Thursday, July 15, 2010

என்ன பதிலிருக்கிறது நம்மிடம்?

பதிவுலகம் பலருக்கும் எழுதிப் பழகுமிடமாகவும், எண்ணங்கள் பகிருமிடமாகவும் உள்ளது. அதையும் தாண்டி எப்போதும் என் மொழியையும், என் மக்களையும் என்னுடன் வைத்திருந்து என்னைத் தனிமை சிறையிலிருந்து காத்த வடிகாலாகத் தான் நான் எப்போதும் எண்ணுகிறேன். இப்பதிவுலகால் கிடைத்த நட்பு வட்டம் மிகப் பெரிது. உதவிகள் அதனினும் பெரிது. அப்படி எனக்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத நல்லதொரு சினேகம் இலங்கைத் தோழி ஒருவர். வழக்கமாக என் பதிவுகளுக்கான அவரது நேர்மையான விமர்சனத்தை முழு நீள மெயிலாக அனுப்புவார். அவர் எனக்காக ஒதுக்கும் நேரத்தையும், பகிரும் ஆரோக்கியமான விஷயங்களையும் கண்டு ஆனந்தத்தில் திணறிப் போவேன். அவர் இன்றெனக்கு அனுப்பிய மடலின் ஒரு பகுதி இங்கே. நிஜமாய் என்ன பதிலெழுத எனத் தெரியவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி நெஞ்சைக் குத்திச் செல்கிறது.


ன்புள்ள இனிய ஸ்நேகிதிக்கும் கணவருக்கும்,
இனிமை கலந்த வணக்கங்கள் பல..
நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...
தவளைக் கல் கதை.. சான்சே இலலைங்க.. கொஞ்ச நேரம் கணணித் திரையை சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன்.. என் ஊரிலும் இதுபோன்ற ஒருவரை பார்த்திருக்கிறேன, பழகியிருக்கிறேன்.. எங்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டிவரும் சுந்தரி அக்காவின் தம்பி.. என்னோடு சரியான விருப்பம்.. எப்பவும் நெல்லிக்காய், முந்திரிப் பழம், அவர் வளர்த்த மாட்டுப்பால் என்று தந்து என்னோடு தங்கச்சி தங்கச்சி என்று என்னைக் கூட்டிக்கொண்டு, இல்லையில்லை தூக்கிக்கொண்டு அலைந்தவர்.. அவரின் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.. என்ன உங்கள் கதை நாயகன் ராஜு அண்ணா சாலை விபத்தில் இறந்தார்.. என் அண்ணா இலங்கையில் இருக்கும் இரத்தக் காட்டேறிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு, அவர்களின் வேடிக்கைக்கு வினையாகி இறந்தார்.. அவர் இறக்கும் முன் என்னோடு பேசிவிட்டு பாதையால் சென்றார் என்பதை நான் சொன்னால் நம்ப முடிகின்றதா.. அந்த துப்பாக்கிச் சூட்டு சத்தம் இப்போதும் என் காதுகளில் கேட்கிறது.. இவர் மட்டுமா.. இவரைப் போல எத்தனை அண்ணாக்களை நான் இழந்திருக்கிறேன்.. கொஞ்ச நேரம் அவரைப் பற்றி மறந்திருந்த நினைவுகளைத் தட்டியெழுப்பி, அவரின் நினைவுகளை மன வயலில் விதைத்து விட்டீர்கள்.. இன்று வீடு சென்றதும்..அம்மாவுடன் இதுபற்றி சொல்லிக் கதைக்க வேண்டும்..

எனக்கு இரண்டு தம்பிகள் மட்டுமே என்று தெரியும் தானே.. ஏனோ எனக்கு ஒரு அண்ணா இல்லை என்ற ஏக்கம் இப்போதும் மனசில் இருக்கும்.. அதனால் எனக்கு பிடித்தவர்களை அண்ணா அண்ணா என்றழைத்து அவர்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருப்பேன்.. அவ்வாறு நான் கைபிடித்துச் சுற்றிய பலர் இப்போது என்னோடு இல்லை.. காரணம் வன்முறை.. இன்றும் என்னால் எந்தவொரு உயிருக்கும் துரோகம் செய்ய முடியாது, பாவம் செய்ய முடியாது என்ற எண்ணத்தை கொண்டிருப்பதற்கு.. நான் சிறுவயதில் இருந்து பார்த்த இந்த இழப்புகளும் ஒரு காரணம்..

என்னங்க நீங்க.. வேலை செய்யுற மனசையே மறக்கடிச்சுட்டீங்க.. என்னவோ போங்க.. இனி வேலை செய்யுறதுக்கு கொஞ்சம் நேரம் செல்லும்.

*******************************************

மன்னிக்கவும் தோழி. உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை. நெஞ்சைக் கிழித்துப் பாய்ந்து பரவுகிறதொரு வலி. இயலாமையின் வலி. துக்கத்தின் வலி. மௌனத்தின் வலி. இத்தனைக் கொடுமைகளையும் தினசரி வாழ்வின் பெரும்பகுதியாய் சந்தித்து வரும் உங்களுக்கு பாதுகாப்பான, பகட்டான, நிம்மதியான வாழ்வு வாழும் என்னிடம் இல்லை, எங்களிடமிருந்து எந்த பதிலுமில்லை தான். மனசாட்சி செத்துப் போய் யுகங்களாகிவிட்டன. பொய்யான வாழ்க்கையில் போலியான நாகரீகத்தில் குமுறும் உள்ளத்தை வோட்காவால் அணைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதிகமிங்கே. ஒருவனைக் கொன்று அவன் இரத்தம் குடித்து வாழும் வாழ்வு. மனிதம் மரித்துக் கொண்டே உள்ளது. இனி ஒரு போரை எதிர்கொள்ளும் வலியையும், அதனால் வரும் சகோதர இழப்புகளையும் கடவுள் நமக்கு அளிக்காதிருப்பாராக.

36 comments:

trdhasan said...

என்ன பதிலிருக்கிறது நம்மிடம்?

Anonymous said...

உங்கள் பதிவின் தலைப்புதான் எல்லார் பதிலும்.

எம்.எம்.அப்துல்லா said...

வாசகி கடிதமா?!? ரைட்டு :(

சி. கருணாகரசு said...

மிக நெகிழ்ச்சி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம் .. வருந்த மட்டுமே முடிகிறது.

ர‌கு said...

ச‌ட்டையைப் பிடித்து உலுக்கி கேட்டிருந்தால் கூட‌, த‌லை க‌விழ்ந்து நிற்ப‌தைத் த‌விர‌ வேறென்ன‌ ப‌தில் அளிக்க‌ முடியும் தோழிக்கு...

அருண் பிரசாத் said...

இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. சொல்ல பதிலும் இல்லை

சே.குமார் said...

என்ன பதிலிருக்கிறது நம்மிடம்?

நெகிழ்ச்சி..!
நெகிழ்ச்சி..!!
நெகிழ்ச்சி..!!!

வெங்கட் நாகராஜ் said...

பதில் இல்லை என்பதே கொடுமையான உண்மை. :(

வித்யா said...

:((

vinu said...

sollvatharkku onnrum illaimanitham seatha piragu

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...

V.Radhakrishnan said...

:(

செ.சரவணக்குமார் said...

சகோதரியின் கடிதம் மனதைப் பிசைகிறது.

சொல்வதற்கு பதிலோ, ஆறுதலோ சத்தியமாக இல்லை.

ஈரோடு கதிர் said...

இந்த வலி
ஒருநாளா..
இரண்டு நாளா..

எதன்பொருட்டும்
பதில்தேட நாம் தயாரில்லை

வினோ said...

இரண்டு முறை படித்தேன். நிஜங்களில் நித்திரையை தொலைத்தபின், கேள்வி எங்கே பதில் எங்கே விக்கி...

ராம்ஜி_யாஹூ said...

nice keep rocking

ஹேமா said...

இழந்ததில் இதுவும் ஒன்று ஈழத்தவர்களுக்கு !

Cable Sankar said...

abdullah.. repettu.. :((

ஸ்ரீ.... said...

அந்த ஈழச்சகோதரிக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர ஆக்கபூர்வமான செயல் தற்போதைக்கு ஏதுமில்லை. நீங்கள் குறிப்பிட்டது போலச் சகோதர இழப்புகள் நேராமலிருக்கட்டும். நன்றி.

ஸ்ரீ....

தராசு said...

(((((

அமுதா கிருஷ்ணா said...

அந்த தோழிக்கு ஆறுதலை தவிர...

முரளிகுமார் பத்மநாபன் said...

athellaam onnumillainnu solli vainga... manasukku athuthaan thevai.
:-(

Kousalya said...

enna solla...?? :(((

ஜெயந்தி said...

மனசை வலிக்கச் செய்யும் கடிதம்.

Sureshkumar C said...

பதிலா? ஆறுதல் சொல்லக்கூட அருகதை இல்ல நமக்கு. கிரிக்கெட் மேட்ச் பாத்து ஆர்ப்பரித்த மனதுக்குள்ளாற இப்போ நெருஞ்சி முள்ளுல உறுத்துது.

இந்த அண்ணாவின் கரங்களைப் பற்றிக்கொள் எண்டு அந்த சகோதரிக்கு சொல்வதைத் தவிர வேறொண்டும் தோணல எனக்கு.

வித்தியாசமான கடவுள் said...

நம்மிடம் பதில் உண்டு... ஆனால், அந்த பதிலை ஆழக் குழி தோண்டி புதைத்து விட்டு நாம் இன்று இலவச வண்ண தொலைகாட்சி பெட்டியில், நம் பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு மரணம் அடைவதை பார்த்துக்கொண்டு உச்சுக்கொட்டிக்கொண்டிருக்கிறோம்... நம் வீட்டுக்கும் அந்த ஆப்பு வரும் போது நம்மைப்பார்த்து உச்சுக்கொட்ட இன்னொருவர் இல்லாமலா போய்விடுவார்?

அபி அப்பா said...

:-((

Tamil Online Job : படுகை.காம் said...

என்ன பதிலிருக்கு நம்மிடம்!!!!

அனைவரின் பதில்களையும் கண்டு நானும் ஏமாந்தே போய்விட்டேன்.

கடிதம் எழுதத் தெரிந்தவர்களே!
கத்தி கண்டா பயந்துவிட்டாய்?

நாம் வீட்டை காத்தாள்
நாய் ஊரைக் காக்கும்

வலைப்பூ எழுதும் அன்பர்களே
வலை கொண்ட தமிழன் கண்ணீர்- தெரியலையா?


தாய் தமிழனுக்கு கச்சத் தீவு வந்தாள்
தொப்புள் கொடி தமிழனுக்கு ஈழம் வரும்.


எழுதுங்கள் எழுதுங்கள்
என் கடல் வேண்டும் என்று எழுதுங்கள்.

உங்கள் வார்ததை வெல்லும்.


படுகை.காம்

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

ஆறுதல் கூறும் அருதையை நாம் எல்லோரும் இழந்து விட்டோம்...

Joseph said...

பதில் நிறையா இருக்கு, ஆனா இருக்க பதில்களை நம்மால சொல்ல முடியாது விக்கி. நமது செயல்களும் சொற்களும் நம்மால் தீர்மானிக்கப்படுவதில்லை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்களது இறுதிக்குறிப்புகள் அழுத்தமானவை.

சே.குமார் said...

ennanga maranthachchaaaa.......


namma valaikku varavey illai

http://www.vayalaan.blogspot.com

Tamil Online Job : படுகை.காம் said...
This comment has been removed by a blog administrator.
விக்னேஷ்வரி said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

படுகை, உங்கள் பதிவில் எனக்கு உடன்பாடில்லை. என்னைக் கேட்காமல் என்னைப் பற்றி எழுதியிருப்பது குறித்து நான் வருத்தப்படுகிறேன். அதனால் உங்கள் பின்னூட்டத்தை நீக்குகிறேன்.

Tamil Online Job : படுகை.காம் said...

மன்னிக்கவும் ....

மீண்டும் ஒரு பள்ளிப் பருவம்:

சின்ன சண்டை பெரிய பொழுதுபோக்கு

நல் எழுத்தாளர்களை தன் வலைப்பக்கம் சற்று நோக்க வைப்பதும் மட்டுமே ...

டாட்டா ....

உங்களப்பற்றிய பின்னுட்டம் எங்களது வலை தலத்தில் இருக்க வேண்டாம் என்று நீங்கள் கருதினால் .... அவ்விடத்தில் ஒரு பின்னூட்டம் விடவும் ...

பதிவு உள்ள இடம் - http://forum.padukai.com (small story & Love poems forum)
அது மாற்றி அமைக்கப்படும்...

இவன்
படுகை.காம்