Thursday, January 7, 2010

Public Display of Affection - உங்கள் கருத்தென்ன?


புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே. இந்த வருடம் மிக அழகாய்த் தொடங்கியுள்ளதாய் ஒரு உணர்வு. எல்லாம் நல்லதாய் அமையட்டும். தயவு செய்து New Year Resolution(s)ங்குற பேர்ல எதையாவது மாத்தணும்னு கஷ்டப்பட்டு கங்கணம் கட்டிக்கிட்டு அலையாதீங்க. நீங்க நீங்களாவே இருங்க. அழகான வாழ்வின் ஒவ்வொரு நிமிஷத்தையும் அழகாகவே ரசிப்போம். முடியாததை முயற்சி செஞ்சு, தோற்றுப் போய் உங்க மேலேயே வெறுப்பை வளர்த்துக்காதீங்க. All is well. (நாங்களும் 3 Idiots பார்த்துட்டோம்ல.)

****************************************************************************************************

நேற்றிரவு வானொலியில் ஒரு கேள்வி கேட்டார்கள். Public Display of Affection ஐ ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா, சரியா, தவறா என்றெல்லாம். பலரும் பொது இடங்களில் ஆணும் பெண்ணும் கையைப் பிடிப்பது, கட்டிக் கொள்ளுவது, முத்தமிடுவது தவறு என சொல்லிக் கொண்டிருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் எதுவும் ஒரு லிமிட்டுடன் இருந்தால் சரி, கை பிடிப்பது, கட்டியணைப்பதெல்லாம் சரி தான். ஆனால், அதற்கு மேல் கூடாது எனவும், இன்னும் சிலர் மறைவான இடமாக, யாரும் பார்க்காமல் இருந்தால் முத்தமிடுவதும் தவறில்லை என்றும் வித்தியாசமான விமர்சனங்கள் போய்க் கொண்டிருந்தன. முடிந்ததும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இது சரியா தவறா என்பதை விட, என் கருத்து எங்கு எப்படி நடந்து கொள்கிறோம் என்பது தான். டெல்லியின் சாந்தினி சோக் போன்ற மார்கெட் ஏரியாவில் கைப் பிடித்துக் கொண்டு போனால் கூட தவறாகத் தான் இருக்கும். அதே விமான நிலையத்தில் கட்டிப்பிடித்து முத்தமிட்டு வழியனுப்பி வைத்தாலும் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. அதனால் எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு இருந்தால் போதுமானது. யாரும் நம்மை வித்தியாசமாகப் பார்க்க மாட்டார்கள். (இது என் கருத்து மட்டுமே. உங்கள் கருத்துடன் ஒத்துப் போக வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள்.)

****************************************************************************************************

3 Idiots படத்தின் ஒவ்வொரு காட்சியும் மனதில் பதிந்து விட்டது. காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்திருக்கின்றனர். அமீர் கான் தனது ஒவ்வொரு படத்திலும் தான் ஒரு Perfectionist என்பதை நிரூபித்து வருகிறார். தேர்ந்த மிகையில்லாத நடிப்பு, உறுத்தாத இசை, மிடுக்கான துள்ளல், சீரான வேகம் என எல்லாமே பெர்ஃபெக்ட் படத்தில். கஜினியில் கூட அமிர்கானை இவ்வளவு ரசிக்கவில்லை. ஆனால் இந்தப் படத்தில் பக்கத்திலிருந்த என்னவரை மறந்து ரசிக்க வைத்து விட்டார். முழு நீள வசனங்கள், பஞ்ச் டயலாக், குத்துப் பாட்டு, மசாலா வாசம் என இருக்கும் தமிழ்த் தலைகளும், தளபதிகளும் இவர் படம் பார்த்து கொஞ்சம் நமக்கு வித்தியாசமாகக் கொடுத்தால் சரி. ஆனால், இதே படத்தை தமிழில் ரீமேக் செய்தால் எல்லா கொடுமைகளும் இருக்கும். (தயவு செய்து இந்தப் படம் சன் பிக்சர்ஸ் கண்ணில் பட்டு விடக் கூடாது என அருள்மிகு ஸ்ரீ பராக்கிரம கோலிவுட்டம்மனை வேண்டிக் கொள்கிறேன்.)

****************************************************************************************************

தோழியொருத்தி நீண்ட நாட்களுக்குப் பின் தொலைபேசியிருந்தாள். பேசிக் கொண்டே இருக்கும் போது அவள் பக்கமிருந்து நிறைய சத்தம் வந்து தொந்தரவு கொடுக்கவே
"என்னடி சத்தம்" என்றேன்.
"குழந்தைகள் விளையாட்டு சத்தம்" என்றதோடு முடித்திருந்தால் ஷாந்தியாகியிருப்பேன்.
"நான் எங்க வீட்டு பால்கனில நின்னு பேசிட்டிருக்கேனா. குழந்தைங்க கீழ விளையாடிட்டு இருக்காங்க. அதான் ஒரே சத்தம். யு நோ, எங்க வீட்டு பால்கனி ரொம்பப் பெரிசு."
"ஓ"
"பிரியாத வரம் வேண்டும் படத்துல வர்ற பால்கனி மாதிரி பெரிசா.... இருக்கும். It is lovely to walk here and talk"
"ஆமா, ஹால் கட்ட முடியாதவன் அதை அப்படியே திறந்து விட்டுட்டு பால்கனின்னு பேர வெச்சுக்குறான். என்ன சொல்ல?"
"ஹேய், எங்க வீட்டு ஹாலும் பெரிசு."
"ஆமா, உங்க வீட்டு ஹாலும் பெரிசு, ஆளும் பெரிசு"
போனை வெச்சிட்டா.(அவ சொல்லும் போது நான் கேட்டுட்டு இருந்தேன்ல. நான் சொன்னதும் என்னா வில்லத்தனம்.....)

****************************************************************************************************

சேதன் பகத்தின் 2 States முடித்து விட்டு, One night @ Call Center வாசித்துக் கொண்டுள்ளேன். ஒரு மனுஷன் எவ்வளவு மொக்கை போட முடியுமோ அவ்வளவு மொக்கை போட்டிருக்கார். இன்னும் நூறு பக்கங்களைத் தாண்டவில்லை. தலைப்பு வைத்து விட்டதால் கதையை அந்த ஒரு இரவை வைத்தே ஓட்ட வேண்டும் என்பதாலோ என்னவோ அதிலுள்ள ஐந்து பேர் தும்முவது, இருமுவது, அழுவது, வாஷ் ரூம் போவது என அனைத்தையும் சொல்லி கழுத்தருக்கிறார் மனுஷன். நிஜாமகவே சிட்னி ஷெல்டன், டேன் பிரவுன் எல்லாம் வாசித்து விட்டு, இவரை வாசித்தால் கொடுமை தான். (நல்ல வேளை, வாஷ் ரூமில் தண்ணி வரலைன்னெல்லாம் எழுதாம விட்டார். கிர்ர்ர்ர்ர்....)

****************************************************************************************************

யோகி டைம்ஸ்.
இப்போது தான் எழுத்துகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார். போன வாரம் முறுக்கு செய்து கொண்டிருந்தேன். சமயலறையில் நுழைந்தவர், "இது என்ன ஷேப்பே இல்லாம செய்ற. தள்ளு" என்று சொல்லி விட்டு "அ", "ஆ", "இ" என்று முறுக்குகள் செய்ய ஆரம்பித்து விட்டார். அத்துடன் இல்லாமல் "நான் தமிழ் கத்துக்கணும். அதுனால அல்பபெட்ஸ்லேயே முறுக்கு செய்" என எனக்கும் உத்தரவு வேற. தமிழ் நாட்டில் இருந்தப்போ கூட சாதா முறுக்கு தான் சாப்பிட்டிருக்கேன். இங்கே வந்து தான் "தமிழ் முறுக்கு" கத்துக்கிட்டேன். (இனி அவரின் திறமையை பேப்பர் பேனாவில் மட்டுமே காட்டும் படி சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்)

66 comments:

Anonymous said...

யோகி பாவம்.. நீங்க செய்த முறுக்கெல்லாம் சாப்பிட வேண்டிய நிலமை :)

Anonymous said...

//அதனால் எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு இருந்தால் போதுமானது.//

கரெக்ட். (ஆனாலும் ஒருத்தருக்கு சரின்னு தோணறது இன்னொருத்தருக்கு தோணும் வாய்ப்பு இருக்கு)

Anonymous said...

//மசாலா வாசம் என இருக்கும் தமிழ்த் தலைகளும், தளபதிகளும்//

அப்ப சூர்யா ஓகேங்கரீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ் அதிகம் கற்ற பண்டிதருக்கு இருக்கும் தமிழ் முறுக்கு இவருக்கு அ ஆ வில்யே வந்துவிட்டதே.. :)

அண்ணாமலையான் said...

நல்லா சுவையா இருக்கு..(முறுக்கு இல்லங்க உங்க எழுத்த்து)
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
(ஏற்கனவே சொல்லிருப்பேனோ?)

குறும்ப‌ன் said...

ச‌ன் பிக்ச‌ர்ஸ்னா ஒரு டெர்ர‌ர்தான் போல‌! வித்யாவும் இதையேதான் வேண்டியிருக்காங்க‌ (என்னா ஒரு ஒற்றுமை)

அமிர்கான் ந‌ல்லாதான் ப‌ண்றார், ஒத்துக்க‌றேன், அதுக்காக‌ இப்புடியா? கிர்ர்ர்ர்ர்...இருங்க‌ இருங்க‌, My Name is Khan வ‌ர‌ட்டும், அப்போ பாப்போம்!

க‌ஜினி - என‌க்கென்ன‌வோ அமிரை விட‌ சூர்யாதான் சூப்ப‌ர்னு தோணுது, அதுவும் முத‌ல் முத‌லா அசினை மீட் ப‌ண்ணிட்டு ஒரு ஸ்மைலோட‌ போற‌ காட்சியில் சூர்யாதான் டாப்!

தராசு said...

தலைப்பை பார்த்தால் தலைவி எதோ கருத்துக் கணிப்பு நடத்துறாங்களோன்னு உள்ளே வந்தால், இது இன்னாவோ வேற மேட்டராக்கீது.

வருடத்தின் முதல் பதிவு, கொஞ்சம் வெயிட்டா இருந்திருக்கலாம்.

vittalan said...

தோழி விக்னேஷ்வரி அவர்களுக்கு
நல்ல பதிவு ,
எனது வலைத்தளம்
http://vittalankavithaigal.blogspot.com/

Sangkavi said...

//எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு இருந்தால் போதுமானது. யாரும் நம்மை வித்தியாசமாகப் பார்க்க மாட்டார்கள்.//

உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்....

எம்.எம்.அப்துல்லா said...

//ஷாந்தியாகியிருப்பேன்.//

ஏஏஏஏஏன்????

விக்னேஷ்வரிங்குற பேரே நல்லாத்தானே இருக்கு!!

:))

வித்யா said...

உண்மைய சொல்லுங்க. முறுக்கு செஞ்சிங்களா இல்ல அப்படி நடிச்சீங்களா?

நல்ல கலவை:)

கார்க்கி said...

நானும் முறுக்கு செய்வ்வேன்னு முறுக்கிட்டு நின்னார் போலிருக்கே..

3 இடியட்ஸ் நல்லா இருக்கட்டும். அதுக்கேன் இப்படி? எப்பவாது தளபதி நல்ல படத்த எடுத்து சொதப்பி இருக்காரா? அவர் தெளிவாத்தான் இருக்காரு. நீங்கதான் தேவையில்லாம கலைநயமிக்க படஙக்ள் பார்க்க போதும் அவரையே நினைச்சிட்டு இருக்கிங்க :))

Public Display of Affection..

விமான நிலையத்தில் நடப்பது 99% உண்மையான அன்பு.அது யாருக்கும் தவறாக தெரிவதில்லை. மற்ற இடங்களில் நடப்பது 99% இடம் கிடைக்காத ஜோடிகளின் சிக்கல். அது தப்பாத்தான் தெரியும். உங்களுக்கு என்ன வந்துசுன்னெல்லாம் கேட்க முடியாது..

கார்க்கி said...

//மயில் said...
யோகி பாவம்.. நீங்க செய்த முறுக்கெல்லாம் சாப்பிட வேண்டிய நிலமை//

இவங்கள கல்யாணமே பண்ணிக்கிட்டாரு. அதை விடவா பெரிய கஷ்டம்?

விக்னேஷ்வரி said...

இது போன போஸ்ட்ல போட்ட சாம்பார் சாதத்தின் எதிரொலின்னு எனக்குத் தெரியும் மயில். :)
நான் பண்றதைப் பார்த்து பயந்து போய் தான் தானே பண்ண ஆரம்பிச்சுட்டார்.

சரின்னு தோணிடுச்சுன்னா பிரச்சனை இல்லை அம்மிணி. வாங்க நாம பழகலாம்.
"களும்" ன்னு பன்மைல சொல்லிருக்கோம்ல. இன்னும் சூர்யாக்குப் பட்டம் குடுக்கல. குடுத்தா அவரும் மாறிடுவார்.

உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன் முத்துலெட்சுமி. :)

நன்றி அண்ணாமலையான்.

ஓ அப்படியா. நன்றி குறும்பன். இதுலே இருந்து என்ன தெரியுதுன்னா சன் பிக்சர்ஸ் சென்னைல இருந்து டெல்லி வரைக்கும் டெரரா இருக்கு.

எனக்கும் என் வெயிட்டுக்கு எழுதனும்னு ஆசை தான் தராசு. ஆனா, வரணும்ல.

விக்னேஷ்வரி said...

நன்றி vittalan.

நன்றி சங்கவி.

சத்தியமா உங்க கிட்ட இருந்து இந்த கமென்ட்டைத் தான் எதிர்பார்த்தேன் அப்துல்லா. :)

நன்றி வித்யா. உங்களுக்கு போன் பண்ணி உண்மை சொல்றேன். இப்போதைக்கு வேண்டாம். :)

தளபதியப் பத்தி சொன்னா நீங்க பொங்கிடுவீங்கன்னு நினைச்சேன் கார்க்கி. சேதாரம் அதிகமில்ல.

சீக்கிரமே உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போற தியாகியைப் பார்க்கத் தானே போறோம். :)

butterfly Surya said...

hahahaha..

Super..

கலையரசன் said...

//(தயவு செய்து இந்தப் படம் சன் பிக்சர்ஸ் கண்ணில் பட்டு விடக் கூடாது என அருள்மிகு ஸ்ரீ பராக்கிரம கோலிவுட்டம்மனை வேண்டிக் கொள்கிறேன்.)//

அதையே நானும் ரிப்பீட்டி வேண்டிக் கொள்கிறேன்...

எல்லாமே டக்கரு...

பா.ராஜாராம் said...

(அவ சொல்லும் போது நான் கேட்டுட்டு இருந்தேன்ல. நான் சொன்னதும் என்னா வில்லத்தனம்.....)

அதானே என்னா வில்லத்தனம்?

:-))

யோகி டைம்ஸ் சூப்பர் பாஸ்!

தல,hats off!

கலக்கி இருக்கீங்க விக்னேஷ்!

மோகன் குமார் said...

ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை பதிவு எழுதுறீங்க. எவ்ளோ followers வச்சிக்கிட்டு.. ம்ம்.. வாரம் ஒன்னாவது எழுதுங்க

வாய்ப்பாடி குமார் said...

ஆமா, உங்க வீட்டு ஹாலும் பெரிசு, ஆளும் பெரிசு"

----நல்லாருக்கு

முரளிகுமார் பத்மநாபன் said...

நானும் பார்த்தேன் 3 இடியட்ஸ், பாதி டயலாக் சுத்தமா புரியலை, அதானால நானும் என்னோட இஸ்ட தெய்வத்தை வேண்டிக்கிறேன் “அம்மா, கோலிவுடேஷ்வரி! தயவு செய்து இந்த படத்தை தமிழ் படுத்த வைம்மா, நல்லா இல்லட்டியும் புரியவாவது செய்யட்டும்”

எப்புடி? எங்க எதிர் வேண்டுதல்.

pappu said...

2 states பத்தி உங்க பெர்சனல் கமெண்ட் இல்லையே!

முரளிகுமார் பத்மநாபன் said...

//யோகி பாவம்.. நீங்க செய்த முறுக்கெல்லாம் சாப்பிட வேண்டிய நிலமை :)//

ஏண்ணிஅவங்க செய்த அல்வாதான் அப்படின்னா, இவங்க எல்லாத்தையும் அப்படிதான் செய்வாங்களா?

அப்பன்னா உண்மையிலேயே பாவம்தாங்க யோகி

raman- Pages said...

இந்த முறுக்கு கதை நீங்க திருப்பூர் வந்தப்பயே கேட்ட ஞாபகம்.. வித்தியாசமா present பண்ணியிருக்கீங்க... வாழ்த்துக்கள்.

Priya said...

//அ", "ஆ", "இ" என்று முறுக்குகள் செய்ய ஆரம்பித்து விட்டார். அத்துடன் இல்லாமல் "நான் தமிழ் கத்துக்கணும். அதுனால அல்பபெட்ஸ்லேயே முறுக்கு செய்" என எனக்கும் உத்தரவு வேற//....

அட‌, இது நல்ல ஐடியாவா இருக்கு, ஏன்னா என்னவ‌ருக்கும் தமிழ் தெரியாது!

இனி முறுக்குன்னா அது தமிழ் அல்பபெட்ஸ் முறுக்குதான் செய்ய‌போறேன் !!!

Anonymous said...

//
வருடத்தின் முதல் பதிவு, கொஞ்சம் வெயிட்டா இருந்திருக்கலாம்.//

வெயிட்டாவா?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

முறுக்கு... முறுக்கு... முறுக்கே...
மணப்பறை முறுக்கேய் ...

நம்மூரு ஐட்டம் (பால்கோவா) எப்போ?

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

//(இது என் கருத்து மட்டுமே. உங்கள் கருத்துடன் ஒத்துப் போக வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள்.)//
Opinion Differs!

விக்னேஷ்வரி said...

வாங்க சூர்யா.

நன்றி கலையரசன்.

நன்றி பா.ரா.

முயற்சிக்கிறேன் மோகன்.

நன்றி குமார்.

உங்களுக்கும் வில்லத்தனம் அதிகமாகிடுச்சு முரளி. :)

விக்னேஷ்வரி said...

அதை ஏற்கனவே எழுதிட்டேன் பப்பு.

ஹலோ, ஹல்வா சாப்பிடாமலே கமெண்ட்டா முரளி....

நன்றி ராமன்.

ரைட்டு, நடத்துங்க ப்ரியா.

என்ன அண்ணாச்சி சாரி சித்தப்பு...

பால்கோவா கடைல வாங்கியே சாப்பிட்டு பழகிட்டதால செய்யறதில்லைங்க பாலகுமாரன்.
Opinion Differs! - அதே தாங்க.

Thamizhmaangani said...

akka,கைபிடித்தல் பொது இடங்களில் ஓகே. பார்க்கில் கட்டி கொள்வது போன்ற சமாச்சாரங்கள் ஓகே. மத்தபடி எதுவும் செய்ய கூடாதுங்கோ!

3 idiots படத்தை தமிழில் ரீமேக் செய்ய 'சிவாஜி புரோடாக்சன்ஸ்' 10 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்காங்க... சூர்யா, அமீர் ரோலை செய்வார் என்று செய்தி வந்து இருக்கு! எவ்வளவு கெடுக்க முடியுமோ, அவ்வளவு கெடுக்க தயார் தமிழ் சினிமா!!

பலா பட்டறை said...

இன்னைக்குத்தாங்க பார்கிறேன் உங்க பக்கத்தை... (உங்களுக்கு இன்னொரு அடிமை சிக்கிரிச்சு:) ) புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கிரி said...

3Idiots படத்தை தமிழில் எடுத்து தலைப்பை உண்மையாக்காமல் இருந்தால் சரி ;-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

சுவாரசியமான பகுதிகள். குறிப்பாக தமிழ்முறுக்கு. முறுக்கெல்லாம் செய்வீங்களா.? ஹிஹி.. திங்க மட்டும்தான் செய்வீங்களோனு நினைச்சேன்.!

கோபிநாத் said...

விக்னேஷ்வரி, நல்லா இருந்தது உங்க பதிவு. இங்கு அமெரிக்காவில் இடம்,பொருள் எல்லாம் பார்க்க மாட்டார்கள் எல்லா இடங்களிலும் கட்டிப்பிடிக்கிறது, முத்தம் கொடுப்பது எல்லாம் நடக்கும். அமெரிக்காவில் யாரும் அடுத்தவர்களுக்காக வாழ்வதில்லை. அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ,என்ன நினைப்பார்களோ என்று நம்மைப்(இந்தியர்கள்) போல் நினைப்பதில்லை. நாம் நமக்காக ஒருபொழுதும் வாழ்வதில்லையே..அது தான் பிரச்சனை.

முறுக்கு மேட்டர் சூப்பர்.ரசித்தேன்.

ஜெட்லி said...

//கஜினியில் கூட அமிர்கானை இவ்வளவு ரசிக்கவில்லை. //

me too....

cyber cheating said...

Hi nice post,


Through this blog we avoid cyber cheaters.
http://cyberfraudidentifier.blogspot.com/

If you have any experience or you know like that information mail me.

thank you

வானமே எல்லை said...

வாழ்த்துக்கள்

கமலேஷ் said...

ரொம்ப intresting ...வாழ்த்துக்கள்.....

பேரரசன் said...

என்னவோபோங்க... உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு...


உள்ளதை உள்ளபடி...

நசரேயன் said...

"தமிழ் முறுக்கு" சாப்பிட்ட அப்புறம் யோகி என்ன ஆனாருன்னு சொல்லவே இல்லை

Rajalakshmi Pakkirisamy said...

ha ha ha...

Good Good...

//கார்க்கி said...
//மயில் said...
யோகி பாவம்.. நீங்க செய்த முறுக்கெல்லாம் சாப்பிட வேண்டிய நிலமை//

இவங்கள கல்யாணமே பண்ணிக்கிட்டாரு. அதை விடவா பெரிய கஷ்டம்?//

:) :) :)

Chetan mela bayangara kaduppula irukkeenga pola...

http://synapse-junctionofthoughts.blogspot.com/2010/01/2-states.html - inga comment parthen

சுசி said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் விக்கி.

//அதனால் எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு இருந்தால் போதுமானது.//
கை குடுங்க முதல்ல. என் கருத்தும் இதுதான்.

//பக்கத்திலிருந்த என்னவரை மறந்து ரசிக்க வைத்து விட்டார்.//
ஹஹாஹா..

//ஷாந்தியாகியிருப்பேன்.//
நல்லவேளை நீங்க பேர மாத்தலை. விக்னேஷ்வரிதான் சூப்பர்.

One night @ Call Center படிச்சு முடிச்சதும் கதைய பதிவா போட்டு பழிய தீத்துடுங்க :)

குட் ஐடியா.. நானும் நொர்ஸ்க் முறுக்கு செஞ்சுடுறேன்.

goma said...

தமிழ் முறுக்கு அரை கிலோ பார்சல்...

புலவன் புலிகேசி said...

//முழு நீள வசனங்கள், பஞ்ச் டயலாக், குத்துப் பாட்டு, மசாலா வாசம் என இருக்கும் தமிழ்த் தலைகளும், தளபதிகளும் இவர் படம் பார்த்து கொஞ்சம் நமக்கு வித்தியாசமாகக் கொடுத்தால் சரி. //

ஹி ஹி ஹி...யர் என்ன சொன்னாலும் இவனுங்க இப்படித்தான் நடிப்பானுங்க... public display of affection -ல் உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன். இடம் பொருள் ஏவலறிதல்

Romeoboy said...

\\"தமிழ் முறுக்கு" //

அட வித்தியாசமா இருக்கே. இந்த மாதிரி செய்யசொல்லி எங்க ஊரு அண்ணாச்சிகிட்ட சொல்லி வைக்கிறேன்.

Romeoboy said...

\\ஆமா, ஹால் கட்ட முடியாதவன் அதை அப்படியே திறந்து விட்டுட்டு பால்கனின்னு பேர வெச்சுக்குறான்.//

உள்குத்து அதிகாம இருக்குற மாதிரி இருக்கே ..

Anonymous said...

i agree with
கரெக்ட். (ஆனாலும் ஒருத்தருக்கு சரின்னு தோணறது இன்னொருத்தருக்கு தோணும் வாய்ப்பு இருக்கு)
but we have to accept it..
உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் .


வாழ்க வளமுடன் .
eruku..but onumey varamatarthu..

Valga Valamudan.

பித்தனின் வாக்கு said...

ஆகா தமிழ் முறுக்கு. மிக அருமை காம்பினேஷன். நல்ல பதிவு.
ஏங்க ரொம்ப நாள் கழித்து பேன் செய்த தோழிக்கு இப்படியா பல்பு கொடுக்கறது.
காதலர்கள் பழகும் விதம் குறித்து நீங்கள் சொன்ன தகவல்கள் அருமை. ஆனா எங்க ஊர்ல(சிங்கை) அந்தப் பிரச்சனை இல்லை. எங்க, யார் வேண கட்டிக்கூட பிடிக்கலாம்.முதலில் கொஞ்சம் வேடிக்கை பார்க்க கூச்சமாக இருந்தது, இப்ப சலிச்சி போய் நம்ம போன வேலையை மட்டும் பார்க்கின்றேம்.
நன்றி விக்னேஸ்வரி.

LOSHAN said...

ஆமாம்.. நீங்கள் சொல்வதே என் கருத்தும்.. :௦ அவரவரை மட்டுமல்ல.. இடத்தையும் பொறுத்தது அது.

3 idiots பற்றி நானும் எழுதவிருப்பதால்.. சிம்பிளாக ஒரு வார்த்தையில் அருமை.

//(தயவு செய்து இந்தப் படம் சன் பிக்சர்ஸ் கண்ணில் பட்டு விடக் கூடாது என அருள்மிகு ஸ்ரீ பராக்கிரம கோலிவுட்டம்மனை வேண்டிக் கொள்கிறேன்.)
// ஹா ஹா ஹா...

அவ சொல்லும் போது நான் கேட்டுட்டு இருந்தேன்ல. நான் சொன்னதும் என்னா வில்லத்தனம்....//

இன்னும் நண்பியாவே இருக்காங்களா? ;)

இன்னும் அந்தப் புத்தகம் வாசிக்கிறீங்களா? எ.கொ. சா இது?

தமிழ் முறுக்கா? சத்தமா சொல்லாதீங்க.. இதை வச்சே யாராவது மொழிப் பிரச்சினை ஆரம்பிக்கப் போறாங்க,,.

அன்புடன்-மணிகண்டன் said...

பதிவு நன்றாக இருந்தது. புத்தாண்டு வாழ்த்துக்கள் விக்னேஷ்வரி..

விக்னேஷ்வரி said...

நீங்க சொன்னதைத் தான் நிறைய பேர் சொன்னாங்க தமிழ்மாங்கனி.
அய்யய்யோ, இப்படியெல்லாம் ஷாக்கிங் நியூஸ் சொல்றீங்களே.

நன்றிங்க அடிமை பலா பட்டறை. :)

சரியா சொன்னீங்க கிரி.

யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க ஆதி. ஆதி அண்ணனுக்கு ஒரு கிலோ தமிழ் முறுக்கு பார்சல். ;)

சரியா சொன்னீங்க கோபிநாத்.

வாங்க ஜெட்லி.

Thank you cyber cheating

நன்றி வானமே எல்லை.

நன்றி கமலேஷ்.

எந்த நேர்மை சொல்றீங்க பேரரசன். எதுவும் உள்குத்து இருக்கா...

விக்னேஷ்வரி said...

பல்லெல்லாம் பாதுகாப்பாத் தான் இருக்கு நசரேயன். :)

ராஜி, உங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகக் கடவது. :)
அப்புறம் சேடன் பகத் - அந்தாளு இம்சை தாங்க முடியல ராஜி.

நன்றி சுசி.
நம்ம ரெண்டு பேர் கருத்தும் பல விஷயங்கள்ல ஒத்துப் போகுதுங்க.
அதைப் பதிவா வேற எழுதணுமா. பார்க்கலாம்ங்க.
அப்படியே இங்கேயும் கொஞ்சம் அனுப்பி வைங்க உங்க முறுக்கை.

அனுப்பிடுவோம் goma

வாங்க புலிகேசி.

வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லுங்க Romeoboy.
எந்த குத்தும் இல்லைங்க. :o

வாங்க சூர்யா.

சரி தான் பித்தனின் வாக்கு.

வாங்க Loshan. அபப்டியா, எழுதுங்க.
நக்கல்களுக்கெல்லாம் உடைஞ்சு போறதா நட்பு... :)
எ.கொ.சா. ?? புரியல.
மொழிப் பிரச்சனையா.... ஆஹா....

நன்றி மணிகண்டன்.

ஸ்ரீவி சிவா said...

நீங்க சொன்ன ஏர்போர்ட் தவிர வேறு எந்த இடத்திலயும், Public Disp சாத்தியமில்லைனு தான் நினைக்கிறேன்...நம்ம மக்கள்/சமுதாய மன முதிர்வு அவ்வளவுதான். மாற்றம் வேணும்!

'2 States' கொஞ்சம் நல்லா இருந்தது.(நிறைய விஷயங்களை 'generalize' பண்ணி கிண்டல் அடிக்கிறது தவிர்த்து)
'One Night @ ..' வாசிக்கணும்னு நினைச்சேன்.நீங்க சொல்றதை பார்த்தா கொஞ்சம் டெர்ரரா இருக்குது. :(

//அல்பபெட்ஸ்லேயே முறுக்கு செய்//
ம்ம்ம்ம்...என்னாமா யோசிக்கிறாய்ங்க!!!

ஸ்ரீவி சிவா said...

அப்புறம்.. ரெண்டு விஷயம் மறந்துட்டேன் விக்கி.

# '2 States' படிக்கும்போது விக்கி-யோகி ஞாபகம் வந்தது. உங்க கல்யாணத்துல ஏதாவது இன்ட்ரஸ்டிங் விஷயங்கள் இருக்கா? ;)

# அட... நீங்க நம்ம ஊரு... 'வலை'யில நம்ம ஊர்க்காரய்ங்களை பாக்குறப்போ சந்தோஷமா இருக்கு.
:) :) :)

Mystic said...

யோகி தமிழ் மேல் நிறைய பற்று உள்ளவராக மாறி கொண்டு வருகிறார் . ( இதுக்கும் நீங்க தானே காரணம் ;) )Public placela மத்தவங்க முகம் சுளிக்காத மாறி எது செய்தாலும் தவறு இல்லைFrom ,
http://lonelyboyvideos.blogspot.com/

Rajalakshmi Pakkirisamy said...

Happy birthday madam...

பா.ராஜாராம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்னேஷ்.

சாரி.தாமதம்.

☼ வெயிலான் said...

// ஹிஹி.. திங்க மட்டும்தான் செய்வீங்களோனு நினைச்சேன்.! //

ஆதிக்கும் தெரிஞ்சிருச்சா?

:))))

துபாய் ராஜா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

யோகி போற வேகத்தை பார்த்தா இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்ல பிளாக் ஆரம்'பிச்சுடுவார்' போலிருக்கு. :))

துபாய் ராஜா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

யோகி போற வேகத்தை பார்த்தா இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்ல பிளாக் ஆரம்'பிச்சுடுவார்' போலிருக்கு. :))

சினிமா புலவன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

vellinila said...

இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

வாங்க ஸ்ரீவி சிவா. இருங்க, One night @ the call center முழுசா வாசிச்சிட்டு சொல்றேன். அப்புறம் வாங்குங்க.

எங்க கல்யாணத்துல எல்லாமே interesting தான் சிவா. அதைப் பத்தி 2008 ல ஒரு பதிவு எழுதிருப்பேன். முடிஞ்சா பாருங்க.
ஆமாங்க, எனக்கும் ரொம்ப சந்தோஷம்.

ஆமாங்க மாறித் தானே ஆகணும் mystic.

Thank u Raji.

நன்றி பா.ரா.

வேண்டாம் வெயிலான். நான் பாவம்.

நன்றி துபாய் ராஜா. புத்தாண்டு எப்படிங்க போகுது...
அவர் பிக்கலாம் வேணாம்ங்க. நாம பிக்குறதையே தாங்க முடில இங்கே. இன்னும் அவர் வேறயா...

நன்றி சினிமா புலவன். உங்களுக்கும்.

நன்றி வெள்ளிநிலா. உங்களுக்கும்.

kripaprasanna said...

neenga dancer aa? by the way.......
unga ezhuthu nadai naala uyirottam:)

விக்னேஷ்வரி said...

நான் நடனம் ஆடினேன். இப்போ இல்லைங்க கிரிபா பிரசன்னா.

உங்கள் கருத்திற்கு நன்றி.

Anonymous said...

3 இடியட்ஸ் இன்னும் பார்க்கவில்லை. சிலர் சொன்னது போல், கஜினியில் சூர்யா தான் நன்றாக செய்தார். அதுவும் அசினுடனாக காட்சிகளில் வாவ். அமீர்கானில் அந்த உயிர்ப்பு இருக்கவில்லை.

__________________________________

என் தோழி ஒருவர் விஜய் 3 இடியட்ஸ் தமிழாக்கத்தில் நடிக்கப் போவதாக கூறினாளே. உங்கள் வேண்டுதல் எல்லாம் வீணாகிவிட்டதே.
__________________________________

அல்ஃப்பபெட்ஸ் முறுக்கா? இன்ற்ரெஸ்டிங்.
__________________________________

PDA பற்றி சொல்வதானால், சிலரைப் பார்க்கும் போது க்யூட்டாக இருக்கும். அன்பாக தொடுவதில் அணைப்பதில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. ரொம்ப ஓவராக நடக்காமல் இருந்தால் சரி. நீங்கள் சொன்னது போல் இடம் வலம் பார்த்து நடப்பது முக்கியம். ஏன் நண்பர்களாக வெளியே போகும் இடத்தே கூட சில கப்பிள்ஸ் நடந்து கொள்ளும் முறை முகம் சுழிக்க வைக்கும். வீடு போய் சேரும் வரை அவர்களது உதடுகள் ஃபெவிக்கோல் போட்டமாதிரி ஒட்டியே இருக்கும். கைகள் கண்ட இடத்திலேயே இருக்கும். அதுக்கு வீட்டிலேயே இருக்கலாமே. வெளியே நண்பர்களுடம் போகவேண்டிய அவசியமில்லையே. அதுவும் சிங்கிளாக இருக்கும் நண்பர்களுக்கு முன் கொஞ்சமாவது நாகரிகத்துடன் நடக்கலாமே.