Sunday, July 4, 2010

சண்டே... ஷாப்பிங் டே.


ஞாயிற்றுக் கிழமைன்னாலே எல்லா இடங்கள்லேயும் கூட்டம் அலை மோதி கடைகள் நிறைஞ்சு வழியுது. என்னோட ஷப்பிங்கெல்லாம் போன வாரமே முடிஞ்சு போச்சு. தவிர, யோகியைக் கூட்டிக்கிட்டு நான் போற ஒரே ஷாப்பிங் ப்ளேஸ் பிக் பஸார். மத்த இடங்களுக்கு அவர் கார்ட் மட்டும் போதும். பிக் பஸார்ல சாமான் அதிகம்ங்குறதால கூட சேர்ந்து எடுத்திட்டு வர அவர் வேணும். :)

ஓகே, இந்த வார ஷாப்பிங் ப்ளேஸ் பிக் பஸார். கிட்டத்தட்ட எல்லா பெரு நகரங்களிலும் பிக் பஸார் வந்துடுச்சு. அண்ணாச்சி கடைல மளிகை லிஸ்ட் குடுத்து தினசரிக் காகிதத்துல பொட்டலம் போட்டு வாங்கிட்டிருந்த கலாச்சாரத்தை இந்த மாதிரி கன்ஸ்யூமர் ஸ்டோர்ஸ் மாத்திருக்கு. எல்லாப் பொருட்களுக்கும் தனித்தனி செக்‌ஷனும், தகுந்த அலமாரிகளும் குடுத்து, கூடவே எல்லாத்தையும் நம்ம தலைல கட்டுற மாதிரி ஆஃபரும் குடுத்து அடுக்கி வெச்சிருக்காங்க. தேவையோ இல்லையோ பாக்குறதையெல்லாம் வாடிக்கையாளர்களைப் பிக் பண்ண வைக்குற இந்த ஸ்டோர் மேனேஜ்மெண்ட் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. குறைஞ்சது 2-3 மணி நேரமாவது ஆகுற பிக் பஸார் ஷாப்பிங்கை டக்குன்னு 10 நிமிஷத்துல பட்டியலிடலாமா...


* உள்ளே போனதும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் காஸ்மெடிக்ஸ், ஆஃபர் இல்லாமல் பெண்களைக் கவர்வதில்லை. VLCC யின் எடைக் குறைப்பு மற்றும் அழகுப் பொருட்கள் ஸ்டோரின் முதல் பிரிவின் முதல் ஷெல்ஃபில் இடம் பிடித்தாலும் வாடிக்கையாளர்களின் கூடைகளில் வந்து சேர்வதில்லை.

* மொபைல் ஃபோன்களுக்கென ஆஃபர்களை அள்ளி வழங்கும் மொபைல் ஷாப்புகளுக்கு நடுவே பிக் பஸார் போட்டியிட முடியவில்லை என்பது உண்மை. பலரும் மாடல்கள் அறியவே மொபைல் பகுதியில் கூடி விசாரித்து செல்கின்றனர்.

* எப்போதும் ஆஃபர் இருக்கும் ஆடைகள் பகுதியும் அதிகம் கவரவில்லை. அதற்குக் காரணம் அவர்களின் ஆடைகளின் தரமெனலாம். டெல்லியின் லோக்கல் மார்கெட்டில் கிடைக்கும் 100 ரூபாய் குர்தாக்களை, பிக்பஸாரின் ஆஃபருடன் கூடிய 800 ரூபாய் குர்தாக்கள் ஜெயிக்க முடிவதில்லைஎன்பது மறுக்க முடியா உண்மை.

* ஆண்கள் பகுதியிலும், குழந்தைகள் பகுதியிலிருக்கும் உடைகள் தினசரி அல்லது வீட்டில் உபயோகிப்பதற்கு ஏற்ற விலையிலும், தரத்திலும் கிடைக்கின்றன.

* இவர்களின் தங்க ஆபரணப் பகுதியில் இதுவரை நான் நுழைந்ததில்லை. அதனால் அது பற்றிய விவரங்கள் ஏதுமில்லையெனினும் அப்பகுதி பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் இல்லாமலே ஈயாடிக் கொண்டுள்ளது.

* சமையல் பாத்திரங்கள் மற்றும் டப்பாக்களுக்கு என் சாய்ஸ் பிக் பஸார் தான். பல கம்பெனிகளின் தரமான கட்லெரீஸ் அதற்கேற்ற விலையில் சமயங்களில் ஆஃபர்களுடன் கிடைப்பது சிறப்பு.

* எலெக்ட்ரானிக்ஸ் பிரிவும் பலருக்கும் பயனுள்ளதாக இருப்பது அங்குள்ள கூட்டம் பார்த்தாலே அறியலாம். ஆனால் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அந்தப் பொருட்களைப் பற்றின போதிய அறிவு இருக்குமாறு பயிற்சி அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

* குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் இருக்குமிடத்தில் ஆஃபர்கள் இருக்குமளவு வெரைட்டி இல்லை. டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் இதற்கென தனிக் கடைகள் வந்துவிட்ட நிலையில் இவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தாவிடில் இங்கு வியாபாரம் பெரிதாய் ஒன்றும் நிகழப் போவதில்லை.

* காலணிகள் பிரிவு ஓகே ரகம்.

* டூரிஸ்ட் பேக்குகள் மற்றும் ட்ராலிகளுக்கு ஆல்டைம் ஆஃபர் அளிக்குமிடம் பிக் பஸார். தவிர குறைந்தது 4-5 ப்ராண்டுகளின் ஒப்பீடு கிடைக்கும். நல்ல, தரமான பொருள் தேர்ந்தெடுக்க இது உதவும்.

* பலசரக்குப் பிரிவு தான் பிக் பஸாரின் ப்ளஸ். கடையின் மொத்தக் கூட்டத்தில் பாதிக்கு மேல் நிரம்பி வழிவது இங்கு தான். எல்லாப் பொருட்களும் கிடைப்பதும், ஒவ்வொன்றிலும் இருக்கும் ப்ராண்டுகளை ஒப்பிட்டு வாங்குவதும், அதிலும் தொடர்ந்த ஆஃபர்களும் இங்கிருக்கும் அதிக வியாபாரத்திற்குக் காரணம். டெல்லி பிக் பஸார்களில் கடந்த ஒரு வருடமாக இட்லி, தோசை மாவுகள் உள்ளேயே அரைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதற்கும் நல்ல வரவேற்பு.

* எல்லா வகைக் காய் கறிகளும் மலிவான விலையிலும் ஃப்ரெஷ்ஷாகவும் கிடைக்கின்றன. சீசனில்லாத பழங்கள் கூட சரியான விலையில் கிடைக்கின்றன.

* நீண்டு வழியும் கவுண்ட்டர்களும், சில பொருட்களில் பார்கோட் ஸ்கேனர்கள் வேலை செய்யாமல் ஏற்படும் தாமதமும் 2-3 மணி நேர ஷாப்பிங்கிற்குப் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அயற்சியைத் தருவதாய் உள்ளது.

* பிக் பஸாரை விட்டு வெளியேறும் வழியில் மருந்துகளும், சாப்பிடக் கடைகளும் இருப்பது நல்ல விஷயம். மருந்துக் கடையில் யாரும் நுழைகிறார்களோ இல்லையோ, சாப்பாட்டுக் கடைகளில் நல்ல கூட்டம்.

* நொய்டாவின் பிக்பஸார் அடித்தளத்தில் அமைந்திருப்பதால் வெளியே இருக்கும் மார்பிள் பெஞ்சஸ் காதலர்களுக்கு வசதியான இடம். 20 ரூபாய்க்கு பார்கார்னும், 20 ரூபாய்க்குக் குல்ஃபியும் வாங்கிக் கொண்டு அது உருக உருக இவர்களும் காதல் செய்ய வேண்டியது தான்.

* சில பல குறைகள் இருந்தாலும் எல்லாப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைப்பதாலும், அவற்றில் ஒரு வெரைட்டி கொடுப்பதாலும், வருடம் முழுக்க இருக்கும் தொடர் ஆஃபர்களினாலும் பிக் பஸார் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது மகிழ்ச்சிக்குறியது. கூடவே எல்லா பலசரக்குப் பொருட்களின் மேனுஃபேக்சரிங் தேதிகளும் ஒரு மாதத்திற்குள்ளாகவே இருப்பது சிறப்பு.

யோகி பார்ப்பதையெல்லாம் வாங்க நினைப்பார். நான் அவர் கையிலெடுக்கும் ஒவ்வொன்றிற்கும் “வேண்டாம்” சொல்லிக் கொண்டே வந்தேன். சில்லி சாஸ் எடுக்கப் போன இடத்தில் ஐரோப்பியர் ஒருவர் வினிகரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி வந்து “பேபி, இனஃப். இட்ஸ் டூ மச் யூ ஹேவ் டேக்கன்” என்ற போது “ஓகே, ஓகே, ஐ ஆம் நாட் டேக்கிங் ஸ்வீட்டி” என அவர் ஓடும் போது புரிந்தது. “இந்தியாவிலிருந்து யூரோப் வரை கணவன் கணவன் தான். மனைவி மனைவி தான்”.

சந்தைக்குப் புதுசு - சச்சின் டெண்டுல்கரும் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸில் இறங்கிவிட்டார். அவரின் தயாரிப்பான Sach எனும் புது டூத் பேஸ்ட் வந்துள்ளது. 3 ஃப்ளேவர்களில் அறிமுகமாகியிருக்கும் சச் டூத் பேஸ்ட் 150 கிராம் ட்யூப், 1 டூத் ப்ரஷ், 1 சிறிய டவலுடன் சேர்த்து 55 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

31 comments:

ராம்ஜி_யாஹூ said...

has Carrefour come into Noida or not yet

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////////////// எலெக்ட்ரானிக்ஸ் பிரிவும் பலருக்கும் பயனுள்ளதாக இருப்பது அங்குள்ள கூட்டம் பார்த்தாலே அறியலாம். ஆனால் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அந்தப் பொருட்களைப் பற்றின போதிய அறிவு இருக்குமாறு பயிற்சி அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.//////


நாங்கள் புரிந்துகொண்டோம் . ஆனால் அவர்களிடமும் சொல்லிட்டிங்களா உங்களின் ஆதங்கத்தை . பகிர்வுக்கு நன்றி !

சுசி said...

//மத்த இடங்களுக்கு அவர் கார்ட் மட்டும் போதும். //

:))))

இங்க சண்டே ஷாப்பிங் கிடையாது :((
சனிக்கிழமை ஆறு மணியோட இழுத்து மூடிடுவாங்க.

நிலாமதி said...

கடை பரப்பியதில் இருந்து( ஷாப்பிங் ) நீங்க ஒரு சிறந்த பெண்மணி என்று நிருபித்து விடீர்கள். பாராடுக்கள்.

Anonymous said...

ஹா ஹா. கடைசி வரிகள் அருமை. அப்புறம் என்னவர்னு யாரும் இன்னுமே வரல‌. அதனாலா சும்மான்னா என்னனு நீங்க தான் சொல்ல வேணும் விக்கிக்கா. எனக்கு தலை வெடிக்காத குறை. =))

ர‌கு said...

//மத்த இடங்களுக்கு அவர் கார்ட் மட்டும் போதும். பிக் பஸார்ல சாமான் அதிகம்ங்குறதால கூட சேர்ந்து எடுத்திட்டு வர அவர் வேணும்.//

அவ‌ர் ப‌டிக்க‌மாட்டார்ங்க‌ற‌ தைரிய‌த்துல‌ என்ன‌மா வாக்குமூல‌ம் குடுக்க‌றீங்க‌!

கலாநேசன் said...

//“இந்தியாவிலிருந்து யூரோப் வரை கணவன் கணவன் தான். மனைவி மனைவி தான்”.//

அட ஆமாங்க...

Kousalya said...

//சச்சின் டெண்டுல்கரும் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸில் இறங்கிவிட்டார். அவரின் தயாரிப்பான Sach எனும் புது டூத் பேஸ்ட் வந்துள்ளது. //

சச்சின் ரசிகர்களுக்கு இனி வேற பேஸ்ட் பிடிக்காது தான்...!! ஷாப்பிங் நல்ல அலசல் tholi!!

கார்க்கி said...

//மார்பிள் பெஞ்சஸ் காதலர்களுக்கு வசதியான இடம். 20 ரூபாய்க்கு பார்கார்னும், 20 ரூபாய்க்குக் குல்ஃபியும் வாங்கிக் கொண்டு அது உருக உருக இவர்களும் காதல் செய்ய வேண்டியது தான்/

karki, udane noidaku flight ticket book pannuda

ப்ரியமுடன் வசந்த் said...

// பிக் பஸாரை விட்டு வெளியேறும் வழியில் மருந்துகளும், சாப்பிடக் கடைகளும் இருப்பது நல்ல விஷயம். மருந்துக் கடையில் யாரும் நுழைகிறார்களோ இல்லையோ, சாப்பாட்டுக் கடைகளில் நல்ல கூட்டம்.
//

ஒரு வேளை சாப்பிட்ட பிறகு மருந்துகடைக்கு போவாங்களோ என்னவோ?
:)

Cable Sankar said...

எல்லா நாட்டிலும், கணவன், கணவன் தான் மனைவி மனைவிதான்.. நிதர்சனம்.

வித்யா said...

:))

பாவம் யோகி:((

rk guru said...

பெண்கள் நாட்டின் கண்கள்.....

சே.குமார் said...

ஹா ஹா. கடைசி வரிகள் அருமை.

Anonymous said...

விக்கி இந்த மாதிரி ஸ்டோர்ஸில் மளிகை சாமான் ஏசியில் வைக்கப்படுவதால் நாம ரொம்ப வாங்கி ஸ்டோர் பண்ணமுடியாது :(

தராசு said...

//“இந்தியாவிலிருந்து யூரோப் வரை கணவன் கணவன் தான். மனைவி மனைவி தான்”.//

ஆமாம், கணவர்கள் எப்போதுமே அப்பாவிகள்தான்... சரியாகச் சொன்னீர்கள்.

கேபிள் அண்ணே, இதுல என்ன நிதர்சன்ம் இருக்கோ தெரியல, கணவன் ஒரு பச்ச மண்ணுங்கறதுதான் நிதர்சனம்.

மோகன் குமார் said...

டில்லி ஸ்பெசல் ..

ம்ம்.. யோகி நிறைய எடுப்பார்.. நீங்க வேண்டாம்பீங்களா? நல்லா இருக்கே இது !

விக்னேஷ்வரி said...

No Ramji, carrefour is not entered into India yet.

வாங்க சங்கர். சொல்லியாச்சே.

ஓ, ஸோ ஸேட் சுசி.

வாங்க நிலாமதி. :)

அனாமிகா.. பப்ளிக். பப்ளிக். ;)

அவருக்கிட்ட காப்பிரைட்ஸ் வாங்கிட்டுத் தான் இங்கே போடுறதே ரகு.

வாங்க கலாநேசன்.

ஆமா கௌசல்யா. நன்றி.

விக்னேஷ்வரி said...

ஃப்ளைட் கிடைக்கும் கார்க்கி, ஆனா உங்க தோழிகள் இங்கே கிடைக்க மாட்டாங்க.

வசந்து, ஏன் இப்படி எடக்கு மடக்கான யோசனையெல்லாம். :)

நீங்க சொன்னா சரிதான் கேபிள்.

அது எங்க கல்யாணத்தப்போவே தெரியுமே வித்யா. :)

வாங்க RK Guru.

நன்றி சே.குமார்.

விஜி, என்ன சொல்ல வர்றீங்க.. ஒண்ணும் புரியல.

முரளிகுமார் பத்மநாபன் said...

அண்ணாச்சி கடையில மளிகை லிஸ்ட குடுத்துட்டு அரிசிய அள்ளித் திங்கிற மாதிரி அதே சுவையோடு ஒரு கார்பொரேட் ஷாப்பிங். நல்லாருக்கு விக்கி

விக்னேஷ்வரி said...

தராசு கிடைக்குற கேப்பெல்லாம் யூஸ் பண்ணக் கூடாது. ;)

ஆமா மோகன், கிச்சன்ல நம்ம ஆட்சி தானே. அப்போ அவர் எதுக்கு செலக்ட் பண்ணனும். :)

அதே முரளி.

செ.சரவணக்குமார் said...

//மத்த இடங்களுக்கு அவர் கார்ட் மட்டும் போதும். பிக் பஸார்ல சாமான் அதிகம்ங்குறதால கூட சேர்ந்து எடுத்திட்டு வர அவர் வேணும்.//

யோகி சார் இந்தப் பதிவ வாசிப்பாரா?

Vijay said...

கல்யாணமான புதிதில் பெங்களூர் பிக் பஜார் போனோன். எதுவுமே தரமான பொருளாகக் கிடைக்கவில்லை. பாத்திரத்திலிருந்து, பிளாஸ்டிக் பொருட்கள் வரை.
அங்கு வாங்கிய துணி இரண்டே வாரத்தில் கிழிந்து விட்டது. சாயமும் போய் விட்டது.

அவர்கள் விற்கும் எலக்ட்ரானிக் ஐடங்கள் எல்லாம் தரக் குறைவானதாக இருந்தது. மேலும் வெளியில் வாங்குவதை விட நோகியா போன்ற கைபேசிகள் 400 ரூபாய் அதிகமாக இருந்தது.

காசு கொடுப்பதற்கு இன்னும் பெரிய கியூ. இனி ஜன்மத்திற்கு பிக் பஜார் போகக் கூடாது என்று முடிவெடுத்து விட்டோம் :( இன்று வரை போகவில்லை :)

சிவகுமார் said...

Nice

இராமசாமி கண்ணண் said...

:-).

goma said...

சொல்லிக்குற அளவுக்கு ஒண்ணும் இல்ல
என்று ப்ரொஃபைலில் போட்டு விட்டு
எழுதிக்கிற மாதிரி நிறைய இருக்குன்னு நிரூபிச்சிட்டீங்க...
வாழ்த்துகிறேன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

செ.சரவணக்குமார் said...
//மத்த இடங்களுக்கு அவர் கார்ட் மட்டும் போதும். பிக் பஸார்ல சாமான் அதிகம்ங்குறதால கூட சேர்ந்து எடுத்திட்டு வர அவர் வேணும்.//

யோகி சார் இந்தப் பதிவ வாசிப்பாரா?
//

Repeetu.!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. நான் EDM-ல இருக்கிற பிக் பசார் செல்வதுண்டு. சில பிரிவுகள் நன்றாக இருந்தாலும், பல பிரிவுகள் சரியில்லை.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

// பலரும் மாடல்கள் அறியவே மொபைல் பகுதியில் கூடி விசாரித்து செல்கின்றனர்.//

மிகச் சரி:))!

பெங்களூரைப் பொறுத்தவரை விஜய் சொல்வதை வழிமொழிகிறேன்.

//நீண்டு வழியும் கவுண்ட்டர்களும், சில பொருட்களில் பார்கோட் ஸ்கேனர்கள் வேலை செய்யாமல் ஏற்படும் தாமதமும் 2-3 மணி நேர ஷாப்பிங்கிற்குப் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அயற்சியைத் தருவதாய் உள்ளது.//

அதுமட்டுமின்றி விற்பனையாளர் எவருக்கும் அவர்கள் நிற்கின்ற பிரிவிலிருக்கும் பொருட்களைப் பற்றிய விஷய ஞானம் இல்லாததும் ஒரு பெரிய மைனஸ்.

SANTHOSHI said...

அப்ப எல்லாம் வாங்கி விட்டு வெளியில் வரும் பொழுது யோகி ஒரு துண்டும் வாங்கி இருப்பாரே! "தலையில் போட்டுக் கொண்டு வரத்தான்" :-) இங்கு கோவையில் பிக் பசாரில் அந்தந்த பிரிவில் சரியான ஊழியர்கள் இல்லாதது பெரும் குறையே! ஊழியர்களை குறை சொல்ல முடியாது. சங்கர் சொல்வது போல் அவர்களுக்கு அதைப் பற்றிய சரியான தெளிவு இல்லாததுதான்.

Guna said...

//“இந்தியாவிலிருந்து யூரோப் வரை கணவன் கணவன் தான். மனைவி மனைவி தான்”.//

enna oru sindhanai !!!!