Wednesday, January 5, 2011

முத்த மார்கழிகாகிதத்தில்
காதல் செதுக்கி
நீட்டினேன் கிறுக்கலாய்.
எனக்காகவா எழுதினாய் என்கிறாய்.
என் மொழியே நீயாகிவிட்ட பின்
வார்த்தைகள் மட்டும்
வேறெங்கு கருக்கொள்ளும்...

****************************************************************************************************

முத்தம்
முற்றுப் புள்ளியாயிருப்பதில்லை எப்போதும்.
அதிகாலை விழிப்பு
தேனீர் வெதுப்பு
ஈரக்கூந்தல் துவட்டல்
விரையும் அலுவல் போது
வீடடையும் அந்தி
கொட்டும் இரவுப் பனி
கூடிக்களையும் சாமம்
சாத்தியம் எதுவாயினும்
உன் வன்முத்தம்
முற்றுப் புள்ளியாயிருப்பதில்லை
ஒரு போதும்

****************************************************************************************************

அசந்து உறங்கிக் கொண்டிருந்த
பின்னிரவில் அழைத்தாய்
நீளாத முன் தூறல் பேச்சு
ஒற்றைக் கன முத்தத்துடன்
துண்டித்தாய் தூரபேசியை.
நீ தூங்கிப் போனாய்.
நான் தான்-
இரவின் வளர்சிதை மாற்றத்திற்கு
விடியல் வரை சாட்சியாய்.

****************************************************************************************************

எந்தப் பூவெனத் தெரியவில்லை.
தெருவோரத்து மரத்திலிருந்து
வீதியெங்கும் வாசம் நிறைக்கிறது.
உயிருருக்கும்
மார்கழி வைகறைக் குளிரில்
மொட்டை மாடி பிறை சந்திரனுக்குத் துணையாய்
தனிமையை ரசிக்கிறேன்.
விழிமூடித் தலையுயர்த்துகிறேன்.
கூடவே-
உன் வெம்முத்தத்தை
நினைத்துக் கொள்கிறேன்.

****************************************************************************************************

எப்போதும் காதலில்
விழுவதில்லை நான்.
ஒவ்வொரு முறையும்
என்னை எழத் தான் செய்கிறது
உன் காதல்.

****************************************************************************************************

மீண்டெழும் இடம் தான்
வெவ்வேறாய் இருக்கிறது
ஈர்க்கும் உன் விழிகளில்
அணைக்கும் உன் கரங்களில்
ஊண் உறைக்கும் உன் முத்தங்களில்
உயிர் வாங்கும் உன் ஸ்பரிசத்தில்.
விரும்பித் தொலைகிறேன்
ஒவ்வொரு முறையும்
குழந்தையிடம்
அகப்படவென்றே
ஒளியும் தாயாய்.


37 comments:

அமுதா கிருஷ்ணா said...

nice..

முரளிகுமார் பத்மநாபன் said...

நல்லாயிருக்கு விக்கி

ஜெ.ஜெ said...

காகிதத்தில்
காதல் செதுக்கி
நீட்டினேன் கிறுக்கலாய்.
எனக்காகவா எழுதினாய் என்கிறாய்.
என் மொழியே நீயாகிவிட்ட பின்
வார்த்தைகள் மட்டும்
வேறெங்கு கருக்கொள்ளும்...//////

ரொம்ப நல்லா இருக்கு... :)

Chitra said...

wow! simply superb!

வித்தியாசமான கடவுள் said...

மார்கழி மாத டெல்லி குளிர் உங்களை நன்றாகவே ஆட்டிப்படைத்திருக்கிறது என்று தெரிகிறது... இன்னொரு திருப்பாவை எழுதிட்டீங்களே...

trdhasan said...

வன்முத்தம்
//

கலக்கறீங்க.

mvalarpirai said...

super..romantic.

வார்த்தை said...

நான் சொல்ல வந்தத "வித்தியாசமான கடவுள்" சொல்லிடாப்புல ....

i repeat...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ada.........

Mohan said...

காதல் வழிந்தோடுகிறது எல்லாக் கவிதைகளிலும்!

Nagasubramanian said...

//எப்போதும் காதலில்
விழுவதில்லை நான்.
ஒவ்வொரு முறையும்
என்னை எழத் தான் செய்கிறது
உன் காதல்.//
superb!

ர‌கு said...

//ஒவ்வொரு முறையும்
குழந்தையிடம்
அகப்படவென்றே
ஒளியும் தாயாய்//

இந்த‌ வ‌ரிக‌ள் ரொம்ப‌ பிடிச்சிருக்கு விக்கி...வெரி நைஸ்

இராமசாமி said...

அசத்தறீங்க :)

ஈரோடு கதிர் said...

மார்கழிக் குளிர் எல்லாப் பக்கமும் அதிகம்! :)))

ஹேமா said...

ுழந்தையிடம்
அகப்படவென்றே
ஒளியும் தாய் மிகவும் அழகாய் ஒளிர்கிறாள் சகோதரி !

கிருபாநந்தினி said...

\\ஒவ்வொரு முறையும்
குழந்தையிடம்
அகப்படவென்றே
ஒளியும் தாயாய்.// எனக்கு எந்தக் கவிதையும் லேசுல புரியாது. ஆனாலும், இந்த வரிகளை ரசிச்சேன்க்கா! அதே போல ‘ஒவ்வொரு முறையும் குழந்தையிடம் தோற்கவென்றே விளையாடும் தந்தையாய்’ அப்படின்னும் எழுதலாமில்லையா?

vinu said...

back with banggggggggggg

மோகன் குமார் said...

டில்லியில் குளிர் எக்க சக்கமாமே !!அதன் விளைவோ?

ஷர்புதீன் said...

இந்த மாதிரி கவிதைகள் உங்கள மாதிரி ஆளுங்கதான் எழுத முடியும்!

ஹய்யோ ஹய்யோ

vinu said...

kalakkal

S Maharajan said...

Nice

கனாக்காதலன் said...

நானெல்லாம் இங்கு குளிரோடு தினமும் "யுத்த மார்கழி" நடத்திக் கொண்டிருக்கிறேன். கவிதை அருமை. மிகவும் ரசித்தேன் :)

கலாநேசன் said...

உறைபனிக் கவிதைகள்

dr.tj vadivukkarasi said...

beautiful.

சிவகுமார் said...

கவிதை,கவிதை,கவிதை,கவிதை,கவிதை,கவிதை,கவிதை,கவிதை,கவிதை,கவிதை,கவிதை,கவிதை,கவிதை
Super pa! Nice.

rk guru said...

good.....

கோநா said...

nallarukkara mathiri irukkunka

commomeega said...

அருமை.

சே.குமார் said...

//எப்போதும் காதலில்
விழுவதில்லை நான்.
ஒவ்வொரு முறையும்
என்னை எழத் தான் செய்கிறது
உன் காதல்.//

ly superb!

r.v.saravanan said...

நல்லாயிருக்கு

Anonymous said...

நான் புதுமுகம் உங்கள் ப்ளாகிற்கு இனி தொடர்ந்து வருவவேன்..
உங்கள் கவிதையை பார்த்த பின்பு எனக்கும் கவிதை எழுத ஆசை வருகிறது..

சி. கருணாகரசு said...

மொத்த மார்கழியும்... முத்த மார்கழியால்ல இருக்கு பாராட்டுக்கள்.

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/
mobile :+919043194811

புபேஷ் said...

ஒவ்வொரு முறையும்
குழந்தையிடம்
அகப்படவென்றே
ஒளியும் தாயாய்

romba nalla iruckunga

புபேஷ் said...

romba nalla iruckunga

SIVAHARI said...

நன்கு காதலை இரசித்து எழுதப்பட்ட குறுங்கவிதைகள்..வன் முத்தம் என்ற இடத்தில் வன்முறையானமுத்தம் என்றும் எடுத்துக் கொண்டால் முத்ததின் தன்மையே மாறிப்போய் விடும், அதே சமயம் வலிமையான முத்தமாக எடுக்கும் போதாங்கே வலு கூடுகின்றது.

நன்றி

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் .....