Wednesday, July 21, 2010

தோழியையும் குத்தலாம்


கணவனை மனைவி, காதலனை தோழி, கூட இருக்கும் காதலிக்கும் நண்பனை நண்பன், கடைசியா நமக்கு நாமேன்னு எல்லாரும் குத்திக்கிட்டாச்சு. இனி நாம ஹாஸ்டல்ல கூட இருக்குற தோழியைக் குத்தலாமா...

=> காலைல அஞ்சு மணிக்கு எழுப்பு, ஜாகிங் போகலாம்ன்னு சொல்லிட்டு நைட் நமக்கு முன்னாடியே தூங்கிப்போவா. நாமளும் 4 மணில இருந்தே எழுப்ப ட்ரை பண்ணி ரெண்டு மணி நேரமா வொர்க் அவுட் ஆகாம 6 மணிக்கு நல்லா விடிஞ்சதுக்கப்புறம் ஜாக் பண்ணிட்டு, ரூம் வந்து ரெடியாகி 8 மணிக்கு ஆஃபிஸ் கிளம்பும் போது “காலைல என்னை ஏன் எழுப்பலை”ன்னு ஒப்பாரி வெச்சு சுப்ரபாதத்தை ஆரம்பிப்பாளே, அந்த வாயிலேயே ஒண்ணு.

=> லவ்வர் கூட ஊர் சுத்திட்டு இருக்கும் போது ஊர்ல இருந்து வந்த அப்பாகிட்ட பொய் சொல்லி சமாளிக்க சொல்வாளே, அப்போ.

=> அவ பாய்ஃப்ரெண்ட்கூட அதிசயமா கோவில் போறதுக்காக நம்மோட வார்ட்ரோப்ல இருக்குற எல்லாப் புடவையையும் எடுத்துக் கட்டில்ல போட்டு, காஸ்மெடிக்ஸ் எல்லாத்தையும் ரூம்ல சிதறடிச்சுச்சு, ஒரு புயல் வந்து போன எஃபெக்ட்டை ரூம்ல குடுத்து வெச்சிருப்பாளே அப்போ.

=> நாம தூங்கிட்டிருக்குற சமயத்துல “உச், உச்”ன்னு ஒரு சத்தம் கேட்டு, ரூம்க்குள்ள எலி வந்துடுச்சுன்னு அலறியடிச்சுட்டு எழுந்திருக்கும் போது நம்மளைக் கொஞ்சமும் கண்டுக்காம அந்த சத்தம் ஃபோன்ல கண்டினியூ ஆகுமே அப்போ.

=> அவளுக்கு இண்டெர்வியூன்னு ஒரு வாரம் தூங்க விடாம ப்ரிபரேஷனுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி நம்மளைப் பாடாப்படுத்திட்டு, வேலை கிடைச்ச விஷயத்தைக் கூட நம்மகிட்ட சொல்லாம லவ்வருக்கு ட்ரீட் குடுக்கப் போவாளே அப்போ.

=> அதிசயமா கோவிலுக்குப் போகலாம் வாடின்னு கூட்டிட்டுப் போய், அங்கே காத்திட்டிருக்குற அவளோட அவன் கூட கடலை போட்டு, நம்மளை செப்பல் கடை பாதுகாப்பாளரா மாத்திக் காக்க வைப்பாளே அப்போ.

=> நாம ரொம்ப நாள் தேடிப் பொக்கிஷமா ஒரு புக் வாங்கிட்டு வந்து பேர் கூட எழுதாம ஷெல்ஃப்ல வெச்சிருக்கும் போது அதை நம்மகிட்ட கேக்காமலே எடுத்துட்டுப் போய் முந்தின நாள் சண்டைக்குப் பரிசா அவ ஆள்கிட்ட குடுத்துட்டு வந்து அதைப் பெருமையா நம்மகிட்டேயே சொல்லும் போது.

=> “பெத்தவங்களுக்குத் தெரியாம நீ இப்படிப் பண்றது தப்புடி”ன்னு நம்ம ஆரம்பிக்கும் போது தான், காதல் பத்தின தத்துவ முத்துக்களையெல்லாம் கொட்டி, காதல் பண்ணாதவங்கள்லாம் பாவிகள்ங்குற ரேஞ்சுக்கு நமக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டுத் தீவிரவாதம் பண்ணும் போது கட்டி வெச்சு உடம்பு முழுக்க குத்தணும் போல இருக்கும்.

=> பகல்ல கொளுத்துற வெயில்ல போர்வை போர்த்தித் தூங்குறது பத்தாதுன்னு ராத்திரில ஏ.சி.யை 18 டிகிரிக்குக் குறைச்சு நம்மளை நடுங்க வைப்பாளே அப்போ.

=> ஸ்மார்ட்டா இருக்குற அவளோட பாய்ஃப்ரெண்டைக் கூட்டி வந்து “இவன் தாண்டி உங்க அண்ணா”ன்னு உறவு கொண்டாடும் போது.

=> இதெல்லாத்தையும் விட, தூக்கத்துல நம்மளைக் கட்டில்ல இருந்து உருட்டி விட்டுட்டு அடுத்த நாள் காலைல கட்டோட உக்காந்திருக்கும் போது “என்னடா செல்லம், யார் செஞ்ச சதி இது”ன்னு டெரராப் பேசுவாளே அப்போ....

ஸ்ஸப்பா... முடியல. இது அவ்ளோ ஈசியா முடியற விஷயமில்லை. ம்ஹூம்.

56 comments:

பரிசல்காரன் said...

அப்படிப்போடுங்க..!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அத்தனையும் செம குத்து

பிரசன்னா said...

அட்டகாசம்.. அப்படித்தான்.. குத்துங்க எஜமான் குத்துங்க :)

//4 மணில இருந்தே எழுப்ப ட்ரை பண்ணி ரெண்டு மணி நேரமா வொர்க் அவுட் ஆகாம 6 மணிக்கு//
அதுவே பெரிய வொர்க் அவுட் தான்..

//இருந்து வந்த அப்பாகிட்ட பொய் சொல்லி சமாளிக்க சொல்வாளே//
இப்படி அப்பா என்று சொல்லிக்கொண்டு வரும் அந்த நபர் எப்போமே டெர்ரர் ஆன, வறுத்து எடுப்பவரா இருப்பார்..


//காதல் பண்ணாதவங்கள்லாம் பாவிகள்ங்குற ரேஞ்சுக்கு நமக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டு//
அதேதான் அதேதான்..

//பகல்ல கொளுத்துற வெயில்ல போர்வை போர்த்தித் தூங்குறது பத்தாதுன்னு//
கேட்டா இரவினில் சூரியன்.. பகலில் வெண்ணிலானு என்ன என்னமோ சொல்லுவாங்க :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹாஹா.. முடியலை. எல்லாம் ரசனை.

குறிப்பா எலி வந்த விஷயம், இவந்தாண்டி உங்க அண்ணா' வுக்கு இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்.

LK said...

lols

Karthick Chidambaram said...

என்னய்யா இன்னைக்கு ஒரே குத்தாட்டமா இருக்கு ?

Balaji saravana said...

"ஸ்மார்ட்டா இருக்குற அவளோட பாய்ஃப்ரெண்டைக் கூட்டி வந்து “இவன் தாண்டி உங்க அண்ணா”ன்னு உறவு கொண்டாடும் போது."
செம சூப்பர் குத்து..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ரசனை. இத்தனைக்கும் தாங்குவாங்களா தோழின்னு பாத்துக்கோங்க சரியா :)

அருண் பிரசாத் said...

நல்ல அனுபவம் போல... செம குத்து

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இதுக்கு பெயர் தான் குத்திகாட்றதா ..........

அருமையான குத்துக்கள்

ர‌கு said...

//செப்ப‌ல் க‌டை பாதுகாப்பாள‌ர்//

ப‌ர‌வால்ல‌ விக்கி, உங்க‌ ரெஸ்யூம்ல‌ இந்த‌ அனுப‌வ‌த்தையும் சேர்த்துக்க‌லாம் :))

//காதல் பண்ணாதவங்கள்லாம் பாவிகள்ங்குற ரேஞ்சுக்கு நமக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டுத் தீவிரவாதம் பண்ணும் போது கட்டி வெச்சு உடம்பு முழுக்க குத்தணும் போல இருக்கும்.//

யாருக்கு உங்க‌ளுக்கா?! இத‌ நாங்க‌ ந‌ம்ப‌ணும்!

//“இவன் தாண்டி உங்க அண்ணா”//

பிக் ஆஃப் த‌ குத்துஸ் :))

'ப‌த்து விதிக‌ள் ப‌த்தல‌'க்க‌ப்புற‌ம் அதே வ‌ரிசையில் ந‌ச்னு ஒரு ப‌திவு!

எம்.எம்.அப்துல்லா said...

ஆமா நீங்க லவ் மேரேஜ்தானே?!?!
ஓ..இது உங்க தோழியோட அனுபவமா?

:))

தராசு said...

தெரியும் தெரியும், பண்றதெல்லாம் பண்ணீட்டு கடைசில இவுங்க தோழிய குத்தறாங்களாம்.

Jey said...

இவ்வளவு, குத்து வாங்கின தோழி, இப்ப எந்த நிலைமயில இருக்காங்க...

விக்னேஷ்வரி said...

வாங்க பரிசல், ஆரம்பிச்சதே நீங்க தானே!

நன்றி ஆர்.கே.சதீஷ்.

வாங்க பிரசன்னா. :)
ஆமாங்க, இவளுகள சமாளிக்குறது பத்தாதுன்னு இவுக அப்பன் வேற.
இவிங்க இம்சை தாங்க முடியாது பிரசன்னா.

வாங்க ஆதி. நன்றி. :)

வாங்க LK.

இதுலேயாச்சும் பதிவுலகம் ஒற்றுமையா இருக்கே சந்தோஷப்படுவோம் கார்த்திக்.

நன்றி பாலாஜி.

விக்னேஷ்வரி said...

ஹிஹிஹி... நம்ம தோழியாச்சே, தாங்கித் தான் ஆகணும் வெங்கட்.

ஆமா அருண், வாங்க.

நன்றி உலவு.

ரெஸ்யூம்ல சேக்க வேண்டிய அனுபவமா இது ரகு...
நம்பித் தான் ஆகணும் ரகு.. வேலைக்கு வந்த நாள்ல அப்படித் தான் இருந்தேன்.
நன்றி ரகு.

அப்து, நோ நோ கன்ஃப்யூஷன். இந்த அனுபவம் எனக்கும் இருந்திருக்கு.

தராசு, நோ... பப்ளிக். பப்ளிக்.

குத்த ஆசை மட்டும் தான் ஜெய். இன்னும் குத்து விடலை. நம்மளால எதுக்கு ஒரு உயிர் போகணும்னு விட்டாச்சு.

தமிழன் சுந்தரா said...

"ஸ்மார்ட்டா இருக்குற அவளோட பாய்ஃப்ரெண்டைக் கூட்டி வந்து “இவன் தாண்டி உங்க அண்ணா”ன்னு உறவு கொண்டாடும் போது."
இது தான் உச்சம், இன்னும் சிரிப்பதை நிறுத்த முடியலை விக்கி!
செம குத்து..

நாகை சிவா said...

:))

வினோ said...

இத்தனை குத்து விட்டப்புறம் hospital கூட்டிட்டு போனிங்க‌ளா?

சே.குமார் said...

அப்படிப்போடுங்க..!

நல்ல அனுபவம் போல... செம குத்து..!!

வித்யா said...

:)))

கார்க்கி said...

குத்து குத்துன்னு குத்தனும் குத்தனும்.. மொத்து மொத்துன்னு மொத்தனும் மொத்தனும்

Anonymous said...

விக்கி, ஏன் விக்கி நீ ஹாஸ்டலில் இருந்த போது பண்ணினதும் வாங்கிய குத்துக்களையும் இப்படி வெளியில் சொல்றே :))) உன் தோழிக்கு எதையும் தாங்கும் மனசு :)) உன்னோட இவ்ளோ டார்ச்சரையும் பொறுத்துட்டு உனக்கும் யோகிக்கும் எப்படி ஹெல்ப் பண்ணிருக்கா :))

ரவிச்சந்திரன் said...

கலக்கல் குத்துகள்....

Venkat M said...

// எம்.எம்.அப்துல்லா said...
ஆமா நீங்க லவ் மேரேஜ்தானே?!?!
ஓ..இது உங்க தோழியோட அனுபவமா? :))//

Repeat - Paavam unga thozhi.

ஹேமா said...

பாவம்தான்!
பதிவு சிரிக்குது விக்னேஸ்.

மோகன் குமார் said...

இன்னிக்கு பிரபல பதிவர்கள் எல்லாம் குத்து விடுறாங்கப்பா .. மீ தி எஸ்கேப்

Anonymous said...

அப்துல்லா அண்ணன் கமெண்டுக்கு ரிப்பீட்டேய்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ராக்கி பார்ட் - 5
நல்ல குத்துகள்!!!

but
இப்படியே குத்திகிட்டு இருந்தா,
குத்து வாங்க மூஞ்சியும் இருக்காது! குத்த கையும் இருக்காது!!!

Vidhoosh(விதூஷ்) said...

போட்டோ பயங்கர டெர்ரர் :)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

எல்லாமே செம குத்து தான் :)

அடுத்து பதிவுல கமெண்ட் போட்டு தொல்ல பண்றவங்கள குத்துவீங்களோ :)

செம செம

Cable Sankar said...

நான் சொன்னது சரியாப் போச்சு..:)

Priya said...

செம குத்துதான்:) இதென்ன தொடர் பதிவா விக்கி? ஏன்னா இப்போதான் ரகு எழுதினதை படிச்சிட்டு வரேன்!அவர் சொன்ன மாதிரி க்ளோபல் கிக்கிங் டேவா???

ஜில்தண்ணி - யோகேஷ் said...

நாங்களும் குத்துவோம்ல

http://jillthanni.blogspot.com/2010/07/blog-post_21.html

வந்து பாருங்க

ஜோசப் பால்ராஜ் said...

ரைட்டு
இன்னும் எத்தன பேரு??

கலாநேசன் said...

செம குத்து..!!

அமுதா கிருஷ்ணா said...

ஆகா குத்துக்கள் எத்தனை விதம்..

ஜாக்கி சேகர் said...

செம குத்து

அபி அப்பா said...

ஓ புரியுது. பதிவுலக வழக்கப்படி பதிவு ஒருத்தவங்க எழுதி வேற ஒருத்தவங்க போடனும். ரைட்டு. உங்க தோழி எழுதி வச்சதை போட்டாச்சு. இப்ப நீங்க இதிலே ஒரு கமெண்ட் அடிக்கனும் மறந்து போச்சா? "நானே எழுதியிருந்தாலும் இப்படித்தான் எழுதுவேன்":-))

Tamil Online Job : படுகை.காம் said...

பாவம்ப்பா ........

குத்துன வலி மறைவதுக்குள்ள

இப்படி

சிரிச்சு சிரிச்சி (பின்னூட்டலில்)

மேலும் நெய் விடலாமா?

தெய்வசுகந்தி said...

lol!!

நேசமித்ரன் said...

:((

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எல்லாம் அனுபவங்களா ?! அந்த பப்பாக்கிட்ட சொல்லி வையுங்க ரொம்பதான் முறைக்குது .

நாடோடிப் பையன் said...

LOL.
I never knew that female room mates can create so much trouble.

ரோஸ்விக் said...

எல்லோரும் குத்த கெளம்பீட்டாங்க... இன்னும் எத்தனை பேரு இருக்காங்களோ தெரியல... :-)))

அம்புட்டுபேரும் இந்த குத்தை ஒரு அரசியல்வியாதியை நோக்கி குத்திருந்த எல்லோரும் திருந்திருப்பாணுக... :-)
நேத்து பதிவுலகத்துல குத்து பதிவுகள் தான் சூடான இடுகைகள்ல இருந்தது.
குத்துப்பாடுனாலும், குத்துனாலும் ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்யுது...:-)

மணிநரேன் said...

:)

Sen22 said...

//அவளுக்கு இண்டெர்வியூன்னு ஒரு வாரம் தூங்க விடாம ப்ரிபரேஷனுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி நம்மளைப் பாடாப்படுத்திட்டு, வேலை கிடைச்ச விஷயத்தைக் கூட நம்மகிட்ட சொல்லாம லவ்வருக்கு ட்ரீட் குடுக்கப் போவாளே அப்போ.//


Superbbbbb...

வித்தியாசமான கடவுள் said...

அட ஏனுங்கோ... தோழிகள் சொல்லுறவங்களை எல்லாம் அண்ணனாய் எத்துக்கிட்டால், ஊருல பாதிக்கு மேல நம்மோட அண்ணனாய் தான் இருப்பாங்க... இதெல்லாம் கண்டுக்க கூடாது...


அதே மாதிரி எப்போ புத்தகம் வாங்கினாலும், கடையை விட்டு வெளியே வந்துடனே ஒரு பேனாவை எடுத்து நம்ம பேர் எழுதிடணும்... இல்லாட்டி நல்ல ஒரு பொக்கிஷத்தை (புத்தகத்தை) இழந்துடுவோம்...


இந்த எல்லாத்துலேயும் டாப்பு இது தாங்க - // “பெத்தவங்களுக்குத் தெரியாம நீ இப்படிப் பண்றது தப்புடி”ன்னு நம்ம ஆரம்பிக்கும் போது தான், காதல் பத்தின தத்துவ முத்துக்களையெல்லாம் கொட்டி, காதல் பண்ணாதவங்கள்லாம் பாவிகள்ங்குற ரேஞ்சுக்கு நமக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டுத் தீவிரவாதம் பண்ணும் போது கட்டி வெச்சு உடம்பு முழுக்க குத்தணும் போல இருக்கும்.//

Kafil said...

nice one :)

ஸ்ரீ.... said...

தொடர் பதிவுன்னு சொல்லிட்டு, ஆளாளுக்கு அவுங்க வெறுப்புகளத் தணிக்கிறீங்க! எத்தன நாள் கோவமுன்னு தெரியல. சமபந்தபட்ட தோழி படிக்காமப் பார்த்துக் கொள்ளவும். :)

ஸ்ரீ....

thenammailakshmanan said...

ஸ்மார்ட்டா இருக்குற அவளோட பாய்ஃப்ரெண்டைக் கூட்டி வந்து “இவன் தாண்டி உங்க அண்ணா”ன்னு உறவு கொண்டாடும் போது//

ஹாஹாஹ இதுதான் விஷயமா..:)))))

Kitcha said...

Hai Friend... Nalla adimanasuley irunthu Kuthura sattham keekuthu...
Namma Thoozhi thaaney... intha maathiri Listu poodamaley kutthalaam...Silanerathuley Anbaavum...

Aanalum ippdiellam Room Pootu yoosichu Kuthunaa Nallathaan Irukkum...

முனியாண்டி said...

பாவங்க நீங்க...உங்கள நெனச்ச எனக்கே அழுகைவருது.

தஞ்சாவூரான் said...

ஹ்ம்ம்ம்... பாவங்க நீங்க. இத்தன குத்து வாங்கியிருக்கீங்களா...

ஆமா, உங்க தோழி சார்பாதானே இந்த பதிவு..

சே.குமார் said...

ennanga namma valaippakkam alaiyey kanom....

http://www.vayalaan.blogspot.com

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)