கோலாப்பூரின் அருகிலேயே ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள், மலைவாசஸ்தலங்கள். மாலை நேரத்தில் சட்டென்று போய் வர இருபது கிலோ மீட்டர் தூரத்தில் பனாலா(Panhala) என்றொரு மலைப் பிரதேசமிருக்கிறது. அங்கிருக்கும் சிவாஜி மஹாராஜாவின் கோட்டை மிகப் பிரபலமானது. ஏறக்குறைய சிதைந்து விட்ட அக்கோட்டையின் மேலேயிருந்து கோலாப்பூர் மற்றும் சுற்றியிருக்கும் பல ஊர்களையும் காண முடிகிறது. மன்னர்களின் ஆட்சி இப்போது இல்லையெனினும் இன்னும் கூட அம்மக்கள் மன்னர்களுக்குத் தங்கள் மனதில் வைத்திருக்கும் மரியாதை ஆச்சரியப்பட வைக்கிறது. இவ்வூரிலிருந்து ஷீரடி, கோவா, மஹாபலேஷ்வர், பெல்காம் என முக்கியமான இடங்கள் அருகிலிருப்பது சிறப்பு. கோலாப்பூர் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் தனிக் கட்டுரை எழுத நினைத்துத் தள்ளிக் கொண்டே போகிறது. விரைவில் எழுத வேண்டும். (கோவா அல்லது மும்பை வரை விடுமுறையில் போகிறவர்கள் கோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கும் சென்று வரலாம். அமைதியான இடம்.)
*************************************************************************************************************
மும்பை எனக்கு வாழ்நாள் கனவு. டெல்லியோ, மற்ற பெரு நகரங்களோ தராத ஒரு மகிழ்ச்சி மும்பையில் இறங்கிய அந்த நிமிடம் எனக்குத் தந்தது. சிறு வயதிலிருந்தே “பம்பாய்!” எனும் பிரம்மிப்போடே பார்த்திருக்கிறேன். அப்போது இண்டியா கேட்டை விட கேட் வே ஆஃப் இண்டியாதான் கனவாக இருந்தது. பெரிய, தொன்மையான கட்டிடங்கள் கொண்ட தென்மும்பையில் கழட்டி விட்ட எருமை போன்ற நிதானமான நடை நல்ல அனுபவத்தைத் தந்தது. மும்பையில் யாரும் நடக்க மாட்டார்கள், ஓடிக் கொண்டு தானிருப்பார்களென யோகி சொன்னதை அனுபவிக்கையில் வித்தியாசமாக இருந்தது. மும்பை ஹிந்தி கொடுமை. சென்னைப் பேட்டைத் தமிழ் போலிருந்தது. எங்கும் ஜனத்திரள். மூச்சு முட்டும் கூட்டம். புறாக்கூண்டு போன்ற வீடுகள். பறவைகள் கூட நேரம் கணக்கிட்டுப் பறக்கும் போல. யாருக்கும் எதற்கும் நேரமில்லை. எல்லாமே கடிகார முட்களைக் கணக்கிட்டே நடந்தன. எல்லாவிதமான மக்களையும் பார்க்க முடிந்தது. எப்போதும் தங்களைக் கொஞ்சம் உயர்மட்டமாகக் காட்டிக் கொள்ளும் தில்லி மனிதர்களிடையே வாழ்கையில் மும்பை ஒரு புது அனுபவம் தந்தது. (முக்கியமா ஜுஹூ பீச் பக்கத்துல ஒரு கார்னர்ல திருநெல்வேலிக்காரர் வெச்சிருக்கற பாவ்பாஜிக்கடை அபாரம். செம டேஸ்ட்டான பாவ்பாஜி. நிச்சயம் முயற்சியுங்கள்.)
*************************************************************************************************************
தமிழ்மணத்தின் சேவை ஒவ்வொரு பதிவரும் அறிந்ததே. அத்தமிழ்மணத்தின் ஓட்டுகள் ஆரம்பமாகிக் கோலாகலமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சகபதிவர்களிடமிருந்து வரும் ஆர்வக்கோளாறான மெயில்கள் சலிப்பைத் தருகின்றன. எனக்கு ஓட்டுப் போடுங்கள். போட்டால் நானும் உங்களுக்குப் போடுவேன் என்கிற ரீதியில் வரும் மெயில்களைப் பார்க்கையில் என்னவென்று சொல்ல... அரசியலில் ஓட்டு வேட்டை நடந்தால் கொதித்தெழுந்து பதிவெழுதும் பொறுப்புள்ள பதிவர்கள் இது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயலைச் செய்யலாமா...
*************************************************************************************************************
டெல்லிக் குளிருக்கும், அதனால் பரிசளிக்கப்பட்ட வைரல் காய்ச்சலுக்கும் நன்றி. அலமாரியில் எத்தனை புத்தகங்கள் உள்ளன, முடித்தவை எத்தனை, பாதியில் தொக்கி நிற்பவை எத்தனை, புத்தக வாசமே போகாமல் விரல் படாமலிருக்கும் புத்தகங்கள் எத்தனையென சென்செஸ் எடுத்து ஒவ்வொன்றாக நிதானமாய் வாசிக்க நேரம் கிடைத்தது. வாசிக்க வாசிக்க “என்னை இவ்வளவு நாளாய் உள்ளே பூட்டி வைத்த துரோகி”யெனப் புத்தகங்களெல்லாம் என்னை ஏசுவதாய் உணர்கிறேன். சோம்பேறித்தனத்தின் குற்ற உணர்ச்சி மேலிட தினமும் குறைந்தது 20 பக்கங்கள் வாசிக்க வேண்டுமெனத் தீர்மானமெடுத்துள்ளேன். கொஞ்சம் கொஞ்சமாக பக்கங்களைக் கூட்டிக் கொள்ளலாம். (அதே தான்... இனி மாசம் ஒரு புத்தக அறிமுகம் தான்.)
*************************************************************************************************************
இரண்டு புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே நண்பர்களின் பரிந்துரைகள். ஒன்று நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்; மற்றொன்று அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம்.
நண்பனுக்காக அவனுக்கு வேண்டிய புத்தகமொன்றைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கப் போனபோது அங்கிருந்த புத்தக விற்பனையாளர், “இப்புத்தகம் எழுதியவர் இங்கு தானிருக்கிறார். கையெழுத்து வாங்கித் தரவா” என்றார். சரியென அவர் கையெழுத்துடனான புத்தகத்தை நண்பனுக்குப் பரிசளித்துவிட்டுத் திரும்பினேன். புத்தகத்தைத் திறந்து பார்த்தவன், அலாரமென அலறி என்னையழைத்துத் திட்டித் தீர்த்தான். “அவர் அங்கே ஸ்டால்ல இருந்தார்ன்னு ஏன் சொல்லல...” மெல்ல திட்டு வாங்கி ஃபோனை வைத்த பின் தான் அந்த எழுத்தாளரைப் பற்றியறியும் ஆர்வமும் அவரெழுத்துகளைத் தொடரும் வேகமும் வந்தன. தொடர்ந்து அவரின் இணையத்தில் வாசித்து வந்தாலும் அவரது புத்தகங்களை வாசிக்கும் தகுதியிருக்கிறதா எனத் தெரியாததால் இன்னும் அவ்ரெழுத்துகளை வாசிக்க ஆரம்பிக்கவில்லை. என் பெருமதிப்பிற்குரிய நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் வசியமான மனது அவரின் சிறுகதைகளில் ஒன்றாது போனது என் துரதிருஷ்ட்மே. சீக்கிரமே அவரின் சிறுகதைகளை உள்வாங்கும் வாசிப்பிற்கு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன்.
அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம். அய்யனாரின் எழுத்துகளை மோகிக்கும் நண்பனின் பரிந்துரை. புத்தகத்தின் பெயரே மிகப் பிடித்தமாயிருக்கிறது. இப்புத்தகத்தைப் பற்றித் தனியே எழுத வேண்டுமென்பதால் இங்கே ஒரு முற்றுப்புள்ளி. (தனிப் பதிவெழுதாம விடமாட்டியே!)
*************************************************************************************************************
கோலாப்பூரில் ஒரு மல்டிகுஸின் ரெஸ்டாரண்ட்டை சக ஊழியரின் பரிந்துரையின் பேரில் முயற்சித்தேன். அபார ருசி. வாயிலேயே நுழையாத பெயர்கள். முதல் நாள் சாப்பாடு நன்றாக இருந்ததால் அடுத்த நாள் மறுபடி போனோம். விரைவிலேயே உங்கள் வயிறெரியப் படங்களுடன் பதிவு வரும். (நோ நோ... நோ பேட் வேர்ட்ஸ்)
*************************************************************************************************************
யோகி டைம்ஸ்
முன்பெல்லாம் ஏதாவது கோபம் வந்தால் நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு ஏதாச்சும் தமிழ்ல சொல்லிப்பேன். ஆனா இப்போல்லாம் முடியறதில்லை. அதிகம் என்னைக் கவனிக்கிறார் என்னவர். அப்படிக் கவனித்து அவராகவே கற்றுக் கொண்டு இப்போதெல்லாம் அடிக்கடி உபயோகிக்கறது... “அய்யோ, கடவுளே, கடவுளே.. கிடே வில்லே”
நான் ஏதாச்சும் தப்பு பண்ணாலோ இல்ல லூசுத்தனம் செஞ்சுட்டாலோ இது தான் அவர் டயலாக். “அய்யோ கடவுளே, கடவுளே” இது என்கிட்ட இருந்து கத்துக்கிட்டது. இதைத் தொடர்ந்து வரும் “கிடே வில்லே” பஞ்சாபி வார்த்தை. “எந்த நேரம்” எனப் பொருள். என் பேக்குத்தனங்களுக்கு அவர் சொல்ல வரும் அர்த்தம் இது தான்.
“அய்யோ கடவுளே, கடவுளே, எந்த நேரத்துல இவளை எனக்குக் குடுத்த...”
(ஙே!)
34 comments:
(கோவா அல்லது மும்பை வரை விடுமுறையில் போகிறவர்கள் கோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கும் சென்று வரலாம். அமைதியான இடம்.)//
மைன்ட்ல வெச்சிகிறேன் யூஸ் பண்ணிகிறேன்... பகிர்வுக்கு நன்றி
புனேயின் பழைய சீதோஷ்ணநிலை இப்போது கோலாப்பூருக்கு வந்து விட்டது... புனே மும்பை மாதிரி மாறத்தொடங்கி விட்டது...
மும்பையில் நடந்து சென்றால் ஓடுபவர்கள் தள்ளி விட்டு ஓடி விடுவார்கள் என்று யோகி சொல்ல வில்லையோ... (எத்தனை லோக்கல் ட்ரைன் விட்டீங்க?). அத்தோட மும்பையில் பேசுவது பெரும்பாலும் மராத்தி தான்... அதனால் தான் அதையும் ஹிந்தியையும் போட்டு மென்று துப்புவார்கள்... அப்புறம் மும்பையில் கொஞ்ச காலம் வாழ்ந்தால் மற்ற ஊரை சோம்பேறிகளின் ஊர் என்றே சொல்ல நினைக்கத்தோன்றும்...
புத்தகங்கள் - பெரும்பாலும் இப்போதெல்லாம் பேருந்து பயணங்களின் போது தான் நன்றாக தூங்க முடிகிறது என்பதால் அலமாரி படிக்காத புத்தகங்களால் நிரம்பி வழிகிறது...
பரவாயில்லேயே... யோகி நல்லா தன்ஜாபி (தமிழ் + பஞ்சாபி) பேச ஆரம்பிச்சுட்டாரே... புது தமிழ்... அய்யா கலைஞரிடம் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கவும்...
யோகி டைம்ஸ் சூப்பர் ... புத்தகம் நானும் நாஞ்சிலார் புத்தகம் இப்பதான் வாங்கி இருக்கேன். கோலாப்பூர் போகணும்
அடடா... நான் மும்பைலே இருக்கும்போது வராமே போயிட்டீங்களே... நான் இப்ப சென்னைலே இருக்கேன்... இருந்தாலும் எனக்கு மும்பை தான் பிடிச்சிருக்கு....
கோலாப்பூர், மும்பை, ’கிடே வில்லே’ - எல்லா அனுபவங்களும் சுவாரசியம். எனக்கும் மும்பை மீது ஒரு கண் முன்பு உண்டு; இப்பல்லாம் பயம்தான் (பாம்பிளாஸ்ட் + பால் தாக்கரே!!) :-)))))))
வளர்ந்து வரும் பெரும் இலக்கியவாதி விக்கி அவர்களே,
பதிவு நன்றாக இருக்கிறது.
பயணம், நகைச்சுவை, நூல் அறிமுகம் எல்லாம் கலந்த நல்ல கலவை. நன்று.
ம், போய்ட்டு வாங்க அருண். நல்ல இடம்.
புனே, மும்பை - சரியா சொன்னீங்க வித்தியாசமான கடவுள். கொஞ்சம் வாசிக்க நேரம் ஒதுக்குங்க. வாசிப்பு ஒரு அளவிடமுடியாத மகிழ்ச்சியைத் தருவதென்னவோ உண்மை தான்.
வாங்க எல்.கே. நன்றி. நாஞ்சிலாரோடது என்ன புத்தகம் வாங்கியிருக்கீங்க..
நீங்க மும்பைல இருக்கும் போது வந்திருந்தா பாவ் பாஜி ஸ்பான்ஸர் பண்ணிருப்பீங்களா நையாண்டி நைனா... ஆமான்னா சொல்லுங்க, அந்த ஸ்பான்ஸர்ஷிப்பை சென்னையில் வாங்கிக்கலாம். ;)
நன்றி ஹூஸைனம்மா. பயப்படாம போய்ட்டு வாங்க. நம்மளைப் பார்த்து தான் மத்தவங்க பயப்படணும். நாம பயப்படலாமா...
நன்றி கவிதாயினி வித்யா. ஏன் இந்தக் கொலைவெறி. உங்களைத் தனியா கவனிச்சுக்கறேன்.
நன்றி வெங்கட்.
அருமை விக்கி.
கோலாப்பூர் தகவல்கள் அருமை.போக வேண்டும்.
பூனே பற்றி எழுதுங்கள்.
சாகித்ய அகாடமி கிடைச்சிருக்கிற நேரத்துல நாஞ்சில் நாடனைப் படிக்க ஆரமிச்சிருக்கீங்கக்கா! படிச்சு முடிச்சுட்டு அதுபத்தியும் ஒரு பதிவு போடுங்க! படிச்சுத் தொலைக்கிறேன்! என்ன, கடுப்பாயிட்டீங்களா? படிச்சு, உங்க பதிவின் சுவாரஸ்யத்துல என்னைத் தொலைக்கிறேன்னு சொல்ல வந்தேன். எப்பூடி? :)
//கழட்டி விட்ட எருமை போன்ற நிதானமான நடை//- Nice :)
Looking forward to your Book reviews !
ஒரு மிகப்பெரிய அனுபவ விருந்து தந்திருக்கிறது இந்தப் பதிவு பகிர்வுக்கு நன்றி தோழி . சுற்றுலாத் தளங்கள் மற்றும் புத்தகங்கள் பற்றிய அறிமுகம் சிறப்பு
அனைத்தும் கலந்த செய்திகளின் பதிவு நன்று
//(கோவா அல்லது மும்பை வரை விடுமுறையில் போகிறவர்கள் கோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கும் சென்று வரலாம். அமைதியான இடம்.)//
எனக்கும் பயன்படும்..
ஙேஙே
ஒரு நல்ல கம்பேக் பதிவு... இன்ட்ரஸ்டிங்..
விரைவில் என் புத்தகங்களையும் வாங்கி உங்கள் அலமாரியை அழகுபடுத்துங்க.. விக்கி..:))( எப்படியெல்லாம் ப்ரோமோட் பண்றோம் பாருங்க..)
:-)ஙே சூப்பரு.....
நாஞ்சிலாரின் இப்போ விருது கிடைத்த சூடிய பூ சூடற்க வையும் படியுங்கள்.. அப்புறம் எட்டுதிக்கும் மதயானை நாவலும்...
Welcome back after the break. Hope you are fine now.
பயணம், நகைச்சுவை, நூல் அறிமுகம் எல்லாம் கலந்த பதிவு நன்றாக இருக்கிறது.
கோலாப்பூர் பற்றிய பகிர்தல், நூல் அறிமுகம், யோகி டைம்ஸ், அனைத்தும் அருமை.
யோகி டைம்ஸ் அருமை..
இந்த மாதிரியான பயண கட்டுரையைத்தான் எதிர்பார்த்தேன்.,
எனக்கு எந்த பதிவுக்கும் வோட்டு போடாதீங்க ., போட்டால் உங்களுக்கு மைனஸ் வோட்டு போடுவேன்.....( எப்பூடி...??!!!
(கோவா அல்லது மும்பை வரை விடுமுறையில் போகிறவர்கள் கோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கும் சென்று வரலாம். அமைதியான இடம்.
பின்னொரு நாளில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சென்று வருகிறேன் விக்கி
பவுத்த அய்யனார்-தானே,அல்லது வேற அய்யனரா?.
பகிர்வுக்கு நன்றிங்க
ஹிந்தி+மராட்டி+கொங்கணி எல்லாம் சேர்ந்த உச்சரிப்புதான் இங்கே :-))
ஹலோ,
கோலாப்பூர் அறிமுகம் சூப்பர்.
அப்புறம்,,,, ஆமா,,,, கொஞ்சம் அதிகமாகவே வாசிக்கறீங்களா விக்கி...,,,,,?????
கோலாப்பூர் பயணம்,மும்பை பயணம்,புத்தக அறிமுகம்ன்னு ஒரு கலவையா அசத்திட்டீங்க.சீக்கிரமே புத்தகத்தை படித்து விட்டு, ச்த்சிப் ப்ச்ற்றிஎழுதுங்க.
//“அய்யோ கடவுளே, கடவுளே, எந்த நேரத்துல இவளை எனக்குக் குடுத்த...”//
அது ஒரு ராகு காலம் ;)
நிறைய நாளுக்கப்புறம் உங்கள்பதிவுகளை அடிக்கடி பார்க்கிறேன் விக்னேஸ்.
ரசித்து எழுதுகிறீர்கள் !
பகிர்வு நல்லாயிருக்குங்க...
அந்த கோட்டை மிக வியந்தேன்.
//
தென்மும்பையில் கழட்டி விட்ட எருமை போன்ற நிதானமான நடை நல்ல அனுபவத்தைத் தந்தது
//
ஹா ஹா........ நல்ல உவமானம்....... பல நேரங்களில் நானும்........
புத்தகங்களும், நண்பர்களும் இல்லா வாழ்வு வெற்று வாழ்வு.
இப்பல்லாம் நண்பர்கள் புத்தகங்களா வாங்கி குடுக்குறாங்க ( பல நேரங்களில் வாங்கி குடுக்க வைக்கப்படுகின்றார்கள் என்பதே சரியா இருக்கும்) . எவ்ளோ டென்ஷனா வந்தாலும் கொஞ்ச நேரம் ஏதாச்சும் ஒரு புக்க எடுத்து வாசிச்சா அப்டியே ரிலாக்ஸ் ஆயிருவேன்.
நாஞ்சில் நாடான் இன்னும் படிக்கல. விரைவில் முயற்சிக்கிறேன்.
மும்பையின் பரபரப்பு என்னை சற்று மிரட்டியது என்பது தான் உண்மை. என்னால மனம் ஒன்றி அங்க இருக்க முடியல.
கோலப்பூர் செருப்பு ரொம்ப ஃபேமஸ். ஷீரடி போகனும்னு ஆசை இருக்கு, அப்டியே கோலாப்பூரும் பார்க்க ட்ரை பண்றேன் .
யோகிக்கு ரொம்ப தமிழ் தெரிஞ்சுட்டா ஆபத்தாச்சே?
Post a Comment