இனிய வார இறுதியுடன் அதே இனிமையாய்த் தொடர்கிறது இந்த வாரமும்.
இப்பதிவு தொலைக் காட்சி ஸ்பெஷல். நான் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் குறைவெனினும் இந்த வாரம் போதுமான அளவு பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.
நாற்பதாவது முறையாக "JAB WE MET" படம் பார்க்க அருளிய 'Colors' க்கு நன்றி. துடுப்பான கரீனா கபூரின் நடிப்பும், கொல்லும் ஷாகித் கபூரின் smartness உம் படத்தின் பிளஸ். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காட்சிகள், பாடல்கள். இதன் தமிழ் ரீமேக்கான 'கண்டேன் காதலை' ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். கண்டிப்பாக ஷாகித் கபூரின் அழகுக்கு பரத் இணையாக முடியாது. தமனா வாயசைப்புகளில் அலட்டாமல் செய்தால் கரீனா கபூர் அளவுக்கு இல்லையெனினும் ஓரளவு தேறுவார் என நினைக்கிறேன். (சொதப்பிடாதீங்க மக்கா.)
****************************************************************************************************
அனுராதா ஸ்ரீராம் தொகுத்து வழங்கும் பாட்டுப் பாடவா நிகழ்ச்சி வித்தியாசமாக இருப்பதால் பார்க்கும் ஆவலைத் தூண்டினாலும், தொகுப்பாளரின் உடையலங்காரமும், மூக்கால் பேசும் பேச்சும் நிகழ்ச்சியை மாற்ற ரிமோட்டை கையில் எடுக்க வைத்து விடுகின்றன. (போடுற உடைய முழுசா போடுங்க அக்கா)
****************************************************************************************************
'Sony' யில் நேற்றிரவு "RAB NE BANA DI JODI" பார்த்தோம். ஷாருக் மீசையுடன் அழகாக ஆடி வந்த டிரைலர் பார்த்தே பார்க்க நினைத்த படம். ஆனால், சில பல காரணங்களால் பார்க்க முடியவில்லை. நேற்றிரவு படம் முழுக்க பார்த்த பின் தான் தூக்கம் வந்தது. நல்ல படம் என்பதை விட நல்ல நடிப்பு. ஷாருக்கின் ஒவ்வொரு படமும் பார்த்து நான் வியக்கும் அவர் நடிப்பு, இதிலும் துளியும் குறையவில்லை. என்ன பாடி லேங்குவேஜ், என்ன முக பாவம். ச்சே... மனுஷனுக்கு வயசானாலும் மார்கெட் போகாததுக்கு இதை விட என்ன காரணம் வேணும். (IPL போனா என்ன ஷாருக். உங்களுக்கு எப்போவும் பாலிவுட் இருக்கு)
****************************************************************************************************
விஜய் டிவி நீயா நானாவில் நேற்றைய தலைப்பு "பெண்களுக்கு தாலி அவசியமா இல்லையா". என் கேள்வி 'இந்தத் தலைப்பு அவசியமா....' மாறி வரும் சமுதாய விஷயங்களில் இது தான் செய்ய வேண்டும், இது செய்யக் கூடாது, இது சரி, இது தவறு என எதுவும் இல்லை. ஒருவருக்கு சரி எனத் தெரியும் விஷயங்கள் மற்றவருக்கு தொந்தரவில்லாத பட்சத்தில் இருக்கும் போது அதில் அடுத்தவர் அநாவசியமாகத் தலையிடுவது அநாகரீகம். அதனால் இதை தவறு என ஒரு கூட்டம் விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை. இது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமில்லை. நமக்கும் தான். (செய்றதுக்கு எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்கு)
****************************************************************************************************
'Big Boss - 3' (Colors) மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகியது. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு தொடங்கிய ஷோ இப்போது தொய்ந்து செல்கிறது. அழுகையுடன் வெளியேறிய ஜெயா சாவந்த், ஆணா பெண்ணா எனக் குழம்ப வைக்கும் ரோஹித், ஒண்ணுமில்லாத விஷயத்திற்கு சட்டையைக் கழட்டி கொன்று விடுவேன் என மிரட்டும் பிந்து, காதல் என்ற பெயரில் கிளேடியாவை பாடாய்ப் படுத்தும் கமால் கான் என இம்சைகள் தொடர்கின்றன. இவையெல்லாம் ஸ்க்ரிப்ட் எழுதி நடப்பது போலவே உள்ளன. இந்த வாரத்திலிருந்து அதைப் பார்த்து நேரத்தை விரயமாக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். (உபரித் தகவல் - ஒரு எபிசோடுக்கு ஒரு கோடி ரூபாய் வாங்குகிறாராம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அமிதாப் பச்சன்)
****************************************************************************************************
இப்போதெல்லாம் சின்னத் திரை நடிகர் நடிகைகளை வைத்து நடக்கும் ஆடல் நிகழ்ச்சிகளும், ரியாலிட்டி ஷோக்கள் எனப்படும் அழுகாணி ஷோக்களும் எல்லா டிவிகளிலும் வருவது மிகுந்த அலுப்பைத் தருகிறது. இதில் 'ஐயோ போதுமடா சாமி' என அலற வைக்கும் நிகழ்ச்சிகளின் வரிசையில் "Boys Vs Girls", "மானாட மயிலாட", "Jodi No.1", அசத்தப் போவது யாரு" இன்னும்... முன்னாடி குழந்தைகள் மாறு வேடத்தில் வரும் நிகழ்ச்சி (பேர் நினைவில்லை), பெப்சி உங்கள் சாய்ஸ், Quiz Programs எல்லாம் எங்கப்பா... (தயவு செய்து கொஞ்சம் மாத்தி யோசிங்க நிகழ்ச்சி அமைப்பாளர்களே.)
21 comments:
அருமையான தொகுப்பு.
நாம பெரியமனசோட இருக்கிறவரை இவங்க இப்படித்தான் இருப்பாங்க...
நேற்று Z சினிமாவில் ஓம் சாந்தி ஓம். நான் பார்த்தது தீபிகாவிற்காக:)ரியாலிட்டி ப்ரோகிராம்ஸ்? அடக்கடவுளே வகைகள் தான்.
நல்லக் கதம்பம் வாசனை தூக்கல்
நான்தான் ஃபஸ்ட்டேய்..
//
அதனால் இதை தவறு என ஒரு கூட்டம் விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை. இது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமில்லை. நமக்கும் தான். (செய்றதுக்கு எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்கு)
//
இந்த தலைப்பு அவசியமில்லாததுனு நீங்க எப்படி முடிவெடுத்திங்களோ அதே மாதிரிதான் அவர்களின் பார்வையில் அந்த தலைப்பு அவசியமானதாபட்டிருக்கு.. அவ்ளோதான்..
//
ரியாலிட்டி ஷோக்கள் எனப்படும் அழுகாணி ஷோக்களும் எல்லா டிவிகளிலும் வருவது மிகுந்த அலுப்பைத் தருகிறது.
//
நெம்ப சரியா சொன்னீங்க.. அதுவும் என்னமாதிரி வார இறுதிநாட்கள்ள மட்டும் வீட்ல டிவி பாக்க சந்தர்ப்பம் கெடைக்குரவங்களுக்கு இது ரொம்ப கொடுமையானது..
//
அசத்தப் போவது யாரு
//
இதுவுமா..
இது சிரிக்க வைக்கிற நிகழ்ச்சியாச்சே..
ஆமா.. நீங்க நிகழ்ச்சி ஒளிபரப்புற சேனல வெச்சு ஏதும் இப்டி சொல்லலையே..
சனி இரவு தூங்கச்செல்லும் முன் கொஞ்சமாச்சும் சிரிக்கவைக்கிற நல்ல நிகழ்ச்சினு இதுவரைக்கும் நம்பிட்டு இருக்கேன்..
//
தலைப்பு : சின்ன(புள்ளத்தனமான) திரை
Labels: தொ(ல்)லைக்காட்சி
//
:-)))
ஜப் வீ மெட்- நண்பர்கள் பரிந்துரைத்த படம். இன்னும் பார்க்கவில்லை.
ஹாய் விக்கி,
நான் இப்போதான் கொஞ்ச நாளா பதிவுகள் போடறேங்கற பேர்ல செம மொக்கைய போட்டுட்டிருக்கேன். நீங்க எல்லாரும் சேர்ந்து வூடு கட்டி அடிக்கறத பாத்தா கொஞ்சம் மிரட்சியாவே இருக்கு. எதுக்கு இந்த பில்டப்பு? ஹி..ஹி...என்னையும் ஆட்டத்துல சேத்துக்குங்க. அட ஒவ்வொருத்தரும் ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ் இருக்கும்போது, நம்முதுல ஒருத்தரும் வந்து ஜாயின் பண்ணமாட்டேங்கறாங்களேன்னு ஒரு ஃபீலிங்ஸ்தான்.
பை த வே, எனக்கும் இந்த ரியாலிட்டி ஷோக்கள்னாலே ரொம்ப அலர்ஜி ஆகி, இப்போ டிவி பாக்கறதயே குறைச்சுட்டேன். இருக்கவே இருக்கு, சில டிவிடிகளும், கிழக்கு பதிப்பகம் வெளியிடற புக்ஸும்.
இது என்ன கொடுமை? 10 ஒட்டாம்.. ஆனா 0 கமெண்ட்ஸாம்... ஆவ்வ்வ்
விக்னேஷ்வரி...
இப்போதுதான் முதன்முதலில் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்...
முதலில் இந்த ஆர்ட்டிகிள் தான் படித்தேன்... நல்ல தொகுப்பு...
தொடர்ந்து வருவேன்.. நீங்களும் நேரமிருந்தால் என் வலைப்பக்கங்களின் பக்கம் வரலாம்...
இங்கு தீபாவளி வாழ்த்து உள்ளது... அதோடு வாழ்த்தின் கடைசியில் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கூட...
http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html
இங்கு வந்தால் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் பற்றிய பதிவு உள்ளது...
http://jokkiri.blogspot.com/2009/10/blog-post_12.html
இரு வலையையும் படியுங்கள்... உங்கள் மேலான கருத்தை சொல்லுங்கள்...
neeya naana thavira naan t.V.yil paarpathu sports mattume... indha vaaram oru mokka topic than.. mathapadi neraya vishayangal yosika vachi irukku..
reality showvai naan paarthu varundangal aagirathu... :D :D
இப்போதுதான் முதன்முதலில் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்...
நல்ல தொகுப்பு.நன்றி.
வாங்க துபாய் ராஜா.
வாங்க வித்யா.
நன்றி நேசமித்திரன்.
இந்த தலைப்பு அவசியமில்லாததுனு நீங்க எப்படி முடிவெடுத்திங்களோ அதே மாதிரிதான் அவர்களின் பார்வையில் அந்த தலைப்பு அவசியமானதாபட்டிருக்கு.. //
வாங்க சுரேஷ். அவங்க அங்கே பேசினதை நீங்க பார்த்திருந்தா இப்படி சொல்ல மாட்டீங்க. இறங்கி ஒருத்தர் கூட ஒருத்தர் சண்டை போடாத குறை தான். தேவையில்லாத பேச்சுகள் அதிகம் இருந்ததாய் உணர்ந்தேன்.
நானும் வார இறுதில மட்டும் தான் பாக்குறேன். இந்த ரியாலிட்டி ஷோக்களால் நானும் பாவம் தானே.
அசத்தப் போவது யாரு - முன்னாடி நல்லா போயிட்டு இருந்தது. இப்போ எல்லாரையும் சிரிக்க வச்சே ஆகனும்ங்குற கட்டாயத்தால ஏதேதோ பினாத்துறாங்க மாதிரி தெரியுது. ஒண்ணுமே இல்லாததுக்கு கெக்கே பிக்கேனு சிரிக்கிற நடுவர்களைப் பார்த்தா இன்னும் எரிச்சலா இருக்கு.
சீக்கிரம் பாருங்க அம்மிணி. அப்புறம் திரும்பத் திரும்பப் பார்ப்பீங்க.
வாங்க குறும்பன். எல்லாரும் கிறுக்கித் தள்ளிட்டு தான் இருக்கோம். ஜோதியில நீங்களும் ஐக்கியமாகிட்டீங்களா...
நானும் புத்தகங்கள்லேயும், டிவிடிக்கள்லேயும் தான் ஓட்டிட்டு இருக்கேன். எப்போவாவது பார்க்கலாம்னு பார்க்கப் போய் மாட்டினது தான் இது.
கமெண்ட்ஸ் வந்துடுச்சு சகா. ரிலீஸ் பண்ண லேட்டாகிடுச்சு. :)
நன்றி கோபி. அவசியம் படிக்கிறேன்.
ஆமா கனகு இந்த வாரம் தான் மொக்கை டாபிக். மற்றபடி நிறைய நல்ல விஷயங்கள் நீயா நானாவில் விவாதிக்கப்படுவது மகிழ்ச்சியே.
நன்றி கோபிநாத்.
mmm... do u have so much time to watch so many programmes....ensaay..
//(போடுற உடைய முழுசா போடுங்க அக்கா)//
எனக்கும் அந்த அக்காமேல இதே எரிச்சல்தான்.அந்த மூக்கால் பேசுவதும் மகா கடுப்பான விஷயம்.
//ஒருவருக்கு சரி எனத் தெரியும் விஷயங்கள் மற்றவருக்கு தொந்தரவில்லாத பட்சத்தில் இருக்கும் போது அதில் அடுத்தவர் அநாவசியமாகத் தலையிடுவது அநாகரீகம். அதனால் இதை தவறு என ஒரு கூட்டம் விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை//
சூப்பர்.
அப்புறமா வர்றேன்.
:)
i didn't like jab we met but love rab ne bana di jodi to the core! AWesome film akka! damn nice!:)
I had time last weekend Sengathir Selvan.
வாங்க நாடோடி இலக்கியன்.
டி.வி.ன்னா இவ்வளவு தூரமா அப்துல்லா அண்ணே.
காதலர் அல்லது கணவர் கிடைத்தவுடன் அவருடன் பாருங்கள். Jab We Met நன்றாக இருக்கும் தமிழ் மாங்கனி.
நல்ல கதம்பம்.பகிர்தலுக்கு நன்றி.
Post a Comment