Thursday, March 13, 2008

தேடுகிறேன் என்னை...

ஒரு கணம்,
ஒரு ஊடுருவல்,
உனது பார்வை!

இதயத்தில் பல பட்டாம்பூச்சிகள்
நீ என்னை தொடர்ந்து பார்த்த போது!

எனக்கு
வெட்கப்படத் தெரியும் என்பதை
கற்றுத் தந்தது உன் கண்கள் தான்!

கடும் வெயிலிலும்
என்னை நடுங்க வைத்தது
உன் முதல் தொடுகை!

சரியா, தவறா என
யோசித்து முடிக்கும் முன்னரே
சேர்ந்து பிரிந்தன
நம் இதழ்கள்!

நீ
என்னுடன் இல்லாத நேரங்கள்
நரகமாயின!

பேசாத நிமிடங்களில்
பைத்தியமானேன்!

நீ
எனதே எனதானவன்
என்ற அகந்தையில்
நான் இருந்த போது,
என்னை -
சிதைத்து சின்னாபின்னமாகின,
"இனி ஒத்து வராது; இதோட முடிச்சுக்கலாம்"
என்ற உன் வார்த்தைகள்.

அன்று உடைந்தவள்,
இனி -
மீட்க முடியாது எனத் தெரிந்தும்
தேடுகிறேன்,

உன்னுள் தொலைந்த
என்னை!

19 comments:

trdhasan said...

நல்ல ரசனைக்குரிய உணர்வு...... அதை அழகாக பதிவு செய்திருக்கிறீர்.
வாழ்த்துக்கள்..... விக்னேஷ்வரி.
தொடரட்டும் ரசனையான எழுத்துப்பணி.

Sundararajan P said...

அன்புத்தோழிக்கு,

உங்கள் வலைப்பூவை தமிழ்மணம், தேன்கூடு போன்ற வலைப்பூதிரட்டிகளில் இணைத்தால் அதிகமான தமிழர்களிடம் சென்று சேரலாம்.

www.thamizmanam.com என்ற இணையதளத்தில் அனைத்து திரட்டிகளின் இணைப்பும் கிடைக்கும்.

வாழ்த்துகள்.

Sugumar said...

'சேர்ந்து பிரிந்தன' - good one... keep it up..

Nithi... said...

வணக்கம்..!! உங்கள் காதல் வரிகள் என்னை சரிக்கவைத்து... பின் உங்கள் பிரிவின் வரிகள் என்னை அழலவைத்து இந்த காதல் கவிதை அருமை தோழி நன்றி வாழ்க வளமுடன் அன்புடன் நிதி


"நீ
எனதே எனதானவன்
என்ற அகந்தையில்
நான் இருந்த போது,
என்னை -
சிதைத்து சின்னாபின்னமாகின,
"இனி ஒத்து வராது; இதோட முடிச்சுக்கலாம்"
என்ற உன் வார்த்தைகள்"
romba pain full line....

Viki said...

Nice one... Keep it up!!

மங்களூர் சிவா said...

தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். நிறைய பேர் பார்ப்பார்கள்.

கவிதை நன்று.

selventhiran said...

அட விக்கி, நீயுமா?!

சரவணன் சார், இங்க ஒருத்தி கவிதை எழுதறா வந்து என்னன்னு கேளுங்க....

விக்னேஷ்வரி said...

நன்றி டி.ஆர்.தாசன், சுந்தர ராஜன், சுகு, நிதி மற்றும் சிவா.

வெல்கம் செல்வா....
யாரது சரவணன் சார்....

Anonymous said...

முதல் முறையாக தமிழ் பிளாக்ல் பெண்ணின் கவிதை மகிழ்ச்சி. இருப்பதை தொலைப்பது, சும்மா கிடைத்ததை தொலைப்பது, பாடுபட்டு கிடைத்ததை தொலைப்பது ..இப்படி தொலைப்பதும் - இருப்பதை தொலைத்து - தேடுவது, சும்மா கிடைத்ததை தொலைத்து - தேடுவது, பாடுபட்டு கிடைத்ததை தொலைத்து - தேடுவது ..இப்படி தொலைத்ததை - தேடுவதும். சுகமே...
இரண்டு பாடல்கள் நினைவில் (1) - ஜே-ஜே; தேடி தேடி தேடி தீர்ப்போமா (2) பார்த்தாலே பரவசம்; அன்பே சுகமா அழகே சுகமா...

காதலில் சுகமும் சுமையாகும் சுமையும் சுகமாகும் - காதலின்றி மனிதம் உணர முடியது -

எய்ட்ஸைத் தடுக்கலாம் வரும் வழியும் பரவும் வழியும் தெரிவதால்
காதலைத் தடுக்க முடியாது வரும் வழியும் பரவும் வழியும் தெரியாததால்

அப்பாடா- என்னெல்லாம் தோணுது.... தேடுவோம் தேடுவோம்...

ப்ரியன் said...

//
♥ சரியா, தவறா என
யோசித்து முடிக்கும் முன்னரே
சேர்ந்து பிரிந்தன
நம் இதழ்கள்!
//

இது நல்லா இருக்கு...மற்றவை ம்ம்ம் இன்னும் நல்லா எழுதலாம்..

Radha said...

Good verses and sensitive lines.. Kudos vigneshwari

விக்னேஷ்வரி said...

என் முதல் எழுத்திற்கே இத்தனை ஊக்கம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

தமிழர்கள் சிந்தனைக்கு! said...

facts in simple lines....

deesuresh said...

ரசிக்க் வைக்கும் அனுபவங்களா, இல்லை அனுபவங்களின் ரசனையா, ஒரு அருமையான கவியின் அழகான வரிகள்
பாராட்டுகள் சகோதரி...!!!

அன்பன் சுரேஷ்

GIYAPPAN said...

காதல் என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு தன்னைத் தொலைத்துவிடுவோர் தேடுதல் நிற்காது. பகுத்தாய்தல் எல்லாவற்றிலும் வேண்டும். காதல் எப்படி வரும் எப்படி பரவும் என்று புரியாதவர்களுக்கு இப்படித்தான். முதலில் காதல் எப்படி இருக்க வேண்டும் என்ற தீர்மானம் உள்ளோருக்கு காதல் தேடுதலில் தொடங்கும். தேடுதலில் தொடரும்(ஒருவருள் ஒருவரை வாழ்நாள் முழுதும் தேடலாம்) ஆனால் இதுபோல் தேடுதலில் முடியாது.

கவிதை நன்றாக இருந்தது. சொல்லிற் குற்றமில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம் என்று AP நாகராஜன் சொல்லியிருக்கிறாரே. அதனால் பட்டையை கிளப்புங்கள்.

விக்னேஷ்வரி said...

வருகைக்கு நன்றி பகவதி, தமிழர்கள் சிந்தனைக்கு, சுரேஷ் மற்றும் ஐயப்பன் சார்.
கற்பனையான உண்மை. அனுபவம் இல்லை சுரேஷ்.
நன்றி ஐயப்பன் சார்.

mightymaverick said...

உண்மையில் நிஜங்களை விட கற்பனைகள் தான் அதிக இன்பமும் துன்பமும் தரும்... பாகவதரின் "சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே" பாடல் தான் நினைவுக்கு வருகிறது...

விக்னேஷ்வரி said...

சரியா சொன்னீங்க Mighty Maverick

Jerry Eshananda said...

நல்லாயிருக்கு.