♥ ஒரு கணம்,
ஒரு ஊடுருவல்,
உனது பார்வை!
♥ இதயத்தில் பல பட்டாம்பூச்சிகள்
நீ என்னை தொடர்ந்து பார்த்த போது!
♥ எனக்கு
வெட்கப்படத் தெரியும் என்பதை
கற்றுத் தந்தது உன் கண்கள் தான்!
♥ கடும் வெயிலிலும்
என்னை நடுங்க வைத்தது
உன் முதல் தொடுகை!
♥ சரியா, தவறா என
யோசித்து முடிக்கும் முன்னரே
சேர்ந்து பிரிந்தன
நம் இதழ்கள்!
♥ நீ
என்னுடன் இல்லாத நேரங்கள்
நரகமாயின!
♥ பேசாத நிமிடங்களில்
பைத்தியமானேன்!
♥ நீ
எனதே எனதானவன்
என்ற அகந்தையில்
நான் இருந்த போது,
என்னை -
சிதைத்து சின்னாபின்னமாகின,
"இனி ஒத்து வராது; இதோட முடிச்சுக்கலாம்"
என்ற உன் வார்த்தைகள்.
♥ அன்று உடைந்தவள்,
இனி -
மீட்க முடியாது எனத் தெரிந்தும்
தேடுகிறேன்,
♥ உன்னுள் தொலைந்த
என்னை!