Friday, May 15, 2009

ஜலந்தரில் ஒரு வாரம்.


பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சு. காரணம் என்னன்னா, பிஸியான அலுவல்களுக்கு நடுவே ஒரு வாரம் ரிலாக்ஸா ஜலந்தர் வந்தேன், மாமியார் வீட்டுக்கு ஸாரி அம்மா வீட்டுக்கு. :) எப்போவும் ஜலந்தர் வருவதென்றால் எனக்கு மிகப் பிரியம். இங்கே அம்மா, அப்பாவுடன் அனைத்து சொந்தங்களும் ஒரே தெருவில் பத்து வீடு இடைவெளியில் இருக்கிறார்கள். எப்போதும் அனைவரின் அன்பும் அக்கறையும் நம்மீது இருக்கும்.  

மாமா பெங்காளி ஸ்வீட் ஸ்டாலில் இருந்து ரசமலாய் அனுப்புவார். மாமி வீட்டில் மாடு இருப்பதால், தினமும் பால், தயிர் மற்றும் பனீர் கொடுத்தனுப்புவார். இம்முறை மோஸி (சித்தி) வீட்டிற்கு வந்திருந்த போது டீ போட்டுக் கொடுத்ததற்காக கையில் இருநூறு ரூபாயைத் திணித்து விட்டு சென்றார். முதல் முறை நான் அவருக்கு டீ போட்டுக் கொடுத்ததற்காகவாம். "அடுத்த முறை வாங்க, சமைச்சு தரேன்"னு சொல்லி அனுப்பினேன். "சாச்சி டாஃபி" என என்னைத் தேடி வரும் அண்ணன் பசங்கள், அவர்களுக்கு சாக்லேட் கொடுப்பதற்காக என்னைத் திட்டும் பாபி, ருசியாய் சமைத்துக் கொடுக்கும் பூவா (அத்தை), வீட்டில் இருக்கும் பொருட்கள் போதாதென்று பிரிட்ஜை நிரப்பி வைக்கும் அப்பா, பொண்ணு பாவம்னு என் ரூமுக்கு வந்து கூல்ட்ரிங்க்ஸ் கொடுக்கும் அம்மா என மிகுந்த குஷி. இவை எல்லாவற்றையும் விட அம்மாவுக்கு நான் போகும் போதெல்லாம் என் மருமக வந்துட்டாங்குற ஒரு பெருமை. நானும் அம்மாவும் சேர்ந்து ஷாப்பிங் கிளம்பினா நல்லா சுத்திட்டு அம்மாவுக்கு நான் நிறைய பொருட்களும் எனக்கு அம்மா நிறைய கிஃப்ட்ஸும் வாங்கி வருவோம். வழியில் கோல்கப்பா, ஆலூ டிக்கி, பகோடா, சமோசா னு எல்லாம் ஒரு கட்டு கட்டிட்டு வருவேன்.  

இதோட முக்கியமான ஒரு விஷயம் பஞ்சாபி. எனக்கு மிகவும் பிடித்த மொழி. "துஸ்ஸி, அஸ்ஸி" னு வித்தியாசமா இருக்கும். ரொம்ப போல்டான லாங்குவேஜ். இன்னொரு முக்கியமான விஷயம் பஞ்சாபின் வளமை. மிகவும் செழிப்பான ஊர். பிச்சைக்காரர்கள் இருக்கலாம். ஆனால் மிகக் குறைவு. இது வரை நான் ஒருவரையும் பார்த்ததில்லை. தினமும் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு நேரம் முனிசிபல் தண்ணீர் வருகிறது. இந்த கோடையிலும் பவர் கட் இல்லை. 24 மணி நேரமும் குருத்துவாராவில் அன்ன தானம் உண்டு. இந்த மாதிரி இங்க நல்ல விஷயங்களுக்கு பஞ்சமே இல்லை.  

இங்கு சில நாட்கள் இருந்து விட்டு டெல்லி செல்லும் போது அனைத்து சொந்தங்களையும் விட்டு செல்லும் வெறுமையும், எப்படி ஏமாற்றலாம் என்ற எண்ணம் கொண்ட டெல்லிவாசிகளைப் பார்க்கும் போது கோபமும் வரும். என்ன செய்ய, அங்கு தானே வாழ்ந்தாக வேண்டும். எப்போதாவது உங்களுக்கு வடநாடு செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் கண்டிப்பாக பஞ்சாப் சென்று வாருங்கள். முக்கியமாக பஞ்சாபின் சோலே குல்சேக்காக. நினைத்தாலே சுவையூறும்... அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. நான் போறேன். டெல்லி வந்த பின் சந்திப்போம். Bye from Punjab.

12 comments:

சந்தனமுல்லை said...

ஆகா..என்சாய்! :-)

SK said...

என்சாய் பண்ணுங்க அம்மணி.. :)

Vidhya Chandrasekaran said...

நல்லா என்சாய் பண்ணுங்க:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்பாடி இத்தனை லிஸ்ட் ஐட்டங்களா... :)) ஜாலி தான்.

லதானந்த் said...

அவிங்க 200 ருவா குடுத்தது டீ தந்ததுக்காகவா இல்லாட்டி மருக்காவும் எதையாச்ச்சும் செஞ்சு குடுத்திராதேங்கிறதுக்காகவா? ஹிஹி! சும்மா சோக்கு!
இந்த லிங்கைப் பாருங்க ஒங்கள்ப் பத்தி எழுதியிருக்கேன்.
http://blogintamil.blogspot.com/2009/05/blog-post_6967.html

கார்க்கிபவா said...

/அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. நான் போறேன்.//

ம்ம்.போங்க போங்க..

/ வழியில் கோல்கப்பா, ஆலூ டிக்கி, பகோடா, சமோசா னு எல்லாம் ஒரு கட்டு கட்டிட்டு வருவே//

போதுமா?????????

விக்னேஷ்வரி said...

நன்றி சந்தனமுல்லை, வித்யா, SK.

இப்போ பாக் டு டெல்லி முத்துலெட்சுமி அக்கா.

முதல் தடவை பொண்ணு சமைச்சு குடுத்தா ரூவா அல்லது கிஃப்ட் எதுனாச்சும் தர்றது அவங்க கலாச்சாரம் ஆனந்த் சார். அந்த லிங்க் படிச்சிட்டு கமெண்ட் போட்டுட்டேன் சார்.

கம்மி தான் கார்க்கி.

Maya said...

அக்கா,நீங்க எழுதறது படிச்சுதான் எனக்கு எழுத ஆசை வந்தது,
என் பதிவை படிப்பீங்ளா?

http://maya-myviews.blogspot.com/

விக்னேஷ்வரி said...

நன்றி மாயா. கண்டிப்பாக படிக்கிறேன்.

Maya said...

என் முதல் பதிவை படித்ததற்கு நன்றி அக்கா..

KASBABY said...

தோழியே,சிங் யாரும் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்று நான் டெல்லியில் இருந்த போது,வீட்டின் உரிமையாளர்,ஒரு சிங் சொல்லியிருக்கிறார்.

Anonymous said...

இப்பவே ஜலந்தர் பார்க்கனும் போல இருக்கு..நல்ல பதிவு.மேலும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள்.