
எனக்கு ரொம்பப் பிடிச்ச தோழி இவ. ரொம்ப நல்லவளும் கூட. நான் டெல்லி வந்தப்போ யாருமே இல்லாம பேந்தப் பேந்த முழிச்சிக்கிட்டு இருந்த சமயத்துல என்கூட பேசி, எனக்கு ஹிந்தி கத்துக் குடுத்த குரு. உத்திரப் பிரதேச மாநிலப் பொண்ணு. அவளுக்கு ரெண்டு நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவளுக்கு ரொம்பப் பிடிச்சவங்க. ஒருத்தர் A, இன்னொருத்தர் B ன்னு வெச்சுக்கலாம். A அவளோட கல்லூரி முடிஞ்சு வேலைக்காக காத்திட்டிருந்து கிடைக்காம வெக்ஸ் ஆனப்போ அவளுக்கு வேலை கிடைக்க நிறைய உதவிருக்கார். மனசளவுல வீககா இருந்தவளைத் தேத்தி நார்மல் ஆக்கினார். இவளோட நல்ல நண்பன். எப்போவும் வாழ்க்கைல ஒருத்தரை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு ஒரு எண்ணம் இருக்கும்ல. அப்படி அவள் நினைக்குற உறவு. அந்த மிஸ் ஆகாத உறவாக இவள் அவரின் தோழியாக இருக்க வேண்டுமென நினைத்தார் அவர். ஆனா நம்ம புள்ளையோ நட்பையும் தாண்டிப் போய் காதல்ன்னுடுச்சு. அவர் ஒத்துக்கலை. இப்படியே அவருக்கு நட்பாவும், இவளுக்குக் காதலாவும் ஒரு வருஷம் போச்சு.
நடுவுல தோழியோட இன்னொரு நண்பர் “B” அவ மேல ஃபீல் ஆகி ப்ரபோஸ் பண்ணிருக்கார். அந்த நேரத்துல “A”யினோட நிராகரிப்பாலேயும், “B”யோட அக்கறையாலும் அம்மணி ஒத்துக்கிட்டா. இவளின் காதல் Aயால் நிராகரிக்கப்பட்டது Bக்குத் தெரியும். இருந்தும் இவ தொடர்ந்து Aயோட நட்பா இருக்குறதை இவர் தடுக்கல. B அவளைக் கொஞ்ச நஞ்சமில்ல. செமையா லவ் பண்றாரு. அவளுக்குக் கால் வலின்னா டாக்டரையே அவ ஹாஸ்டலுக்குக் கூட்டிட்டு வர்றதும், அவ ஸேடா இருந்தா இவர் தாடி வளக்குறதும், அவ சிரிச்சா அதை நினைச்சு நினைச்சு இவர் தூங்காம சிரிக்குறதும்ன்னு வித்தியாசமான ஆளு. ஆனா இந்த ஓவர் அக்கறை இவளுக்குப் பிடிக்கல.
இப்படியே போயிட்டிருந்த கதைல ஒரு ட்விஸ்ட்டா, A இவளோட காதலை ஒத்துக்கிட்டதோட அவங்க வீட்லேயும் பேச சம்மதிச்சிருக்கார். ஒரு வருஷத்துக்கு முன்னாடி இப்படி நடக்கக்கூடாதான்னு ஏங்கிட்டிருந்த தோழி இப்போ செம ஷாக்ல இருக்கா. கண்டிப்பா இப்போவும் இவளுக்கு B ஐ விட A வைத் தான் பிடிக்கும். விலகிப் போற உறவுகள் மேல எல்லாருக்குமே இருக்கும் ஈர்ப்பாவும் இருக்கலாம். ஆனா இவளால மிஸ்டர்.B யைக் கஷ்டப்படுத்த முடியல. ஏன்னா அவ்ரும் நல்ல நண்பர். என்ன செய்யன்னு தெரியாம என்கிட்ட வந்தா.
நான் என்ன சொன்னேன்னா, A ரொம்ப அக்கறையா இல்ல, காதலிக்கிறேன்னு சொல்லத் துணிவுமில்ல. தவிர, இப்போ கூட இவளோட கேரியர்ல கவனம் செலுத்த சொல்றாரு. ஒரு சாதாரண நண்பன் என்ன மாதிரி இருப்பானோ அப்படி தூரமா இருக்குறார். செம பொஸஸிவ். இவ வேற பையன் கிட்ட பேசினா தொலைச்சிடுவாரு. இப்படியெல்லாம் இருக்குறதால Aயை யோசிச்சு முடிவெடுக்கலாம்.
ஆனா B ரொம்பப் பிரியமானவர். காதலிச்ச நாள்ல இருந்து இன்னிக்கு வரைக்கும் இவளைத் தலைல வெச்சுக் கொண்டாடுறாரு. இவளுக்காக உருகுறாரு. ஒரு நல்ல நண்பனா இவளோட மற்ற நட்புகள் பத்திக் கேக்குறாரு, புரிஞ்சுக்குறாரு. இவளோட விருப்பம் என்னவோ அப்படியே இவ வாழணும்னு நினைக்கிறாரு. அதுனால என்னோட சப்போர்ட் Bக்குத் தான்.
மறுபடியும் என்ன குழப்பம்னா, 2 தங்கச்சிகளுக்கும், 1 தம்பிக்கும் அக்காவா இருக்குற நம்ம ஹீரோயின் ஜாதியும் பார்த்து முடிவு பண்ண வேண்டிருக்கு. ஜாதின்னதும் கல்லைத் தூக்கி எறியாதீங்க. நார்த்ல இது அதிகம் பார்ப்பாங்க. A யும் இவளும் கிட்டத்தட்ட ஒரே ஜாதிப் பிரிவுலேயும், B இவளை விட ரொம்பக் குறைவான பிரிவுலேயும் வர்றாரு. இதுனால அம்மணிக்கு அடுத்தக் குழப்பம். என் சஜெஷன் என்னன்னா, “ஜாதியெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. கல்யாணம் பண்ணி நல்லா இருந்தா அதையெல்லாம் யாரும் பாக்கப் போறதில்ல.” இப்படியெல்லாம் சொல்லி இவளைக் கன்வின்ஸ் பண்ணிட்டிருக்குற நேரம் A கால் பண்ணி ஹாய்ன்னதும் இவ ப்ரைட் ஆகிட்டா. இப்போ Aயை 100% பிடிக்கும்ன்னும், Bயை 99.9999% பிடிக்கும்ன்னு சொல்ற இவளுக்கு, அந்த .0001%க்கான காரணம் சொல்லத் தெரியல. இப்போ யார்கிட்ட நோ சொல்லி யாரைக் கல்யாணம் பண்ணிக்குறது, நோ சொல்றவர்கிட்ட மனசு நோகாம எப்படி சொல்லிக் கன்வின்ஸ் பண்றதுன்னு பயங்கரக் குழப்பத்துல இருக்கா.
இது ரெண்டுக்கும் நடுவுல வீட்ல வேற மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பம். செம டெரர் ஆகி ஹாரர் மூவியை தனியாப் பார்த்தவள மாதிரி கன்னத்தைப் பிடிச்சுட்டு சோகமா லுக் விட்டுட்டு உக்காந்திருக்கா. எதுனாலேயும் அவ எடுக்கும் முடிவால பின்னாடி அவ வருத்தப்படக் கூடாதுன்னு நான் ப்ரார்த்திச்சிட்டிருக்கேன். என்னதான் பண்றது இப்போ...
49 comments:
oru tamil padak kathai maathiri irukku
enna solla
ரெண்டு பேரையும் விட்டுட்டு வீட்டுல பாக்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டுப் போகச் சொல்லுங்க.
இந்த மாதிரி பைத்தியங்களுக்கு (Sorry to say so, but that's what i feel)
ஒத்தாச பண்றதவிட வேற வேலப்பொழப்பில்லயாமா, உங்களுக்கு.
இந்த மாதிரி மனம் இருக்குறவங்க, யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்; தானும் நிம்மதியா இல்லாம வாழ்க்கை துணையையும் நிம்மதியில்லாம ஆக்கிருவாங்க.
unga thozhiku "B" than porutham irupar yenna avarala avanagalai mulumaiya purichuga mudiyum.
கதை மிக அருமை
பாராட்டுக்கள் ...
வாழப் போவது உங்க
சிநேகிதி.அவ தான் முடிவுஎடுக்கணும்...அப்போது
தான் நல்லதோ கெட்டதோ
நான் தேடிய முடிவு ...என்று எதிர் கொள்ள தைரியம் வரும். வளமான் வாழ்வுக்கு என் வாழ்த்துக்களை உங்க் தோழிக்கு சொல்லி விடுங்கள்.
I go with Nilamathi
Hi Kunnoor Madam,
Nice to read your blog... Interesting style of writing...
My advice to your friend: Dont take bloggers' advise seriously.
நான் நீங்க எல்லாரும் சும்மா இருந்தாலே போதும். அந்த தோழி எடுக்கிற முடிவை மட்டும் அப்புறம் ஒரு பதிவா போடுங்க!
உங்க தோழி குழம்பி போனங்களோ இல்லையோ இதை படிச்சிட்டு நான் குழம்பி போயிட்டேன்..
விக்கி! இதிலே நீங்களோ,பதிவுலகமோ எடுக்கும் எந்த முடிவையும் உங்க தோழி ஏத்துப்பாங்களா? என்ற கேள்விக்கு நீங்க ஆம் இல்லைன்னு சொன்னா அது தப்பு உங்க தோழி சொல்லனும். அப்படியே ஆம்ன்னு சொன்னா ஒரே முடிவு தான். அதாவது உங்க தோழி ஒரு குழந்தை தான். அதாவது தனக்கு, தன் வாழ்க்கைன்னு வரும் போது தனக்கான முடிவை எடுக்க தெரியாதவங்க எப்படி ஒரு மெச்சூரிட்டியான பெண்ணாக இருக்க முடியும். அப்படி நம்ம பேச்சை கேட்பதுக்கு பதிலா அவங்க அப்பா அம்மா பேச்சை கேட்டு அவங்க பார்க்கும் பையனையோ அல்லது அவங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லி அவங்களுக்கு அந்த ஏ, அல்லது பி அல்லது அவங்க பார்க்கும் சி யையோ கல்யாணம் பண்ணிப்பது நல்லது. இதிலே இரண்டு நல்ல விஷயம் நடக்கும். 1. கல்யாணத்துக்கு பின்னே எதுனா குடும்ப குழப்பம் வந்தா அந்த பெண்ணுக்கு தாங்கி பிடிக்க குடும்பம் இருக்கும் கூடவே. ஆனா நம்ம பேச்சை கேட்டா அப்படி ஒரு பிரச்சனை வந்தா பதிவுலகம் வராது, அது போல ஒரு லிமிட் தாண்டி நீங்களும் உதவ முடியாது. ஏன்னா இது இந்தி கத்து கொடுப்பது போல செய்யும் உதவி இல்லை. வாழ்க்கை.
2. அப்படியே அப்பா அம்மா பேச்சை கேட்டு ஏ\பி பையனை அல்லது சி பையனை கட்டிகிட்டா அழகா பி\ஏ பையனை பார்த்து 'அப்பா அம்மா சொல்படி நான் கேட்க வேண்டிய கட்டாயம் வந்துடுச்சு அண்ணா என சொல்லி முதல் குழந்தைக்கு அந்த பையன் பெயரை வைத்து விடலாம் உலக நியதிப்படி.சி பையனை கட்டிகிட்டா இரண்டாவது குழந்தைக்கு அடுத்த பெயரை வைக்கலாம்.
அடுத்து அந்த பெண் தானாக முடிவெடுத்தால்(இந்த பதிவே தேவையிருந்திருக்காது என்பது வேற விஷயம்) கல்யாணத்துக்கு பின்னே ஏற்படும் பிரச்சனைக்காக நீங்கள் அடுத்த இதே மாதிரி பதிவு ஏற்படும் போது அப்ப பார்த்துக்கலாம்.
அடுத்து என் தனிப்பட்ட கருத்து. அந்த பெண் பி பையனை கல்யாணம் கட்டிப்பது உத்தமம். ஏன்னா ஏ என்கிற பொஸஸிவ் பையன் கூட வாழ்வது என்பது கொஞ்சம் சிரமம். ஏன்னா இந்த பெண் கெக்கேபிக்கேன்னு அந்த பி பையன் கிட்ட என்னிக்காவது பேசும். இன்னும் சொல்ல போனா ஏ கிட்ட கொஞ்சம் பெருமையா கூட "நம்ம பி என்னை கட்டிக்க ஆசைப்பட்டாரு. அதான் இப்ப தாடி வச்சிருக்காரு"ன்னு உளரும்.அப்போ ஏ ன் ரியாக்ஷன் பத்தி கொஞ்சம் நினைத்து பாருங்க.
எங்க பக்கத்துல ஒரு பழமொழி உண்டு. ரோசக்காரனுக்கு கடனை குடு. சவுங்க பயலுக்கு பொண்ணை குடு"ன்னு. அதாவது ரோசக்காரனுக்கு கடனை கொடுத்தா கொஞ்சம் வேகமா கேட்டா திருப்பி குடுத்துவான். சவுங்க பய என்றால் அர்த்தம் தெரியும். எறுமை மாட்டின் மீது மழை பெஞ்சா எப்படி அப்படி உள்ளவன் தான் சவுங்க பயல். பொண்ணு மேல ஒருத்தன் உசிரை வச்சுட்டான்னா அவளுக்கு பின் தூங்கி முன் எழுவான் காபி போட்டு குடுக்க. ஆக என் முடிவு பி பையன் தான்.
அன்புடன்
அபிஅப்பா
குறிப்பு 1
இதை வச்சு விவாதம் செஞ்சு ஆணீயம் பெண்ணீயம்னு என்னை போட்டு குடைய கூடாது ஆமாம்.
குறிப்பு 2
முதல் பாராவிலே ரொம்ப செண்டியா பேசிட்டீங்க. எல்லாமே எனகு பதிவுலகம் தான்னு. அதான் பொங்கிட்டேன்.
விக்கி, ரெண்டு பேரும் வேண்டாம், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைதான் சரிவரும்...
ஆனாலும் இப்படி ஒரு குழப்பவாதி ஃப்ரெண்டா? பொழுது நல்லாப்போகுமே :))
அவங்க இந்தளவுக்கு காதலிச்சிருக்காங்கன்னா ஏவை கல்யாணம் பண்ணிக்கறது சரிதான். ஆனா பொஸஸிவ்...இதை சகிச்சுகிட்டு வாழற அளவுக்கு அவங்க தயாரா? காதலிக்கும்போது இனிப்பாகத் தோன்றும் பொஸஸிவ்னெஸ் திருமணத்துக்கு பிறகும் அப்படியே இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை
இதைப் போன்ற கதைகளில் வேண்டிய நாலு பேரிடம் பேசினாலே ஒரு தீர்வும் பெயராது. பொது வெளியில் சான்ஸே இல்லை, ஏன்னா அப்படி ஒரு தீர்வே கிடையாது. சேலையில் பச்சையும் பிடிச்சிருக்கு, மஞ்சளும் பிடிச்சிருக்கு என்பதான நிலை வாழ்க்கைத்துணையிலும் என்றால் என்னே முதிர்ச்சியின்மை. இப்பேர்ப்பட்ட பெண்ணின் இரண்டு தேர்வுகளுமே தவறாகயிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒன்றோ, இரண்டோ, அல்லது மூன்றாவதோ முடிவெடுக்கவேண்டியது அவர் மட்டுமே. எல்லாம் முடிஞ்சப்புறம் அப்டேட் பண்ணுங்க..
(எப்பிடி நம்ம தீர்ப்பு?)
ஏதோ ஒன்னு..
கண்ணாலத்துக்கு பத்திரிக்கை குடுக்கச் சொல்லுங்க!!!!!
கமிசன் கிமிசன் கிடைச்சா, பதிவுலகத்துக்கு ஒரு ட்ரீட் வைங்க
|| ஆதிமூலகிருஷ்ணன் said...
(எப்பிடி நம்ம தீர்ப்பு?)||
நாட்டாம வாழ்க!!!
oru நல்ல கதை கிடைச்சிருக்கு. உங்க தோழியை வேணுமின்னா i hate luv storys பாக்க சொல்லுங்க..:)
oru நல்ல கதை கிடைச்சிருக்கு. உங்க தோழியை வேணுமின்னா i hate luv storys பாக்க சொல்லுங்க..:)
oru நல்ல கதை கிடைச்சிருக்கு. உங்க தோழியை வேணுமின்னா i hate luv storys பாக்க சொல்லுங்க..:)
எனக்கு இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன பாடு படப்போறாங்களோன்னு கிலியா இருக்கு! :)
--
எனக்கும் முகிலன் சொல்றதுதான் சரின்னு படுது.
ஐயோ.... இப்ப உங்க friend நாங்க ரெம்ப கொழம்பி போய்ட்டோம் போங்க... எனகென்னமோ இந்த மாதிரி மேட்டர்ல அவங்க அவங்க எடுக்கற முடிவு தான் நல்லதுன்னு தோணுது...
ஒரு வாட்டி அவள் விகடனை திட்டி நீங்க எழுதினதில் இதுவும் ஒரு காரணமாக சொல்லி இருந்தீங்க விக்கி அக்கா. ஒருத்தரோட அழுகாட்சி காவியத்துக்கு நாலு பேர் அட்வைஸ் வேற பண்ணுறாங்கனு. ஆனா, அத படிக்கற போது நாமக்கு எவ்வளவு பிரச்சினை சமூகத்தில இருக்குனு புரியறது. பல பேரோட அட்வைஸ் கிடைக்கறதால நிறைய விசயங்களை அனலைஸ் பண்ணக்கூடியதாக இருக்கும். சில வேளைகளில் ரொம்ப குழப்புவாங்க. சில பேர் கல்லானாலும் கணவனு பொறுத்திட்டு போன்னு சொல்லுவாங்க. பட் அட் த என்ட், சில நல்ல அறிவுரைகள் கிடைக்கும்.
இன்னைக்கு நீங்க செய்யறதைத் தான் அவங்க செய்யறாங்க. அவள் விகடன் வந்த நாள்ல இருந்து நான் படிக்கறேன். அப்ப படிக்கற வயசு இல்லேன்னாலும் அம்மா கொடுப்பாங்கா. இப்ப பழைய ஸ்டான்டர்ட் இல்லை. எந்த மகசீனிலும் பழைய ஸ்டான்டர் இல்லே. சினேகிதியும் வந்த நாள்ல இருந்து படிக்கறேன். அவள் விகடனுக்குத் தான் என்னோட வோட்.
எனிவே பக் டு த் டொப்பிக்,
பொஸசிவ் ஆளுங்களோட வாழ்றதுக்கு வாழாமலே இருக்கலாம். பொண்ணுங்களோட போறது கூட இவனுங்களுக்கு பிடிக்காது. எங்க யுனியில் இந்த அப்பாவி கேள்பிரன்ட்ஸ் படற பாடு இருக்கே. சைன்னு இருக்கும். அத விட இந்த பொண்ணுங்களும் கொஞ்சம் மோசம் தான். அக்கான்னு இந்த பசங்க ஆன்பா பேசறப்போ கூட அவங்க கேள் பிரண்டுக்கு பிடிக்காது. மனுசனுக்கு இருக்கவே கூடாதது பொஸ்விவ் குணம்.
ரிஜெட் ஏ வித் அவுட் ஃபேர்தர் தோட்ஸ். அவங்க லைவ். பிளஸ் மைனஸை யாவது யாராவது எடுத்து சொல்லலாம். ஃபைனல் டிசிஷன் அவங்களோடது அட் தி என்ட்.
நிலாமதியும், ஆதியும் accuracy, என்பது என் பார்வை.
ஒருவேளை என் குழப்பத்தில் இருந்து விடுபட்டு, எனக்கு திருமணம் ஆன பின் என் accuracy வெளிப்படலாம்.
இன்னும் ரெண்டு ட்விஸ்ட் கொடுத்திங்கன்னா நான் இதவச்சு ஒரு சீரியல் கதை ரெடி பண்ணிடுவேன். கதை, திரைக்கதை விக்னேஷ்வரினின்னு கண்டிப்பாக போடுவேன். கண்ணக் கட்டுது சாமி..
அம்மா அப்பா சொல்றவருதான்.
மத்த ரெண்டு பேரும்.. ம்ஹூம்.. நல்லால்ல.. ரெண்டு பேரும் ரெண்டு வகையில ஓவரு :((
ஏக் துஜே கேலியே படம் பாத்தீங்களா..?
அதுல வர கமல் , ரதி என்ன செய்வாங்க அக்ரிமெண்ட் அதுப்போல இருந்து பாத்தா அப்ப புரியும் யார் உண்மையான பாசமுன்னு மே பி டிரை இட்..!!!
அந்த பொண்ணு UP ன்னு சொல்றீங்க. அப்போ வீட்டுல 'கருணைக் கொலை' பண்ற அளவுக்கு அண்ணனோ தம்பியோ இருக்காங்களான்னு கேட்டுக்குங்க. நாம சொல்லிடுவோம் சாதி முக்கியமில்லைன்னு. ஆனால் அண்மைக் காலங்களில் டில்லி, UP , பஞ்சாப் மற்றும் இன்ன பிற மாநிலங்களில் நடக்கும் குடும்ப வன்முறைகளை அறிவீர்கள் தானே. அப்போ C is OK . ஆனா அத அந்த பொண்ணு தான் முடிவு பண்ணனும்.
எனக்கு தெரிஞ்சி இந்த மாதிரி
பிரச்சினையில் மாட்டும்
மூன்றாவது பெண்
உங்கள் தோழி..
ஓ.., தினம் தினம் எங்கோ
ஒரு பெண்ணுக்கு இப்படி
நடந்து கொண்டு தான் இருக்கிறது
போலும்..?!!
\\முகிலன் said...
ரெண்டு பேரையும் விட்டுட்டு வீட்டுல பாக்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டுப் போகச் சொல்லுங்க.
My advice to your friend: Dont take bloggers' advise seriously.\\
ROTFL:))
A is the best choice! :-) Family is there to protect all the time.
இருங்க, சொம்பை நிமிர்த்தி வெச்சுட்டு வந்து தீர்ப்பு சொல்றேன்.
////சவுங்க பயலுக்கு பொண்ணை குடு"////
அபி அப்பா: :)))))
நேத்து buzz-ஸில் பார்த்து அங்கேயே பேசி முடிச்சு விட்டதால் இங்கே உங்கள் கம்மென்ட் மிஸ் ஆகி விட்டது.
கம்பெனி ரகசியத்த இப்டி பொதுவில வாக்கு மூலம் கொடுத்துட்டீங்களே...:))
இந்த கோயமுத்தூரு மக்களுக்கு பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதில் என்ன தான் சந்தோசமோ தெரியலப்பா... எங்கே பஞ்சாயத்து நடந்தாலும் முன்ன போய் நின்னு வாங்கி கட்டிக்கொண்டு மூக்கு உடைஞ்சு வர்றதே பொழப்பா போச்சு...
சரி... உங்களை சொல்லி குத்தம் இல்ல... நானும் அபி அப்பாவின் கருத்துக்கு ஒத்து போகிறேன்... ஆனால் அத்தோட இதையும் சேத்துக்கோங்க... உங்க தோழியோட காதலர்களாய் மாறிய நண்பர்கள் பற்றி நல்ல விம் பார் போட்டு விளக்கி இருக்கீங்க... ஆனால் உங்க தோழியோட அடிப்படை குணாதிசயத்தைப் பற்றி ஒன்றுமே சொல்ல வில்லை... அதையும், சேர்த்து சொல்லி இருந்தா சரியான தீர்ப்பு சொல்ல முடியும்...
உங்கள் தோழியோட மனநிலை எப்படின்னா, இன்னிக்கு கடைக்கு போய் ஒரு பொருள் பிடிச்சிருக்குன்னு வாங்கிட்டு, நாளைக்கு அதே பொருள் மற்றொரு நிறுவனத்தின் தயாரிப்பு நல்லா இருக்க மாதிரி இருக்கே... கொஞ்சம் பொருத்து அதை வாங்கி இருக்கலாமோன்னு நினைக்கிற ரகம்... இவருக்கு தேவை கொஞ்சம் தனிமை; கொஞ்சம் நேரம்; கொஞ்சம் பெற்றோரின் ஆலோசனை... இப்படி பதிவுலகத்தில் அறிவுரை கேட்பதை விட, அவரது பெற்றோரிடம் ஆலோசனை நடத்துவதே நல்லது... அந்த ஆலோசனை யாரேனும் மிக நெருங்கிய ஒரு நடுநிலையான ஒரு மூன்றாவது நபர் முன்னிலையில் நடந்தால், அது நல்லது... ஏனெனில் இதை கேட்கும் போது எந்த பெற்றோருக்கும் கோபம் வரும்... அதை நடுநிலையோடு சாந்தப்படுத்த ஒருவர் கண்டிப்பாக மத்தியஸ்தம் செய்ய வேண்டி இருக்கும்...
அலோ... Casablanca பாருங்கன்னு போன வாரம்தான் சொன்னேன்... அதுக்குள்ள பார்த்துட்டு வந்து இப்படி கதையா? (சத்தியமா Casablanca கதை கிட்டத்தட்ட இதுதாங்க... )
சரி... இது உண்மைதான்னு நம்பறேன்... ஆனா, உங்க ஃப்ரெண்ட் ஏற்கனவே ஏகப்பட்ட தப்பு பண்ணி இருக்காங்க... இந்த அளவுக்கு குழப்பமும் மனமாற்றமும் இருந்திருக்கவே கூடாது... சரி விடுங்க... நடந்தது நடந்து போச்சு...
// ஒரு சாதாரண நண்பன் என்ன மாதிரி இருப்பானோ அப்படி தூரமா இருக்குறார். செம பொஸஸிவ். இவ வேற பையன் கிட்ட பேசினா தொலைச்சிடுவாரு //
இதே காரணத்துக்காக நானும் A-வை நிராகரிக்கும் முடிவை ஆதரிக்கிறேன்...
B தான் கரெக்ட்டான சாய்ஸ்
A வை செலக்ட் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டாங்கன்னு வச்சுக்கோங்க கண்டிப்பா B யோட ஞாபகம் அவரோட காதல் மனசுல அரிச்சுட்டே இருக்கும்..
எனக்குத் தெரிஞ்சவரைக்கும் பசங்க முதலிலேயே சரியான முடிவை எடுத்திட்டு அப்புறம் யாராவது வந்து குழப்புறதில் யோசிச்சு, தப்பான முடிவை எடுப்பாங்க.அதே நேரத்தில் பொண்ணுங்க தப்பான முடிவை எடுத்திட்டு அப்புறமா யோசிச்சு சரியான முடிவை எடுப்பாங்க. அதனால உங்க ஃப்ரண்ட் Mr.B யை தேர்ந்தெடுப்பதுதான் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.
எங்ககிட்ட கேட்டா இப்படி ஒரு காரியம் பண்ணினாங்க ;)
என்னோட சாய்ஸ். சந்நியாசினியா அவங்க போகலாம். :) அது முடியாதுன்னா...
ஆண்கள் மட்டும்தான் இரண்டு கல்யாணம் பண்ண வேண்டுமா? அவங்க இரண்டு பேரையும் திருமணம் செய்து கொள்ளலாம். ;)
வளவளனு இல்லாம ரொம்ப சரியாக, நிலாமதி சொன்னது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. அதை சொல்லுங்க உங்க தோழிகிட்ட.
\\முகிலன் said...
ரெண்டு பேரையும் விட்டுட்டு வீட்டுல பாக்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டுப் போகச் சொல்லுங்க.
My advice to your friend: Dont take bloggers' advise seriously.\\
ROTFL:))
i agree qith Mukilan n Divya..
\\ July 9, 2010 9:01 AM
Vidhoosh(விதூஷ்) said...
////சவுங்க பயலுக்கு பொண்ணை குடு"////
அபி அப்பா: :)))))
நேத்து buzz-ஸில் பார்த்து அங்கேயே பேசி முடிச்சு விட்டதால் இங்கே உங்கள் கம்மென்ட் மிஸ் ஆகி விட்டது.
கம்பெனி ரகசியத்த இப்டி பொதுவில வாக்கு மூலம் கொடுத்துட்டீங்களே...:)) \\\
அடராமா!இப்படி எல்லாமா யோசீப்பீங்க? விதூஷ் இருக்கு இருக்கு கார்த்தி அன் குருப் எல்லாம் இந்திய கிரிக்கெட் அணி மாதிரி தோள்ல கை போட்டு கும்மியடிப்பது போல கவுந்துகிட்டு ரோசனை பண்ணிகிட்டு இருக்காங்க.அப்பாவிரங்கமணீஸ் சங்க விஷயமா. அப்ப இருக்கு;-))
உங்க தோழி குழம்பி போனங்களோ இல்லையோ இதை படிச்சிட்டு நான் குழம்பி போயிட்டேன்...
வீட்டுல பாக்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டுப் போகச் சொல்லுங்க.
பாவம், யாரு இந்த பொண்ணுகிட்ட மாட்டிகிட்டு முழிக்கப் போறாங்களோ? அவருக்கு, என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
yeppa mudila. equal to 99.9999% ku 100% ok thana
வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை தான் சரி...
அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. தோழிக்கு அனுப்பப்பட்டன.
hi in my view,
from what u have told, it is clear that she likes A.If A truly like her, then life would be beautiful.
Suppose if she choose B, it wont be whole heartedly.B also be forced to live with her who dont like him.Better he would find partner who likes his caring nature
சூழ்நிலை கைதி பாஸ் நான் :-(
would it be possible for u, to give me ur mail Id?
மிகவும் கஷ்டமான ஒரு நிலை, இதற்கு இளையவர்கள் பதில் சொல்ல முற்படுவது தவறு, காரணம், நான் உங்கள் எல்லோருடைய கருத்துக்களையும் வாசித்துப் பார்த்தேன். இங்கு கருத்துக் கூறியவர்கள் எவருக்கும் இது பற்றிய சரியான புரிதல் இல்லை என்றுதான் விளங்குகின்றது.
உன்மையில் இப்படியான ஒரு நிலையை நான் அடைந்துள்ளேன். அதிகமானவர்கள் ப் யைத்தான் சாதகமாக்க சொல்லியுள்ளீர்கள். வாழ்க்கை, அன்பு என்பது ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொள்வதல்ல. மாறாக இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பது.
இவளோடு சேர்ந்து ஒரே திசையைப் பார்க்க யார் தயாராக இருக்கின்றார் என்பதை இவள்தான் முடிவெடுக்க வேண்டும், இலகுவில் முடிவெடுப்பது கஷ்டம் எனத்தோன்றும் தறுவாயில்,ஓர் சில விசப்பரீட்சைகள் மூலம் கண்டுகொள்ளலாம்.
நன்றி
ஹுதா
இலங்கை
Post a Comment