கன்றின் பார்வையுடன்
துவங்கியது சகியே
என்னை நானுணரும் தருணத்தில்
அறிந்தேன் இவனை.
இரவின் வானம் போல்
எத்தனைக் கண்!
கொண்டையளவு திரட்டிப்
பொட்டு வைத்தாலும்
கழியாது திருஷ்டி.
ஆலிலைக் கண்ணனிட்ட
அரைசாண் டப்பாவும் முகமப்பி
பட்டுப் பாவாடை சட்டையில்
பச்சை ரிப்பன் முடிச்சிட்ட கூந்தலுடன்
சைக்கிளில் தலைகீழாய்த் தொங்கும்
கோழி முழி திரட்டி
பெண் போல் அவனிருக்கும்
புகைப்படம் பத்திரமாய்.
சிலேட்டுப் பருவத்தில்
அரைஞாண் கயிறு மட்டும் உடுத்தி
அடிபம்புத் தண்ணீரில் ஆடினபோது
அதட்டிக் கேட்க ஆளில்லை.
மரம் ஏறல் கற்றுத் தர அவன் செய்த திருவிளையாடல்
மாவுக்கட்டாய் என் கையில்....
கண்பொத்தி ஆட்டத்தில் தானாய் சிக்குபவன்
எனக்கு மட்டும்!
தூர நகர் கூடங்களில்
பயின்று வர சென்ற போதும்
பத்து வருடங்கள் காற்றாடி நூலாய்
காற்றில் மறைந்த போதும்
கண்ட மாத்திரத்தில் காது வலிக்கக்
கதை பேச மறந்ததில்லை.
தையல் கடை கத்திரியாய்
விரல் கவ்வும் வில்ஸ்
முறைத்துத் திட்டினாலும்
முக்குக் கடை கடன் தீர்த்தேன்.
பின்னிரவு வெறும் வயிற்று பியர்
திருட்டுத் தனமாய் வட்டிலிட்டுத்
தலை குட்டிய நாட்களவை.
எதுவுமே நினைவை விட்டு நீங்காது
தாய்ப்பாலை விடத் தூய நட்பு!
ஏதேதோ சீர் இருக்க
நண்பன் சீர் இல்லா மணவறையா....
மனக்குறை போகக்
கண் பொங்க அணைத்துச் சொன்ன வாழ்த்து
கற்பை விட கர்வமடி.
இன்றும்-
பண்டிகை போல் என்றோ அழைத்தாலும்
அன்றாடிய புளியமர ஊஞ்சல் நினைவாடும்
பின்னிசைத்த பறவைகளின் குரலோடு.
42 comments:
//சைக்கிளில் தலைகீழாய்த் தொங்கும்
கோழி முழி திரட்டி
பெண் போல் அவனிருக்கும்
புகைப்படம் பத்திரமாய்//
என்னவொரு கற்பனை!
//முறைத்துத் திட்டினாலும்
முக்குக் கடை கடன் தீர்த்தேன்//
கிரெடிட் கார்ட்???
//கண் பொங்க அணைத்துச் சொன்ன வாழ்த்து
கற்பை விட கர்வமடி//
அழகான, அழுத்தமான வரிகள்:)
//தையல் கடை கத்திரியாய்
விரல் கவ்வும் வில்ஸ்//
நெம்ப கற்பனை...!
எல்லாவரியும் புதுசா தினுசா இருக்கே...
nostalgia?! for your kind information i am not well familiar with poetry.
//சிலேட்டுப் பருவத்தில்
அரைஞாண் கயிறு மட்டும் உடுத்தி
அடிபம்புத் தண்ணீரில் ஆடினபோது
அதட்டிக் கேட்க ஆளில்லை.
மரம் ஏறல் கற்றுத் தர அவன் செய்த திருவிளையாடல்
மாவுக்கட்டாய் என் கையில்....
கண்பொத்தி ஆட்டத்தில் தானாய் சிக்குபவன்
எனக்கு மட்டும்!//
அழகாகன வரிகளை படித்தவுடன் மீண்டும் என் நினைவுகள் மனதில்....
மரம் ஏறல் கற்றுத் தர அவன் செய்த திருவிளையாடல்
மாவுக்கட்டாய் என் கையில்.//
::)))
ரசித்’தேன்’..::))
அருமையா வந்திருக்கு...
அப்பப்ப உங்ககிட்ட இருக்கும் கவிதாயினியை முழுச்சுக்கச் சொல்லுங்க :)
அழகிய கவிதை, நல்ல உவமைகளுடன் வந்து இருக்கிறது.
எதையோ நினைவுபடுத்திவிட்டீர்கள் :)
//இரவின் வானம் போல்
எத்தனைக் கண்!
கொண்டையளவு திரட்டிப்
பொட்டு வைத்தாலும்
கழியாது திருஷ்டி. //
அருமை. இந்த கவிதையால் நட்பிற்கு பெருமை. வாழ்த்துக்கள்.
ரைட்டு! நான் போயிட்டு அப்புறம் வாரேன்
அருமையான வரிகள். ரொம்ப நல்லாருக்கு.
அழகான வரிகளோடு இளமை ஊஞ்சல்.இதமான கவிதை.
///கொண்டையளவு திரட்டிப் பொட்டு வைத்தாலும் கழியாது திருஷ்டி. ///
:))
//ஆலிலைக் கண்ணனிட்ட
அரைசாண் டப்பாவும்//
எனக்கு ரொம்ப பிடித்த பவுடர். :)
///பச்சை ரிப்பன் முடிச்சிட்ட கூந்தலுடன் சைக்கிளில் தலைகீழாய்த் தொங்கும் கோழி முழி திரட்டி//
:)))))))
///கற்பை விட கர்வமடி.///
அசந்து போய்ட்டேன் விக்கி. ரொம்ப அருமை. ரொம்ப சிரிப்பும் நெகிழ்ச்சியுமாக கவிதை ரசத்தில் சுவை.
//தையல் கடை கத்திரியாய்
விரல் கவ்வும்//
தொழில் பக்தி தலை தூக்குது ....:))
வோட்டுப் போடாம போனா மகாபாவம். அதுனால 7/7
சூப்பர் விக்கி,
ஒவ்வொரு வரியையும் உழைத்து இழைத்து செதுக்கியிருக்கிறீர்கள்.
"கற்பை விட கர்வமடி". நட்புக்கு இதைவிட சிறந்த இலக்கணம் சொல்ல முடியாது.
ரொம்ப நல்லாயிருக்கு. நல்ல வாசிப்பு அனுபவம்.
//கண்பொத்தி ஆட்டத்தில் தானாய் சிக்குபவன்
எனக்கு மட்டும்!//
அட நல்லா இருக்குங்க!!
ஒவ்வொரு வரியையும் பாராட்டி எழுத வேண்டிய கவிதை, நேரமின்மையின் காரணமாக சுருக்கமாய்
"நட்பை கவுரவபடுத்திய பல மாணிக்கக் கவிதைகளுக்குள் இதுவும் ஒரு பெரிய மாணிக்கம்"
நன்றி குறும்பன்.
சும்மா ஒரு முயற்சி தான் வசந்த்.
வாங்க வெள்ளிநிலா.
நன்றி சங்கவி.
நன்றி பலா பட்டறை
நன்றி அண்ணாமலையான்.
வாங்க அப்துல்லா... ஆரம்பிச்சுட்டீங்களா...
நன்றி இராதாகிருஷ்ணன்.
வாங்க கணேஷ்.
நன்றி துபாய் ராஜா.
என்னாச்சு பாலகுமாரன்.
நன்றி சரவணக்குமார்.
நன்றி ஹேமா.
ரொம்ப நன்றி வித்யா.
நன்றி தராசு.
நன்றி சூர்யா.
நன்றி ராமன்.
நன்றி அருள்மொழியான்.
{ஆலிலைக் கண்ணனிட்ட
அரைசாண் டப்பாவும் முகமப்பி}
கோகுல் சாண்டல் பவுடர் என்னையும்
மலரும் நினைவுகளுக்கு
கொண்டு போதுங்க...
செம்மையான வர்ணனை!
நமக்கு இது ஆகாதுங்க! நானெல்லாம் ரௌடி பய!
கவிஜு எனக்கு சூனியம் வச்சுடும்.
ஐயையோ!!! பாலா வாராண்டி வாங்க போலாம்,
இப்படியே கேட்டு பழக்கமாயிடுச்சு
தலைப்பு நல்லாருக்குங்க.... :)
Good one.
//கண் பொங்க அணைத்துச் சொன்ன வாழ்த்து
கற்பை விட கர்வமடி. //
:)
ஒரு அழகான கவிதை
ஒரு ஒரு வரிகளையும்
பூக்கள் போல ஒன்று சேர்த்து
மாலை ஆக்கி
நட்பிருக்கு பூமாலை
சூடி இருக்கிறது...
வார்த்தைகளை தேடி பார்க்கிறேன்
கிடைக்கவில்லை பாரட்ட...
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்...
வாழ்க வளமுடன்.
super vigneshwari :)
ஏதேதோ சீர் இருக்க
நண்பன் சீர் இல்லா மணவறையா....
மனக்குறை போகக்
கண் பொங்க அணைத்துச் சொன்ன வாழ்த்து
கற்பை விட கர்வமடி.
.........அசத்தல்........அருமையாக வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள்.
விக்ரமன் படம் பாத்தமாதிரி இருக்கு :)
Nice De
Vidhoosh said...
//தையல் கடை கத்திரியாய்
விரல் கவ்வும்//
//தொழில் பக்தி தலை தூக்குது ....:))//
இந்த விதூஸ் என்ற,வித்யா என்ற குசும்பனை என்ன செய்யலாம் விக்கி?
நல்ல நல்ல கமெண்டெல்லாம் நமக்கு வைக்காம போட்டுட்டு போயிறாங்க...
நல்லாருக்கு விக்கி கவிதை! தலைப்பு ஒரு தனி கவிதை...
நானும் ஓட்டு போடாமல் போனால் பாவம்தான்.அதனால் 9/9.
கண் பொங்க அணைத்துச் சொன்ன வாழ்த்து
கற்பை விட கர்வமடி //
ரொம்பவும் பெருமையா இருக்கு இந்த வரிகள் உங்கள் நட்பை நினைக்கும் போது
தலைப்பிலிருந்து கவிதை மொத்தமும் ரசிக்கும் படி.
அடடடடா..
நல்ல ஒரு கவிதைய இத்தனை நாளா எப்டி படிக்காம விட்டேன்..
கவிதை மட்டுமில்ல தலைப்பும் அருமையா இருக்கு.
\\இன்றும்- பண்டிகை போல் என்றோ அழைத்தாலும் அன்றாடிய புளியமர ஊஞ்சல் நினைவாடும் பின்னிசைத்த பறவைகளின் குரலோடு.\\
உங்கள் கணவரை பற்றி எழுதிய கவிதைக்கு பிறகு, இது தான் சூப்பர்!
:-)
கண்பொத்தி ஆட்டத்தில் தானாய் சிக்குபவன்
எனக்கு மட்டும்!
என்னமோ பண்ணுதங்க.
hi hw r u?
nice lyrics
6 முறை படித்தேன்... அருமை..
நன்றி புருஷ்.
அய்யோ, எனக்கும் பயமா இருக்குங்க பாலா. ;)
தலைப்பு கொடுத்தவர்கிட்ட சொல்லிடுறேன் வெயிலான். நன்றி.
நன்றி ராஜி.
நன்றி சூர்யா.
வாங்க தாரணி.
நன்றி சித்ரா.
அம்மிணி, இதுக்கு நீங்க நல்லா இல்லைன்னே சொல்லிருக்கலாம். :)
Thanks Rad.
வாங்க, பா.ரா. அது ஒண்ணுமில்லை, எங்க ரெண்டு பேர் தொழிலும் அது தானே. அதான் டக்குன்னு சொல்லிட்டாங்க. :)
ரொம்ப நன்றிங்க.
நன்றி அமித்து அம்மா.
நன்றி சுசி.
நன்றி விஜயஷங்கர்.
வாங்க தாராபுரத்தான்.
நன்றி ஹென்றி.
நலம் ராஜன். நன்றி.
நன்றி தர்மா.
எனக்கு இங்கோர் வரியும் அங்கோர் வார்தையுமாய் பிரித்து சொல்ல விருப்பமில்லை.. உங்களின் இந்த கவிதை ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கும் நட்பின் பெருமை பேசி செல்கிறது.. எல்லோரின் பள்ளி காலங்களை மீட்டு தருகிறது.. உங்களை பாராட்டுவதை காட்டிலும் நன்றி உரைப்பதே சால சிறந்தது என தோன்றியமையால் என் மனமார்ந்த நன்றிகள்!!
ரொம்ப அருமை விக்னேஷ்வரி..
Post a Comment