்பர்கள், புத்தகங்கள் என எதுவுமில்லாமல் ஆங்கிலமே தாய் மொழியாகி விடுமே என்ற அச்சம் கொண்ட நேரத்தில் நண்பர் செல்வேந்திரனின் பதிவுகள் படிக்க நேர்ந்தது. அவர் பதிவுகளை பல நாட்களாக வாசித்து வந்த நிலையில், சரி நாமும் எழுத முயற்சிக்கலாமே என்ற எண்ணத்தின் உருவாக்கமே vigneshwari.blogspot.com. அப்போது தோழியின் காதல் பிரிவு நிகழவே அதை வைத்து எனக்குத் தெரிந்த எளிமையான வார்த்தைக் கோர்வைகளுடன் எழுதப்பட்டதே என் முதல் பதிவு. ஆனால் அதற்குப் பின் இரண்டு மாதங்களுக்கு ஒன்றும் எழுதவில்லை. அப்போதெல்லாம் பதிவுலக வாசிப்பு மிகக் குறைவு.

பின் ஆணிகள் இல்லாத நாளொன்றில் வெட்டியாக ஒரு பதிவை ஜூலையில் எழுதினேன். அதற்குப் பின் வேலை, வெளியூர் பயணம் என தொடர் காரணங்களால் பதிவுலகை மறந்து போனேன். இதற்கு நடுவே திருமணமாகி மொத்த பஞ்சாபியாக மாறிய பின், தமிழை இழந்து விட்ட வேதனை அதிகமாகியது. அப்போது தான் நிறைய நண்பர்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். எப்படியெல்லாம் எழுதலாமென்ற ஐடியா கிடைத்தது. எழுத ஆரம்பித்து என்னவெல்லாமோ கிறுக்கித் தள்ளினேன். என்னாலே சகிக்க முடியாமல் போன போது அதை மாற்ற முயற்சித்தேன்.

இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதக் கற்று, எல்லாரும் இருநூறு, ஐநூறு என போய்க் கொண்டிருக்க நான் ஐம்பது பதிவுகள் மட்டுமே ஒப்பேத்தியுள்ளேன்.

எழுத ஆரம்பித்தது தமிழைத் தக்க வைக்க மட்டுமே. ஆனால், பதிவுலகம் எனக்குப் பல விலைமதிக்க முடியாத நண்பர்களைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கவுமில்லை. இப்போது பல நாடுகளில், பல மாநிலங்களில், பல ஊர்களிலிருந்து நட்புகள் இந்தப் பதிவுலகத்தின் மூலம் கிடைத்துள்ளன. அந்த நட்புகளின் பாராட்டுகளாலும், விமர்சங்னகளாலும் தான் இன்னும் எழுதும் ஆர்வம் குறையாமல் போய்க் கொண்டுள்ளது. ஆனாலும், எழுத நேரம் தான் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரங்களில் எனது மொக்கைப் பணியை செவ்வனே செய்து வருகிறேன்.
(இதை நீ சொல்லித் தான் தெரியனுமா...) நண்பர்களும் தவறாமல் பின்னூடங்களில் ஊக்கமளித்து வருகிறீர்கள், திட்டுகிறீர்கள், பாராட்டுகிறீர்கள். அதுவே நல்ல எழுத்தை என்னிலிருந்து இன்னும் கொண்டு வரும் என நம்புகிறேன். (விதி வலியது)

பதிவுலகம் பற்றி எழுதும் இந்த நேரத்தை மிக நெகிழ்ச்சியாகவே உணர்கிறேன். நண்பர்களின் அங்கீகாரங்கள் பின்னூட்டங்களாகவும், தொடர் பதிவுகளாகவும், மின் மடல்களாகவும், விருதுகளாகவும் என்னை வந்து சேர்ந்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நன்றி மக்கா.

சுசி - என் வரலாறு உங்க அளவுக்கு இல்லைங்க. நான் எப்போவுமே வரலாறுல வீக். இப்போ இந்த வரலாறைத் தொடர நான் அழைப்பது Scribblings வித்யா.
மோகன் குமார் - தனிப் பதிவெழுதி என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
கோபிநாத் - விருதுகளுக்கு நன்றி கோபி. வாங்கின விருதை இவர்களுக்கெல்லாம் அளிக்கிறேன்.

ஏற்கனவே வாங்கியிருந்தாலும் பரவாயில்ல. இன்னொன்னும் சேர்த்து வெச்சுக்கோங்க.

சுசி - மின்னும் நகைச்சுவைக்காக.
நேசமித்திரன் - நிறைய யோசிக்க வைப்பதற்காக.
குறும்பன் - குறும்பு தெறிக்கும் எழுத்திற்காக.

மறுபடியும் நன்றி மக்கா.
அடுத்த வாரம் திருப்பூரிலிருந்து சந்திக்கிறேன்.

22 comments:

butterfly Surya said...

விருதுகளுக்கு வாழ்த்துகள்.இன்னும் பல விருதுகளையும் வாங்க வேண்டும். வாங்குவீர்கள்.

சரளமான நடை. அருமை.

பதிவிற்கும் தோழமைக்கும் நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

//எழுத நேரம் தான் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரங்களில் எனது மொக்கைப் பணியை செவ்வனே செய்து வருகிறேன்//

நீங்க உங்க மொக்கையை தொடர்ந்து பதிவேற்றுங்கள்..........

நாங்கள் உங்களை எப்பொழுதும் வரவேற்றுக்கொண்டு இருப்போம்.............

நேசமித்ரன் said...

விருதுகள் பெற்றமைக்கும் வரலாறு பகிர்ந்தமைக்கும் நன்றிகள்

மொழியின் மீதான் பிடித்தங்கள் எழுத தூண்டியிருப்பது மகிழ்வுக்கு உரிய பகிர்வு

எனக்கான விருதுப் பகிர்வுக்கு அன்பு நிறைய மக்கா

தராசு said...

வாழ்த்துக்கள்.

வினோத் கெளதம் said...

தொடரட்டும் உங்கள் பதிவுலக பணி

புலவன் புலிகேசி said...

50க்கும், விருதுகளூக்கும் வாழ்த்துக்கள்...நீங்க எழுதுங்க நாங்க இருக்கோம் ஊக்கத்திற்கு...

கிருபாநந்தினி said...

\\பின் ஆணிகள் இல்லாத நாளொன்றில்// புதுசு புதுசா எங்கேர்ந்துதான் வார்த்தைகளைப் புடிக்கிறீங்களோ? எனக்கு இதெல்லாம் தெரியவே மாட்டேங்குது தங்கச்சி. நீ பதிவெழுத வந்த கதை சூப்பரு!

M.S.R. கோபிநாத் said...

வாழ்த்துக்கள் விக்னேஷ்வரி.

Raghu said...

விருதுக்கு ந‌ன்றி விக்கி!

ப‌திவு எழுத‌ ஆர‌ம்பித்த‌ பிற‌கு என‌க்கு கிடைக்கும் முத‌ல் விருது (கிர்ர்ர்ர்ர்...ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் என்ன‌ எழுத‌ ஆர‌ம்பிக்க‌ற‌துக்கு முன்னாடியேவா கிடைச்சுது!)

Mystic said...

CONGRATS

"உழவன்" "Uzhavan" said...

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.
வாழ்த்துக்கள்.

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள். தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி:)

விஜய் said...

வாழ்த்துக்குள் விருதுகளுக்கு

மகிழ்ச்சி தங்கள் வரலாறுக்கு

விஜய்

Vinitha said...

திருப்பூரிலே எங்கே இருப்பீங்க? கிறிஸ்துமஸ் சமயம் கோவை திருப்பூர் விசிட் உண்டு.

ஆர்குட்லே எல்லாம் பிரன்ட் ஆக மாடீங்களா?

:-)

CS. Mohan Kumar said...

எப்பவும் இன்னும் கொஞ்சம் எழுதிருக்கலாம்னு நினைக்கும் போது நிறுத்திடுறீங்க. ஒரு வேளை இது தான் நல்ல எழுத்தோ?

அது சரி.. ஏன் இந்த கொல வெறி? என்னை மாட்டி விட்டுடீங்க. இருக்கட்டும் முயற்சி பண்றேன்

சுசி said...

//சுசி - என் வரலாறு உங்க அளவுக்கு இல்லைங்க. நான் எப்போவுமே வரலாறுல வீக்.//

பொய்யைப் பாரேன்.. நீங்க
எழுத வந்தது பதிவுலக வரலாற்றில ஏற்கனவே குறிக்கப்பட்டாச்சு.
உங்க எழுத்துக்கள் உங்க வரலாறு பேசும்.

விருதுக்கு ரொம்ப நன்றி.

துபாய் ராஜா said...

ஐம்பதாவது பதிவிற்கும், வாங்கிய விருதிற்கும் வாழ்த்துக்கள். அப்படியே அடிச்சு ஆடுங்க...

விக்னேஷ்வரி said...

நன்றி சூர்யா.

நன்றி Sangkavi.

அன்பிற்கு நன்றி நேசா. என்னிடமிருந்தும்...

நன்றி தராசு.

நன்றி தியா.

வாங்க வினோத் கௌதம். ரொம்ப நாளா ஆளை காணோம்...

விக்னேஷ்வரி said...

நன்றி புலிகேசி.

நன்றி நந்தினி. ஏங்க, கோவைல தானே இருக்கீங்க. எனக்கு உங்க மெயில் ஐடி அல்லது போன் நம்பரை மெயில் பண்ணுங்க. சந்திப்போம்.

நன்றி கோபி.

வாழ்த்துக்கள் குறும்பன்.

நன்றி Mystic.

நன்றி உழவன்.

விக்னேஷ்வரி said...

வாங்க வித்யா.

நன்றி விஜய்.

திருப்பூர் இந்த வாரம் மட்டும் தான் வினிதா. முடிஞ்சா சந்திப்போமே. மன்னிக்கணும், ஆர்குட்ல நீங்கன்னு தெரியல எனக்கு. முடிஞ்சா இன்னொரு தடவை add பண்ணிடுங்களேன்.

தெரியலைங்க மோகன். நிறைய கத்துக் கொண்டே இருக்கிறேன்.

நன்றி சுசி.

நன்றி துபாய் ராஜா.

பூங்குன்றன்.வே said...

//ஆனால், பதிவுலகம் எனக்குப் பல விலைமதிக்க முடியாத நண்பர்களைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கவுமில்லை//

நூற்றுக்கு நூறு உண்மை.

நன்றி மக்கா..உங்களின் நல்ல மனசை சொல்கிறது.அருமை !!!

அண்ணாமலையான் said...

”நாங்கள் உங்களை எப்பொழுதும் வரவேற்றுக்கொண்டு இருப்போம்.............”Sangkavi said... நானும் அதை வழி மொழிகிறேன்