Tuesday, October 27, 2009

பதிவுலக பாய்ஸ் பொண்ணு பார்க்கப் போனா...

நம்ம பதிவுலக பேச்சுலர்ஸ் சிலர் பெண் பார்க்கப் போகும் போது பெண்ணிடம் என்னவெல்லாம் பேசுவார்கள் என்ற கற்பனைக் குதிரையைத் தட்டி விட்ட போது வந்த பதிவு.

பதிவுலகின் என் முதல் நண்பர் இவர்.

நீட்டாக ஃபுல் ஃபார்மல்சில் போய் முதல் பார்வையிலேயே பெண்ணை இம்ப்ரெஸ் செய்கிறார். "வணக்கம். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க கிட்ட தனியா பேசனும்னு பெரியவங்க சொன்னதும் ரொம்ப பதட்டமாயிட்டு. நீங்க B.A. வரலாறு முடிச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க. நாட்டு வரலாறு தெரிஞ்சிருக்குறது நல்ல விஷயம் தான். ஆனா, அதே அளவுக்கு உங்க குடும்ப வரலாறும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க. அது ரொம்ப முக்கியம். உங்க பாட்டன், பூட்டன் பெயரெல்லாம் தெரியும் தானே. ஏன்னா, நம்ம பேரும் நாளைக்கு அஞ்சாறு தலைமுறைக்கு போகணும் பாருங்க. அதான் சொல்றேன்.

எனக்கு இன்டர்நெட், ஈமெயில் நட்புகளிலெல்லாம் உடன்பாடு இல்லைனாலும், நம்ம ஊர்ல நம்மள 'சல்லிப்பயல்'னு கழட்டி விட்டுட்டதால இப்போதைக்கு இந்த நண்பர்கள் கூட தான் வனாந்திரமெல்லாம் சுத்திட்டிருக்கேன். கல்யாணத்துக்கப்புறம் உங்களுக்குப் பிடிக்கலைனா எல்லாத்தையும் கட் பண்ணிடுறேன்.

அப்புறம் நீங்க கல்யாணத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்னன்னா... "முடியலத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்" ன்னு ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதி சப்மிட் பண்ணுங்க. நாளைய தமிழிலக்கிய உலகை ஆளப் போவது முடியலத்துவம்தான்னு நான் சொன்னா இலக்கியனாதனுங்க சண்டைக்கீ வருவாய்ங்க. விடக் கூடாது. ஒருத்தரையும் விடப்பிடாது. எனக்கு அறச் சீற்றமும் இருக்கு, குறச் சீற்றமும் இருக்கு என முஷ்டியை முறுக்க பொண்ணு 'ங' என முழிக்கிறது.

"பானைகள் தங்களை
பானைகளென உணரும் போது
பானைகள் கொள்ளும்
யானைகள் பலம்"

என்று முடியலத்துவத்தை நம்ம மொபைல் எந்திரன் எடுத்து விட மிரட்சிப் பார்வையுடன் பயந்து ஓடுகிறது பெண்.

பதிவுலக யூத் என தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் பிரபலப் பதிவர் இவர்.

"ஹாய், சொல்லுங்க. உங்களைப் பத்தி சொல்லுங்க. இன்னாங்க, ஒண்ணுமே பேச மாட்டேங்குறீங்க. சரி நானே பேசுறேன். ஆனா, அப்புறம் நீங்க பேச இடைவெளியே இருக்காது. நான் ரொம்ப ஜாலி டைப். எனக்குன்னு எப்போவும் பாலாஜி, ஏழு, மதன்,..... ன்னு ஒரு சிறு நண்பர் கூட்டம் இருக்கு. அது தவிர தாரிகா, விமலா, மாலினி, சத்யா,...... ன்னு கொஞ்சம் பெரிய நட்புக் கூட்டமும் இருக்கு. ஐயோ, இதுக்கெல்லாம் முறைக்காதீங்க. யூத்னா அப்படித் தான். ஆனா, நீங்க தான் என் வாழ்வின் 'சாளரம்'.

நம்ம நண்பர்கள் கூட்டத்துல எப்போவுமே நாம தான் "கில்லி"ன்னாலும் அதைக் கெடுக்கன்னே 3+4 ஒருத்தனை கூட வெச்சிட்டு சுத்திட்டிருக்கேன். அவன் ஒரு கிறுக்கன். அரை பியரை ஒரு வாரம் வரை வெச்சு மோந்து பார்த்திட்டிருப்பான். நம்ம கல்யாணத்துக்கப்புறம் வாரமொரு முறை உங்களுக்கு அவனோட புட்டிக் கதை ஒன்னு சொல்றேன்.

அப்புறம் தபுஷங்கர் அளவு இல்லைனாலும் ஏதோ ஒரு ரேஞ்சுல கவிதைகள் எழுதித் தரேன். அதைப் படிக்கும் போதே உங்களுக்கு என் மேல காதல் கொட்டும். கொட்டனும். அப்புறம் நாம அடிக்கடி மழைல போறது, கடற்கரை போறது, காய்கறி வாங்கப் போறது கூட கவிதை மாதிரி மடிச்சு மடிச்சு எழுதித் தர்றேன் பாருங்களேன்.

எனக்குத் 'தல'யைப் பிடிக்காதுன்னாலும் அவங்க வீட்டுக்காரம்மாவை ரொம்பப் பிடிக்கும். நீங்களும் சைட் போஸ்ல கொஞ்சம் அவங்களை மாதிரியே இருக்குறதால உங்களையும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

"இவ்வளவு அழகை எவனும் பார்த்திருக்க மாட்டான்.
I am in love with you."

கிடார் இல்லாமலே இவர் பாட்டுப்பாட அழ ஆரம்பித்து விட்டது பெண். பெண்ணுக்கு ஏழுவின் யோசனை அதிகமாகி விட்டதால் முடிவு சுபமாக அமையுமா என்பது சந்தேகமே. எனவே வழக்கம் போல் அவரது ரசிகைகள் அவரைத் தொடரலாம்.

அடுத்ததா நம்ம வருங்கால முதல்வர், மன்னிச்சுக்கோங்கண்ணா.. வருங்காலப் பிரதமர் பொண்ணு பார்க்கப் போறாரு.

" நமஸ்தே ஜி. நான் பிறந்தது ஒரு விவசாயக் குடும்பம். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு வருஷத்துக்கு எங்க வீட்டு ஆடு, மாடு, கோழிக்கிட்டேயெல்லாம் நீ நல்லாப் பழகனும்ங்குறது தான் என் ஆசை. மத்தபடி உன் மாமியார்கிட்டே நீ குடுமிப்பிடி சண்டை போட்டாக் கூட எனக்கு ஆட்சேபனை இல்லை. நம்ம கட்சியின் வருங்காலக் கூட்டங்களுக்கு அது உதவும்.

ஒரு வருஷத்திற்குப் பிறகு நாம நேரா டெல்லி போய் பெஹன்ஜி கூட சேர்ந்துடலாம். அப்புறம் உங்க அப்பா சீதனமா தர்றதையெல்லாம் நீயே வெச்சுக்கோ. எனக்கு ரெண்டு செட் கதர் வேட்டி சட்டை மட்டும் போதும். கட்சி அலுவலகத்துக்கு அடிக்கடி போகும் போது உபயோகப்படும்.

அப்புறம் உனக்கு சமையல் தெரியலைன்னாலும் பரவாயில்லை. நானே வீட்டுல சமையல் வேலையைப் பார்த்துக்குறேன். ஆனா, வெளியில அது யாருக்கும் தெரியாம நீ பார்த்துக்கிட்டா போதும்.

" என் மேல் வை நம்பிக்'கை'
நான் மாற்றுவேன் உன் வாழ்க்'கை' "

- காது கேட்க இயலாத பெண் இவர் முகபாவங்களைப் பார்த்து இவர் காதல் மொழி தான் பேசுகிறார் என எண்ணி புன்னகைக்க டெபாசிட் கிடைத்ததா எனத் தெரியாமலே கிடைத்தது என நினைத்து கல்யாணத்திற்குப் போஸ்டர் அடிக்க கிளம்பி விட்டார் இந்த நவயுக காந்தி.

கடைசியா நம்ம கடைக்குட்டித் தம்பி. பையன் சின்னப்புள்ளைதான்னாலும் வீட்டுல நொச்சரித்ததால் பெண் பார்க்க கிளம்பிச் செல்கிறார்.

"நான் இப்போதாங்க காலேஜ் முடிச்சிருக்கேன். நீங்களும் இப்போ தான் ஸ்கூல் முடிச்சிருக்குறதா எங்க வீட்டுல சொன்னாங்க. நான் அடுத்து MBA பண்ணலாம்னு இருக்கேன். Entrance clear ஆகி, Course join பண்ணி, முடிக்குறதுக்கு எப்படியும் குறைஞ்சது ஏழு வருஷமாவது ஆகிடும். அதுக்குள்ளே நீங்களும் ஏதாவது படிங்க. அப்பப்போ நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து டாப்படிப்போம். அப்படியே காதலிப்போம். மெல்ல கலயாணம் பண்ணிக்கலாமே. இப்போ என்ன அவசரம். "

பேசிக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி வர, " ஹேய் உங்க வீட்டுல கரப்பான் பூச்சி இருக்கா. I like killing that. உங்களுக்கு அதைப் பத்தின scientific facts சொல்றேன் வாங்க."

இருவரும் கரப்பான் பூச்சியைத் துரத்த, அதைப் பார்த்த பெற்றோர் பால்ய விவாகம் செய்ய முயன்றதை எண்ணி வருந்துகிறார்கள். ஆனால், இருவரும் கரப்பான் பூச்சியை வைத்து கரெக்ட் ஆகி விட்டதால் பையன் MBA முடிப்பது சந்தேகமே.

36 comments:

trdhasan said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ!

நாளும் நலமே விளையட்டும் said...

என்னங்க!
ஒரே வேடிக்கையா இருக்கு!
பதிவு உலகத்திலே கொஞ்சம் சாதாரணமானவங்க எல்லாம் இல்லையா?

மணிகண்டன் said...

சூப்பர் ! சஞ்சய் தான் கலக்கல்.

ungalrasigan.blogspot.com said...

அருமையான கற்பனை! பதிவர்களில் மிச்சமிருக்கிற பாய்ஸையும் விடாம பாகம் 2 போடுங்க!

கார்க்கிபவா said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இதென்னா கலாட்டா? பரவாயில்லை.. எனக்கு கொஞ்சம் டேமேஜ் அம்மிதான்.. பிரதமர்தான் பாவம் :))

அபி அப்பா said...

விக்னேஷ்வரி! சூப்பர், இதுல பாருங்க முதல் பார்ட்டிக்கும், மூனாவது பார்ட்டிக்கும் பிளாக் மெயில் செய்யும் அளவுக்கு நம்ம நட்டு பின்னவீனத்துவ போட்டோ எடுத்து வச்சிருக்கான். அதை காட்டினா போதும், மாப்பிளைங்க பேசவே வேண்டாம் பொண்ணுங்க "முடியலை'ங்க விட்டுடுங்க அழுதுடுவேன்னு 'கை"எடுத்து கும்பிட்டி ஓடிடும்! போட்டோவை பப்ளிஷ் செஞ்சிடலாமா:-)))))))))

செம கலாட்டா பதிவு!!!

எம்.எம்.அப்துல்லா said...

பிரதமர் பிரமாதம் :)

thiyaa said...

சும்மாதான் சொல்லுறன் நீங்க எங்கேயோ போட்டீங்க

Vidhya Chandrasekaran said...

:))

வினோத் கெளதம் said...

Sema Comedy..:)

Raju said...

எதோ எழுதுறீங்கனு நாங்களும் படிக்க வேண்டி இருக்கு!

என் ப்ளாகிலே நான் பெண் பார்த்த கதை இருக்கு!

விக்னேஷ்வரி said...

இல்லைங்க டி.ஆர்.தாசன், வீட்டிலிருந்து தான் யோசிக்குறேன்.

வாங்க நாளும் நலமே. எல்லாருமே சாதாரணமானவங்க தாங்க.

நன்றி மணிகண்டன்.

நன்றி ரவிப்பிரகாஷ். முதல் பாகம் போட்டதுக்கே அடிக்க ஆள் வரப் போறாங்க. ரெண்டாவது பாகம் வேறையா...

டேமேஜ் அம்மியா... என்னவோ பேசுறீங்க போங்க கார்க்கி.

நன்றி அபி அப்பா.

நன்றி அப்துல்லா.

வாங்க வித்யா.

நன்றி வினோத்கௌதம்.

ரொம்ப கஷ்டப்பட்டெல்லாம் படிக்க வேண்டாம் ராஜு. என்னோட நேரத்தை நான் விரயம் பண்ணி எழுதுறேன். உங்க நேரத்தை விரயம் பண்ணி படிக்க சொல்லலையே. :)

Prabhu said...

எனக்கு பெரிய டேமேஜ் எதுவும் இல்ல. ஏழு வருஷம் ஆனாலும் முடிச்சுக் காட்டுவோம்.

ISR Selvakumar said...

எனக்கு நீங்க யாரை நையாண்டி செய்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் வித விதமான எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

*இயற்கை ராஜி* said...

/ஆனா, வெளியில அது யாருக்கும் தெரியாம நீ பார்த்துக்கிட்டா போதும்.


/

இதுதான் உலகத்துக்கே தெரியுமே...இன்னும் என்ன ரகசியம்.. அந்தப் பொண்ணே சமைச்சாலும் நாம யாரும் நம்பமாட்டோம் இல்ல‌:-))

நேசமித்ரன் said...

அருமையான நடை யார் யார் என்று புரிந்த பிறகு பிரம்மாதமாகதாக தெரிகிறது எழுத்து

Anonymous said...

ம்ம்ம், ரொம்ப நல்லா இருக்கு...

சஞ்சய் காந்தி மேட்டர் தான் கொஞ்சம் இடிக்குது.. தம்மன்னா க்கு காது கேக்காதா?
சொல்லவேயில்ல :)

Sanjai Gandhi said...

மொழி படம் ஜோதிகாவை நினைத்துக் கொண்டேன்.

ஹ்ம்ம்.. எனக்கு மட்டும் காது கேட்காத பெண்ணா?. அதனால என்ன.. அவளும் பொண்ணு தான.

Anonymous said...

யம்மா தாயி. ஏன் இந்தக் கொல வெறி?

பாவம் பசங்க விட்டிரு.

நிலாமதி said...

வித்தியாசமாய் யோசித்து இருக்கிறீர்கள். பாராடுக்கள்.

M.S.R. கோபிநாத் said...

நன்றாக இருந்தது உங்கள் கற்பனை.

☼ வெயிலான் said...

சஞ்சய கலாய்க்கிறதுனா எல்லாருக்கும் சக்கரப் பொங்கல் சாப்பிடற மாதிரி!!!!

நீங்களும்........ம்.... நடக்கட்டும்.

மொத ஆளப் பத்தின கலாய்த்தல் பத்தல.

வால்பையன் said...

இன்னும் மிச்சம் மீதி இருக்குற பேச்சிலர் பசங்களுக்கும் பொண்ணு பார்த்து முடிச்சு வையுங்க!

Rajalakshmi Pakkirisamy said...

Very nice :)

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா

வாழ்க கரப்பான் பூச்சி ஜோடி..

selventhiran said...

சஞ்ஜெய் போர்ஷன் பிரமாதம். கடைசித் தம்பிதான் யாருன்னு புரியலை.

Romeoboy said...

நல்ல பேச்சு பேசுறாங்கடா இவிங்க. இவங்கள ரொம்ப நல்லவங்கனு நினச்சுட்டேன்.

Anonymous said...

கலக்கல்சஸ், மூணு பெரிய தலைகளப்போட்டு உருட்டியிருக்கீங்க.

மணிநரேன் said...

கலக்கலான கலாய்த்தல்...;)

விக்னேஷ்வரி said...

உங்க மனம் தளராத முயற்சிய நான் பாராட்டுகிறேன் பப்பு.

நன்றி செல்வகுமார். யாருன்னு தெரியலையா... எல்லாரும் கமெண்ட்ல வாக்குமூலம் குடுத்திருக்காங்க பாருங்க.

சரியா சொன்னீங்க ராஜி.

நன்றி நேசன்.

என்னது பொண்ணு தமன்னாவா... இதை யாருமே சொல்லல... :௦O

எப்படினாலும் மனசைத் தேத்துக்குறீங்க பார்த்தீங்களா. அது தாங்க உங்க ப்ளஸ் சஞ்சய்.

ச்சும்மா தான் அண்ணாச்சி. எனக்கும் பொழுது போகணுமில்ல. :)

நன்றி நிலாமதி.

நன்றி கோபிநாத்.

விக்னேஷ்வரி said...

உங்களையும் இந்த லிஸ்ட்ல சேர்த்திருந்திருக்கணும் வெயிலான்.
இதுக்கு மேல முதல் ஆளைப் பத்தித் தெரியனும்னா கேண்டி கிட்ட தான் கேக்கணும். ;)

அடுத்து உங்களுக்கு தான் வால்.

நன்றி ராஜலக்ஷ்மி

வாங்க வசந்த்.

நன்றி செல்வா. கடைசித் தம்பி மதுரைக்காரரு. மேல கமெண்ட்ல இருக்காரு பாருங்க.

வாங்க ரோமியோபாய். இப்படியெல்லாம் பேசினா கெட்டவங்களா... :O

நன்றி அம்மிணி.

நன்றி மணிநரேன்.

☀நான் ஆதவன்☀ said...

ஹி ஹி சூப்பர் :)

Unknown said...

ஹாஹாஹா... சூப்பர்...
மத்தவங்க பதிவு படிக்காததுனால கார்க்கிய மட்டும் புரிஞ்சு கிட்டேன்.
சூப்பர்...

துபாய் ராஜா said...

நல்லாத்தான் கல(லாய்)க்குறீங்க.... :))

பெசொவி said...

இப்புடியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் சில பேர் தன்னை பத்தி எதுவுமே சொல்லிக்கறதில்லை போலிருக்கு. (அட, நான் இல்லீங்கோ, நான் பதிவுலகத்துக்கு ரொம்ப புதுசு இல்ல!)

சூர்யா - மும்பை said...

சும்மா கலக்குறிங்க

வித்தியாசமான சிந்தனை, நடை. முதல் பதிவரின் பெண் பார்க்கும் படலத்தை பாக்ய ராஜ் பாணியில் பேசுவதாய் யோசித்துப் பார்த்தால்....ஒரே தமாசுதான் .


நட்புடன் சூர்யா