Monday, June 15, 2009

மற்றுமோர் பள்ளி, மற்றுமோர் மாணவி, மற்றுமோர் துயரம்


போன வாரம் மும்பை அரசு குழந்தைகள் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கக் கூடாது எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒரு விஷயம் இது. வீடுகளிலும் தொழில் துறைகளிலும் குழந்தைத் தொழிலாளர்களை தடை செய்த அரசு எப்போதும் இந்த தொலைக்காட்சியின் குழந்தை நட்சத்திரங்களைக் கண்டு கொண்டதில்லை. இப்போது அதுவும் கவனத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் நடிப்பின் காரணமாக படிப்பை நிறுத்தும் அவலம் அகலும் என எதிர்பார்ப்போம். (உயர் தட்டு மக்களுக்கு ஒரு சட்டம் வசதியில்லாதோருக்கு ஒரு சட்டம் என்னும் நிலை மாறி வருவது மகிழ்ச்சி)
**************************************************

டெல்லியில் வெயில் மண்டையைப் பிளக்கிறது. எப்போதாவது அதைத் தணிக்க லேசான தூறல் இருந்த போதிலும் வெக்கை அதிகம் உள்ளது. போன வருடம் முழுக்க நான் டூரிங்கில் இருந்ததால், டெல்லியின் வெயில் மற்றும் குளிர் காலங்களில் தப்பித்துக் கொண்டேன். இப்போது எனது ப்ரோஜெச்டுகள் முடிந்து விட்ட நிலையில் புது ப்ரொஜெக்டை எதிர்பார்த்துக் காத்துள்ளேன், டெல்லி வெயிலிலிருந்து தப்பிக்க. அடிக்கும் வெயிலைக் குறைக்கும் வகையில் அவர் பெங்களூருக்கு எஸ்கேப். நானும் அடுத்த மாதம் கோவை போகலாமென நினைக்கிறேன். பார்ப்போம் முடிகிறதா என்று. (நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை)

**************************************************

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மிகவும் வேடிக்கையானதாக இருந்தது. மணி சங்கர அய்யரின் ஹாட் மெயில் கணக்கை யாரோ ஒரு விஷம ஆசாமி ஹைஜாக் செய்து அனைவருக்கும் ஒரு மெயில் அனுப்பியிள்ளார். அந்த மெயிலில் உள்ள செய்தி "நான் ஒரு கருத்தரங்கிற்காக இங்கிலாந்து சென்றதை உங்களிடம் தெரிவிக்க மறந்து விட்டதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் எனது கைப்பையைத் தொலைத்து விட்டேன். கையில் பணம் இல்லாத நிலையில் என்னால் நாடு திரும்ப இயலவில்லை. இந்த மெயிலைப் பார்த்தவுடனேயே எனக்கு பண உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். தயவு செய்து எனக்கு அவசர பண உதவியாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து உதவுங்கள்" இது குறித்து மணி சங்கர அய்யரிடம் கேட்ட போது யாரோ அவரது மெயில் ஐடியின் பாஸ்வோர்டை மாற்றி விட்டதாகவும், அதன் காரணமாக இப்பிரச்சனை குறித்து தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றும் தான் இப்போது அமேரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். (என்னவோல்லாம் காமெடி நடக்குது உலகத்துல.)

**************************************************

அபியும் நானும் படம் வெளிவந்து பல மாதங்கள் கழித்து போன வாரம் தான் பார்க்க முடிந்தது. எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைவாகத் தான் படத்தை தந்திருக்கின்றனர் ராதா மோகனும், பிரகாஷ் ராஜும். எல்லா கேரக்டர்களும் ஓகே. த்ரிஷா கேரக்டரை இன்னும் அழகுற செதுக்கியிருக்கலாம். படத்தில் பிரகாஷ் ராஜின் அன்பு காட்டப்பட்ட விதத்தை ஒப்பிடும் போது த்ரிஷாவின் அன்பு காட்டிய விதம் கொஞ்சம் நெருடல். இன்னும் கொஞ்சம் அட்டாச் ஆன பெண்ணாக த்ரிஷாவைக் கொடுத்திருக்கலாம். ஏனெனில் பெண்கள் எப்போதும் அப்பாவின் மீது அன்பு மிகுந்தவர்கள். பஞ்சாபிக் கணவன் வந்த போதிலும் வேட்டி கட்டும் அப்பாவே ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் ஹீரோ என்பதை அழுத்தி சொல்லியிருக்கலாம். (அனுபவம் பேசுகிறது)

**************************************************

ஒன்றரை மாதத்திற்கு முந்திய செய்தி. இப்போது தான் தெரிந்தது. மூச்சுத் திணறி இறந்த ஆகிரிதி மற்றும் ஏழு செங்கற்களை முதுகில் தாங்கி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த ஷன்னோவை அடுத்து தலைநகரின் அடுத்த கொடுமை பதினைந்து வயது சிறுமி ஜீனத் பர்வீனின் தற்கொலை.
டெல்லியில் உள்ள பச்சான் பிரசாத் சர்வோதய கன்ய வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவி ஜீனத். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வகுப்பாசிரியரால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு அடித்து வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறாள். அவள் திருடியது உறுதிப்படுத்தப்படாத செய்தி. வெறும் சந்தேகம் காரணமாகவே நடந்த கொடுமை இது. அடுத்த நாள் பள்ளிக்கு சென்ற மாணவியை ஆசிரியர் வெளியேற்றி பெற்றோரை அழைத்து வருமாறு சொல்லவே, பெற்றோர் வந்திருக்கின்றனர். அவர்களிடம் ஆசிரியர் ஜீனத் செய்த தவறின் காரணமாக அவளை பள்ளியிலிருந்தே நீக்கப் போவதாகக் கூறி கடும் வார்த்தைகளால் சாடி "இவள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உட்காரவைத்து வீட்டு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்" என சொல்லியிருக்கிறார். பள்ளியிலிருந்து திரும்பி வரும் வழியில் சில சாமான்கள் வாங்குவதற்காக ஜீனத்தின் அம்மா செல்லவேண்டியிருந்ததால், ஜீனத்தை வீட்டிற்குப் போக சொல்லியிருக்கிறார். வீட்டிற்கு வந்த அம்மா ஜீனத் தனது துப்பட்டாவை ஃ பேனில் மாட்டி தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழுதிருக்கிறார். இது தொடர்பாக பள்ளி ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இறந்து போன ஜீனத்தின் கண்களை அவர் பெற்றோர் தானம் செய்து மற்றொருவரின் வாழ்வில் விளக்கேற்றியுள்ளனர். (வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி உயிர் வாங்கிகளாக இருப்பது பெரும் வருத்தத்திற்குரியது.)

12 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கடைசிச் செய்தி மிகுந்த வேதனை மிக்கது. ஆசிரியையின் நடவடிக்கை சற்று அதிகமே!
தீரவிசாரித்திருக்கலாம்.
அச் சிறுமியின் பெற்றோரின் கொடுக்கும் மனத்தை (கண் தானம்)நோக்குகையில் அப்பெண் இத் திருட்டைச் செய்திருப்பரா? என்பது சந்தேகமாக உள்ளது.
இது ஒரு அநியாயமான மரணம் போல் தான் உள்ளது.
இன்றைய சிறுவர்களுக்கு வாழ்வின் அருமையைப் புரியவைத்தும்; போராடும் மனத்துணிவை
வளர்த்தும் கல்வி புகட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை இத் தற்கொலைகள்
ஏற்படுத்துகிறது.

Vidhya Chandrasekaran said...

சென்னையிலும் வெயில் மண்டையைப் பிளக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கோ எனத் தெரியவில்லை:(

கார்க்கிபவா said...

நான்கு வயது சிறுமியை பெற்றோர்கள் பத்து கி.மீ ஓடவிட்டு லிம்கா சாதனை செய்ய முயல்கிறார்கள். பாவம் அந்த பிஞ்சு..

சந்தனமுல்லை said...

:(( //தலைநகரின் அடுத்த கொடுமை பதினைந்து வயது சிறுமி ஜீனத் பர்வீனின் தற்கொலை// முடிவே கிடையாது போல!

சந்தனமுல்லை said...

//இப்போது அதுவும் கவனத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது// ஆமா விக்னேஷ்வரி, உண்மையில் நல்ல விஷயம்தான்!

ப்ரியமுடன் வசந்த் said...

:(

சந்தனமுல்லை said...

//பஞ்சாபிக் கணவன் வந்த போதிலும் வேட்டி கட்டும் அப்பாவே ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் ஹீரோ என்பதை அழுத்தி சொல்லியிருக்கலாம். (அனுபவம் பேசுகிறது)//

ஆகா! :-)

விக்னேஷ்வரி said...

திருட்டு செய்திருந்தாலும் கூட அதைக் கண்டிக்கும் விதம் இப்படியான கடுஞ்சொற்களாக இருக்கக் கூடாது. திருடு போன 130 ரூபாய் பணத்திற்கு ஒரு சிறுமியின் முடிவு தண்டனையெனில் அது மிகவும் கொடுமை. தங்கள் கருத்துக்கு நன்றி யோகன்.

சென்னையில் நாள் கணக்கெல்லாம் இல்லை வித்யா. எப்போதும் வெயில் கொளுத்தத்தான் செய்யும். என்ஜாய்.

இது போன்ற செயல்களை சாதனை என்பதா ரோதனை என்பதா எனத் தெரியவில்லை கார்க்கி.

முடிய விட மாட்டேன்கிறார்களே முல்லை. என்ன சொல்ல....

வாங்க வசந்த்.

முல்லை, எப்போ உங்க ஆ ஃபார் ஆகா எழுதப் போறீங்க.....

Sanjai Gandhi said...

வெல்கம் டூ கோவை.. :)

இப்போ இன்னொரு சிறுமி பாதிக்கப் பட்டிருக்கிறாள்.மும்பையில் ஒரு நடிகன் தன் வீட்டில் வேலை செய்த சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்டிருக்கிறான். :(

Unknown said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசி செய்தி கொடுமை

விக்னேஷ்வரி said...

வர்றேன் சஞ்சய். பர்ஸ கனமா வச்சிருங்க.

பார்க்கிறேன் என் பக்கம்.

ஆமா அமித்து அம்மா. இது போல கொடுமைகள் அதிகரித்து விட்டன.