இந்த பதிவை எழுதனும்னு போன மாசத்துல இருந்து நினைச்சிட்டு இருக்கேன். ஆனா, நேரம் கிடைக்கல. ஒரு வழியா, இப்போ நேரம் கிடைச்சுடுச்சு. போன மாத விரத தின ரெஸ்டாரண்ட் Haldirams.

விரத மெனு போர்டை வாசலிலேயே வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கும் போது, நல்லா இருக்கும் என்ற எண்ணம் வரவேயில்லை. நான் இங்கு சொன்ன மாதிரி, அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லாமல் எப்படி ருசியாய் சமைப்பது என்ற கேள்விகளுடன், அவரின் வற்புறுத்தலுக்காக போனேன். என்ன சாப்பிட என பத்து நிமிடம் சிந்தித்து விட்டு கடைசியாய், வ்ரத் தாலி (விரத சாப்பாடு) என முடிவு செய்தோம். நவராத்திரி வ்ரத் தாலிக்கு பெயர் போனது Haldirams என எனக்கு அப்போது தெரியாது. அடடே, என்ன ருசி. வாயில் வைத்ததுமே "WOW" என வந்தது. என்னவரிடம், தினமும் சமைத்து விட்டு, எப்படி இருக்குன்னு கேட்டாக்கூட ஒன்னும் சொல்ல மாட்டார். சில நேரங்களில் ஒன்னும் கேட்காமலே 'வாவ்' என்பார். அதன் அர்த்தம் அப்போது தான் எனக்குப் புரிந்தது.

சமக் ரைஸ் கிச்சடி - குருணை போன்ற ஒரு அரிசியில் கிச்சடி செய்திருந்தார்கள். அடடா என்ன ருசி.

குட்டு (கேப்பை) பராட்டா - கேப்பை மாவுல என்னால ரொட்டியே பண்ண முடியல. ஆனா இங்க அழகா டேஸ்ட்டா பராட்டா.

அரபி கி (சேப்பங்கிழங்கு) சப்ஜி - அது சேப்பங்கிழங்குனு மெனு கார்டு பார்த்து தான் தெரிஞ்சது. சேப்பங்கிழங்குல இவ்வளவு யம்மியா ஒரு டிஷ்ஷா....

பனீர் மக்னி - Haldirams பனீர் மக்னி பத்தி சொல்லவே வேணாம். அங்க பனீர் மக்னி சாப்பிட்டவங்க அதை எப்போ நினைச்சாலும் ருசிக்கும்.

ஸ்வீட் ஃப்ருட் ரைதா - இதுக்காகவே இந்த தாலி செலக்ட் பண்ண அவருக்கு தேங்க்ஸ். ரொம்ப ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டேன்.

பேருக்கு குகும்பெர் சாலட் - அதான் சொல்லியாச்சே. பேருக்கு ஒரு சாலட்.

ரசகுல்லா - Haldirams ரசகுல்லா எப்போவுமே நல்லா இருக்கும். Yummy.
நாங்க சாப்பிட்டது ஸ்பைஸ் மாலில் இருக்கும் Haldirams இல். இரண்டு பேருக்கு டாக்ஸ் சேர்த்து 310 ரூபாய் ஆனது. வெங்காயம் வெள்ளைப்பூண்டு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் இவ்வளவு நல்ல சாப்பாடு சாப்பிட தாராளமாக செலவு செய்யலாம். ஆனா சாப்பாடு அளவு ரொம்ப அதிகம். பாதிக்கு மேல வேஸ்ட் பண்ண வேண்டியதா போச்சு.
24 comments:
அவுங்களோட கூட்டு சேராதீங்க ப்ளீஸ்.. :)
நல்ல ஐடியா .. எழுதுங்க இங்க புதுசா வரவங்களுக்கு நல்ல உதவி. :)
\\வாயில் வைத்ததுமே "WOW" என வந்தது\\
என்னது வாந்தியா?
நல்லாருந்தது. பேசாம புட்டீஸ் எல்லாம் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிச்சிடலாம்.
அவளோ தானா மெனு..
என்னை இப்போவே பன்னீர் மக்கானி சாப்பிடனும் போல இருக்கே :) :) :)
யோவ் SK. உனக்கேன்யா காண்டு?
விக்னேஷ்வரி SK சொல்றதெல்லாம் கேக்காதீங்க. வாங்க பழகலாம்:)
வித்யா, நீங்களும் நானும் இங்கே அடிச்சு ஆட ஆரம்பிச்சா.. விக்னேஷ்வரி இன்னைக்கு முழுக்க ஆபிஸ்ல ஒக்காந்து கமெண்ட் ரிலீஸ் பண்ணிடே இருக்க வேண்டியது தான் :) :) :)
அவுங்களோட கூட்டு சேராதீங்க ப்ளீஸ்.. :) //
கூட்டு சேரலீங்க. தனித்தனியா போய் தனித்தனியா எழுதுறோம். :)))))))
நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி
என்னது வாந்தியா? ///
:(((((
பேசாம புட்டீஸ் எல்லாம் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிச்சிடலாம். //
கண்டிப்பா ஆரம்பிக்கலாம் வித்யா. SK இன்னும் அழுவாரு. :)
என்னை இப்போவே பன்னீர் மக்கானி சாப்பிடனும் போல இருக்கே :) :) :) //
நீங்களே பண்ணுங்க SK. நான் வேணும்னா, ரெசிபி தர்றேன்.
யோவ் SK. உனக்கேன்யா காண்டு?
விக்னேஷ்வரி SK சொல்றதெல்லாம் கேக்காதீங்க. வாங்க பழகலாம்:) ///
:)))))))))
SK, வித்யாக்குள்ள இருக்கற ரவுடிய தட்டி எழுப்பாதீங்க.
வீட்டுல செய்யற மாதிரி பன்னீர் மாகாணி ரெசிபி இருந்தா சொல்லுங்க.. முயற்சி செஞ்சு பாத்துடறேன் :)
ஒரு சின்ன புள்ளைய அழ வைக்கறதுன்னா என்ன ஒரு வில்லத்தனம்.. :)
/// வித்யாக்குள்ள இருக்கற ரவுடிய தட்டி எழுப்பாதீங்க. ///
என்னால சொல்ல முடியாததை நீங்க சொன்னதற்கு வாழ்த்துக்கள் :) :)
சோ ரெண்டு பெரும் கூட்டு சேர்ந்துட்டீங்க :)
ஆகா..படத்தைப் போட்டு பசியை தூண்டிவிட்டுட்டீங்க! நல்ல ரெவ்யூ! ஹல்டிராம்-ன்னாலே ரசகுல்லாதான் என் மனசுலே முதல்ல வரும்! :-)
ஏங்க உங்களை தலைமை "உணவாளியாக" நியமித்து ஒரு சாப்பாடு கடை துவங்குவோமா.....????
நான் வெஜிடேரியன் உணவு பத்தி எழுதுங்க. ப்யூர்லி நான் வெஜிடேரியனாக்கும்!
Very interesting review.
It is news for me to hear that Haldirams also having restaurant. Other Haldirams products are available in Singapore.
ஒரு சாப்பாடு 150 ரூபாய்-க்கு மேல? விலைவாசி ரொம்ப தான் ஏறிப் போச்சு நம்ம நாட்டில.
So tempting :)
வீட்டுல செய்யற மாதிரி பன்னீர் மாகாணி ரெசிபி இருந்தா சொல்லுங்க.. முயற்சி செஞ்சு பாத்துடறேன் :) //
உங்க மெயில் ஐடி குடுங்க SK. நான் ரெசிபி அனுப்புறேன்.
என்னால சொல்ல முடியாததை நீங்க சொன்னதற்கு வாழ்த்துக்கள் :) :) //
ஏங்க, இப்படி சண்டை மூட்டி விடுறீங்க.
ஹல்டிராம்-ன்னாலே ரசகுல்லாதான் என் மனசுலே முதல்ல வரும்! :-) //
அங்கே எல்லாமே மனசுல சாரி, நாவில் நிற்கும் சுவை தான் முல்லை.
ஏங்க உங்களை தலைமை "உணவாளியாக" நியமித்து ஒரு சாப்பாடு கடை துவங்குவோமா.....???? //
நான் ரெடி சத்யா. நீங்க ரெடியா...
நான் வெஜிடேரியன் உணவு பத்தி எழுதுங்க. ப்யூர்லி நான் வெஜிடேரியனாக்கும்! //
ஆனா, நான் ப்யூர்லி வெஜிடேரியன் லதானந்த் சார். :)))))
Try Haldirams restaurant when you come to India Purush.
Joe, டெல்லில 150 ரூபாய் நார்மல். இதை விட கம்மிய்யா இந்த அளவு நல்ல ஃபுட் வேற எங்கேயும் கிடைக்காது.
Thank you பட்டாம்பூச்சி.
எப்படிங்க இப்படி :) :) :)
இப்படி எப்படி? :O
நான் என்னோட ஈமெயில் ஐடி கொடுத்து கமெண்டை முழுமையாக படிக்கவும் :) :)
நீங்க தானே Pls. publish this comment. :) Thanks ன்னு சொன்னீங்க.
நீங்க சொன்னதால தான் நான் பப்ளிஷ் பண்ணேன். எதுவும் பிரச்சனையா....
ஏவ்வ்வ்வ்வ்வ்...
:)))
///வாயில் வைத்ததுமே "WOW" என வந்தது.//
அய்யய்யோo அப்புறம் ...???
டேபிள் மேeயே வாந்தி எடுத்துட்டீங்களா?
அதுக்குள்ளே ஏப்பமா அப்துல்லா அண்ணே.
டேபிள் மேலேயே வாந்தி எடுத்துட்டீங்களா? //
:(((((((
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment