மகளிர் தினத்தன்று அலுவகத்தில் உட்கார்ந்து ஓர்குட்டை அலசிய போது ஏற்பட்ட விவாதத்தில், தோழி ஒருவருக்கு என் பதில்கள்.
தோழியின் குற்றச்சாட்டு:
இந்த நாட்டுல பெண்கள் மீது நடக்குற எல்லா வன்முறைக்கும் ஆம்பளங்கதான் காரணம்.....
பெண்கள் தான் நாட்டுல பாதி ..ஆனா 33% கொடுக்க அவங்களுக்கு பிடிக்கல....
நாம படிக்கப் போனாம்னா அங்க டிஸ்டர்ப் பண்ரது.......சரி கோவிலுக்கு போனோம்னா பின்னாடி வந்து மணி அடிக்கிறது...
வேலை பாக்குற இடத்துல......வேற வேலை பார்க்குறது...கொஞ்சம் சிரிச்சி பேசிட்டா உடனே கெட்ட பட்டம் கட்டி அடித்தவன்கிட்ட கமெண்ட் அடிக்கிறது.....
சந்தேகப் படுறது.......உளவு பார்க்குறது....பெண்ண மனுசியா நடத்தமா பொருளா பார்க்குறது...
மொத்ததுல.......ஆண்கள் எல்லாருமே கெட்டவங்க தான்...
விக்னேஷ்வரியாகிய எனது பதில்:
இந்த நாட்டுல பெண்கள் மீது நடக்குற எல்லா வன்முறைக்கும் ஆம்பளங்கதான் காரணம்.....//
மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, பெற்ற தாயே பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வது இவை எல்லாம் ஆண்களால் நடத்தப்படுகின்ற வன்முறைகள் இல்லையே...
பெண்கள் தான் நாட்டுல பாதி ..ஆனா 33% கொடுக்க அவங்களுக்கு பிடிக்கல....//
கொடுக்க மாட்டேன் சொல்ற ஆண்கள் எத்தனை சதவிகிதம்? இன்னிக்கு உங்கள இவ்வளவு பேச விட்டு, அதற்கு தக்க விளக்கங்கள் தர்ற ஆண்கள் இருக்காங்க தானே.
ஆமாங்க, பெண்கள் மதிப்பெண்களும் நிறைய எடுத்து, இட ஒதுக்கீடும் வாங்கிகிட்டா, அப்புறம் அவங்க பாடு திண்டாட்டம் இல்லையா.... ;)
நாம படிக்கப் போனாம்னா அங்க டிஸ்டர்ப் பண்ரது.......சரி கோவிலுக்கு போனோம்னா பின்னாடி வந்து மணி அடிக்கிறது...//
படிக்கப் போன இடத்தில, பொண்ணுங்க படிக்கப் போற மாதிரி போனா எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க நடிக்கப் போற மாதிரி இல்ல போறாங்க.புத்தகத்தில, கணக்கு போட சொன்னா, தன்னை எத்தனை பேர் பாக்குறாங்கனு கணக்கு போடுற பெண்களை நான் உங்களுக்கு காட்டவா?கோவிலுக்கு போகும் போது கூட ஒழுங்கா உடுத்திட்டு போக பொண்ணுங்களுக்கு தெரியலையேனு நானே பல முறை நினைச்சிருக்கேன். சாமி கும்பிட போகும் போது எதுக்குங்க ஜனனல் வச்ச பிளவுஸ்?
வேலை பாக்குற இடத்துல......வேற வேலை பார்க்குறது...கொஞ்சம் சிரிச்சி பேசிட்டா உடனே கெட்ட பட்டம் கட்டி அடித்தவன்கிட்ட கமெண்ட் அடிக்கிறது.....//
வேலை இல்லாம, அடுத்தவங்க வேலையை கெடுக்கனே ஒரு கூட்டம் அலையுது. அதில் பெண்களும் இருக்காங்க. அந்த பெண்களும் கூட வேலை பாக்குற பெண்களை தவறா சொல்ல தான் செய்றாங்க. உண்மையா இல்லையா?
சந்தேகப் படுறது.......உளவு பார்க்குறது....பெண்ண மனுசியா நடத்தமா பொருளா பார்க்குறது...//
புருஷன் வேலைக்கு போய்ட்டு வந்த உடனே, அவன் சட்டை, பேக், கார்னு செக் பண்ற பெண்கள் இல்லையா? இதுக்கு பேர் சந்தேகம் இல்லாம என்ன? அது சந்தேகம் இல்லை, Pocessivenessனு நீங்க சொன்னா அதே Pocessiveness ஏன் ஆண்களுக்கும் இருக்க கூடாது?
மொத்ததுல.......ஆண்கள் எல்லாருமே கெட்டவங்கத்தான்.. //
நிறைய நல்ல ஆண்கள் இருக்காங்க. அவங்கள நல்லவங்களாவோ, கெட்டவங்களாவோ பாக்குறது, பெண்ணின் பார்வையில் தான் இருக்கு.
14 comments:
எப்படி விக்கி உன்னால மட்டும் இப்படி உண்மைய பேச முடியுது?
ஆண்களை நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ பார்ப்பது பெண்கள் பார்வையில் உள்ளது. ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்தான். அனால் ஆண்கள் நல்லவர்கள் ஆவதோ கெட்டவர்கள் ஆவதோ சில வேளைகளில் பெண்களின் கைகளில் வந்து சேர்வதும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். பெண்களின் பேராசையால் பல நேரங்களில் ஆண்கள் வழி தவறி புதைகுழியில் விழுகின்றனர். சந்தேகம் இருபாலருக்கும் பொது. தவிர்க்க வேண்டியது. மற்றபடி நீங்கள் சொல்லும் "பார்த்தான், சிரித்தான், தொட்டான்" போன்ற குற்றச்சாட்டுகள் பெண்களின் குற்றமல்ல. கையாலாகாத்தனம்தான். கையில் செருப்பை எடுத்தால் அதிகமாக போனால் ரவுடி, ஆம்பளை பாப்பாத்தி என்று பட்டம் கிடைக்கும். பரவாயில்லை. தண்டனை கொடுக்கத் தயாரான பெண்களிடம் வாலாட்டுபவர்கள் குறைவுதான். அதனால் ஆண்களை ஆண்களாக்குங்கள் பெண்களே.
உண்மை பேசுறதுக்கு என்ன பயம் மணி. ஆனா, அதை ஒத்துக்குற தைரியம் தான் நிறைய பெண்களுக்கு இல்லை.
ரொம்ப சரியா சொன்னீங்க ஐயப்பன் சார்.
அப்படின்னா பெண்கள் ஆண்களின் பிழைப்பைக் கேடுக்கறாங்க என்ற வார்த்தையை திருதிக்கறீங்க. யாரும் யார் பொறுப்பையும் சுமக்க முடியாது, யார் வாய்ப்பையும் பறிக்க முடியாது. எல்லாம் அவரவர் திறமைக்கு தகுந்த தகுதி கிடைக்கும். இதில் உங்களுக்கு உடன்பாடுதானே?
கண்டிப்பா ஒத்துக்குறேன் சார். அதே மாதிரி யாரும் யாரையும் தேவை இல்லாது குறையும் சொல்ல வேணாம்னு தான் சொல்றேன்.
:)
அம்மணி, ஏன் அதுக்கு அப்பறம் எழுதறதே இல்லையா??
இரண்டு பதிவு எழுதுனாலும் எழுதுனிங்க நல்ல இருந்துது??
நொய்டால எந்த செக்டர் நீங்க?? நான் வந்தா அங்க ஒரு பதிவர் சந்திப்புக்கு வருவிங்கள??
முடிஞ்சா நம்ம பதிவையும் சித்தபாருங்க
தமிழ் உதயன்
நன்றி தமிழ் உதயன். எழுத நிறைய இருக்கு. ஆனால், அதற்கான நேரம் தான் இல்லை.
பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் பறிபோன நேரங்கள்.
GREAT THANVI .REALLY GOOD.
we cant say all th girls are bad and all the boys are good.even in the diamond we are seeing the black marks.surrounding is the main reason(in my concern)
Thanks for your visit Shiva. Being a girl, I do not say that all the girls are wrong. At the same time, I cannot accept 100% complaints on boys.
நாம் கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு, உலகமே இருட்டை இருக்கிறதென்று சொல்லுபவர்களில், ஆண்களும் பெண்களும் சம அளவில் உண்டு. ஆனால், நான் கருப்பு கண்ணாடி போட்டிருப்பதால், மற்றவர்கள் கருப்பானகர்களாய் கருத முடியாதென்று கூற இருபாலரிலும் மிக சொற்பமானவர்களே உண்டு... நீங்களும் அந்த சொற்பமானவர்களில் ஒருவர் என்பதால் உங்களுக்கு ஒரு ஷொட்டு... நான் கருப்பு கண்ணாடி மாட்டி இருந்தாலும் மற்றவர் எனக்கு வெள்ளையாய் தெரிய வேண்டும் என்று நினைத்த உங்கள் தோழிக்கு ஒரு குட்டு...
கருத்துக்கு நன்றி Mighty Maverick.
அன்பின் விக்னேஷவரி யோகி
ஆணோ பெண்ணோ தவறு இருபக்கமும் பொதுவாக இருக்கும் - இது இயல்பு. ஆனால் பெண்கள் ஆண்களையும் இவர்கள் அவர்களையும் குறை கூறுவதும் இயல்பாகவே இருக்கிறது.
நல்லா எழுதுறீங்க
நல்வாழ்த்துகள்
Post a Comment