இந்த வாரம் அறிமுகம் மட்டுமே. specific ஆ இல்லைன்னு அழப்படாது. தனித் தனி விஷயங்களைத் தனித் தனிப்பதிவா பார்க்கலாம்.
எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்... ம்... சரி, ஆண்களுக்கான ஃபார்மல்ஸ் எப்படி இருக்கணும்னு முதல்ல பார்ப்போம்.
Men's Formal Wears
* உங்களுக்கு வசதியாக அதே நேரத்தில் உங்கள் தோற்றத்திற்கு அழகு சேர்க்கும் உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.
* உங்கள் நிறத்திற்கேற்ற உடைகளைத் தேர்ந்தெடுங்கள். நல்ல நிறமானவர்கள் எந்த நிற உடைகள் அணிந்தாலும் நன்றாக இருக்கும். ஆனால், மேட்சிங்கில் கவனம் கொள்ளுங்கள். சற்று மாநிறம் அல்லது கருமையானவர்கள் வெளிர், ப்ரைட் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். அடர்ந்த நிறம் கொண்டவர்கள் Navy Blue, Dark Green, Dark Brown, Dark Yellow, Red, Orange மற்றும் மிகுந்த வெளிர் நிறங்களைத் தவிர்க்கலாம். வெள்ளை நிறத்தவர்கள் வெள்ளை, மஞ்சள், க்ரீம் போன்ற நிறங்களில் பேன்ட் மற்றும் ஷர்ட்டை ஒன்றாக அணிவதைத் தவிருங்கள்.
* அதிக தளர்ச்சியில்லாத, அதிக பிடித்தமில்லாத சரியான அளவான ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள்.
* மேட்சிங் என்பது முக்கியமானதாக இருக்கட்டும். உதாரணமாக கட்டம் போட்ட சட்டையுடன் கோடு போட்ட பேன்ட் போகாதிருக்கட்டும். கட்டம் அல்லது டிசைனுள்ள சட்டையுடன் ப்ளைன் பேன்ட் சிறந்தது. அதே போல் ப்ளைன் சட்டையுடன் Self Striped Trousers அணிவது அழகூட்டும்.
* எப்போதும் உங்களுக்கென ஒரு ஸ்டைல் வைத்துக் கொண்டு அதே மாதிரியான ஆடைகளை மட்டும் அணியாதீர்கள். உங்களுக்கு எல்லா ஆடைகளும் பொருந்தும் எல்லாவற்றையும் முயற்சி செய்யுங்கள். முயல்வதில் தவறில்லை.
* நீங்கள் ஆடைகளுக்கு மேல் கோட் அல்லது ஸ்வெட்டர் அணிவதாக இருந்தால் அது உங்கள் ஆடைக்குப் பொருத்தமானதாக நிறத்திலும், துணியிலும் இருப்பது நல்லது. சில்க் சட்டைக்கு மேல் காட்டன் கோட் போடாமலிருங்கள்.
* ஒல்லியாக இருப்பவர்கள் Blazer அணிய நேர்ந்தால் தோள்ப் பகுதியில் padded (Shoulder Padding) ஆக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள். அது உங்கள் தோள் எலும்புகளை வெளியில் காட்டாமலிருக்கும்.
* குண்டானவர்கள் Blazer ஐ மூன்று பட்டன் (3 Button Blazer) உள்ளதாகத் தேர்ந்தெடுங்கள். இது உங்களை உயரமாகக் காட்டும். அதனால் உங்களின் எடை குறைவாகத் தெரியும்.
* ஃபார்மல்ஸ் உடைகளை அணியும் போது முகம் Clean Shave ஆக இருத்தல் அழகு சேர்க்கும். அடர் மீசை உள்ளவர்களாயின் அதை அழகாக ட்ரிம் செய்திருத்தல் நலம்.
* வண்ண நிற பேண்டுகளைத் தவிருங்கள். Neutral நிறங்களான கருப்பு, கிரே, காக்கி, நேவி ப்ளு, க்ரீம், பிரவுன் பேண்டுகளே ஆண்களுக்கு சரியானவையாக இருக்கும்.
* காலநிலைக்கு ஏற்ற நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். குளிர் காலங்களில் இளநிற உடைகளையும், வெயில் காலங்களில் வெளிர் நிறங்களையும், மழைக் காலங்களில் அடர் நிறங்களையும் அணியுங்கள்.
* அலுவலகத்திற்கு டை அணிபவராக இருந்தால், ப்ளைன் அல்லது செல்ஃப் டிசைனைத் தேர்ந்தெடுங்கள்.
* எப்போதும் சட்டையை tuck in செய்து, ஷூஸ் அணியுங்கள்.
* உங்கள் பெல்ட் நிறமும் ஷு நிறமும் ஒன்றாக இருக்கட்டும். அது போல் உங்களின் பெல்டின் பக்கிளின் (Buckles) நிறமும், வாட்சின் செயின் நிறமும் ஒன்றாக இருக்கட்டும்.
* பேண்ட்டின் நிறமும் சாக்க்சின் நிறமும் ஒன்றாகவோ அல்லது Monochromatic ஆகவோ இருத்தல் நல்லது.
* ஃபார்மல்சுடன் சில்வர் நிற செயினுள்ள வாட்சை அணியுங்கள். லெதர் வாட்சை விட இது பொருத்தமாக இருக்கும். சதுர அல்லது செவ்வக டயல்கள் ஆண்களைக் கம்பீரமாகவும், வட்ட டயல்கள் மென்மையானவராகவும் காட்டும்.
* போல்டான மணமுள்ள பெர்ஃப்யூம் தேர்ந்தெடுங்கள்.
இதுவே நிறைய ஆகிடுச்சோ... சரி, கேஷுவல்ஸ் மற்றும் அத்தியாவசிய ஆண்கள் அலமாரிப் பொருட்கள் அடுத்த பதிவில்.
ஆபிஸ் ப்யூன் கூட பார்க்காத உங்களை இனி ஆபிசில் இருக்கும் அனைத்துப் பெண்களும் பார்க்க வாழ்த்துக்கள்.
தோழிகளே, இனி உங்களவரையும் கொஞ்சம் அழகாக்குங்கள்.
61 comments:
நான் டிரஸ் பண்றதுல ரொம்ப மோசம்... சாயம் போன ஆடைகளைத் தான் அதிகம் உடுத்துவேன். அந்த வகையில் உங்கள் பதிவை இனிமேல் தான் படிக்க வேண்டும்.
டெம்ப்ளேட் பின்னூட்டம்.
வழக்... கலக்......
nice one! avarukku tips kodukka use aagum vigneshwari ;)))))))))))
நன்றி
நிறைய நல்ல டிப்ஸு சொல்லி இருக்கீங்க நன்றி
//அதிக தளர்ச்சியில்லாத, அதிக பிடித்தமில்லாத சரியான அளவான ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள்.//
என் சைசுக்கு எந்தக் கடையிலையும் கிடைக்க மாட்டேங்குதே :))
அடுத்த பதிவுல கிழிஞ்சுபோன, பத்து நாள் துவைக்காத, ஜீன்ஸுக்கு மேட்சா டீ சர்ட் போடுறது எப்புடின்னு சொல்லுங்க :))
ரெண்டு இடுகையும் படிச்சேன்..
அதிரடி மக்கா.
நான் நல்ல கருப்பு.நாப்பத்தஞ்சு வயது.மங்க்கி குல்லா என்ன கலரில் வைக்கலாம்?வயலட் குல்லா பிடிக்கலை என்கிறாள் கிழவி.
:-))
great effort vignesh!
(ஐ..மழை பேயுது..மனசிலேயே இருக்கு..)
கிருஷ்ணபிரபு சொன்னதில் கொஞ்சம் மட்டும் இந்த பிரபுக்கும் பொருந்தும்.
இப்ப இம்ப்ரூவிங். நீங்க ஃப்ந்ந்ஷன் டிசைனிங்கா?
//பசங்களா... போன பதிவுல சொன்னதே தான்//
நீங்க இதுக்கு முன்னாடி டீச்சரா ஒர்க் பண்ணீங்களா? ஒரு டீச்சர் சொல்ற மாதிரியே இருக்குது:)
//Neutral நிறங்களான கருப்பு, கிரே, காக்கி, நேவி ப்ளு, க்ரீம், பிரவுன் பேண்டுகளே ஆண்களுக்கு சரியானவையாக இருக்கும்.//
100% கரெக்ட்!
//ஆபிஸ் ப்யூன் கூட பார்க்காத உங்களை இனி ஆபிசில் இருக்கும் அனைத்துப் பெண்களும் பார்க்க வாழ்த்துக்கள்//
வில்லத்தனமும், நல்லத்தனமும் கலந்த ஒரே வரி, இதுதான் விக்னேஷ்வரியா?
ஹே..யாராவது சொல்லுங்கப்பா, இது கவிதையா?...ஓ...எண்டர் தட்டாமவிட்டுட்டேன்:(
:))
ஆண்கள் டிரஸிங் பற்றிய பதிவில் விஷால், அஜித், விக்ரம்..
the best choices of current tamil cinema..:))
//சதுர அல்லது செவ்வக டயல்கள் ஆண்களைக் கம்பீரமாகவும், வட்ட டயல்கள் மென்மையானவராகவும் காட்டும்.//....
என்னோட சாய்ஸும் இதான்!
இதை எழுதாம விட்டுடீங்க, கோல்டு கலரில வாட்சு வேண்டாம்(அது நம் ஆண்களுக்கு பொறுத்தமா இருக்காதென்பது என் கருத்து)!
//தோழிகளே, இனி உங்களவரையும் கொஞ்சம் அழகாக்குங்கள்.//....நிச்சயமா... பெண்கள் நாம் மட்டும் அழகா இருந்தா நல்லா இருக்காது.சோ ப்ளீஸ், ஆண்களையும் அழகாக்குவோம்.
ஆயிரம் தான் சொன்னாலும் நம்ம கிராமத்து சிங்கம், ராமராஜனோட பட்டாபட்டி ட்ராயர் தான் வேர்ல்டு பேமஸ்!
மிக நல்ல பதிவு,, இனி ஆயிரத்தில் ஒருவன் இல்ல,, நூத்துல ஒருவந்தான்....
இது வரைக்கும் ஒரளவிற்கு நீங்க சொன்ன மாதிரி தான் டிரஸ் செய்து வருகிறேன். இனி எல்லா நாளும் உங்க டிப்ஸ் போல உடை அணியவேண்டும். உங்க பதிவ படித்ததும் என் தங்கமணி ஓ.கே சொல்லியாச்சு...
நிறைய வழக்கமான பத்திரிக்கைகளில் பார்க்க முடியாத பரிந்துரைகள்
விலக்கி விலக்கி வச்சாலும் வெள்ளி கருத்துதான போகுமுங்குராங்க நம்மூட்டு நாட்டாமைங்க
//அதிரடி மக்கா.great effort vignesh!
(ஐ..மழை பேயுது..மனசிலேயே இருக்கு..)//
:)
மக்கா உங்க இளமை எழுத்துல இருக்கு மக்கா!!!
நீங்க எல்லாம் கருப்புன்னா .. சரி விடுங்க
செல்ப் டேமேஜ் செர்ப்பிய டக்கீலாவுக்கு செகண்ட் ஹீரோயின் என்பதால் உவ்வே என்னும்போது உச்சி மோந்து பார்
என்ற பார் மொழியுடன்
வடை பெறுகிறேன்
விக்னேஷ்வரி உங்களின் பின்னூட்டத்தில பா.ரா வின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டதால் கொஞ்சம் மக்காவுடன் மப்பு புராணம்
மரபு மீறியிருப்பின் மன்னிக்க ....
ஆஹா பசங்களுக்கு கூட இத்தனை டிப்ஸ் சொல்ல முடியுமா.
Super... .Thala :)
mmmm..kalaks..kalaks:-)
\\\ஆபிஸ் ப்யூன் கூட பார்க்காத உங்களை இனி ஆபிசில் இருக்கும் அனைத்துப் பெண்களும் பார்க்க வாழ்த்துக்கள்.\\\
எங்க ஆபிஸில் பொண்ணுங்களே இல்லை அக்கா..
அருமை. அட்டகாசம். தூள் கலக்கல்.
அஜீத் அணிந்துள்ள அந்த Sky Blue கலர் ஜீன்ஸ் பேண்ட்டிற்கு எந்த கலர் சட்டை,டீ சர்ட் போட்டாலும் கலக்கலா இருக்கும்.
தமிழனின் பாரம்பர்ய உடையான வேஷ்டியை பற்றி தனிப்பதிவாக எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
பணி நேரத்தில் கோட்டை கழட்டாமல் திரியும் என் போன்றவர்கள் வீட்டிற்கு சென்றால் விரும்பி அணிவது வேஷ்டி - டீ சர்ட்டே... :))
என்னத்த சொல்றது..பரிந்துரைகள் எல்லாம் சரிதாங்க..
நானெல்லாம் என்னத்த போட்டாலும் 'சட்டில இருந்தா தானே ஆப்பைல்ல வரும்'..:)
என்னமோ சொல்ரீங்க.. பார்க்கலாம்..
:) எளிமையாக இருப்பது என இருக்கறதை எடுத்து அப்படியே போட்டுட்டுப் போறது கூட அழகாகத்தானே இருக்கிறது.
இப்படி நீங்கள் சொல்வது போல ஆடை உடுத்துவதன் மூலம் அடுத்த பெண்களின் கண்கள் நம் மீது அலைபாய விடுவது சரியில்லையே! ;)
நன்றிங்க
அதுவும் பொண்ணுங்க சொன்னால் சரியா தான் இருக்கும்
அட இப்படில்லாம் கூடஇருக்கா...
அதுக்கு ஏன் முதல்ல விஷால் படத்தைப்போட்ருக்கீங்க? சம்பந்தமே இல்லாம.
திரும்பவும் சொல்றேன், ஆண்களுக்கு இயற்கையிலேயே அழகுண்டு. எங்களுக்கு இதுக்கு மேலயுkh அழகுவேனும்? :-)
பதிவில் வந்த டிப்ஸ் நமக்கு தேவை இல்லை. ஆனால் படங்களுக்கு ............ நன்றி, நன்றி. நன்றி....!
டிப்ஸ் அருமைங்க. தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!
ஆமா, பார்மல்ஸ் போட்டுருந்தா, புல் ஷர்ட் கைய மடிச்சு விடலாமானு கொஞ்சம் சொல்லுங்க.
அட இத்தனை விசயம் இருக்கா?
//வண்ண நிற பேண்டுகளைத் தவிருங்கள்.//
ராமராஜனுக்கு எத்தனை பேர் விசிறிங்க இன்னும் இருக்காங்க. அதை மறந்துட்டீங்களா
(சும்மா) :)
என் கண்ணாளன் இன்னமும் அழகாகப் போகும் பெருமை உங்களுக்கே.
நல்ல குறிப்புகள் விக்னேஷ்வரி.
சில சில திருத்தங்கள் இதைப் பார்த்து தெரிந்து கொண்டேன். உஜாலாவுக்கு குஜால மாறிடுவோம். ஒரு லோக்கல் கஜாலா மாட்டாமையா போகப்போகுது... :-))
விக்னா, அந்த ரெண்டு நாள் தாடி நல்லா இருக்குமா? இல்ல கேடி மாதிரி இருக்குமா?
தலைவியே இன்னும் இன்னும் நிறைய டிப்ஸ் தேவை
அப்படியே மேரேஜ் அன்னிக்கு , இண்டெர்வியூ போகும்போது என்ன ட்ரெஸ் போடலாம்ன்னு டிப்ஸ் ப்ளீஸ்...
//ஆபிஸ் ப்யூன் கூட பார்க்காத உங்களை இனி ஆபிசில் இருக்கும் அனைத்துப் பெண்களும் பார்க்க வாழ்த்துக்கள்.//
இது நெம்ப நக்கலு....
unga pathivu kandipaa box-office hit!!! hahahha.
///பா.ராஜாராம் said...
நான் நல்ல கருப்பு.நாப்பத்தஞ்சு வயது.மங்க்கி குல்லா என்ன கலரில் வைக்கலாம்?வயலட் குல்லா பிடிக்கலை என்கிறாள் கிழவி.///
:))
nice post
vidhya
வேண்டாம் என்று சொன்னேன் கேட்டிங்களா?
இப்போ பாருங்க, இந்த மாசம் இதுக்கு ஒரு பட்ஜெட் போடணுமே!
//ஆண்கள் அலமாரிப் பொருட்கள் அடுத்த பதிவில்.//
லிஸ்ட் சீக்ரம் குடுங்க, வீக் என்ட்ல வாங்கணும்
// உங்கள் பெல்ட் நிறமும் ஷு நிறமும் ஒன்றாக இருக்கட்டும். அது போல் உங்களின் பெல்டின் பக்கிளின் (Buckles) நிறமும், வாட்சின் செயின் நிறமும் ஒன்றாக இருக்கட்டும்.//
இது புதுசா இருக்கே!
//போல்டான மணமுள்ள பெர்ஃப்யூம் தேர்ந்தெடுங்கள்//
அப்படினா? ஒன் மேன் ஷோ okva?
//இனி ஆபிசில் இருக்கும் அனைத்துப் பெண்களும் பார்க்க வாழ்த்துக்கள்.//
இனிமே தான் எங்கள பார்க்கணுமா என்ன?
டிப்(ஸ்) டாப்பு:))
நல்ல பதிவு!
இதுவரைக்கும் நம்ம சங்கத்து சிங்கங்க ஒண்ணைக்கூடக் காணோமே!
நல்லா தான் கொடுக்குராங்க டிப்பு...
சூப்பர் விக்கி!!!
குறிப்பாக Blazer & வாட்ச் பத்தின டிப்ஸ் நிஜமாவே நல்லாருக்கு. இதற்கு முன் எனக்கு இது தெரியாது.
//போல்டான மணமுள்ள பெர்ஃப்யூம் தேர்ந்தெடுங்கள்//
இது பெரும்பாலும் பெண்களுக்குதானே பொருந்தும்...சரியா?
பசங்களுக்கு 'mild flavor'தான் ஒத்துவரும் என்பது என் fashion சிற்றறிவிற்கு(?!) எட்டிய கருத்து! :)
//கேஷுவல்ஸ் அடுத்த பதிவில்//
வெறித்தனமான ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! :))))
ஏன்னா என் அலுவலகத்தில 'formals' போடணும்னு கட்டாயமில்ல. நான் மிக பெரும்பாலும் 'casuals'தான்.
குறிப்பா ஜீன்ஸ் & அதோட accessories/combinations பத்தி சொல்லுங்க.
பயனுள்ள பதிவு .. வாழ்த்துக்கள்
அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
பாரதி கண்ட புதுமைபெண் இவள் தானோ? நிஜமாகவே வளர்கிறது பாரதம் 50-50 என்பது பகிர்வதிலும் உண்டு அந்த வகையில் தன் நண்பனும் நலம் வாழ வழி சொன்ன தோழிக்கு பாராட்டுக்கள்
//
* உங்கள் பெல்ட் நிறமும் ஷு நிறமும் ஒன்றாக இருக்கட்டும். அது போல் உங்களின் பெல்டின் பக்கிளின் (Buckles) நிறமும், வாட்சின் செயின் நிறமும் ஒன்றாக இருக்கட்டும். //
இந்த டிப்ஸ் ரொம்ப நல்லாருக்கு
நிறைய நல்ல டிப்ஸு சொல்லி இருக்கீங்க நன்றி
சும்மா போற போக்குல இப்டி 1000 டிப்ஸ் அள்ளி விட எல்லாராலும் முடியும். அது சரியா இல்லையான்னு சோதிக்க வேணாமா? என் கலர் ஹைட் வெய்ட் எல்லாம் தான் தெரியுமே.. எனக்கு மேட்சா 10 செட் ட்ரெஸ் வாங்கி அனுப்புங்க.. அப்புறம் பார்க்கலாம் உங்க ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பத்தி.. சவாலுக்கு ரெடியா? :)))
இனிமேல் அழகா உடுத்துவீங்க கிருஷ்ணா.
நன்றி தராசு.
ம், கலக்குங்க அமித்து அம்மா.
வாங்க Minimus
வாங்க சங்கர். தைச்சு போடுங்கங்க.
ரொம்ப அலும்புங்க உங்களுக்கு.....
நன்றி பா.ரா.
எல்லா இடத்திலேயும் கவிதையா.... அதுல நக்கல் வேற...
ஐ..மழை பேயுது..மனசிலேயே இருக்கு.. //
:)
இன்னும் இம்ப்ரூவ் ஆகிடலாம் பப்பு.
ஆமாங்க, படிச்சது ஃபேஷன் டிசைனிங் தான்.
அய்யோ, எனக்கு ஆகாத வேலைங்க குறும்பன் அந்த டீச்சர் வேலை.
கேபிள் கூட சேராதீங்கன்னா கேளுங்க குறும்பன். எண்டரெல்லாம் வேண்டாம் நமக்கு. :)
வாங்க மயில் விஜி.
அட, உடைகளுக்கு ஏற்ற மாதிரி படங்கள் போட்டேங்க கார்க்கி. உங்க படம் இல்லைன்னு பொறாமைப்படக் கூடாது. ;)
வாங்க ப்ரியா. என்னவருக்கு கோல்டன் கலர் வாட்ச் ஸ்ட்ராப் நல்லா இருக்கும். அதான் எழுதல :)
ம், அழகாக்குங்க உங்களவரை.
அது சரி வால். கூடவே கைய்ல ஒரு சொம்பும் வெச்சுக்கோங்க. சரியா இருக்கும். ;)
கலக்குங்க அண்ணாமலையான்.
ரைட்டு, நடத்துங்க சங்கவி
நன்றி நேசமித்திரன். நட்புக்கு ஏதுங்க மரபெல்லாம்... நீங்க நடத்துங்க.
இன்னும் இருக்கு தாரணி.
ராஜி, சூப்பர் எனக்கா... தலைக்கா...
நன்றி இயற்கை ராஜி.
சரி, வெளில இருக்குற பொண்ணுங்க பார்க்கட்டும் அன்பு.
நன்றி துபாய் ராஜா. வேஷ்டி பத்தித் தானே... தனிப் பதிவாவே போட்டுடலாம்.
வாங்க வினோத் கௌதம். அதெல்லாம் நல்லா இருக்கும். முதல்ல போடுங்க. அப்புறம் பாருங்க.
செய்து பாருங்க கோபி. அடுத்து எல்லாரும் உங்களைப் பார்ப்பாங்க. :)
இப்படியெல்லாம் சொல்லி சமாளிச்சே காலத்தை ஓட்டுங்க ராதாகிருஷ்ணன். :)
வாங்க சபரிநாதன்.
ஆமாங்க, அப்படித் தான் பிரதாப். ஏங்க, கருப்பா இருக்குற நம்மூர்ப் பசங்க படம் தேவைப்பட்டது. அதான் விஷால்.
ஒத்துக்குறேன்ங்க, உங்களோட இயற்கை அழகை. அதை இன்னும் அழகுபடுத்தலாம்னு தான்....
வாங்க சித்ரா.
நன்றி புருஷோத்தமன். ஆஃபிஸ் போற நேரத்துல கையை மடிச்சு விடாதீங்க. அது உங்களை ரிலாக்ஸாகக் காட்டக் கூடியது. சாயங்காலம் நண்பர்கள் கூட கேஃபட்டேரியால அரட்டை அடிக்க ஓக்கே.
ஆமாங்க அபி அப்பா. இன்னும் இருக்கு.
அம்மிணி.... வேண்டாம். வீட்ல அவருக்கு இப்படி ஏதாச்சும் டெஸ்ட் பண்ணிடாதீங்க.
மாம்ஸை அழகாக்குறதை விட என்ன வேலை சுசிக்கா. நன்றி.
நன்றி ரோஸ்விக். ரெண்டு நாள் தாடி வெச்சா கேடி மாதிரி இருக்காது. நோயாளி மாதிரி இருக்கும். நாலு வயசு கூட தெரியும். அதுனால அதை மீட்டிங்குகளின் போது தவிர்த்தல் நல்லது.
நன்றி பிரியமுடன் வசந்த். இண்டெர்வ்யூக்கு இதே ட்ரெஸ் கோட் ஒத்து வரும். மேரேஜுக்கு தனியா சொல்றேன்.
வாங்க தமிழ் மாங்கனி.
நன்றி விதூஷ்.
ஒன்னொன்னா வாங்கலாம் பாலகுமாரன். என்ன அவசரம்....
தெரிலைங்க, பெர்ஃப்யூம்ல என்ன ப்ராண்டுனெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க.
நன்றி வித்யா. :)
வாங்க வெயிலான். தலைவர் வராம மத்தவங்க வரக் கூடாதுன்னு தான் யாரும் வரல. இனி வந்திடுவாங்க.
வாங்க சூர்யா.
வாங்க பேநா மூடி.
நன்றி ஸ்ரீவி சிவா. இல்லைங்க, பெண்களுக்குத் தான் மைல்ட். ஆண்களின் பெர்ஃப்யூம் போல்டா இருக்கணும்.
காத்திட்டே இருங்க, சீக்கிரமே கேஷுவல்ஸ் டிப்ஸ் போடுறேன்.
நன்றி ரோமியோ.
ம், காதல் வரட்டும் ப்ரின்ஸ் ராஜன். நன்றிங்க.
நன்றி உழவன்.
வாங்க கமலேஷ்.
எந்த முதல் படத்துல உங்களுக்குப் பிரச்சனை சஞ்சய்? விஷாலா? தமிழ்ப் பசங்க ப்ரௌன் பசங்கன்னு சொல்ல அந்தப் படம் போட்டேன். உங்க படம் குடுத்திருந்தா போட்டிருப்பேன். கிடைக்குறதைத் தானே போட முடியும்...
விக்கியின் ரசிகர்கள் அமைதி காக்கவும்//
தயவு செய்து உங்களின் இந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். இது நண்பர்கள் கருத்துப் பகிருமிடம். இங்கு யாருக்கும் யாரும் ரசிகர்களல்லர்.
சும்மா போற போக்குல இப்டி 1000 டிப்ஸ் அள்ளி விட எல்லாராலும் முடியும். அது சரியா இல்லையான்னு சோதிக்க வேணாமா? என் கலர் ஹைட் வெய்ட் எல்லாம் தான் தெரியுமே.. எனக்கு மேட்சா 10 செட் ட்ரெஸ் வாங்கி அனுப்புங்க.. அப்புறம் பார்க்கலாம் உங்க ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பத்தி.. சவாலுக்கு ரெடியா? ///
ஹாஹாஹா.... இது தான் உங்களுக்குப் பிரச்சனையா.... சரிங்க, என்னோட அக்கௌண்ட்டுல 30,000 ரூபாய் உங்கள் துணிகளுக்கும், உங்களுக்காக நான் அலைய வேண்டிய வேலைக்கு 1000 ரூபாயும் (இங்கே ஒரு நாள் டாக்ஸிக்கு அவ்ளோ தான் ஆகும்) போட்டுடுங்க. அப்புறம் என் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் சோதிங்க.
//விக்கியின் ரசிகர்கள் அமைதி காக்கவும்//
தயவு செய்து உங்களின் இந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். இது நண்பர்கள் கருத்துப் பகிருமிடம். இங்கு யாருக்கும் யாரும் ரசிகர்களல்லர்.//
உங்கள் தன்னடக்கத்தை மதிக்கிறேன் விக்னேஷ்வரி.. உங்கள் பதில் என்னைப் போன்ற உங்கள் ரசிகர்களை காயப் படுத்திவிட்டது.
என்னாது 10 செட்டுக்கு முப்பதாயிரமா? நானெல்லாம் பை 3 கெட் 7 ஃப்ரீல துணி வாங்கறவன்.. 7 வாங்கினாலும் 2000 ரூபாய் தாண்டாது. அவ்ளோ தான் என் லெவல்.. முப்ப்தாயிரமாம்ல..
ஆஆஆஆஆ
இம்பூட்டு இருக்கா???????
நன்றி மேடம்
விஜய்
வேண்டாம் சஞ்சய் விட்டுடுங்க. :)
ஏங்க பெர்சனலா டிசைனர் வெச்சுக்கிட்டா பட்ஜெட் அதிகமாகும்னு உங்களுக்குத் தெரியாதா...
இன்னும் இருக்கு பிரபு.
வாங்க விஜய்.
* உங்களுக்கு வசதியாக அதே நேரத்தில் உங்கள் தோற்றத்திற்கு அழகு சேர்க்கும் உடைகளைத் தேர்ந்தெடுங்கள்///
Romba kastham ithu elm he he he..
hmmm super...
Unga idea elm romba rate aagum pol???
low rate kku idea solunga...
நெறைய உபயோகமான விஷயங்கள்.. நன்றி விக்னேஷ்வரி..
Wow! So much to do for a guy?
Any shirt and pants - goes here... @home ( IT job! ) and when client comes, there is one old tie, there.... Also there is one standard navy blue blazer, with golden buttons ( tight ).
விட்டமின் M பத்தி ஒரு பதிவு போடுங்க.
Post a Comment