நீ-
என்னில் கவிதையாய் நுழைந்து
காதலாய்க் கலந்தவன்.
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு பொழுதும்
உள்ளுக்குள் எல்லையில்லா மகிழ்ச்சி.
****************************************************************************************************
இப்படித் தான் பேச வேண்டும்
என்றில்லாமல்
நீ நீயாகப் பேசியதில் தான்
இழந்தேன் என்னை.
****************************************************************************************************
உனக்காக என்ன வாங்க என யோசித்தே
பொழுதைக் கழித்தேன் நான்.
எந்த யோசனையுமின்றி
எனை இறுக அணைத்து
என்னையே வாங்கிக் கொண்டாய் நீ.
****************************************************************************************************
உன் காதல்
ஒரு ஆண் பெண்ணிடத்தில் கொள்ளும்
நேசத்தையும் தாண்டி
தாய் சேயை நேசிப்பது போன்ற
எதிர்பார்ப்பற்றது
பரிசுத்தமானது!
****************************************************************************************************
உன் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன்னுடன் பேச நினைக்கிறேன் நான்.
என் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன் கண் மூடி உன்னுள் இருக்கும்
என்னுடன் பேசுகிறாய் நீ
****************************************************************************************************
உன் தோள் சாய்ந்த பொழுதுகள்
உன் தோழமையை எனக்கு சொல்லின.
உன் கேச வருடல்
உன் நேசத்தை அறிவித்தது.
உன் அணைப்பு
உன் அன்பைக் காட்டிற்று .
உன் முத்தம்
உன் காதலை மொத்தமாய்த் தந்தது.
வேறென்ன வேண்டுமெனக்கு...
****************************************************************************************************
"இப்படி இருடா... அப்படி பண்ணாதடா..." என்ற
என் தினசரி செல்லக் குறைகளை ஏற்றவாறே
என் நெற்றி முகர்ந்தவன் நீ.
எப்போதும் உனக்காக நான் மாற வேண்டும்
என நீ சொன்னதில்லை.
என் கோபங்கள், சிறு களிப்புகள் என
அனைத்தையும் என்னுடனே
இருந்து ரசிப்பவன் நீ.
இன்று போல் என்றும்
என்னுடன் நீ இருக்க வேண்டும் எனும்
வரம் மட்டுமே உன்னிடம் கேட்கிறேன்.
தருவாயா?
40 comments:
ரசித்து படித்தேன் பாஸ்..
வாழ்க தங்கள் சுயநலமில்லா காதல்...
அருமை, அருமை.
கலக்கறீங்க.
தீபாவளி வாழ்த்துக்கள்
super mam :))))
ரசித்துப் படித்தேன்.
இதையும் ட்ரான்ஸ்லேட் பண்ணியாச்சா?
ஆமா என்ன் இப்படி ஓவர் ஐஸ் மழை ஆத்துகாருக்கு?
:)
உள்ளத்தை உருக்கிய நல்ல பதிவு
//இப்படித் தான் பேச வேண்டும்
என்றில்லாமல்
நீ நீயாகப் பேசியதில் தான்
இழந்தேன் என்னை.//
குளிர் தரும் இதமாய் உங்களின் கவிதை நன்று...
என்ன வாங்க என யோசித்தே பொழுதைக் கழித்தேன் நான். எந்த யோசனையுமின்றி எனை இறுக அணைத்து என்னையே வாங்கிக் கொண்டாய் நீ.
i like your feelings fantastic keep it up
இப்படித் தான் பேச வேண்டும்
என்றில்லாமல்
நீ நீயாகப் பேசியதில் தான்
இழந்தேன் என்னை.
***********************************
உனக்காக என்ன வாங்க என யோசித்தே
பொழுதைக் கழித்தேன் நான்.
எந்த யோசனையுமின்றி
எனை இறுக அணைத்து
என்னையே வாங்கிக் கொண்டாய் நீ.
*********************************
கவிதையிலும் விட்டு வைக்கலையா! என்ன சொல்றதுன்னு தெரியல! உன்ன பாராட்ட ரொம்ப யோசிக்க வேண்டியது இருக்கு போ!
நல்ல இருப்ப விக்கி! என் எழுத்த வாசிக்கும் போது சந்தோஷம இருக்கு.
இன்னும் நிறைய எழுது......
படிக்க நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறோம்...
நல்லா இருக்குங்க
அருமை
lovely yaar
//நீ-
என்னில் கவிதையாய் நுழைந்து
காதலாய்க் கலந்தவன்.
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு பொழுதும்
உள்ளுக்குள் எல்லையில்லா மகிழ்ச்சி.//
விக்னேஷ்வரி... ஆரம்பமே அசத்தலாக இருக்கிறதே...
//இப்படித் தான் பேச வேண்டும்
என்றில்லாமல்
நீ நீயாகப் பேசியதில் தான்
இழந்தேன் என்னை.//
இதுவல்லவோ கவிதை... நல்லா இருக்கே...
//உனக்காக என்ன வாங்க என யோசித்தே
பொழுதைக் கழித்தேன் நான்.
எந்த யோசனையுமின்றி
எனை இறுக அணைத்து
என்னையே வாங்கிக் கொண்டாய் நீ.//
வாவ்... இதை விட என்ன பெரிய பரிசு உலகத்தில் கிடைத்து விடப்போகிறது?? சரியே..
//உன் காதல்
ஒரு ஆண் பெண்ணிடத்தில் கொள்ளும்
நேசத்தையும் தாண்டி
தாய் சேயை நேசிப்பது போன்ற
எதிர்பார்ப்பற்றது
பரிசுத்தமானது!//
அவ்ளோ தாய்மையான மற்றும் தூய்மையான காதல் அது... அதற்கு ஒரு பெரிய "ஓ" போடுவோம்... இப்போ இந்த மாதிரி எங்க இருக்கு? ஏதோ அந்த மூலையில் ஒண்ணு, இந்த மூலையில் ஒண்ணு...
//உன் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன்னுடன் பேச நினைக்கிறேன் நான்.
என் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன் கண் மூடி உன்னுள் இருக்கும்
என்னுடன் பேசுகிறாய் நீ//
புது புது பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்... அது தெரிந்தும் கூட அன்பே, மனம் அதையேதான் எதிர்பார்க்கும்... (இது மின்னலே படத்தில் கவிஞர் தாமரை எழுதியது... இப்போது ஞாபகம் வந்தது...). காதலின் இடையே வரும் சிறு ஊடல் கலைந்த பின், வரும் காதல் மிக சிறப்பாக இருக்கும்...
//உன் தோள் சாய்ந்த பொழுதுகள்
உன் தோழமையை எனக்கு சொல்லின.
உன் கேச வருடல்
உன் நேசத்தை அறிவித்தது.
உன் அணைப்பு
உன் அன்பைக் காட்டிற்று .
உன் முத்தம்
உன் காதலை மொத்தமாய்த் தந்தது.
வேறென்ன வேண்டுமெனக்கு...//
வேறென்ன வேறென்ன வேண்டும்... ஒரு முறை சொன்னால் போதும், நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே... இதுவும் ஒரு கவிஞனின் கற்பனைதான்....
//"இப்படி இருடா... அப்படி பண்ணாதடா..." என்ற
என் தினசரி செல்லக் குறைகளை ஏற்றவாறே
என் நெற்றி முகர்ந்தவன் நீ.
எப்போதும் உனக்காக நான் மாற வேண்டும்
என நீ சொன்னதில்லை.
என் கோபங்கள், சிறு களிப்புகள் என
அனைத்தையும் என்னுடனே
இருந்து ரசிப்பவன் நீ.//
ரொம்ப ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க... அதான் இவ்ளோ நல்லா இருக்கு...
//இன்று போல் என்றும்
என்னுடன் நீ இருக்க வேண்டும் எனும்
வரம் மட்டுமே உன்னிடம் கேட்கிறேன்.
தருவாயா?//
இதைவிட வேறு சிறந்த வரம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை...
வாவ்.... சூப்பரா எழுதி இருக்கீங்க விக்னேஷ்வரி... அதனால தான், படிச்சு விரிவா கமெண்ட் போட்டென்...
அப்படியே என்னோட தீபாவளி பதிவு வந்து சிறப்பு தீபாவளி கிஃப்ட் பெற்று செல்லவும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html
ஆஹா! என்னவரை சந்திக்க இன்னும் ரெண்டு வாரம் இருக்கே! உங்க கவிதைய படிச்ச பிறகு இப்பவே அவங்கள பாக்கணும் போல இருக்கு!
வாவ்!!!
கொடுத்து வைத்தவர்..
இந்த கவிதை பெற்றவர்...
Very nice mam.
//இன்று போல் என்றும்
என்னுடன் நீ இருக்க வேண்டும் எனும்
வரம் மட்டுமே உன்னிடம் கேட்கிறேன்.
தருவாயா?//
:)
மிக அழகு
விஜய்
//உன் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன்னுடன் பேச நினைக்கிறேன் நான்.
என் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன் கண் மூடி உன்னுள் இருக்கும்
என்னுடன் பேசுகிறாய் நீ//
நானும் என் மனைவியும் கோபமான நேரங்களில் தனியாக பேசிக்கொள்வது போல் இந்த வரிகள் இருந்தது. ரசித்தேன். நன்றி.
யப்பா, என்னமா எழுதியிருக்கீங்க. விருப்பமிருந்தா ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்புங்க.
சொல்ல மறந்துபோச்சு. அசத்தல்.
super kavithai i like very much.......
amani...
super kavithaikal.... i like very much....
amani...
super kavithaikal.... i like very much....
amani...
"உன் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன்னுடன் பேச நினைக்கிறேன் நான்.
என் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன் கண் மூடி உன்னுள் இருக்கும்
என்னுடன் பேசுகிறாய் நீ"
Excellent,I believe most of them are of personal experience.
கவிதைகளனைத்திலும் அளவிலா அன்பு.......
காதல்,காதல்,காதல்... வரிகளெங்கும் காதல் பொங்கி வழிகிறது..
அனைத்தும் அருமை.
//இப்படித் தான் பேச வேண்டும் என்றில்லாமல் நீ நீயாகப் பேசியதில் தான் இழந்தேன் என்னை.//
அனைத்திலும் அருமை.
வரம் பலிக்கும். வாழ்த்துக்கள்.
காதல் கணவருக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
எல்லா வரிகளும் சூப்பரு ஜோரு..
//உனக்காக என்ன வாங்க என யோசித்தே
பொழுதைக் கழித்தேன் நான்.
எந்த யோசனையுமின்றி
எனை இறுக அணைத்து
என்னையே வாங்கிக் கொண்டாய் நீ.//
இது டாப்பு..
ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவிச்சு எழுதியிருக்கீங்க அக்கா!. அருமை அருமை:)
1,2,3,5
பிடித்தவை
ஹை..நல்லா இருக்கே..கவிதையிலும் கலக்குறிங்க..
நன்றி வசந்த்.
நன்றி தராசு. உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
நன்றி மயில்.
நன்றி நாடோடி இலக்கியன். ஐஸ் எல்லாம் இல்லைங்க. ச்சும்மா கவிதை வருதானு ட்ரை பண்றேன்.
நன்றி கவிக்கிழவன்.
நன்றி பாலாஜி.
நன்றி ராஜகமல்.
நன்றி மணி.
நன்றி நேசமித்திரன்.
Thank you Vidhya.
உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி கோபி.
உங்கள் பரிசிற்கு கிர்ர்ர்ர்ர்
அவர் கிட்ட போன் பண்ணி பேசிடுங்க நாஸியா. நேர்ல பார்க்கும் போது அவர் கவிதையோட வந்து நிப்பாரு.
என்னிடம் காதலைக் கொடுத்து வைத்தவர் தான் கார்க்கி.
நன்றி ராஜலெட்சுமி பக்கிரிசாமி.
நன்றி விஜய்.
வாங்க பிருந்தாவனம். கோபம் வரும் போது பேசாம இருக்குறதும் சுகம் தான்.
நன்றி சின்ன அம்மிணி. இன்னும் பத்திரிக்கைக்கு எழுதுற அளவுக்கு நாம ஆகலைங்க.
நன்றி மணிவண்ணன்.
நன்றி குமார். அனுபவங்களே கவிதைகள்.
வாங்க வெயிலான். அன்பு என்றும் அளவில்லாததும், நீடித்திருப்பதும் தான் வேண்டுவது.
நன்றி துபாய் ராஜா. உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
நன்றி சஞ்சய்.
நன்றி தமிழ்மாங்கனி.
நன்றி அஷோக்.
நன்றி வினோத் கௌதம்.
அருமை, அருமை.
சும்மா "கும்"நு எழுதிருக்கீங்க !
உணர்ந்து எழுதப்பட்ட வரிகளில் உயர்ந்து நிற்கும் கருத்துக்கள். நல்ல எழுத்துப் புலமை. காதல என்ன அவ்வளவு பெரிய விந்தை? எவ்வளவுபேர் எழுதினாலும் இன்னும் ஊற்றுப் பெருக்கெடுக்கும் சுரங்கம் இந்தக் காதல். உங்கள் எழுத்து வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்குங்க கவிதை
விக்னேசுவரி,
முழுக்கவிதையும் உணர்ந்தேன்.
////இன்று போல் என்றும்
என்னுடன் நீ இருக்க வேண்டும் எனும்
வரம் மட்டுமே உன்னிடம் கேட்கிறேன்.
தருவாயா?//
நீ கேட்காமலே அனைத்தியும் கொடுக்கும் "அவர்" இதைக் கொடுக்க எப்படி மறந்தார்?
நன்றி புலிகேசி.
நன்றி எதிர்க்கட்சி.
நன்றி ஐயப்பன் சார்.
நன்றி கருணாகரசு.
வாங்க சத்ரியன். கொடுக்க மறக்கலை. என்றும் என்னுடனே இருக்கிறார்.
Why is it always that women express their love for a man this way?
Yours is sickeningly sentimental.
Why do women think that they should love; and their love needs to be reciprocated by their men? In other words, at the feet of men asking or longing for love? Why, O why?
Is it built into their system - to love, to long for, to pain, to peev, to suffer the pangs of remembrances? Or, as S.Radhakrishnan said, 'To love and suffer is the lot of women'.
Not that men dont write such poems oozing over their women?
But they are taken for being effeminate and a wastrel.
Try to fortify your mind.
The love unexpressed is more powerful than that expressed.
'Heard melodies are sweet, but those unheard are sweeter'
Dont be downheartened about the above comments. For, I too have some praise for you.
One thing that stands out in your poem - that is to say, I like - is your evocation of maternal love for her babe in the love of your man.
Ya, you got it. The amazing thing about the love between a man and a woman - sorry, you will be angry with me for that order - the right order is -
between a woman and a man !
is its bewildering complexity.
It is in love that the two sexes don all kinds of roles of which you touched one: Mother and babe. Sisterly, brotherly, fatherly, motherly, friendly and what not. All roles come to play and beguile us.
That one point I like in your poem.
Love should remain as a journey by a rickety bullock cart on a katcha road. Enjoy the pains.
Continue your poems. Perhaps one day there may be a poem in your ouvre, which may satisfy old men like me walking with lantern to see the ideal.
Waiting.Hopefully.
கற்பனையில் புனையப்படும் கவிதையை விட உணர்வுகளை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தும் கவிதையே அனைவரையும் போய்ச் சேரும். அந்த வகையில் உங்கள் ஒவ்வொரு கவிதையுமே மிகச் சிறந்தவை.அனுபவித்தேன்.
கற்பனையில் புனையப்படும் கவிதையை விட உணர்வுகளை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தும் கவிதையே அனைவரையும் போய்ச் சேரும். அந்த வகையில் உங்கள் ஒவ்வொரு கவிதையுமே மிகச் சிறந்தவை.அனுபவித்தேன்.
Post a Comment