Saturday, April 4, 2009

DASVIDANIYA - The Best Goodbye Ever!



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த பீலிங். கதாநாயகன், கதாநாயகி, டூயட் சாங், பைட் இப்படி எந்த மசாலாவும் இல்லாம ஒரு மனுஷனோட ஆசைகளை, இன்னும் மூனே மாசத்துல சாகப்போற மனுஷனோட ஆசைகளை சொல்லிருக்குற படம், DASVIDANIYA.



மும்பையில் வாழும் ஒரு சராசரி மனிதன் AMAR KAUL (VINAY PATHAK). நல்ல ஹீரோ தேர்வு. மும்பையில் வாழும் பல லட்சம் சராசரி மனிதர்களைப் போல் வாழ்க்கையில் எதற்கும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் அமருக்கு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. எப்போதும் தன்னிடம் ஒரு "To do list" ஐ வைத்துக் கொண்டு தன் வேலைகளை சரி வர செய்கிறார், தன்னைப் பற்றியோ, தன் வாழ்க்கையைப் பற்றியோ சிந்திக்க நேரமில்லாமல்.


அவருக்கு வயிற்று வலி வரவே, மருத்துவமனைக்கு செல்வதற்காக பாஸிடம் பெர்மிஷன் கேட்க செல்கிறார். அப்போது அவரிடம் சில பைல்களை குடுத்து முடித்து மறுநாள் கொண்டு வருமாறு பாஸ் சொல்கிறார். மருத்துவமனையில் அவருக்கு கேன்சர் இருப்பதாகவும், இன்னும் மூன்று மாதங்களே அவரின் வாழ்நாள் எனவும் மருத்துவர் கூறவே, என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டிற்கு வருகிறார்.



இந்த மூன்று மாதங்களில் தனக்காக வாழ்வது, தன் ஆசைகளை பூர்த்தி செய்வது என முடிவெடுத்து, அதற்கென ஒரு "To do list" ஐத் தயாரிக்கிறார் 37 வயதான அமர்.



1. New Car
2. Foreign trip
3. Neha
4. Guitar
5. Boss of boss
6. Mumma
7. Rajiv Jhula
8. Love
9. Gaurav
10. Photo on Newspaper
இது தான் அவரின் கடைசி To do List.



இந்த லிஸ்டை அமர் எப்படி பூர்த்தி செய்தார், பத்துக்கு பத்து வாங்கினாரா என்பது தான் கதை.



ஒவ்வொரு இடத்திலும் அவர் படும் மன வேதனையைப் பார்க்கும் போது, இதுக்கே இவர் செத்தே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. கார் வாங்கும் போது தவணையை மூன்று மாதமாக குறைக்க சொல்லி கேட்கும் போதும், கிடார் மாஸ்டரிடம் ஏழு மாத க்லாஸ்ஸைக் குறைக்கச் சொல்லிக் கேட்கும் போதும், வெளிநாட்டில் பெண்களிடம் அடி வாங்கி, தற்கொலைக்கு முயற்சி செய்யும் போதும், நேஹாவிடம் காதலை வெளிப்படுத்தும் போதும் நமக்கு மனதிற்கு கஷ்டமாக உள்ளது.



நேஹாவிடம் காதலைச் சொல்லும் அந்த ஒரு சீனிற்காகவே படம் பார்க்கலாம். நல்ல நடிப்பு, போரடிக்காத திரைக்கதை, மூன்றே பாடல்கள், அழுகையில்லாத சோகம் இவற்றிற்காக படம் பார்க்கலாம். மற்றபடி, மிக சாதாரணமான படம். சொல்லிக் கொள்ளும் அளவு பிரம்மாண்டம் எதுவும் இல்லை.



படம் முடியும் போது, ஒருவேளை நமது வாழ்நாளும் நமக்கு தெரியுமானால், நாம் செய்ய விரும்பும் கடைசிக் காரியங்கள் எவையாக இருக்கும் என்னும் கேள்வி மனதில் எழுகிறது. DASVIDANIYA - The Best Goodbye Ever!



நீங்கள் இன்னும் மூன்று மாதம் மட்டுமே இருப்பீர்களானால், நீங்கள் செய்ய விரும்புபவை எவையாக இருக்குமென பின்னூட்டமிடுங்களேன்.

36 comments:

trdhasan said...

கதை கருவே அருமையா இருக்கே! கண்டிப்பா பாக்கணும் போல இருக்கே! ஒரிஜினல் டிவிடி கிடைச்சா எனக்கு அனுப்பி வைக்கிறீங்களா?

விக்னேஷ்வரி said...

You tube ல படம் முழுசும் இருக்கு மணி. நான் DVD கிடைச்சா, கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன்.

SK said...

அழுவாச்சி படமா. :( :(

விக்னேஷ்வரி said...

அழுவாச்சி படம் இல்ல SK. எதார்த்தமான படம்.

வினோத் கெளதம் said...

இந்த படம் கொஞ்சம் பார்த்தேன்.
நல்லா இருந்துச்சு.

மூணு மாசத்துல அப்படி ஒரு நிலைமை..
ஒரே ஆசை..
World tour With Family..

இணைந்த கரங்கள்!! said...

நல்ல விமர்சனம்!! வார இதழ்கள்கூட இந்த அளவுக்கு விமர்சனம் பண்ணுமா என்பது சந்தேகம் தான்!! very nice!

இணைந்த கரங்கள்!! said...
This comment has been removed by the author.
*இயற்கை ராஜி* said...

NALLA IRUKKUM POLA..

Joe said...

//
நேஹாவிடம் காதலைச் சொல்லும் அந்த ஒரு சீனிற்காகவே படம் பார்க்கலாம்.
//
சரியா சொன்னீங்க விக்னேஸ்வரி.
அட்டகாசமான காட்சி அது.
வினய் பதக் இந்தளவு அற்புதமான குணச்சித்திர வேடம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
அருமையான படம்.

விக்னேஷ்வரி said...

World tour With Family.. //

mm, good idea Vinoth Gowtham.

விக்னேஷ்வரி said...

நன்றி இணைந்த கரங்கள்.

விக்னேஷ்வரி said...

ஆமா, நல்லா இருக்கு. பாருங்க இயற்கை.

ஆமா Joe, வினய் பாடக் கிட்ட இருந்து எதிர்பார்க்காத ஒரு ரோல். நல்ல ரோல்.

Joe said...

அவரும், ரன்விரும் MTv-இல் VJ-ஆக இருந்த காலத்திலிருந்து நண்பர்கள் அல்லவா?
ரன்வீர் ஒரு நல்ல தொகுப்பாளர், அவரை எனக்கு அப்போதே பிடிக்கும். நல்ல நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார் என்று தெரியும்.

வினய் ஒரு பபூன் என்று தான் நினைத்திருந்தேன்.

படத்தில் பிடிக்காத ஒரு கதாபாத்திரம், அரைவேக்காடு ஹிந்தி/ஆங்கிலம் பேசும் கிடார் ஆசிரியர் சாவியோ! இன்னும் எத்தனை நாளுக்கு தான் கிறிஸ்துவர்களை இதே போல சித்தரிப்பார்கள்?

Suresh said...

அருமை கண்டிப்பா பாக்கணும் தோழி .. கடை பக்கமே காணோம்

coolzkarthi said...

மிக நல்ல விமர்சனம்....
கண்டிப்பாக நானும் பார்க்க முயற்சிப்பேன்.....

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்கள் இன்னும் மூன்று மாதம் மட்டுமே இருப்பீர்களானால், நீங்கள் செய்ய விரும்புபவை எவையாக இருக்குமென பின்னூட்டமிடுங்களேன் //

இருக்குறது பத்தாதுன்னு புதுசா இன்னோரு பிளாக் ஆரமிச்சு எல்லாரையும் கொல்லுவேன்

:))

விக்னேஷ்வரி said...

Joe, எனக்கு சாவியோ கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்தது. அவர் பேசினது நல்லா இருந்தது. இந்த மாதிரி அரைவேக்காட்டுத் தனமா எல்லோரும் நடிக்க முடியாது. அதை அவர் நல்லா செஞ்சிருந்தாரு.

கண்டிப்பா பாருங்க சுரேஷ் and coolzkarthi

சாரி சுரேஷ், கொஞ்சம் வேலைனால, எந்த ப்ளாக் பக்கமும் போக முடியல. இப்போ பார்த்திடுறேன்.

இருக்குறது பத்தாதுன்னு புதுசா இன்னோரு பிளாக் ஆரமிச்சு எல்லாரையும் கொல்லுவேன் //

ஐயோ, வேணாம். நீங்க வாழ்க நூறாண்டு. ;)

Joe said...

I wasn't talking abt that person's acting skills, He did pretty well.

But I was irritated abt the typecasting of ppl in Indian movies.

Did you read my last post abt my meeting with A R Rahman?

லதானந்த் said...

சினிமாவைப் போலவே விமர்சனமும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்
www.lathananthpakkam.blogspot.com

விக்னேஷ்வரி said...

நன்றி லதானந்த் சார். நான் உங்க ப்ளாக்கின் ரெகுலர் வாசகி.

லதானந்த் said...

விக்னேஷ்வரி!

நெம்ப மகிழ்ச்சியா இருக்கு.

ஆசிரமத்துக்கு இப்படி ஒரு வரவா?

அடிக்கடி விசிட் பண்ணுங்க.

Veera said...

//படம் முடியும் போது, ஒருவேளை நமது வாழ்நாளும் நமக்கு தெரியுமானால்,//

”சாகுற நாள் தெரிஞ்சிட்டா, வாழற நாள் நரகமாயிடும்”கிற தலைவரோட வசனம் நினைவுக்கு வர்ரத தவிர்க்க முடியல!! :-) :-)

இன்னொரு வலைபதிவில் உங்களோட பின்னூட்டத்தைப் பார்த்துட்டு இங்க வந்தேன். நல்லா எழுதி இருக்கீங்க (குறைவாகவே எழுதியிருந்தாலும்!). வாழ்த்துக்கள்!! :)

விக்னேஷ்வரி said...

கண்டிப்பா அடிக்கடி விசிட் பண்ணிடலாம் லதானந்த் சார்.

நன்றி vraa.

Raja Manickam said...

have seen this movie.. very touching and great story...

DHANS said...

நன்றாக இருக்கிறதே ஒரு மதத்திற்கு முன் இந்த பதிவை படித்திருந்தால் பின்னூட்டம் மட்டுமே இட்டிருப்பேன் இப்போது தனி பதிவாக போடலாம் என்று இருக்கிறேன். நாளை பதிவிடுகிறேன்.

விக்னேஷ்வரி said...

Yes Raja, nice movie.

பதிவிடுங்க DHANS. படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுர்றேன். :)

DHANS said...

updated my post, sorry i thought of writing more but something makes me to shorten my post.

http://dhans4all.blogspot.com/

sankarkumar said...

good film.
good review.
all d best..
sankarkumar.s

Cable சங்கர் said...

//”சாகுற நாள் தெரிஞ்சிட்டா, வாழற நாள் நரகமாயிடும்”கிற தலைவரோட வசனம் நினைவுக்கு வர்ரத தவிர்க்க முடியல!! :-) :-)
//

சுஜாதாவின் வசனம்

பிரியமுடன் பிரபு said...

'The Bucket List' படம் பாருங்க மிக அருமையான படம்...!!!

butterfly Surya said...

அருமையான படமும் விமர்சனமும்.

Raman Kutty said...

ஏங்க அப்படியே " the Bucket list" மாதிரியே இருக்கே, "Bucket list" பாத்தீங்களா!!

மேடேஸ்வரன் said...

கடந்த வருடம் டெல்லி சென்ற போது விமானத்தில் இந்தப் படத்தை மிக ரசித்தேன். பெயர் மறந்து போயிற்று. தற்போது அதைப் பற்றிய உங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

மேடேஸ்வரன் said...

கடந்த வருடம் டெல்லி சென்ற போது விமானத்தில் இந்தப் படத்தை மிக ரசித்தேன். பெயர் மறந்து போயிற்று. தற்போது அதைப் பற்றிய உங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

Nagasubramanian said...

நேஹாவிடம் காதலைச் சொல்லும் அந்த ஒரு சீனிற்காகவே படம் பார்க்கலாம். உண்மை. என்னை மிகவும் பாதித்த படம்.
நானும் நண்பர்களுக்கு மெயில் அனுப்பினேன், அவர்களுடைய இறுதி ஆசைப் பட்டியல் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில். பச் , ஒரு பய புள்ளையும் அந்த மெயில்ல மதிக்கல.
My desire is to visit all the places where I lived and to meet all the people & my friends who crossed my life. If possible, one big get together with every one

குறையொன்றுமில்லை. said...

எனக்கும் இந்தப்படம் ரொம்பவே பிடிச்சது. ஃபேமஸ் ஹீரோவோ, குத்துப்பாட்டோ டாய்னு கத்திட்டேவர வில்லனோ எதுவுமே இல்லாத தரமான படம்தான்.