Wednesday, June 17, 2009

என் சமையலறையில்

எனக்கு சமைக்க தெரியுங்கறதை பல பேரை நம்ப வைக்குறதே பெரும் கஷ்டமா இருக்கு. இதுக்காகவே இந்த ஸ்டில்ஸ். போன வாரம் நானே என் வீட்டு சமையலறையில் சமைச்ச அயிட்டங்கள். இப்போவாவது நம்புங்க மக்கா....

Poha Chewda - போஹா சூடா - அவல், உருளைக்கிழங்கு, கடலைப்பருப்பு, தேங்காய் இன்னும் பல விஷயங்களைக் கலந்து செஞ்ச ஈவினிங் ஸ்நாக்ஸ்.


Chole - சோலே - நம்ம ஊரு வெள்ளை கொண்டைக்கடலைய பஞ்சாபி ஸ்டைலில் பண்ணது. Garnishing கொஞ்சம் அதிகமாயிட்டதால கொண்டைக்கடலை தெரியல. :P பூரி அல்லது பட்டுராவுடன் சாப்பிட சுவையானது. ப்ரட்லேயும் வச்சு சாப்பிடலாம். இந்த அயிட்டத்துக்கு இப்போ ஆபிஸ்ல பேன்ஸ் அதிகம்.


Paneer Makhani - பனீர் மக்கனி - வெரி டேஸ்டி பனீர் கிரேவி இது.அவருடைய பேவரிட்.


Paneer Makhani with Lachcha Paratha - லச்சா பராட்டா - நம்மூருல பண்ற மைதா பராட்டா இங்கே கோதுமையில். மக்கனியுடன் சாப்பிட டேஸ்டி க்ரிஸ்ப்பி பராட்டா.


Microwave Sooji Cake - ரவா கேக் - இது அவர் சொல்லித் தந்த ஐட்டம். ரவை, தயிர், உப்பு, மிளகாய்த் தூள், ஈனோ கலந்து மைக்ரோவேவ் ஹைல அஞ்சு நிமிஷம் வச்சா கேக் ரெடி. இதுவும் ரொம்ப டேஸ்டி. பாதி சாப்பிட்டப்புறம் தான் போட்டோ எடுக்க தோணிச்சு. :P


Boondi Raita - பூந்தி ரைத்தா - சம்மருக்கு இந்த ரைத்தா செஞ்சு ஒரு மணி நேரம் ப்ரிஜ்ல வச்சு சில்லுனு சாப்பிட்டா அடடா......


படம் பார்த்தாச்சா..... அப்படியே ஏப்பம் விட்டுட்டு போய் வேலையப் பாருங்க. :)

27 comments:

சந்தனமுல்லை said...

drool!!

அப்படியே உண்மையை சொல்ல வேண்டியதுதானே...இது அவர் சொல்லி செஞ்சுத் தந்த ஐட்டம்னு! :-))

Sanjai Gandhi said...

நல்லா தான் இருக்கு.. ஆனா வேற ஒரு சமயல் வெப்சைட்ல இந்த படம் எல்லாம் பார்த்திருக்கேன். :)

நான் நம்பனும்னா ஒன்னு செய்ங்க... கோவை வரும் போது இதெல்லாம் செஞ்சி கொண்டு வாங்க.. அப்புறம் நம்பறேன். :))

Indian said...

Recipe for the first two items pls.

FunScribbler said...

mouth-watering food items!!keep rocking!!

Vidhya Chandrasekaran said...

மொத்த பில் எவ்வளவு ஆச்சு?

*இயற்கை ராஜி* said...

ivlovum neengale senjatha...namba konjam kashtama than irukku:-))

லதானந்த் said...

வீட்டோட இருந்து இது மாதிரியெல்லாம் சமைக்க ஆராச்சும் சமையல் உதவியாளருங்க முனவருவாங்களா? சமைக்கத் தெரிஞ்ச உதவியாளருங்க ஆராச்சும் இருந்தாச் சொல்லுங்க. லதாளுக்கும் ஒத்தாசையா இருக்கும். எனக்கும் வெரைட்டியா சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்

Ganesan said...

விக்கி, அவர் சமைச்சத நீங்க சமைச்சதா அவ்ரு பெருந்தன்மையொட ஒத்துக்கிட்டாலும் நாங்க நேர்ல ஒங்க சமையல பார்த்த தான் ஒத்துக்குவோம்

வினோத் கெளதம் said...

இது உங்களுக்கே நல்லா இருக்கா..சொன்னது மட்டும் இல்லாம படத்தை வேறு போட்டு புகையயை கிளப்பி விட்டிர்கள்..:)

manasu said...

ரெஸ்டாரென்ட்ல போட்டா எடுக்க அனுமதிக்கிறாங்களா?

ப்ரியமுடன் வசந்த் said...

//Microwave Sooji Cake - ரவா கேக் - இது அவர் சொல்லித் தந்த ஐட்டம். //

இந்த சமையல் மட்டும் தான் சொல்லிக்குடுத்தாரா>

சொல்லிந்தந்த ஐட்டமா

இல்ல செஞ்சு தந்த ஐட்டமா

மேவி... said...

:-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

இத எல்லாம் அவர வச்சு டெஸ்ட் பண்ணீயாச்சு தானே க்கா?

விக்னேஷ்வரி said...

இது அவர் சொல்லி செஞ்சுத் தந்த ஐட்டம்னு! :-)) //

விட மாட்டீங்களே..

அடடே நான் சமைச்சது சமையல் வெப்சைட் வரை போயிடுச்சா. தகவலுக்கு நன்றி சஞ்சய்.
நான் கோவைக்கு வர்ற நாள் இங்கே சமைச்சுட்டு இருந்தா ப்ளைட்டை மிஸ் பண்ண வேண்டியது தான்.

I will post the recipes Indian.

Thank you Tamizhmaangani.

விக்னேஷ்வரி said...

நீங்க கூடவா நம்ப மாட்டேங்குறீங்க வித்யா.... ச்சே.

ஒன்னும் சொல்றதுக்கில்லை இயற்கை.

இங்கே இருந்து நிறைய பசங்க சமைக்க வர்றாங்க சார். கண்டிப்பா லதா அண்ணிக்கு ரொம்ப உதவியா இருக்கும். விசாரிச்சு சொல்லவா... வீட்டோட இருந்து நல்லா உதவியா இருப்பாங்க பசங்க.

காவேரி கணேஷ் அடுத்து நான் வீடியோ தான் போடணும் போல.

வாங்க வினோத் கெளதம்.

விக்னேஷ்வரி said...

ஐயோ, வீட்டுல தான் எடுத்தது நம்புங்க மனசு.

சொல்லிந்தந்த ஐட்டமா

இல்ல செஞ்சு தந்த ஐட்டமா //

எப்படி வேணும்னாலும் வச்சுக்கோங்க வசந்த். நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பப் போறதில்லை. :)

வாங்க MayVee

அவர வச்சு மட்டும் இல்ல, நானும் சாப்பிட்டாச்சு 'குறை ஒன்றும் இல்லை'.

"உழவன்" "Uzhavan" said...

செய்முறை விளக்கம் போடாதது ஏனோ?

deesuresh said...

Poha Chewda - என்னது போங்க செவுடான்னு புது ஐட்டமெல்லாம். பாவம் கண்ணா..!!!

செந்தில்குமார் said...

விக்னேஷ்வரி,

இப்படி படங்கள போட்டு வாயில எச்சியூர வெச்சிட்டீங்களே... இது ஞாயமா ??

செய்முறை விளக்கம் குடுத்தீங்கன்னா எங்க வீட்டு அம்மணிகிட்டே சொல்லி நாங்களும் சுவைத்து பாப்போம் ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னன்னவோ வாய்ல நுழையாத பேரையெல்லாம் சொல்லி படத்தையும் போட்டு, சாப்பாடு ந்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா :)-

விக்னேஷ்வரி said...

போட்டுடுறேன் உழவன்.

சுரேஷ், நீங்க இப்படியெல்லாம் பேர் வப்பீங்கன்னு தெரிஞ்சு தான் நானே தமிழ்லேயும் எழுதிருக்கேன்.

செய்முறை சீக்கிரமே எழுதுறேன் செந்தில் குமார். ரெண்டு வருஷம் கழிச்சு ஊருக்கு வர்றீங்க வீட்டம்மா கையால எல்லாம் சாப்பிடுங்க.

நீங்க நம்ப மாட்டீங்கன்னு தான் படத்தோட போட்டேன். இன்னும் நம்பலையா.... நல்லாருங்க அமித்து அம்மா.

அன்புடன் அருணா said...

ரொம்ப பாவம்ங்க நீங்க...யாருமே நம்ப மாட்டேங்கறாங்க!!!

லதானந்த் said...

அய்யே!
சமையல் உதவியாளர்களுக்கு முக்கியமான க்வாலிஃபிகேஷன் சொல்ல மறந்திட்டேனே?

விக்னேஷ்வரி said...

ஆமா அருணா.

நீங்க சொல்லவே வேணாம் லதானந்த்.

R.Gopi said...

//எனக்கு சமைக்க தெரியுங்கறதை பல பேரை நம்ப வைக்குறதே பெரும் கஷ்டமா இருக்கு. இதுக்காகவே இந்த ஸ்டில்ஸ். போன வாரம் நானே என் வீட்டு சமையலறையில் சமைச்ச அயிட்டங்கள். இப்போவாவது நம்புங்க மக்கா....//

அப்படியா???? ஹ்ம்ம்...... நம்பறோம்.... இந்த போட்டோவெல்லாம் எங்க எடுத்தது??

//போஹா சூடா, சோலே, பனீர் மக்கனி, லச்சா பராட்டா, ரவா கேக், பூந்தி ரைத்தா//

பலே ப்ரிபரேஷன்...... இதை பார்த்தும் நாக்குல தேன் ஊறுதே.....

//Paneer Makhani - பனீர் மக்கனி - வெரி டேஸ்டி பனீர் கிரேவி இது.அவருடைய பேவரிட்.//

அதெல்லாம் ஓகே.... அவருக்கு கொஞ்சமாவது வச்சு கண்ணுல காட்டினீங்களா, இல்லையா?

//இதுவும் ரொம்ப டேஸ்டி. பாதி சாப்பிட்டப்புறம் தான் போட்டோ எடுக்க தோணிச்சு. :ப//


நல்ல வேளை.... முழுசும் சாப்பிட்டு, வெறுமே தட்ட மட்டும் எடுக்காம விட்டீங்களே?

//ஒரு மணி நேரம் ப்ரிஜ்ல வச்சு சில்லுனு சாப்பிட்டா அடடா......//

ஆ ஹா...... வெறுப்பு ஏத்திட்டான்களே.... நம்ம இப்போ இருக்கற ஊருல (துபாய்) கிடைக்குமான்னு தெரியலியே...

சரி... சரி... ட்ரை பண்ணி பார்ப்போம்.

//அப்படியே ஏப்பம் விட்டுட்டு போய் வேலையப் பாருங்க. :)//

வேற என்ன பண்ணறது.....??!!!

ஜீரணம் ஆயிடுத்தா?? இல்லேன்னா, கொஞ்சம் சோடா வாங்கி சாப்பிடுங்க.....

R.Gopi said...

//எனக்கு சமைக்க தெரியுங்கறதை பல பேரை நம்ப வைக்குறதே பெரும் கஷ்டமா இருக்கு.//

கரெக்ட்.....

இன்னும் அவர்தான் சமையலா??

நீங்க வெறும் போட்டோ எடுக்கறதோட சரியா?

Chef Ramu said...

எல்லாம் ஓகெ. ஆனால் Paneer கலர் சரியில்லையே!! ;)
(10th standard Vs 12th Standard மார்க் விவகாரம் மாதிரி)
நம்ம கடையாண்ட வரமுடிஞ்சா பாருங்க! :)