Thursday, October 29, 2009

காதல் என்னும் முடிவிலி


கோக்
கசட்டா
காஜுகத்லி
கஸ்டர்ட்
எதுவுமே ருசிக்கவில்லை
உன் இதழ் பதித்து
மீதி வைத்த
பாதிக் கோப்பைத்
தண்ணீரை விட.

****************************************************************************************************

உனைப் பற்றி எழுத நினைத்து
உன் பெயரை மட்டுமே எழுதினேன்.
வார்த்தைகள் கூட
நாணத்தோடு
ஓடி ஒளிந்து கொள்கின்றன!

****************************************************************************************************

உன் பைக்கின் பின்னால்
நான் அமர
சீராகச் செல்கிறது
வாகனம்.
தாறுமாறாகப் போகிறது
மனம்.

****************************************************************************************************

சாப்பிடச் சொன்னால்
ஊட்டி விடுகிறாய்.
தூங்கச் சொன்னால்
தூங்க வைக்கிறாய்.
படிக்கச் சொன்னால்
கற்றுத் தருகிறாய்.
பேசாதிரு என்றால்
கதை...யளக்கிறாய்.
காதலிக்கச் சொன்னால்
கிறுக்கித் தள்ளுகிறாய்.
உன்னை வைத்துக் கொண்டு
என்னடா செய்ய...

****************************************************************************************************

"கார் ஓட்டப் பழக வேண்டும்" என்றேன்
"சரி வா சொல்லித் தரேன்" என்றாய்
"நீ இடது பக்கம் உட்கார்ந்தால்
நான் எப்படி சாலை பார்த்து ஓட்டுவேன்"
என்ற என் கேள்விக்கு
என்னை அடிப்பதாய் கை ஓங்கி
அணைத்துக் கொண்டே சொன்னாய்
"நீ மாறவே மாட்டியாடி?"
"நீ என்னை மாற்றி விட்ட பின்
வேறெப்படி மாற நான்?"

****************************************************************************************************

"உன் சட்டை கொடு
நீ இல்லாத நேரங்களில்
எனக்குத் துணையாக"
என்றேன்.
"சட்டைக்குள் நான் இருந்தால்
சம்மதமா"
என்கிறாய்.
"ச்சீ போடா" என்கிறது உதடு
"வேண்டாமென்றா சொல்வேன்"
என்ற மனதின்
குரலை மறைக்க.

****************************************************************************************************

"நான் போறேன்டா."
"பத்திரமா போயிட்டு வாடா "
"கண்டிப்பா போகனுமா"
"ஆமாடா செல்லம்"
"போகப் பிடிக்கலைடா"
"தெரியும் டா"
"நான் உன்னை விட்டுப் போகலடா"
"சரி போகாத."
"இல்ல, போய்த் தான் ஆகணும்."
"ம்ம்"
பிரிதலின் போதான
நமது உரையாடல்கள்
எப்போதும் மாறுவதேயில்லை
நம் காதலைப் போன்றே!

****************************************************************************************************

அழகிய மழைநாளில்
ஒதுங்கிய கூரைக்குக் கீழே
நடுங்கிய கைகளுக்குள்ளே
மூச்சுக் காற்றின் உஷ்ணம்
அதிகரிக்கும் வேளையில்
நடக்கிறது
ஒரு பனிப் போர்
உன் ஆண்மைக்கும்
என் பெண்மைக்கும்.

44 comments:

Rajalakshmi Pakkirisamy said...

very nice :)

Kumar.B said...

seems to be you are in great mood.

Rajalakshmi Pakkirisamy said...

//உனைப் பற்றி எழுத நினைத்து
உன் பெயரை மட்டுமே எழுதினேன்.
வார்த்தைகள் கூட
நாணத்தோடு
ஓடி ஒளிந்து கொள்கின்றன! //

:)

ellame super

நாடோடி இலக்கியன் said...

கலக்கறீங்க.

Anonymous said...

(மறுபடியும்) கலக்குறீங்க விக்னேஷ்வரி

ஜெட்லி said...

கவிதை பயங்கரமா சூப்பர்ஆ இருக்கு!!
காதல் போதை... ஒன்னும் பண்ண முடியாது...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனுபவிச்ச்சு எழுதியிருக்கீங்க போல, எல்லாக் கவிதைகளுமே நல்லா இருக்கு

வாழ்வாங்கு வாழட்டும் உங்கள் காதல்

வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

கடைசி கவிதை எக்ஸலெண்ட்.

முதல் ’க’-விதையும் அருமை!

trdhasan said...

உன்னை வைத்துக் கொண்டு
என்னடா செய்ய... //


"நீ மாறவே மாட்டியாடி?"
"நீ என்னை மாற்றி விட்ட பின்
வேறெப்படி மாற நான்?" //


பிரிதலின் போதான
நமது உரையாடல்கள்
எப்போதும் மாறுவதேயில்லை
நம் காதலைப் போன்றே! //


- இதெல்லாம் எழுத உனக்கு மட்டும்தான் தகுதி இருக்குன்னு நினைக்கறேன்.

GIYAPPAN said...

காரணம் கேட்காது , சொன்னாலும் புரியாது. பித்துப் படித்ததுபோல் செய்யும் செயல்கள் புனிதமாக தோன்றும், பொக்கிஷமாக நினைவில் நிற்கும். பிரிவென்று ஒன்று ஒன்தேன்ற நினைவே இன்றி ஓரவுகொள்ளும் இதயங்களுக்கு உலகில் மருந்தென்ன மாயமென்ன? எல்லாமே காதல்தான். உலகமே காதல்தான். மற்றவர்களெல்லாம் அன்னியம். மற்றதெல்லாம் சூனியம். என்ன ஒரு இன்பம் இது? அனுபவித்தவர் மட்டுமே அறியும் அரிய ரகசியம். நன்று. வாழ்க... வளர்க.

GIYAPPAN said...

காரணம் கேட்காது , சொன்னாலும் புரியாது. பித்துப் படித்ததுபோல் செய்யும் செயல்கள் புனிதமாக தோன்றும், பொக்கிஷமாக நினைவில் நிற்கும். பிரிவென்று ஒன்று உண்டென்ற நினைவே இன்றி உறவுகொள்ளும் இதயங்களுக்கு உலகில் மருந்தென்ன மாயமென்ன? எல்லாமே காதல்தான். உலகமே காதல்தான். மற்றவர்களெல்லாம் அன்னியம். மற்றதெல்லாம் சூனியம். என்ன ஒரு இன்பம் இது? அனுபவித்தவர் மட்டுமே அறியும் அரிய ரகசியம். நன்று. வாழ்க... வளர்க.

விக்னேஷ்வரி said...

நன்றி ராஜி.

வாங்க குமார்.

திரும்பவும் நன்றி ராஜி.

நன்றி நாடோடி இலக்கியன்.

நன்றி அம்மிணி.

நன்றி ஜெட்லி.

நன்றி அமித்து அம்மா.

நன்றி பரிசல்.

வாங்க டி.ஆர். தாசன்.
இதெல்லாம் எழுத உனக்கு மட்டும்தான் தகுதி இருக்குன்னு நினைக்கறேன் //
அப்படியா, ஏங்க...

சரிதான் ஐயப்பன் சார். நன்றி.

வித்யா said...

அழகு:)

Thamizhmaangani said...

wow!!காதல் மழையை பொழிந்து தள்ளிவிட்டீர்கள். சூப்பர் அக்கா!

//உன் பைக்கின் பின்னால் நான் அமர சீராகச் செல்கிறது வாகனம். தாறுமாறாகப் போகிறது மனம். //

எனக்கு பிடித்த வரிகள். உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.
மாமா ரொம்ம்ம்ம்ம்ப கொடுத்து வச்சவரு (அவருக்கு ஒரு பெரிய நமஸ்தே சொல்லிடுங்க என் சார்பாக!!) ஹிஹி..:)

நேசமித்ரன் said...

பிறகான தனிமைகளில்
உணரத்தரும் உன் அண்மை
நிறம் மாற்றிப் போகிறது சொல்லாத
பாகங்களை

உன்னுடனான நொடிகளின் உலகம்
உறையப் பெற்றால் தான் என்ன
அப்படியே

என்று எழுத தூண்டுகிறது இந்த வரிகள் பொதிந்து வைத்திருக்கும் காதல்

உங்களின் காதல் ஆதர்சமாகிக் கொண்டிருக்கிறது நிறைய பேருக்கு இந்தக் கவிதைகள் வழி

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

கலக்கலா இருக்கு!

KaveriGanesh said...

சகோதரி,

ஓன்று மட்டும் தெரிகிறது, கண்ணா ரொம்ப கொடுத்து வைத்தவர்.

வாழ்த்துக்கள்

rajan said...

"காதல் என்னும் முடிவிலி"
உங்க தலைப்பே கவிதையாத்தான் இருக்கு!

இதுக்கு மேல உங்க கவிதைகளை பற்றி வேற தனியா சொல்லனும்னா...

XXXXXXXX எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை....

XXXXXXXXxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கோபிநாத் said...

கவிதை அருமை. ரசித்தேன். நன்றி.

வினோத்கெளதம் said...

எல்லாமே நல்லா இருக்கு..குறிப்ப அந்த உரையாடல் போன்ற கவிதை..

Romeoboy said...

காதல் ரசம் சொட்ட சொட்ட அருமையான கவிதை .

\\உன் பைக்கின் பின்னால்
நான் அமர
சீராகச் செல்கிறது
வாகனம்.
தாறுமாறாகப் போகிறது
மனம் //

காதலித்து கொண்டு இருப்பவர்களுக்கு தான் இந்த சுகம் தெரியும்..

ரைட் ரைட் கலக்குங்க .

செல்வேந்திரன் said...

வார்த்தைச் சிக்கனம்
தேவை இக்கணம்!

குறும்ப‌ன் said...

//சீராகச் செல்கிறது
வாகனம்.
தாறுமாறாகப் போகிறது
மனம்.//

பார்றா...இந்த‌ குழ‌ந்தைக்குள்ள‌ என்னா ஒரு க‌விதை ஞான‌ம்!

செந்தில் க‌வுண்ட‌ம‌ணிய‌ பாத்து கேப்பாரே, அதுதான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது "அய்ய்ய்ய்ய்ய்ய்யோ அது எப்ப‌டிண்ணே உங்க‌ளால‌ ம‌ட்டும் இப்ப‌டி யோசிக்க‌ முடியுது"

"எப்ப‌டிண்ணே"வ‌ எடுத்துட்டு "எப்ப‌டிங்க‌" போட்டுக்குங்க‌

" உழவன் " " Uzhavan " said...

எல்லாமே அருமை. அதில் ஒரு சில அபாரம்

பிரியமுடன்...வசந்த் said...

//"கார் ஓட்டப் பழக வேண்டும்" என்றேன்
"சரி வா சொல்லித் தரேன்" என்றாய்
"நீ இடது பக்கம் உட்கார்ந்தால்
நான் எப்படி சாலை பார்த்து ஓட்டுவேன்"
என்ற என் கேள்விக்கு
என்னை அடிப்பதாய் கை ஓங்கி
அணைத்துக் கொண்டே சொன்னாய்
"நீ மாறவே மாட்டியாடி?"
"நீ என்னை மாற்றி விட்ட பின்
வேறெப்படி மாற நான்?" //

அது சரி

எல்லாமே காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதியிருக்கீங்க... நல்லாயிருக்கு

தராசு said...

சாரி, ஆணி அதிகமானதால கடைப் பக்கம் வர முடியவில்லை.

இது கொலை வெறி கவுஜ.

கலக்குங்க.

விக்னேஷ்வரி said...

நன்றி வித்யா.

நன்றி தமிழ் மாங்கனி. அவர் கிட்ட உங்க நமஸ்தே சொல்லியாச்சு. :)

உங்களை மாதிரி எழுதனும்னு ஆசை தான். இப்போ தான் பழகுறேன் நேசன். நன்றி.

நன்றி வால்.

நன்றி காவேரி கணேஷ்.

நன்றி ராஜன். வார்த்தை கிடைக்கலைன்னு எதுவும் திட்டலையே! ;)

நன்றி கோபிநாத்.

விக்னேஷ்வரி said...

நன்றி வினோத்கௌதம்.

நன்றி ரோமியோபாய். நீங்களும் காதலின் சுகத்தை அனுபவிக்கிறீர் போலத் தெரிகிறதே. ;)

இப்போ தான் பழகுறேன். சீக்கிரமே சரி பண்ணிடலாம் செல்வா.

குறும்பன், இன்னைக்கு கலாய்க்க நான் தான் கிடைச்சேனா... :)

நன்றி உழவன்.

நன்றி பிரியமுடன் வசந்த்.

வாங்க தராசு. நன்றி.

rajan said...

enna paththi thappa ninaichtuneengale?
sari vidunga! nan apdipatta aal kidayathu. unmayile ungal kavithai arumai.

கவிதை(கள்) said...

மிக அழகு

உங்களது காதல் கவிதை

வாழ்த்துக்கள்

விஜய்

கவிதை(கள்) said...

மிக அழகா இருக்குங்க

வாழ்த்துக்கள்

விஜய்

சி. கருணாகரசு said...

உன் பைக்கின் பின்னால்
நான் அமர
சீராகச் செல்கிறது
வாகனம்.
தாறுமாறாகப் போகிறது
மனம். //


அருமை.... க‌ல‌க்குங்க‌.

சுசி said...

எல்லாமே நல்லாருக்கு.. அதுவும் இது ரொம்ப நல்லாருக்கு...

//"உன் சட்டை கொடு நீ இல்லாத நேரங்களில் எனக்குத் துணையாக" என்றேன். "சட்டைக்குள் நான் இருந்தால் சம்மதமா" என்கிறாய். "ச்சீ போடா" என்கிறது உதடு "வேண்டாமென்றா சொல்வேன்" என்ற மனதின் குரலை மறைக்க.//

Deepa (#07420021555503028936) said...

ஒவ்வொன்றும் ரொம்பப் பிடித்திருந்தது.

ப்ரியமானவள் said...

பெண்களே.. இதுவும் சரிதானே

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

ராம்குமார் - அமுதன் said...

Super nga... Arumaiyana Kavithaigal.... VaazhthukkaL...

துபாய் ராஜா said...

காதல், காதல், காதல்.... கவிதை வரிகளெங்கும் காதல்.முதல் கவிதையும் மற்ற கவிதைகளும் எனது பழைய கவிதைகளை நினைவிற்கு கொண்டு வந்துவிட்டன.http://rajasabai.blogspot.com/2006_08_01_archive.html என்ற லிங்கில் போய் படித்துப் பாருங்கள் விக்கி.......

பித்தனின் வாக்கு said...

காதலின் இழையும், நெகிழ்வும் அழகாய் சொல்லியிருகின்றீர்கள். மிகவும் அருமை. நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம்ம் :)

விக்னேஷ்வரி said...

நான் சும்மா தான் சொன்னேன் ராஜன். Don't take it serious. உங்கள் கருத்துக்கு நன்றி.

நன்றி விஜய்.

திரும்பவும் நன்றி விஜய். :)

நன்றி கருணாகரசு.

நன்றி சுசி.

நன்றி தீபா.

வாங்க ப்ரியமானவள். உங்கள் பக்கம் பார்க்கிறேன்.

நன்றி ராஜ்குமார் - அமுதன்.

நன்றி துபாய் ராஜா. உங்கள் கவிதைகள் படிக்கிறேன்.

rajan said...

//நான் சும்மா தான் சொன்னேன் ராஜன். Don't take it serious. உங்கள் கருத்துக்கு நன்றி//.

நன்றி!

Sivaji Sankar said...

//கோக்
கசட்டா
காஜுகத்லி
கஸ்டர்ட்
எதுவுமே ருசிக்கவில்லை
உன் இதழ் பதித்து
மீதி வைத்த
பாதிக் கோப்பைத்
தண்ணீரை விட.//

Hi5 கவிதை...

Mohan Kumar said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதைகள் . ஒரு சந்தேகம்: இதெல்லாம் முன்ன ஒரு காலத்தில் எழுதியவை தானே?

சக்தி த வேல்..! said...

உன் பைக்கின் பின்னால்
நான் அமர
சீராகச் செல்கிறது
வாகனம்.
தாறுமாறாகப் போகிறது
மனம்.


இயல்பானவைகள் இலக்கியமாக..! நன்று..!