Monday, February 15, 2010

காதலைக் கொண்டாடுங்கள்


காதலர் தினம். ஊரே கொண்டாடி ஓய்ந்து விட்டது. நேற்றும் முந்தின நாளும் டெல்லி மற்றும் பெரும்பாலான வடக்கிந்திய நகரங்களில் பொக்கே வியாபாரம் களை கட்டி விட்டது. ஐம்பது ரூபாய்க்கு ஒற்றை ரோஜா என ஆரம்பித்து பத்தாயிரம் வரை பொக்கேக்கள் குவிந்துள்ளன. இதற்கு மேலும் அதிக விலையில் வேண்டுமெனில், ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்ற விளம்பரப் பலகை வேறு. பூவிற்கே இவ்வளவு விலையா என 'ஆ'வென நாம் பார்த்திருக்கும் வேளையில், "உன் மென்மையைப் பூவைத் தவிர வேறெப்படி சொல்ல முடியும்" என டயலாக்குகளை அள்ளி விட்ட படி இளைஞர் பட்டாளம் அப்பாவின் கருப்புப் பணத்தை இப்படி பூவில் செலவழித்து வாட வைத்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் இந்தியா வழக்கம் போல் பிச்சைக்காரர்களின் நாடாக மாறி வருகிறது.

சரி நாம இந்த காதலுக்கு வருவோம். ஒரு நாள் கொண்டாடி, பரிசுகள் வழங்கி, முத்தமிட்டு, மொத்தமும் பகிர்ந்து முடிந்து விடுவது தான் காதலா.... காதல் என்பது சிரிப்பு, அழுகை, கோபம், நேசம், துக்கம் போன்றதொரு உணர்ச்சி என சொல்லலாமா... அல்லது இவையெல்லாம் கலந்த கலவை எனக் கொள்ளலாமா... அவ்வளவு தானே. காதலில் எதையும் எதிர்பார்க்காதீர்கள், நேசத்தைத் தவிர. அன்பு பகிர்வதாய் இருக்கட்டும், எதிர்பார்த்து யாசிப்பதாய் இல்லாமல். பரிசுப் பொருள்களில்லை காதல். எதிர்பாராமல் காட்டும் அன்பிலும் அக்கறையிலும் தான் உள்ளது.

ஆடம்பர டிஸ்கோக்கள், அளவுக்கதிகமான சாப்பட்டு வகைகள், அதிக விலைப் பயணங்கள், அடுத்த நாள் தூக்கியெறியப்படும் மலர்க் கொத்துக்கள், என்றோ உடைந்து போகும் பரிசுப் பொருள்கள் இவைகளில் இல்லை காதல்.

கல்லூரி நாட்களில் தோழிகளிடம் காதலர் தினம் பற்றிய பேச்சு வந்துள்ளது. முதல் முத்தம், ஒரு டைரிக் கவிதைகள், கட்டித் தூங்க ஒரு டெட்டி பியர், நாட்குறிப்பில் புதைத்து வைக்க ஒற்றை ரோஜா எனக் காதலர்கள் சேமித்த யாவும் ஏதேனும் ஒரு தோழியிடம் பத்திரமாய் ஒளித்து வைக்கப்பட்டு (முத்தம் தவிர ;) ), மனதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள காதலுடன் மணவறை ஏறிய கதைகள் ஆயிரம். காதலின் முடிவு திருமணம் என்றில்லை. ஒவ்வொரு காதல் வெற்றியைப் போலவே கொண்டாடப்பட வேண்டியது காதல் தோல்வியும். அந்தக் காதல் தோல்வியும் இனிமையாய் இருந்தால் தானே இனிக்கும். ஒரு காலத்தில் உயிராய் இருந்த இருவர் சில வருடங்கள் கழித்துக் கண்டும் காணாமல் முறைத்துப் போவது எப்படி என்பது எனக்கு விளங்கவில்லை. காதலித்ததை ஒரு போதும் தவறென குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.

காதலிக்கத் துணிவிருந்தது போல் அதை பெற்றோரிடம் சொல்லவும் துணிவிருக்கட்டும். காதலை வைத்துக் கல்யாணத்திற்காகப் பிச்சை எடுக்க வேண்டாம். காதல் அழகான விஷயம். அதை அதே அழகுடன் வாழ்நாள் முழுக்கக் கொண்டு செல்லுங்கள். தோழிகளுக்குள் திருமணமான அனைவரும் தங்களது காதலர் தின கொண்டாட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தோழியின் கணவர் அவள் நீண்ட நாளாய் ரிப்பேர் செய்து தர சொல்லிக் கேட்டிருந்த அவளது கேமராவை சரி செய்து பரிசளித்திருக்கிறார். மற்றவர், அன்று முழுவதும் அவளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு சமைத்திருக்கிறார். இன்னொமொரு தோழி அவள் கணவர் நீண்ட நாளாக வாங்க நினைத்த ஒரு பொருளை வாங்கிப் பரிசளித்தருக்கிறாள். மற்றுமொரு காதல் ஜோடி அவர்களின் காதல் நாட்களில் சென்று வந்த இடங்களுக்கு மறுமுறை சுற்றி வந்திருக்கிறது. ஐம்பதுகளில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் காலாற நடந்து கதை பேசி ஒன்றாக அனைத்து வேலைகளையும் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் காதலை வாழ வைக்கின்றன. ஆடம்பரக் கூத்துக்களல்ல.

காதல் என்பது உணர்ந்து அனுபவிக்கப்ப்ட்டு வாழ வேண்டியது. கட்டாயத்தாலோ, பரிசுப் பொருட்களாலோ அல்ல. காதலை உணருங்கள், பகிருங்கள், மூழ்குங்கள். காதலர் தினம் ஒவ்வொரு ஃபிப்ரவரி 14 லிருந்து அடுத்த ஃபிப்ரவரி 14 வரை தொடரும் பயணம். ஒவ்வொரு வருடமும் இந்த பயணத்தைப் புதுப்பித்து மகிழவே காதலர் தினம், ஒரு நாள் மட்டும் காதலிக்க அல்ல.

நாங்களும் காதலில் பிஸியாக இருந்ததால் ஒரு நாள் லேட் பதிவு. :)

காதலர் தின வாழ்த்துக்கள். காதலைக் கொண்டாடுங்கள் - ஒவ்வொரு நாளும்.

45 comments:

எம்.எம்.அப்துல்லா said...

"காதலைக் கொண்டாடுங்கள்"

//

ரைட்டு.செஞ்சுருவோம்.

இப்படிக்கு,

யாருமே கிடைக்காததால் வேறு வழியின்றி மனைவியைக் காதலித்துக்கொண்டிருக்கும்,

அப்துல்லா.

:)

ர‌கு said...

//சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் காதலை வாழ வைக்கின்றன. ஆடம்பரக் கூத்துக்களல்ல//

ந‌ச்!

//ஒவ்வொரு வருடமும் இந்த பயணத்தைப் புதுப்பித்து மகிழவே காதலர் தினம், ஒரு நாள் மட்டும் காதலிக்க அல்ல//
க‌ரெக்ட்தான், இந்த‌ ஒருநாள்தான் ஸ்பெஷ‌ல்ங்க‌ற‌ மாதிரி எல்லாரும் ந‌ட‌ந்துக்க‌றாங்க‌

தோழிக‌ளோட‌ கிஃப்ட்லாம் ஓகே, உங்க‌ளுக்கு கிஃப்ட்?

கார்க்கி said...

கிஃப்ட் கொடுக்கிறதுல என்ன தப்பு?

கொடுத்துதான் ஆகனும்ன்னு சொல்லல.. ஆனா கொடுக்கலாம் :)))

:)))

உங்களுக்கு என்ன கிஃப்ட் கிடைச்சது?

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் காதலை வாழ வைக்கின்றன. ஆடம்பரக் கூத்துக்களல்ல - I AGREED

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பத்தாயிரம் ரூபாய்க்கு பொக்கே..!

பூ வெக்கிற இடத்துல பொன்னு வச்சிடலாம் போல..:))

ரிஷபன் said...

பரிசுப் பொருளை விட முக்கியமானது மாறாத நேசம்.. புரிகிறது..

இய‌ற்கை said...

//நாங்களும் காதலில் பிஸியாக இருந்ததால் ஒரு நாள் லேட் பதிவு. :)


//

ம்ம்ம்...

வாழ்த்துக்கள் விக்கி

Chitra said...

///////உன் மென்மையைப் பூவைத் தவிர வேறெப்படி சொல்ல முடியும்" என டயலாக்குகளை அள்ளி விட்ட படி இளைஞர் பட்டாளம் அப்பாவின் கருப்புப் பணத்தை இப்படி பூவில் செலவழித்து வாட வைத்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் இந்தியா வழக்கம் போல் பிச்சைக்காரர்களின் நாடாக மாறி வருகிறது.//////

..........மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், இந்த நிலைமைதான் எத்தனையோ விஷயங்களில் - நாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறோம். :-(

Actually (in USA), Valentine's Day is a celebration of general love - among friends, families, husband and wife and of course, between boyfriend and girlfriend too. In India, it is yet to come to a broader light.

முரளிகுமார் பத்மநாபன் said...

ம்க்கும்...

V.A.S.SANGAR said...

உங்களுக்கு பொறாமையோ (சும்மா கேட்டன் )

susi said...

//காதலில் எதையும் எதிர்பார்க்காதீர்கள், நேசத்தைத் தவிர. அன்பு பகிர்வதாய் இருக்கட்டும், எதிர்பார்த்து யாசிப்பதாய் இல்லாமல். பரிசுப் பொருள்களில்லை காதல். எதிர்பாராமல் காட்டும் அன்பிலும் அக்கறையிலும் தான் உள்ளது. //

சூப்பரா சொல்லி இருக்கீங்க விக்னேஷ்வரி..

//காதலைக் கொண்டாடுங்கள் - ஒவ்வொரு நாளும்.//
:))))

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

raman- Pages said...

நல்லா இருக்கு, காதல் இவ்ளோ ஈசியா.. ஹும்.

வித்யா said...

ரைட்டு. தினம் தினம் காதலர் தினம் தானே:)))

காவேரி கணேஷ் said...

விக்கி,

நம்ம காதல் மாப்பிள்ளை எப்படி இருக்கார்?

பிரியமுடன்...வசந்த் said...

//இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் காதலை வாழ வைக்கின்றன. ஆடம்பரக் கூத்துக்களல்ல.//

சத்தியம்..!

காதலர்களுக்கு எல்லா நாளுமே காதலர் தினம் தானே ஆதலால் உங்களுக்கும் உங்களவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்...

KALYANARAMAN RAGHAVAN said...

நன்றாக சொன்னீர்கள்.சிந்திக்க வைக்கும் பதிவு.

ரேகா ராகவன்.

ஜெய்லானி said...

புரிபவர்க்கு புரிந்தால் சரி..நல்ல பதிவு..வாழ்த்துக்கள்..

Trek Pay said...
This comment has been removed by a blog administrator.
துபாய் ராஜா said...

//பரிசுப் பொருள்களில்லை காதல். எதிர்பாராமல் காட்டும் அன்பிலும் அக்கறையிலும் தான் உள்ளது.//

//காதலின் முடிவு திருமணம் என்றில்லை. ஒவ்வொரு காதல் வெற்றியைப் போலவே கொண்டாடப்பட வேண்டியது காதல் தோல்வியும். ஆனால் அந்தக் காதல் தோல்வியும் இனிமையாய் இருந்தால் தானே இனிக்கும்.//

//காதல் அழகான விஷயம். அதை அதே அழகுடன் வாழ்நாள் முழுக்கக் கொண்டு செல்லுங்கள்.//

//சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் காதலை வாழ வைக்கின்றன. ஆடம்பரக் கூத்துக்களல்ல.
காதல் என்பது உணர்ந்து அனுபவிக்கப்ப்ட்டு வாழ வேண்டியது. கட்டாயத்தாலோ, பரிசுப் பொருட்களாலோ அல்ல. காதலை உணருங்கள், பகிருங்கள், மூழ்குங்கள். காதலர் தினம் ஒவ்வொரு ஃபிப்ரவரி 14 லிருந்து அடுத்த ஃபிப்ரவரி 14 வரை தொடரும் பயணம். ஒவ்வொரு வருடமும் இந்த பயணத்தைப் புதுப்பித்து மகிழவே காதலர் தினம், ஒரு நாள் மட்டும் காதலிக்க அல்ல.//

அனைத்து கருத்துக்களும் அருமை. அட்டகாசம்.தூள்.கலக்கல் விக்கி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நாங்களும் காதலில் பிஸியாக இருந்ததால் ஒரு நாள் லேட் பதிவு. :)//

:)) ஒகேய் ...

Anonymous said...

In our world, there are ugly betys and average joes.

They live their lives unsung, unheard and unhonored.

One day, the parents call the average Joe:

'Our dear boy...ur have come to the ripe old age for a marriage. To postpone it is too late. Get married'

'Ma...Pa...I am an average Joe. Not for a woman to dream of. Better me be single for ever'

'No...dear...Remember Will. He said: 'Every Jack has his Jill' So, we will find a Jill for you'

They managed to get a Jill somehow although, our average Joe is well aware, for her, he is the TINA factor'

Same story repeates at the home of Ugly Bety.

One day, someone marries her, thanks to the painstaking search of her loving parents.

The average Joe and the Ugly Bety never know what this Kathalar Dinam means at all. What all the fuse about stolen kisses and candle light dinners.

For them, Browning rings true:

'God's in his heaven
All's right with the world'

They thank God, gets kids and, lived happily ever after.

----------------------------

This will be repeated in my blog. where you find who is Will and what is TINA factor.

www.thirumullaivaayil.blogspot.com

ஹுஸைனம்மா said...

நல்லாருக்கு.

புலவன் புலிகேசி said...

சர்தேன்...கொண்டாட வேந்தியதுதான்

Anonymous said...

காதலை மிக அழகாய் தெளிவாய் பகிர்ந்திருக்கிறீர்கள்....வாழ்த்துக்கள்

Anonymous said...

எம்.எம்.அப்துல்லா said...
"காதலைக் கொண்டாடுங்கள்"

//

ரைட்டு.செஞ்சுருவோம்.

இப்படிக்கு,

யாருமே கிடைக்காததால் வேறு வழியின்றி மனைவியைக் காதலித்துக்கொண்டிருக்கும்,

அப்துல்லா.

ஆஹா....அண்ணாத்தை இதை அப்படியே மதினிக்கு ஜி மெயிலில் அனுப்பிட்டேன்..வருவதை எதிர் கொள்ள தயார்படுத்திக்கோங்கோ.......

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

///ஆடம்பர டிஸ்கோக்கள், அளவுக்கதிகமான சாப்பட்டு வகைகள், அதிக விலைப் பயணங்கள், அடுத்த நாள் தூக்கியெறியப்படும் மலர்க் கொத்துக்கள், என்றோ உடைந்து போகும் பரிசுப் பொருள்கள் இவைகளில் இல்லை காதல்.///
நச்ச் வரிகள்
///காதலிக்கத் துணிவிருந்தது போல் அதை பெற்றோரிடம் சொல்லவும் துணிவிருக்கட்டும்.///
ஆஹா!!
சூப்பர் பதிவு. நன்றி விக்னேஸ்வரி.

எம்.எம்.அப்துல்லா said...

//ஆஹா....அண்ணாத்தை இதை அப்படியே மதினிக்கு ஜி மெயிலில் அனுப்பிட்டேன்..வருவதை எதிர் கொள்ள தயார்படுத்திக்கோங்கோ.......

//

சந்தோஷமா இப்ப :)

Anonymous said...

சரி சரி அதுக்குள்ளயா உங்க ஊரில் வெயில் அதிகம்? :))

Anonymous said...

நல்லா இருக்கு, காதல் இவ்ளோ ஈசியா.. ஹும்.//

அடிக்கடி நீங்க என்னை மறந்து போறீங்க, நேரில் வரேன் :))

Anonymous said...

அப்துல்லா நல்லாதானே இருந்தீங்க,,, ஏஏன்ன்ன்ன்?

ஸ்ரீவி சிவா said...

//ஒரு காலத்தில் உயிராய் இருந்த இருவர் சில வருடங்கள் கழித்துக் கண்டும் காணாமல் முறைத்துப் போவது எப்படி என்பது எனக்கு விளங்கவில்லை. காதலித்ததை ஒரு போதும் தவறென குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.//

//காதலில் எதையும் எதிர்பார்க்காதீர்கள், நேசத்தைத் தவிர. அன்பு பகிர்வதாய் இருக்கட்டும், எதிர்பார்த்து யாசிப்பதாய் இல்லாமல். //
நம்ம ஷேவாக் மாதிரி ஒவ்வொரு வரியிலயும் ஸ்கோர் பண்ணுறீங்க... நல்ல பதிவு விக்கி.


நானும் நீங்க சொன்ன மாதிரி அன்பை பகிரலாம்னுதான் பாக்குறேன். ஆனா எல்லா பொண்ணுகளும் தெறிச்சு ஓடிப்போயிடுறாங்க. ;)
எக்கச்சக்க 'crushes' வந்திருந்தாலும், எதுவும் அடுத்த கட்டத்துக்கு நகராமல் தனிக்கட்டையாய் வாழ்க்கை smooth ஆக ஓடுது.

"உழவன்" "Uzhavan" said...

ஒவ்வொரு வருடமும் இந்த பயணத்தைப் புதுப்பித்து மகிழவே காதலர் தினம்//
 
மிகச் சரி.. நல்ல இடுகையும் கூட :-)

விக்னேஷ்வரி said...

வாங்க அப்துல்லா. நீங்களாவது பரவாயில்லை. அவங்க பாவம், இன்னும் உங்களையே காதலிச்சிட்டிருக்க வேண்டிருக்கே.

வாங்க ரகு. கிஃப்ட் இல்லாமலா... அதெல்லாம் வேட்டு வெச்சாச்சு. :)

அதைத் தான் கார்க்கி நானும் சொல்றேன். கொடுக்குறதுல தப்பு இல்ல, ஆனா கொடுக்குறது மட்டுமே காதல் இல்லை. கிஃப்ட் இல்லைங்க, கிஃப்ட்ஸ். யோகி பர்ஸூக்கு நல்ல வேட்டு. :)

வாங்க ஷர்ஃபுதீன்.

ஆமாங்க ஷங்கர், இதெல்லாம் ஓவரு தான்.

ஆமா ரிஷபன். வாங்க.

விக்னேஷ்வரி said...

நன்றி இயற்கை. உங்களுக்கு எப்படி இருந்தது காதலர் தினம்?

சரியா சொன்னீங்க சித்ரா. இங்கே 'லவ்வர்ஸ் டே'ங்குறது போய் 'க்யூபிட் டே' ஆக்கிட்டாங்க.

எதுக்கு இந்த சடைப்பு முரளி. புரியுது. :)

எந்தப் பொறாமையும் இல்ல ஷங்கர். நாடு நாசமா போறதப் பார்த்து கவலையா தான் இருக்கு.

நன்றி சுசி.

நன்றி ராமன். என்னது காதல் ஈசியா.... இவ்ளோ லேசா சொல்லிட்டுப் போய்ட்டா எப்படி... உள்ளே போய்ப் பாருங்க அப்புறம் தெரியும், ஈஸியா கஷ்டமான்னு.

விக்னேஷ்வரி said...

வாங்க வித்யா. உங்க செலிப்ரேஷன்ஸ் எப்படி இருந்தது?

சூப்பரா இருக்கார் காவேரி கணேஷ். உங்களுக்கு எப்படி இருந்தது காதலர் தினம்...

நன்றி வசந்த். உங்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்லலாமா... இல்ல, இன்னும் எலிஜிபிள் ஆகலையா...

நன்றி ராகவன் சார்.

நன்றி ஜெய்லானி.

நன்றி துபாய் ராஜா. உங்க ஊர்ல எப்படி இருந்தது ஃபிப்ரவரி 14?

விக்னேஷ்வரி said...

வாங்க முத்துலெட்சுமி.

Good Story JAR Fernando. That is what called love.

நன்றி ஹுஸைனம்மா.

ரொம்ப அலுத்துக்காதீங்க புலிகேசி. சீக்கிரமே நீங்களும் கொண்டாடிலாம்.

நன்றி தமிழரசி.

சூப்பர் தமிழரசி. (மதினிக்கு மெய்ல் பண்ணதுக்கு)

விக்னேஷ்வரி said...

வாங்க பாலகுமாரன்.

ரொம்ப சந்தோஷம் அப்துல்லா.

விஜி, ஆரம்பிச்சுட்டீங்களா...
ஹாஹாஹா.... ராமன் பாவம், விட்டுடுங்க.
அடுத்து அப்துல்லாவா... ரைட்டு, நடத்துங்க.

ஹாஹாஹா.... வருத்தப்படாதீங்க சிவா. சீக்கிரமே காதலர் தினத்தை அழகாகக் கொண்டாட வாழ்த்துக்கள்.

பேரரசன் said...

அட...போங்க...

காதலாவது ..கத்திரியாவது...


ஒரு பையன் விஷம் குடிச்சுடான்னாம்..அவங்க அப்பா ,காப்பத்தினாரம்..!
தூக்கு தொங்கினானாம்..அவன் அம்மா..
காப்பாத்தினாங்களாம்..
ஆக்சிடெண்ட் ஆச்சாம்..டாக்டர் காப்பாத்திடாராம்,,,!

ஆனா கடைசியில..ஒரு பொண்ணுகிட்ட காதல்ல விழுந்தானாம்... கடவுளாலேயே.....?

~~~Romeo~~~ said...

லேட் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பணிகோங்க .. காதலர் தின நல்வாழ்த்துக்கள்

PrinceR5 said...

'When you fish for love, bait with your heart, not your brain'

//காதலில் எதையும் எதிர்பார்க்காதீர்கள், நேசத்தைத் தவிர. அன்பு பகிர்வதாய் இருக்கட்டும், எதிர்பார்த்து யாசிப்பதாய் இல்லாமல். பரிசுப் பொருள்களில்லை காதல். எதிர்பாராமல் காட்டும் அன்பிலும் அக்கறையிலும் தான் உள்ளது. //

அருமையான வரிகள் கலக்குறீங்க போங்க .......உண்மையை சொல்லனும்ன நான் கண்டவரை நிறைய பெண்களுக்கு உண்மை காதல் கல்யாணத்திற்கு பின்னர் தான் தெரிய வருகிறது. காதலின் அர்த்தம் அதுவரை புரிவதில்லை

Anonymous said...

Wowwwwwwwww.

Simply super....

Valga Valamudan...

Alagana Varigal....

Neenga Late-a Padiu potalum..

summa Kalakitenga...

Valthukkal..

Valga Valamudan.

V.V.S Group

Priya said...

//காதலைக் கொண்டாடுங்கள்//.... கொண்டாடிடுவோம்!

//காதலர் தினம் ஒவ்வொரு ஃபிப்ரவரி 14 லிருந்து அடுத்த ஃபிப்ரவரி 14 வரை தொடரும் பயணம்//...... உண்மைதான்.

புளியங்குடி said...

இந்த இடுகையில் எதி்ர்மறைப் பின்னூட்டு எழுதுவதைத் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும்.

காதல் கிடைக்காத ஆண்களும் பெண்களும் காதலர் தினத்தன்று எவ்வளவு சோர்ந்து போகிறார்கள் என்பதைக் நான் கண்கூடாகக் கண்டேன். காதலர் தினம் என்பது காதலை வெளிப்படுத்தும் நாளாக மட்டும் இல்லாமல், பலரது காதல் புறக்கணிப்புக்கு உள்ளாகும் நாளாகவும் இருக்கிறது. தமிழகத்தில் சில தற்கொலைகளும் சில கொலைகளும் காதலர் தினத்துக்கு அடுத்தடுத்த நாள்களில் இதே காரணத்துக்காக நடந்திருக்கின்றன.

கொண்டாட்டத்தைத் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். அது அனைவரின் உரிமை. ஆனால் பிறரைப் புறக்கணிக்கும்போது நாசூக்காக நடந்து கொள்ள வேண்டுமல்லவா? கொண்டாட்டக் களியில் இதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவதில்லை என்பது வேதனையானது.

முத்துகுமரன் said...

உங்கள் பதிவை பார்த்தவுடன் நான்காண்டுகளுக்கு முன் காதலர் தினத்தன்று எழுதிய கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது...

ஒரு காதல் கவிதை
மலர் கொத்துகள்
வாழ்த்து அட்டைகள்
பரிசுப் பொருட்கள்
தொலைபேசி உரையாடல்கள்
எதுவுமற்ற தனிமையில்
ஈரம் குறையமலே இருக்கிறது
நம் காதல்
சிட்டாங் கல்லெறிந்த குளத்தைப்போல
நினைவுகள் விரிய
ஒருவருக்கொருவர்
சமாதனம் சொல்லிக் கொண்டு.
http://muthukumaran1980.blogspot.com/2006/02/blog-post.html

commomeega said...

T. ராஜேந்தர் படம் பார்த்த மாதிரி feeling