Thursday, October 22, 2009

அம்மாவும் மைக்ரோவேவ் குக்கிங்கும்

நீ எப்போதான் சமைக்கக் கத்துக்கப் போறன்னு எனக்குத் தெரியல. ஒழுங்கா இங்கே வா. நான் அவியல் பண்ண சொல்லித் தரேன். நாளைக்கு போற வீட்டுல இது கூட உங்கம்மா சொல்லித் தரலையானு கேக்கப் போறாங்க.

அம்மா, மைக்ரோவேவ் வெறும் சாப்பாடு சூடு பண்ண மட்டுமே தான் உபயோகிக்குறீங்களா. இதுல ரொம்ப ஈஸியா கேக் பண்ணலாம்மா. நான் கத்துத் தரேன்.

என்னங்க, இப்படியே மாட்டேன் மாட்டேன்னு எத்தனை நாளைக்கு சொல்லிட்டிருப்பா உங்க பொண்ணு. ஒழுங்கா அடுப்படிக்கு அனுப்பி வைங்க. நான் செய்யும் போதாவது கூட இருந்து பார்க்கட்டும்.

அப்பா, நீங்க கூட கேக் பண்ணலாம்பா. ரொம்ப ஈஸி. முதல்ல நான் அம்மாவுக்கு சொல்லித் தரேன். அப்புறம் நீங்களும் பண்ணுவீங்க பாருங்க.

இதுக்கு வேணும்கிற சாமானெல்லாம் நான் ஏற்கனவே இங்கே எடுத்து வெச்சுட்டேன். அப்புறமா உனக்கு சொல்றேன். நோட்ல எழுதி பத்திரமா வெச்சுக்கோ. இல்லைனா மறந்திடுவ.

அம்மா, நான் நாலு பேருக்கு கேக் பண்றதுக்கு என்னவெல்லாம் என்ன அளவுல வேணும்னு இங்கே எடுத்து வெச்சிருக்கேன். இதை அப்படியே நெட்ல இருந்து பிரிண்ட் அவுட்டும் எடுத்து தரேன். அதை தேவைனா ரேபெர் பண்ணிக்கோங்க.

முதல்ல தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகமெல்லாத்தையும் கொஞ்சமா தண்ணி விட்டு நல்லா அரைக்கணும். போய் அம்மில வெச்சு நல்லா அரச்சு எடுத்திட்டு வா.

முதல்ல முட்டைய உடச்சு நல்லா அடிச்சுக்கோங்க. ப்ளன்டர் யூஸ் பண்ணுங்கம்மா. ஏன் கையால அடிச்சு கை வலி வர வெச்சுக்குறீங்க. அது கூட கொஞ்சம் கொஞ்சமா சர்க்கரையும், வனிலா எசென்சும் சேர்த்து ப்ளன்ட் பண்ணுங்க.

இப்போ அடுப்பில கடாய் வச்சு அதுல தேங்காய் எண்ணெய் ஊத்து. தேங்காய் எண்ணெய் தான் அவியலுக்கு ருசியே.

அப்படியே இந்த கார்ன்ஃப்ளாரையும், மைதா மாவு, பேக்கிங் பவுடர், கொக்கோ பவுடர் எல்லாத்தையும் சேர்த்து கலக்கிடுங்க. கொக்கோ பவுடர் தான்மா ஃப்ளேவர் குடுக்கும்.

நறுக்கி வெச்சிருக்குற காய்கறியெல்லாம் அதில போட்டு கொஞ்சமா தண்ணி விட்டு பர்னரை இறக்கி விட்டு மிதமான தீயில் காய்களை வேக விடு. ஒரு அரை மணி நேரம் ஆகும் எல்லா காய்களும் வேக.

எல்லாம் கலந்ததுக்கப்புறம் இந்த மிக்சரை மைக்ரோவேவ் ஹைல மூணு நிமிஷம் செட் பண்ணி வைங்க.

காய் வேக நேரம் ஆகும்னு அப்படியே விட்டுட்டா அடிப் பிடிச்சிடும். அப்பப்போ கிளறி விட்டுக்கனும். காயெல்லாம் கொஞ்சம் வெந்ததும் மாங்காயும், வாழைக்காயும் போட்டு ஆவி வர்ற வரைக்கும் மூடி வை.

மூணு நிமிஷம் ஆனதும் மைக்ரோவேவ் தானா ஆஃப் ஆகிடுச்சா. எடுத்து பாருங்க. இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பா இருக்கலாம்ல. இன்னும் ஒரு முப்பது செக்கண்டுக்கு செட் பண்ணிடுங்கம்மா.

இப்போ எல்லா காய்கறியும் வெந்திடுச்சு. இதுல அரச்சு வெச்சிருக்கிற தேங்காய்க் கலவைய சேர்த்து கொஞ்சம் கிளறி விடு. கைல பட்டுக்கப் போற. இந்தா இந்த கைப்பிடித் துணியை வெச்சுக்கோ.

இப்போ கேக் ரெடி ஆகிடுச்சு. அதை அப்படியே எடுத்து வேற தட்டுல மாத்தி சூடு போற வரைக்கும் வைங்கம்மா. எப்போ மைக்ரோவேவ் யூஸ் பண்ணாலும் க்ளவுஸ் போட மறக்காதீங்கம்மா.

அவியல் முடிஞ்சது. அதுல கறிவேப்பிலை தாளிச்சுக் கொட்டு. அது தான் வாசனையே. இப்படி வாரம் ஒரு மணி நேரம் சமையலறை பக்கம் வந்தா ஒவ்வொரு ஐட்டமா கத்துக்கலாம்.

கேக் கொஞ்சம் சூடா இருக்கும் போதே மேல க்ரீம், செர்ரிஸ் வெச்சு கார்னிஷ் பண்ணுங்க. அஞ்சு நிமிஷத்துல கேக் பண்ணியாச்சு. எல்லா கேக்குக்கும் இவ்ளோ நேரம் தான்மா. நான் இன்னும் உங்களுக்கு ரெசிபீஸ் தர்றேன். நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

அப்போ அப்பா - அடடே, இன்னிக்கு அவியல் என் பொண்ணு பண்ணதா... பிரமாதம். ரொம்ப நல்லா இருக்கும்மா. உங்க அம்மாவ மிஞ்சிட்ட போ.

இப்போவும் அப்பா - பார்த்தியா என் பொண்ணை. அஞ்சு நிமிஷத்துல அம்சமா கேக் பண்ணிட்டா. இன்னும் நிறைய கத்துக்கோ அவகிட்ட இருந்து.


31 comments:

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

நிறைய எழுதுங்க.

சுட்டிக்கு நன்றி.

நேசமித்ரன் said...

நல்ல சுவாரஸ்யமான நடை
நிறைய எழுதுங்கள்

கண்ணகி said...

good {{...

தராசு said...

சிக்ஸர்.

ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்ம் கூட.

GIYAPPAN said...

ஹை..... இந்த ஸ்டைல் கூட நல்லா இருக்கு. நல்லா கொண்டு போயிருக்கீங்க. பாராட்டுக்கள்.

Vidhya Chandrasekaran said...

நைஸ்..

விக்னேஷ்வரி said...

நன்றி நர்சிம்.

நன்றி நேசமித்திரன்.

நன்றி வாத்துக்கோழி. உங்க பெயருக்கு என்னங்க அர்த்தம்...

மிக்க நன்றி தராசு.

நன்றி ஐயப்பன் சார். நீங்களும் இப்படி ஒன்னு ட்ரை பண்ணுங்களேன்.

க.பாலாசி said...

//இப்போவும் அப்பா - பார்த்தியா என் பொண்ணை. அஞ்சு நிமிஷத்துல அம்சமா கேக் பண்ணிட்டா. இன்னும் நிறைய கத்துக்கோ அவகிட்ட இருந்து. //

ஒரு வழியா முடிச்சிட்டீங்க...

இருகோணத்திலும் சொன்னவிதம் நன்று....

Anonymous said...

nice, super
:)

M.S.R. கோபிநாத் said...

விக்னேஷ்வரி, சினிமால டபுள் ரோல் படம் பார்த்த எஃபக்ட் உங்கள் எழுத்தில் இருந்தது.

rajan said...

நான் கூட cake க்கு side dish அவியல் செய்யிரிங்களோன்னு நினச்சேன். but அருமை, நல்ல இருக்கு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா எழுதி இருக்கீங்க

சுசி said...

//நீ எப்போதான் சமைக்கக் கத்துக்கப் போறன்னு எனக்குத் தெரியல. ஒழுங்கா இங்கே வா. நான் அவியல் பண்ண சொல்லித் தரேன். நாளைக்கு போற வீட்டுல இது கூட உங்கம்மா சொல்லித் தரலையானு கேக்கப் போறாங்க. //

எல்லா அம்மாக்களுமே இப்டிதானா...

//ரொம்ப நல்லா இருக்கும்மா. உங்க அம்மாவ மிஞ்சிட்ட போ. //

அப்பாஸ் டூ ???

எழுதிய விதம் நல்லா இருக்கு...

Rajalakshmi Pakkirisamy said...

superunga

ers said...

நண்பர்கள் கவனத்திற்கு

Tamil

Web Submit

Tamil News Submit

English

Top Blogs

Cinema

Cine Gallery

velji said...

நல்ல பதிவு!
அம்மாவை அப்புறமாய் பாராட்டியிருப்பார்களோ?

நாஸியா said...

ஐயோ இன்னைக்கு ஏன் எல்லாரும் அம்மா, அப்பா செண்டிமெண்ட் பதிவா போடுறீங்க. இன்னும் ஒரு வாரத்துல அவங்கள விட்டுட்டு என்னவர் இருக்கும் ஊருக்கு போக போறேன்..

எனக்கு இப்பவே அருவி சீசன் ஆரம்பிச்சிட்டு

:(

Raghu said...

இன்ப‌ர்மேஸ‌ன் ஈஸ் வெல்த்!

தேங்க்ஸ் விக்கி, இப்பொழுது என் வ‌லைப்பூவில் "Followers" gadgetஐ add ப‌ண்ணிவிட்டேன்.

என்ன‌, க‌டைசி 2 ப‌திவுக‌ளும் ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் நொய்டாவாக‌ இருக்கிற‌து...இந்த‌ ப‌திவு ந‌ல்ல‌ எழுத்துந‌டை.

அதுச‌ரி, அந்த‌ கேக்கை யாராவ‌து சாப்பிட்டார்க‌ளா இல்லையா? :) (முறைக்காதீங்க‌, ச்ச்சும்மா, த‌மாஸுக்கு...)

Anonymous said...

நல்லா இருக்கு. நான் இன்னும் மைக்ரோவேவ் சூடுபடுத்தறதுக்கு மட்டும்தான் உபயோகிக்கறது.

Romeoboy said...

கேக் மற்றும் அவியல் என்று இரண்டு சமையல்குறிப்பு சேர்ந்த அருமையான கலவை..

നിഷാർ ആലാട്ട് said...

:)

கார்க்கிபவா said...

அட.. இப்படி கூட எழுதலாமா? தொடர்பதிவாக்வே ஆக்கலாம் போலிருக்கே..

சூப்பர் விக்கி

நாடோடி இலக்கியன் said...

சுவாரஸ்யமா இருந்தது.

விக்னேஷ்வரி said...

நன்றி வித்யா.

நன்றி பாலாசி

நன்றி மயில்.

நன்றி கோபிநாத்.

நான் கூட cake க்கு side dish அவியல் செய்யிரிங்களோன்னு நினச்சேன். //

ச்சே, எப்படியெல்லாம் யோசிக்குறீங்க. நன்றி ராஜன்.

நன்றி ராதாகிருஷ்ணன்.

நன்றி சுசி.

நன்றி இராஜலெட்சுமி.

வாங்க மிக்ஸ்.

விக்னேஷ்வரி said...

நன்றி வேல்ஜி. அம்மாவைப் பாராட்டாத அப்பாக்கள் உண்டா...

வாங்க நாஸியா, நான் எது எழுதினாலும் உங்களுக்கு சென்டிமென்ட்டா இருக்கா...

என்ன‌, க‌டைசி 2 ப‌திவுக‌ளும் ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் நொய்டாவாக‌ இருக்கிற‌து... //

அப்படியா... இனி நோ ஃபீலிங்ஸ். கேக்கை யாராவது சாப்பிடுற மாதிரி இருந்தா நான் செய்தது. இல்லைனா, அம்மா செய்தது. :)

ரெசிபிஸ் அனுப்பவா அம்மிணி...

நன்றி ரோமியோ பாய்.

வாங்க நிஷார்.

நன்றி கார்க்கி. தொடர் பதிவு மாதிரி தான். நீங்களும் எழுதுங்களேன்.

நன்றி நாடோடி இலக்கியன்.

Raghu said...

//வாங்க நாஸியா, நான் எது எழுதினாலும் உங்களுக்கு சென்டிமென்ட்டா இருக்கா...

என்ன‌, க‌டைசி 2 ப‌திவுக‌ளும் ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் நொய்டாவாக‌ இருக்கிற‌து... //

அப்படியா... இனி நோ ஃபீலிங்ஸ். கேக்கை யாராவது சாப்பிடுற மாதிரி இருந்தா நான் செய்தது. இல்லைனா, அம்மா செய்தது. :)

ரெசிபிஸ் அனுப்பவா அம்மிணி...
//


இது உங்க‌ளுக்கே நியாய‌மா இருக்கா? க‌மெண்ட் போட்ட‌து நானு, ரெசிபிஸ் அனுப்ப‌ற‌து நாஸியாவுக்கா...ந‌ட‌த்துங்க‌, ந‌ட‌த்துங்க‌!

நிலாமதி said...

பயனுள்ள வித்தியாசமான உரையாடல்........அசத்த்திடீங்க வாழ்த்துக்கள். மேலும் தொடருங்க. நட்புடன் நிலாமதி

துபாய் ராஜா said...

வித்தியாசமான சிந்தனை. அழகான, அருமையான பதிவு.

DREAMER said...

//அப்போ அப்பா - அடடே, இன்னிக்கு அவியல் என் பொண்ணு பண்ணதா... பிரமாதம். ரொம்ப நல்லா இருக்கும்மா. உங்க அம்மாவ மிஞ்சிட்ட போ.

இப்போவும் அப்பா - பார்த்தியா என் பொண்ணை. அஞ்சு நிமிஷத்துல அம்சமா கேக் பண்ணிட்டா. இன்னும் நிறைய கத்துக்கோ அவகிட்ட இருந்து.
//

கடைசியில் இந்த வரிகள் மிகவும் ரசிக்க வைத்தது... அருமை... தொடருங்கள்...

-
DREAMER

commomeega said...

ஓ, அந்த anchor paste கேக் நீங்க செய்த கேக் தானா?.

commomeega said...

ஓ, அந்த anchor paste கேக் நீங்க செய்த கேக் தானா?.