
இப்போதான் ப்ரொஜெக்டை முடிச்சிட்டு, சைட்ல இருந்து ரெண்டு மாசம் கழிச்சு ஆபிஸ் வந்திருக்கேன். போன வாரம் முழுக்க, ஆபிஸ்ல இன்டர்நெட் வொர்க் ஆகாததால, சீனியர் ஸ்டாப்ஸ வீட்டுலேயே வொர்க் பண்ண சொல்லி லீவு குடுத்துட்டாங்க. இந்த திங்கக் கிழமைல இருந்து ஆபிஸ்ல எம்.டி. பங்க்சுவலா பத்து மணிக்கே வர்றதுனால, அவருக்கு முன்னாடி போகனும்னு பறக்க வேண்டி இருக்கு. ரெண்டு நாளா கொஞ்சம் ப்ரீயா இருந்ததால, பொழுது போகாம நிறைய பதிவுகளைப் படிச்சிட்டிருந்தேன். இன்னைக்கு வீட்டுல இருக்கும் போதே PM போன் பண்ணி, இன்னிக்கு நிறைய வொர்க் இருக்குன்னு இன்பார்ம் பண்ணிட்டாரு. மாசம் வேற ஸ்டார்ட் ஆகிட்டதால, New Assignments and Targets வந்துடுச்சு. நாலு நாள் வொர்க்கை குடுத்து, உனக்கு ரெண்டு நாள் தான் டைம் அதுக்குள்ளே முடிச்சுக் குடுங்குறார். "இல்ல சார், கஷ்டம்" அப்படினா, "Vigneshwari, why are you so panic. I have confidence on you that you will complete this" என்றார். ஒரு அசட்டு சிரிப்போடு அவர் கேபினிலிருந்து வெளியேறினேன். (என்னப் பத்தி எனக்கு தெரியாதா.... வேலையக் குடுத்துட்டு இப்படி வஞ்சப் புகழ்ச்சி வேற.)
**************************************************
நவராத்திரி விரதம் போய்ட்டிருக்கு. இன்னும் மூணு நாள் பாக்கி. இது தான் எனக்கு முதல் நவராத்திரி விரதம். அது என்னவோ, இப்போதான் Mc Donald Burger சாப்பிடணும்னு ஆவலா இருக்கு.இதை விட பெரிய கொடுமை சமைக்குறது தான். எனக்கு ஒரு நாளைக்கு அரைக் கிலோ வெங்காயம் வேணும். எல்லாத்துலேயும் வெங்காயம் சேர்த்து சமைச்சிட்டு, இப்போ ஏதோ பத்திய சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்கு. என்னவர் வந்து வெங்காயம், பூண்டு, மசாலா பொடி, மஞ்சள் பொடி, உப்பு, பருப்பு, அரிசி, ரவை, கோதுமை, மைதா இப்படி சேர்க்கக் கூடாத ஐட்டத்தோட லிஸ்ட் குடுத்ததும், என்ன தான் சாப்பிடுறதுன்னு கேட்டேன். குட்டு மாவு (நம்ம ஊர் கேழ்வரகு மாவு), எல்லா காய்கறிகள், பழங்கள், பால், தயிர், சேந்தா நமக் எனப்படுகின்ற உப்பு, ஜவ்வரிசி, குருணை மாதிரி ஒரு அரிசி இதெல்லாம் தான் சேர்க்கணும்னு சொன்னார். இதை வைத்து சமையல் செஞ்சு சாப்பிடுவதற்குள் போதும், போதும்னு ஆகிடுது. பெரும்பாலும் Fruit salad & Fruit Juice தான் சாப்பாடா போய்ட்டிருக்கு. நான் இது வரை விரதமே இருந்ததில்லை, ஏன்னா, சாப்பிடக் கூடாதுன்னு யார் சொன்னாலும் எனக்கு பிடிக்காது. கல்யாணத்துக்கப்புறம் மாமியார் சொன்னா, பிடிக்காதுன்னு சொல்ல முடியுமா...!!!!!! (இந்த weekend ஏதாவது நல்ல restaurant போய் நல்ல சாப்பாடு சாப்பிட்டு வரணும்)
போன வாரம் ஒரு பிரபல நியூஸ் சேனலை மத்தியான நேரத்தில பார்த்திட்டு இருக்கும் போது, அதுல ராமனோட பேரன் செத்தது எப்படி, கண்ணன் பண்ண லீலைகள் இப்படி வெட்டிக் கதை ஒரு மணி நேரமா போயிட்டிருந்தது. என்னவர் இதைப் பார்த்துட்டு, "பார்த்தியா, இந்த சேனலுக்கு எதுவும் நியூஸ் கிடைக்கலைனு எப்படி வெட்டியா ஓட்டிட்டு இருக்கானு. அங்கேயும் சம்பளம் குடுக்காம நிறைய நிருபர்கள குறைச்சதுனால தான் இப்படி" னார். அதுக்காக நியூஸ் சேனல்னு பேர் வச்சுட்டு சாமிக் கதையை விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்களேன்னு தலைல அடிச்சுட்டு டிவிய ஆப் பண்ணேன். (Recession இவ்வளவு மோசமாவா போய்ட்டிருக்கு...)
வாவ், என்ன ஒரு கிளைமேட் இப்போ டெல்லில. எல்லாரும் என்கிட்டே டெல்லி வர்றதுக்கு நல்ல சீசன் எதுன்னு கேப்பாங்க. அது மார்ச் தான்னு கண்டிப்பா சொல்லலாம். டிசம்பர், ஜனவரியில ஹீட்டர் இல்லாம வீட்டுல இருக்க முடியல. இப்போ ஹீட்டர், ஸ்வெட்டெர் எல்லாத்தையும் மூட்டை கட்டியாச்சு. fan உம் யூஸ் பண்றதில்லை. ரம்மியமான கிளைமேட். மழை வர்ற மாதிரி இருக்கு. ஆனா, சாயங்காலத்துல லேசாத் தூறிட்டு போய்டுது. ஆனா, அது வந்து போன சுவடு மட்டும் காயாம, சில்லுனு காத்தா வந்திட்டுருக்கு. இந்த டைம்ல ஷாப்பிங், ஊர் சுத்துறதுனு எல்லாம் பண்ணலாம். விடுவேனா, போன வாரம் மட்டும் நாலு நாள் நாள் ஷாப்பிங் போயாச்சு. இந்த வாரம் ஷாப்பிங் ஸ்பாட் "Chandhini Chowk". (எனக்கு குஷி. பாவம், அவர் பர்ஸ் தான் வெயிட் குறையுது ;) )
25 comments:
ஒவ்வொரு பத்திக்கும் நீயா கமெண்ட்ஸ் வேற போட்டுக்கிற எல்லாமே முன் ஜாக்கிரதையாவே பண்ற..ம்ம்.. நல்ல ஐடியாதான் இதுவும்.
Interesting post.
Thank you Mani and Purush.
Thaks for your invitation.Comparing here the climate is ok.But Vitamin C!
டெல்லி வரலாம்தான். செலவ நீங்க பாத்துக்கறீங்களா?
தாராளமா வாங்க வித்யா. ஆனா, ஷாப்பிங் செலவை நான் ஏத்துக்க மாட்டேன். மத்த செலவெல்லாம் அதிகம் இல்லை.
நவம்பரில் டெல்லி வந்து நம்ப கயல்விழி-முத்துலெஷ்மி அக்காகிட்ட நடுங்கிக்கிட்டே பேசிட்டு வந்தேன் :)
கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குமா ?? :) :)
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
"Vigneshwari, why are you so panic. I have confidence on you that you will complete this" என்றார்
இன்னுமா இந்த உலகம் உங்கள நம்மிக்கிட்டு இருக்கு ஹெ ஹெ
புது தில்லி ... வந்தா ஹிந்தி பேசுவாங்கலா .. எனக்கு தெரியாதே :-)
You are Welcome Venkatesan.
நவம்பர் குளிரெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க அப்துல்லா. முடிஞ்சா ஒரு தடவை, கிறிஸ்துமஸ், நியூ இயர் டைம்ல வந்து பாருங்க. குளிர் பிச்சிடும்.
SK, குளிர்ச்சினா????????
இன்னுமா இந்த உலகம் உங்கள நம்மிக்கிட்டு இருக்கு ஹெ ஹெ ///
அட, விடுங்க சுரேஷ். இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே தான் உடம்பு ரணகளம் ஆகிட்டிருக்கு.
புது தில்லி ... வந்தா ஹிந்தி பேசுவாங்கலா .. எனக்கு தெரியாதே :-) ///
நான் இருக்கேன்ல, ஹிந்தியப் பார்த்து பயப்படாதீங்க. வாங்க சமாளிச்சுக்கலாம்.
//அப்துல்லா. முடிஞ்சா ஒரு தடவை, கிறிஸ்துமஸ், நியூ இயர் டைம்ல வந்து பாருங்க. //
ச்சும்மா ஃபார்மால்டிக்கு சொல்லாதீங்க... நான் நிஜமாவே வந்துருவேன்
:)
அட, வாங்கன்னு தான சொல்றேன் அப்துல்லா.
மார்ச் மாசம் தானே அங்கே வெயில் பொளக்க ஆரம்பிக்கும்?
அதை போயி நல்ல கிளைமேட்னு சொன்னா எப்படி?
நாங்க (நான், மனைவி, மகன்) போன வருஷம் பெப்ரவரி கடைசில டெல்லி, ஆக்ரா பாக்க வந்தோம். மார்ச் ஒன்றாம் தேதியே வெயில் சுட்டெரிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒரே ஓட்டமா சென்னை திரும்பிட்டோம்!
இல்லை Joe, இப்போ ரொம்ப நல்ல வெதர் இங்கே. வெயில் லேசா இருக்கு. பொளக்கற மாதிரி இல்லை. போன மார்ச்ல நான் Ahmedabad ல இருந்தேன். அங்கே வெயில் பயங்கரம். ஆனா, டெல்லி எப்படி இருந்ததுன்னு தெரியல. நான் ஏப்ரல்ல தான் திரும்பினேன்.
சுவாரசியமா இருக்கு உங்க துணுக்ஸ்!
//ராமனோட பேரன் செத்தது எப்படி, கண்ணன் பண்ண லீலைகள் இப்படி வெட்டிக் கதை ஒரு மணி நேரமா போயிட்டிருந்தது. //
இதெல்லாம் கொஞ்சம் இல்ல..ரொம்பவே ஓவர்!
நன்றி சந்தன முல்லை
restaurant போனீங்களா ??
ஆமா SK. அதைப் பத்தி ஒரு பதிவு படங்களுடன், கூடிய விரைவில். :)
அடங்க படங்களோட நீங்களுமா ??
நல்ல இருங்க.. ?? வாழ்க வளமுடன்.
பெங்களூரில் இருக்கும் ஃபோரம் மாலில் இருப்பதைப் போன்ற ஒரு படத்தை போட்டிருக்கீங்க.
வணிக வளாகத்தின் உள்ளே ஒரு ஈச்ச மரம்.. நல்ல படம்.
இது எங்க ஊர் Mallங்க. GIP - Great India Place.
Post a Comment