Tuesday, October 6, 2009

என் கண் அவன் - என் கணவன்



என் அன்புக் கணவா,

இன்று உனக்கான எனது ஒரு நாள்.
உன் மொழி மறந்து
கலாச்சாரம் துறந்து
உணவு மாற்றி
அழகான பஞ்சாபிப் பெண்ணை இழந்து
எனைக் கைப்பிடித்த உனக்காக
நான் பிரார்த்திக்க இந்த ஒரு நாள்

காதலித்த நாளிலிருந்தே நம்
காதலைக் காத்தவன் நீ.
உன் அன்பும் நேசமும் மட்டுமே
என்னை இத்தனை தூரம் வரவைத்தன.

கல்யாணமான நாளிலிருந்து
சுஜாதாவையும், பால குமாரனையும்
உனக்கு புரியவைக்க முடியவில்லை என்று
உன் மேல் நான் கோபப்பட்ட நாட்கள் அதிகம்.
ஆனால் நீ காதல் பரிசளித்த "ஜான் க்ரிஷமை"
நான் பிரித்தது கூட இல்லை என அறிந்தும்
அதற்காக ஏமாற்றமடையாதவன் நீ.

எனக்காக "அப்படிப் போடு"
பாடக் கற்றுக் கொண்டாய்.
உனக்காக நானும் "Aao Mil Chalo" வை
முணுமுணுத்த படியே.

இதுவரை என்னை விட்டு
உன் நண்பர்களுடன்
எங்கும் செல்லாதவன் நீ.
ஆனால் -
கை நிறைய பணம் கொடுத்து
என்னை தோழிகளுடன் அனுப்பி விட்டு
எனக்காக சமைப்பதில்
மகிழ்பவன் நீ.

உனக்காக ஒரு நாள் போதாது எனினும்
எந்நாளும் நீ என்னோடு இருப்பதற்காக
இந்த ஒரு நாள்.

47 comments:

☼ வெயிலான் said...

ஹிந்தியிலும் மொழி பெயர்த்தால் அவரும் புரிந்து கொள்வார்.

RBGR said...

"தாஜ்மஹல்
எல்லோரும் பார்த்து வியக்கும், பிரம்மிக்கும் அழகு தான். ஆனாலும் நம்மால்
அதற்குள் வசிக்க முடியாது. அப்படியே அங்கிருப்பதானால் ஒரு வேலையாளாக
இருக்க மட்டுமே முடியும். அதன் அழகை ரசிக்க வருடமொருமுறை பார்த்து வரலாம்."

ஆனாலும்,

உனக்கே நானும், எனக்காய் நீயும் என்ற இந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு
வாழ்த்துகள் !!

தமயந்தி said...

க‌விதை.. அன்பே ஒரு க‌விதை...

minsarakannan said...

VERY GOOD FEELINGS I ADMIRE IT

துபாய் ராஜா said...

கிட்டப்போனால் முறைக்கும்...
பிரிந்திருக்கும்போது உறைக்கும்... அதுதாங்க கணவன்-மனைவி உறவு. யாராலும் புரிந்துகொள்ள முடியாத புரிந்துணர்வு கொண்டது அது....

Prabhu said...

ரொம்ப நாளா ஆளக் காணோம்! வந்ததும் கவிதயா?

கலையரசன் said...

வாங்க.. வாங்க... வரும்போதே அருமையான கவிதையோட வந்துயிருக்கீங்க!

தராசு said...

கலக்கல் பதிவு,

//உனக்காக ஒரு நாள் போதாது எனினும் எந்நாளும் நீ என்னோடு இருப்பதற்காக இந்த ஒரு நாள்//

மனதை தொடுகிறது.

விக்னேஷ்வரி said...

தனியா அவருக்கு ஹிந்தில மொழி பெயர்த்துட்டேன் வெயிலான்.

வாங்க தமிழி.போன பதிவுக்கான கமெண்ட்ட இதுல போட்டீங்களா....

வாங்க தமயந்தி.

Thank you "sa".

சரியா சொன்னீங்க துபாய் ராஜா.

ஆமா பப்பு, நம்ம ஊர் பக்கம் தான் சுத்திக்கிட்டு இருந்தேன். ஓ, இது கவிதை ஆகிடுச்சா...
நன்றி.

நன்றி கலையரசன்.

Anonymous said...

ஹிந்தில மொழிபெயர்த்ததைப்படிச்சு உச்சி குளிர்ந்தாரா :)

ப்ரியமுடன் வசந்த் said...

ரியலி ஹீ இஸ் லக்கி...

உணர்வுப்பூர்வமான கவிதை...

பல்லாண்டு வாழ்க தங்கள் இல்வாழ்க்கை....வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்குங்க.நிறைய எழுதுங்க அவ்வப்போது காணாமல் போயிடுறீங்க.

கார்க்கிபவா said...

தலைப்பு சூப்பருங்கோ..

கவிதை கலக்கலங்கோவ்..

பதிவு பிரமாதங்கோவ்..

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

அழகு :)

தினேஷ் said...

தலைப்பே அசத்தல்..

//என்னை தோழிகளுடன் அனுப்பி விட்டு எனக்காக சமைப்பதில் மகிழ்பவன் நீ.//

ஹி ஹி ஏன்னு உண்மை தெரியுமா , அன்றாச்சும் நல்ல சாப்பாடு சாப்பிடுவோமே என்று நினைச்சிருப்பார் போல..

எதும் விசேச நாளா இன்று?

அமிர்தவர்ஷினி அம்மா said...

படிக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க,

உங்கள் அன்பு நீடித்து நிலைக்க எனது வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

நன்றி தராசு.

குளிராம போவாரா அம்மிணி.

நன்றி வசந்த்.

ஆமா நாடோடி இலக்கியன். ஊர் சுத்துரதுலேயே நேரம் போய்டுது. இனி அப்பப்போ எழுத முயற்சிக்கிறேன்.

நன்றிங்கோ கார்க்கி

நன்றி நர்சிம்

வாங்க அப்துல்லா.

வாங்க சூரியன்.
ஹி ஹி ஏன்னு உண்மை தெரியுமா , அன்றாச்சும் நல்ல சாப்பாடு சாப்பிடுவோமே என்று நினைச்சிருப்பார் போல.. //
இப்படியெல்லாம் உண்மைய போட்டு உடைக்கக் கூடாது. அப்படியே படிச்சுட்டுப் போங்க. ஆராயக் கூடாது.
இன்னிக்கு கர்வா சோத் சூரியன். நம்ம ஊரு வரலக்ஷ்மி விரதம் மாதிரி. ஆனா இங்கே கொண்டாட்டங்கள் ரொம்ப சிறப்பா இருக்கும்.

நன்றி அமித்து அம்மா.

சந்தனமுல்லை said...

:-) வெயிலானை வழிமொழிகிறேன்!

நேசமித்ரன் said...

நேயத்தை உணரக் கிடைப்பது விட்டுக் கொடுக்கப்படுவது உணரக் கிடைக்கும் போதுதான் இந்தக் கவிதை அதை செய்கிறது மிக எளிய சொற்களில் மிக ஆழமான நேசத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

இங்கு அபார்ட்மெண்டில் இருக்கும் பஞ்சாபிசெல்லாம் கலக்குறாங்க. வாழ்த்துகள் உங்களிருவருக்கும்.

வினோத் கெளதம் said...

Nice & Superb.
Congrats.

//அன்றாச்சும் நல்ல சாப்பாடு சாப்பிடுவோமே என்று நினைச்சிருப்பார் போல..//

Haa..haa.haa..:))

FunScribbler said...

wow...this is sooooooo sweet akka! mama is really very lucky!
pyaar, pyaar pyaar!hehe.

सुREஷ் कुMAர் said...

கவிதா நல்லா கீதுமா..

//
எனக்காக "அப்படிப் போடு"
பாடக் கற்றுக் கொண்டாய்.
உனக்காக நானும் "Aao Mil Chalo" வை
முணுமுணுத்த படியே.
//
ஓஹோ..

அவர் பாடுவாராமா.. நீங்க மட்டும் முணுமுணுப்பிங்களோ..
சத்தமா பாடினா அவருக்கு அலர்ஜி ஆகிடும்னு பயமோ..

kanagu said...

romba arumaya irundhuthunga.. :))

chance eh illa...

super :))

aana valaiulagam pakkam adikadi vaanga.. naangalum indha maathiri nalla post ellam padikanum la.. :)

Kumar.B said...

"diwali" ICE to your hubby??

விக்னேஷ்வரி said...

வாங்க முல்லை.

நன்றி நேசமித்திரன்.

நன்றி வித்யா. நீங்களும் அவங்க கூட சேர்ந்து கலக்கிருக்கலாம்ல.

நன்றி வினோத்கௌதம்

நன்றி தமிழ்மாங்கனி.

வாங்க சுரேஷ். புரிஞ்சுகிட்டா சரி தான்.

நன்றி கனகு. கொஞ்சம் பெர்சனல் வேலைகளை முடிக்க வேண்டியிருந்தது. அதான் இவ்வளவு பெரிய இடைவெளி. இனி அடிக்கடி எழுதுறேன்.

நன்றி ராஜலெட்சுமி பக்கிரிசாமி.

'A kind of' Kumar. ;)

trdhasan said...

கற்பனை கவிதையா படிச்சு மூளை மழுங்கிப் போச்சு!

ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல கவிதை படித்த மன நிறைவு கிடைத்தது விக்கி!

Anonymous said...

ம்ம்ம், என்னது இது, நடக்கட்டும்...:))

அரங்கப்பெருமாள் said...

//உன் நண்பர்களுடன்
எங்கும் செல்லாதவன் நீ. //
நான் அப்பிடி இல்லைங்கோ...

//கை நிறைய பணம் கொடுத்து
என்னை தோழிகளுடன் அனுப்பி விட்டு //

நானும் இப்பிடித்தானுங்கோ...

அருமையான கவிதை...

Anonymous said...

உண்மை காதல் என்றும் இப்படியே வாழ வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

நன்றி மணி. சீக்கிரமே புனைவும் வருது.

வாங்க மயிலக்கா.

நன்றி அரங்கப் பெருமாள்.

நன்றி தமிழரசி.

Anonymous said...

வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

அப்புறம் கருவா சௌத் விரதம் நல்லாப் போச்சா??????

Truth said...

நல்லா இருக்குங்க...

rajan said...

//கல்யாணமான நாளிலிருந்து
சுஜாதாவையும், பால குமாரனையும்
உனக்கு புரியவைக்க முடியவில்லை என்று
உன் மேல் நான் கோபப்பட்ட நாட்கள் அதிகம்.
ஆனால் நீ காதல் பரிசளித்த "ஜான் க்ரிஷமை"
நான் பிரித்தது கூட இல்லை என அறிந்தும்
அதற்காக ஏமாற்றமடையாதவன் நீ. //

உண்மை கூறும் வார்த்தைகள்

என் முதல் சிறுகதையை படிக்கஇங்கே அழுத்தவும்

விக்னேஷ்வரி said...

நன்றி அண்ணாச்சி.

ரொம்ப நல்லாப் போச்சு அருணா.

நன்றி ட்ரூத்.

வாங்க ராஜன்.

ISR Selvakumar said...

கற்பனையை விட அனுபவங்களுக்கு வீச்சு அதிகம்.

நீங்கள் எழுதியது கொஞ்சம் என்று எங்களுக்கும், உங்களுக்கும், அவருக்கும் தெரியும்.

மொழியால் எல்லாவற்றையும் புரிய வைக்க முடியாது.

A Rose is a Rose is a Rose.

பின்குறிப்பு-
நானும் காதலித்து, காதலிக்கப்பட்டு மணந்தவன்தான்.
அதனால் என்னால் நீங்கள் எழுதிய வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளியை படிக்க முடிந்தது.

அபி அப்பா said...

அடடா! ரொம்ப சூப்பரா புரியும் படியான கவிதையா இருக்கே! "சிங்"கம் கொடுத்து வச்ச தங்கம் தான்:-))

Raju said...

nalla irunthuthu. vunkaloda aalamana anbai, pasathai purinchukka mudinchuthu

Raju said...

rombavum nalla irunthuthu. Ankalay penkanali varnithu ellainna pukalnthu eluthiyirunthathai padichuttu, ippo vithiyasama, alamana anboda vantha kavithai rombavum arumai. Congrats Vig.

cheena (சீனா) said...

அன்பின் விக்னேஷ்வரி

அருமையான இடுகை

கண் அவனைப் பற்றிய இடுகை

அருமை அருமை

நல்லதொரு புரிதலுணர்வு

நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள் விக்னேஷ்வரி:)!

Unknown said...

Hi Vigneshwari,
it was so sweet to read this article.This is the 1st time am visitin ur blog.Really cool.good luck.I wish u all success and let love cherish you and your family

சூர்யா - மும்பை said...

எனக்குப் பொறாமையாக உள்ளது.(சும்மா..)

மெல்லிய உணர்வுகளை உரு மாற்றம் செய்த விதம் பிரமிக்க வைக்கிறது.
நட்புடன் சூர்யா

Anonymous said...

That's so sweet :)
really really sweet :)

பனித்துளி சங்கர் said...

நினைவுகள் எப்பொழுதும் இனிமையானதுதான் !. மூழ்கிப்போகிவிட்டேன் .சிறிது நேரம் உலகை மறந்தவனாய் . உங்கள் வரிகளில் . அற்புதம் !